கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

தொடக்கப்பள்ளி முதல் மேல்நிலைப்பள்ளி வரை அனைத்துப்பள்ளிகளிலும் பணிபுரியும் தலைமை ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் 14.06.2021 முதல் பள்ளிக்கு வருகை புரிய வேண்டும் - பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு...

 


தொடக்கப்பள்ளி முதல் மேல்நிலைப்பள்ளி வரை அனைத்துப்பள்ளிகளிலும் பணிபுரியும் தலைமை ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் 14.06.2021 முதல் பள்ளிக்கு வருகை புரிய வேண்டும் - பள்ளிக் கல்வி ஆணையர் செயல்முறைகள் ந.க.எண்: 34462/பிடி1/இ1/2020, நாள்: 08-06-2021...


14.06.2021 முதல் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் தினசரி வருகை புரிய வேண்டும் - பள்ளிக்கல்வி ஆணையர் உத்தரவு...


பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள், சென்னை-6 ந.க.எண். 34462/பிடி1/இ1/2020, நாள்.08.06.2021


அரசாணை எண்.613, வருவாய் மேலாண்மைத் துறை நாள்:05.06.2021- ன் படி, நாடு முழுவதும் கொரோனா பெருந்தொற்று காரணமாக மாணவர் நலன் கருதி இந்த ஆண்டு பன்னிரெண்டாம் வகுப்புப் பொதுத்தேர்வு நடத்தப்படமாட்டாது  என மாண்புமிகு தமிழ்நாடு  முதலமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் மாணவர்களுக்கு எவ்வாறு மதிப்பெண் வழங்குவது, உயர்கல்வி பயிலுவதற்கான சான்றிதழ்கள் வழங்குவது சார்ந்த பணிகள் நடைபெற உள்ளதாலும் மாணவர்கள் சேர்க்கை ஆரம்பிக்கப்பட உள்ளதாலும் மற்றும் மாணவர்களுக்கு வழங்க வேண்டிய விலையில்லா பாட புத்தகங்கள் மற்றும் கற்றல் கற்பித்தலுக்கு தேவையான இதர நலத்திட்டங்கள் வழங்க வேண்டி உள்ளதாலும், பள்ளி வளாகம் மற்றும் வகுப்பறைகளை சுத்தம் செய்வது சார்ந்தும் மற்றும் மாணவர்கள் கல்வி தொலைக்காட்சி கற்றல் சார்ந்த நிகழ்ச்சிகளை பார்வையிட செய்வது சார்ந்தும், அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் (தொடக்கப்பள்ளி முதல் மேல்நிலைப்பள்ளி வரை) பணிபுரியும் தலைமையாசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் அனைவரும் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை (SOP) பின்பற்றி 14.06.2021 முதல் பணிக்கு வருகை புரிய வேண்டுமென பள்ளிக்கல்வி ஆணையர் அவர்களால் அறிவுறுத்தப்படுகிறது.


>>> பள்ளிக் கல்வி ஆணையர் செயல்முறைகள் ந.க.எண்: 34462/பிடி1/இ1/2020, நாள்: 08-06-2021...



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

களஞ்சியம் செயலி / வலைத்தளத்தில் வருமான வரி அறிவிப்பு புதுப்பிப்பு செயல்முறை

  களஞ்சியம் செயலி / வலைத்தளத்தில் வருமான வரி அறிவிப்பு புதுப்பிப்பு செயல்முறை Income Tax Declaration Update Procedure in Kalanjiyam App / We...