கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு எவ்வித கட்டணமும் வசூலிக்க கூடாது - பள்ளிக்கல்வித் துறை உத்தரவு...



அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு எவ்வித கட்டணமும் வசூலிக்கக்கூடாது என்று பள்ளிக்கல்வி துறை உத்தரவிட்டுள்ளது.


தமிழகத்தில் கரோனா தொற்று குறைந்து வருவதைத் தொடர்ந்து அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை பணிகள் கடந்த 14-ம் தேதி தொடங்கப்பட்டன. பெற்றோர் பலர் தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் ஆர்வமுடன் சேர்த்து வருகின்றனர்.


இதனால் நடப்பு ஆண்டில் 3 லட்சம் மாணவர்கள் கூடுதலாக சேருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


இந்நிலையில் சில அரசுப் பள்ளிகளில் சேர்க்கையின்போது கட்டணங்கள் வசூலிக்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன. அதைத் தொடர்ந்து அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு எவ்வித கட்டணமும் வசூலிக்கக் கூடாது என்று பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.


இதுகுறித்து பள்ளிக்கல்வி இயக்குநரகம் சார்பில் அனைத்துப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கும் பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி,


அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையின்போது உரிய விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். விண்ணப்பம் உட்பட எதற்கும் கட்டணம் வசூல் செய்யக் கூடாது.


இதுதவிர எந்த நிபந்தனை அடிப்படையிலும் மாணவர் சேர்க்கையை நிறுத்தக் கூடாது. மாற்றுச் சான்றிதழ் வழங்கும்போது எவ்வித புகார்களுக்கும் இடமளிக்காமல் செயல்பட வேண்டும். அதேபோல்,


புதிய மாணவர் சேர்க்கை மற்றும் பள்ளியில் இருந்து விலகி மாற்றுச் சான்றிதழ் பெறும் மாணவர்களின் விவரங்களை பள்ளிக்கல்வியின் EMIS தளத்தில் தினமும் முறையாக பதிவேற்ற வேண்டும். இதில் ஏதேனும் தவறுகள் நடைபெற்றால் அதுசார்ந்த தலைமை ஆசிரியரே பொறுப்பேற்க நேரிடும் என்பதால் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும்.


இவ்வாறு அறிவுறுத்தப்பட்டுள்ளன.



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Prolonged sitting puts heart at risk - new study warns

நீண்ட நேரம் அமர்ந்தால் இதயத்திற்கு ஆபத்து - எச்சரிக்கும் புதிய ஆய்வு Prolonged sitting puts heart at risk - new study warns