கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி செயல்பாடுகள் தொடங்குதல் தொடர்பாக முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகள்...



 பள்ளிக்கல்வி-அரசு/அரசு நிதிஉதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் தலைமையாசிரியர்கள் மற்றும் அலுவலக பணியளார்கள் "அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி 14.06.2021 முதல் பள்ளிக்கு வருகை புரிதல் - சார்ந்து...


பார்வை: 

1. அரசாணை நிலை எண் 613, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை நாள் : 08.06.2021


2. சென்னை தமிழ்நாடு பள்ளிக்கல்வி ஆணையர் அவர்களின் செயல்முறைகள் ந.க.எண் 344622/பிடி 1/இ 1/2021 நாள் : 08.06.2021 


பார்வையில் கண்ட அரசனின் படி, நாடு முழுவதும் கொரனோ பெருந்தொற்று காரணமாக மாணவர் நலன் கருதி இந்த ஆண்டு பனிரெண்டாம் வகுப்புப் பொதுத்தேர்வு நடத்தப்படமாட்டாது என மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்டது


இந்நிலையில் மாணவர்களுக்கு எவ்வாறு மதிப்பெண் வழங்குவது, உயர்கல்வி பயிலுவதற்க்கான சான்றிதழகள் வழங்குவது சார்ந்த பணிகள் நடைபெறவுள்ளதாலும் மாணவர்கள் சேர்க்கை ஆரம்பிக்கப்பட உள்ளதாலும் மற்றும் மாணவர்களுக்கு வழங்க வேண்டிய விலையில்லா பாட புத்தகங்கள் மற்றும் கற்றல் கற்பித்தலுக்கு தேவையான இதர நலத்திட்டங்கள் வழங்க வேண்டி உள்ளதாலும்,பள்ளி வளாகம் மற்றும் வகுப்பறைகளை சுத்தம் செய்வது சார்ந்தும் மற்றும் மாணவர்கள் கல்வி தொலைக்காட்சி கற்றல் சார்ந்த நிகழ்ச்சிகளை பார்வையிட செய்வது சார்ந்தும், அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் (தொடக்கப்பள்ளி முதல் மேல்நிலைப்பள்ளி வரை) பணிபுரியும் தலைமையாசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் அனைவரும் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை (SOP) பின்பற்றி 14.06.2021 முதல் பணிக்கு வருகை புரிய வேண்டும் . இதன் மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 


எனவே மேற்கண்ட அறிவுரைகளை தவறாது பின்பற்றிடுமாறு அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்கள்வட்டராக் கல்வி அலுவலர்கள் மற்றும் பள்ளித்தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 


முதன்மைக்கல்வி அலுவலர் திருப்பூர்

_______

சேலம் முதன்மைக்கல்வி அலுவலர் செயல்முறைகள்...



>>> தொடக்கப்பள்ளி முதல் மேல்நிலைப்பள்ளி வரை அனைத்துப்பள்ளிகளிலும் பணிபுரியும் தலைமை ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் 14.06.2021 முதல் பள்ளிக்கு வருகை புரிய வேண்டும் - பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

G.O. (D) No. 278, Dated : 17-12-2024 - TN Govt nominated TRB as the nodal agency for conducting SET

TRB மூலம் பேராசிரியர் தகுதித் தேர்வு (TNSET) - மூன்றாண்டுகள் நடத்துவதற்கான அரசாணை G.O. (D) No. 278, Dated : 17-12-2024 வெளியீடு TAMILNADU St...