கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

வருமான வரித்துறையின் புதிய வலைத்தளம் தொடக்கம்...



 நாட்டு மக்கள் அனைவரும் மிக எளிதாக தங்களது வருமான வரி கணக்கினை தாக்கல் செய்வதற்காக  வருமான வரித்துறையின் புதிய வலைத்தளம்  பயன்பாட்டிற்கு வந்துள்ளது.




வணிகம் தொடர்பான வருமான வரி கணக்குகள், தனி நபர் வருமான வரி கணக்கு தாக்கல், வருமான வரி கணக்கு தொடர்பான மேல்முறையீடு முதலியவற்றை இதற்கு முன்பு வரை www.incometaxindiaefiling.gov.in என்ற இணையத்தில் பதிவு செய்து வந்தனர். இந்நிலையில் பயனர்கள் மிக எளிய முறையில் இதனை மேற்கொள்ள வருமான வரித்துறை புதிய வலைத்தளம் ஒன்றை அறிமுகப்படுத்தியது.



 

மேலும் புதிய வலைத்தளம் நடைமுறைக்கு வரும் காரணத்தினால் பழைய வலைத்தளம் கடந்த ஜூன் 1ம் தேதி முதல் 6ம் தேதி வரை செயல்படாது என்று வருமான வரித்துறை தெரிவித்தது. இந்நிலையில் (ஜூன் 7) முதல் வருமான வரியினை தாக்கல் செய்வதற்கான புதிய வலைத்தளம் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. புதிய வலைத்தளமான www.incometax.gov.in தளத்தில் வருமான வரி தாக்கல் செய்வதற்கான படிவங்கள் 1, 2 ஆகியவற்றினை தாக்கல் செய்வதற்கான மென்பொருள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது.




அந்த மென்பொருளில் படிவங்களை பூர்த்தி செய்வதறகான வழிமுறைகள் இடம்பெற்றிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது. இதனால் வருமான வரி செலுத்தும் மக்கள் மிகுந்த பயனடைவர் என்றும் வருவமான வரி கணக்கு தாக்கல் படிவங்கள் 3, 4, 5, 6, 7 ஆகியவற்றினை பூர்த்தி செய்வதற்கான மென்பொருள் உருவாக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது என்றும் புதிய வலைத்தளம் மூலம் கணக்கு தாக்கல் செய்யப்படும் வருமான வரி கணக்கு மீது உடனடியாக ஆய்வு மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.




தாக்கல் செய்யப்பட்ட வருமான வரி கணக்குகளின் விவரங்களை புதிய வலைதளத்தின் வாயிலாக பயனர்கள் அறிந்து கொள்ள முடியும் என்றும் வருமான வரி கணக்கு படிவத்தில் பூர்த்தி செய்யப்பட வேண்டிய விவரங்கள் அனைத்தையும் வலைத்தளம் முன்கூட்டிய சேமித்து வைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் மேற்கொள்ள சிறப்பு முகாம்கள்

வாக்காளர் பட்டியல் திருத்தம் : டிசம்பர் 2025 – ஜனவரி 2026 சிறப்பு முகாம்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் மேற்கொள்ள ச...