கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

தொடக்க & நடுநிலைப் பள்ளிகளில் மதிப்பெண் நோட்டில் எழுத வேண்டிய தேர்ச்சி விதிகள் - Annual Results Format...

 


அனைத்து தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு....


 நமது மதிப்புமிகு தொடக்கக் கல்வி இயக்குநர் அவர்களின் உத்தரவுபடியும் முதன்மை கல்வி அலுவலர் அவர்களின் அறிவுரைபடியும் 2020-2021 கல்வி ஆண்டிற்கான 1-8 வகுப்புகள் மாணவர்களுக்கு  தேர்ச்சி வழங்கிட ஏதுவாக அனைத்து பதிவேடுகளையும் தயாராக வைக்க வேண்டும்


மதிப்பெண் நோட்டில் வகுப்பு வாரியாக மாணவர்பெயர் எழுத வேண்டும்


💐முதல் பருவம்            

💐இரண்டாம் பருவம் 

💐மூன்றாம் பருவம்     

💐குறிப்பு என பிரித்து கொள்ள வேண்டும்.


 ஒவ்வொரு மாணவனுக்கும் நேரே குறிப்பில் தேர்ச்சி என்று எழுத வேண்டும் 

 

தேர்ச்சி சுருக்கம்

வ.எண்

வகுப்பு

பதிவு

தேர்ச்சி

தேர்ச்சி விழுக்காடு என வகுப்பு வாரியாக அட்டவணை படுத்த  வேண்டும். 


தேர்வு சுருக்கத்திற்கு கீழே அந்தந்த

வகுப்பு ஆசிரியர் கையொப்பம் இட வேண்டும்.


தலைமையாசிரியர் அனைத்து வகுப்புகளுக்கும் தேர்வு சுருக்கம் எழுதவேண்டும். 


தேர்ச்சி விதிகள்


1.அரசாணை நிலை (எண்) 48 பள்ளிக்கல்வித் (அ.தே) துறை நாள் : 25.02.2021.


2. குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் - 2009.


3. தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் சென்னை - 6 ந.க.எண்: 004010/ஜெ1/2020 நாள் : 31.05.2021.


🌹குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009 பிரிவு–16 ன் படி அனைத்து மாணவர்களுக்கும் (1-8 வகுப்புகள்) தேர்ச்சி அளிக்கப்படுகிறது 

என தேர்ச்சி விதிகள் எழுதி தலைமையாசிரியர்  மற்றும் தேர்வு குழுவினர்  கையொப்பம் இட வேண்டும்.

 

✏️மாணவர் வருகைப் பதிவேட்டில் அனைத்து வகுப்புகளுக்கும் மே மாதம் மாணவர் பெயர் எழுதி பெயருக்கு நேரே தேர்ச்சி என குறிப்பிட வேண்டும்.


✏️ இறுதியாக வட்டாரக் கல்வி அலுவலர் ஒப்புதலுக்கு  பதிவேடுகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.


>>> DEE PROCEEDINGS : 2020-21 ஆம் கல்வி ஆண்டில் அனைத்து வகை பள்ளிகளிலும் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்தல் சார்ந்து- தொடக்கக்கல்வி இயக்குநர் செயல்முறைகள்...



>>> மாநில பாடத்திட்டத்தின் கீழ் 9,10 மற்றும் 11 ஆம் வகுப்பு பயிலும்  மாணவர்கள் அனைவரும்  பொதுத்தேர்வு இன்றி தேர்ச்சி - அரசாணை வெளியீடு...




>>> வட்டாரக் கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டிய கொரானா விடுமுறை சார்ந்த தேர்ச்சி விதிகளுடன் கூடிய தேர்ச்சி ஒப்புதல் படிவங்கள் தொகுப்பு - 2020-2021 - PDF...



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Prolonged sitting puts heart at risk - new study warns

நீண்ட நேரம் அமர்ந்தால் இதயத்திற்கு ஆபத்து - எச்சரிக்கும் புதிய ஆய்வு Prolonged sitting puts heart at risk - new study warns