பள்ளிகளில் பயிலும் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏற்படும் குறைகள் மற்றும் சிக்கல்களை தீர்ப்பதற்காக தொலைபேசி வழியாக புதிய வழிகாட்டுதல் மையம் துவங்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான ஒரு புதிய வழிகாட்டுதல் நடைமுறைகளை அரசு அறிமுகப்படுத்தி உள்ளது. அதன் அடிப்படையில் அனைத்து பள்ளிகளில் பயிலும் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையுள்ள மாணவ மாணவிகளுக்கு ஏற்படும் சிக்கல்கள் மற்றும் குறைகளை தீர்ப்பதற்கு வழிகாட்டுதல் முறைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்த அறிவிப்புகள் வெளிவந்துள்ள செய்திக்குறிப்பில், ‘பள்ளிகளில் 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவியருக்கான தொலைபேசி வழிகாட்டுதல் மையம் துவங்கப்பட்டுள்ளதாகவும், அந்த தொலைபேசி எண்ணாக 93420 33080 கொடுக்கப்பட்டுள்ளது. இது தவிர வார நாட்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாணவர்கள் இந்த தொலைபேசி எண்ணுக்கு அழைத்து குறைகளை தெரிவிக்கலாம்’ என கூறப்பட்டுள்ளது.