கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

உணவு, மளிகை, பேக்கரி பொருட்களை பார்சல் செய்ய எச்சில் தொட்டு எடுத்தாலோ, வாயால் ஊதி பிரித்தாலோ கொரோனா தொற்று பரவும் அபாயம்: கடை உரிமையாளர்களுக்கு சுகாதாரத் துறை எச்சரிக்கை...

 உணவு, மளிகை, பேக்கரி பொருட்களை பார்சல் செய்யும்போது எச்சில் தொட்டு எடுத்தாலோ, வாயால் ஊதி பிரித்தாலோ கொரோனா தொற்று பரவும் அபாயம்: கடை உரிமையாளர்களுக்கு சுகாதாரத் துறை எச்சரிக்கை...


உணவு பொருட்கள், மளிகை பொருட்கள், பேக்கரி பொருட்கள் ஆகியவற்றை பார்சல் செய்யும்போது உறைகளை கையால் எச்சில் தொட்டு எடுத்தல், வாயால் ஊதி பிரித்தல் போன்ற செயல்களால் கொரோனா தொற்று பரவும் அபாயம் உள்ளதை கடை உரிமையாளர்கள் கவனத்தில் கொண்டு ஊழியர்களுக்கு தக்க அறிவுரைகள் வழங்கவும், அத்தகைய செயல்பாடுகளில் ஊழியர்கள் ஈடுபடாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கை: கொரோனா வைரஸ் நோய்த்தொற்றைத் தடுப்பதற்காக, மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாட்டில் கடந்த  மார்ச் 25ம் தேதி முதல் தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் ஊரடங்கு உத்தரவு பல்வேறு தளர்வுகளுடன் அமலில் இருந்து வருகிறது.



மார்ச் 2021 முதல் தமிழ்நாட்டில் நோய் தொற்றின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில் மருத்துவ நிபுணர்கள் மற்றும் பொது சுகாதார வல்லுநர்களை அவ்வப்போது கலந்தாலோசித்து அரசு ஊரடங்கினை பல்வேறு கட்டங்களில் அறிவித்து வந்துள்ளது. நோய்ப் பரவலைத் தடுக்க மத்திய அரசின் உள்துறை அமைச்சகம், மருத்துவம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் ஆகியவை பரிந்துரைத்துள்ள ஒரு சில செயல்பாடுகளுக்கான கட்டுப்பாடுகளை கருத்தில் கொண்டு தமிழ்நாட்டிலும் சில செயல்பாடுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தவிர்க்க முடியாத காரணங்களால் ஊரடங்கு அறிவிக்கப்பட்டாலும் சில அத்தியாவசிய செயல்பாடுகளுக்கு தளர்வுகளும் அவ்வப்போது அறிவிக்கப்பட்டு வருகிறது.

உணவுக் கூடங்களில் அமர்ந்து உண்பதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், தளர்வுகளில் ஒன்றாக அனைத்து உணவகங்களிலும் பார்சல் சேவை  வழங்க அனுமதிக்கப்பட்டது. உணவக பார்சல் சேவையில் உறைகளின் பயன்பாடு தவிர்க்க முடியாததாக உள்ளது. மளிகை கடைகளும், இறைச்சி மற்றும் மீன் கடைகளும் கட்டுப்பாடுகளுடன் செயல்பட அனுமதித்த நிலையில் அந்த கடைகளிலும் உறைகளின் பயன்பாடு அதிகரித்துள்ளது. உறைகளை எடுக்கும் போது கடை ஊழியர்கள் எச்சில் தொட்டு அந்த உறைகளை எடுப்பது, பொருட்களை உள்ளே போடுவதற்காக வாயால் ஊதுவது போன்ற செயல்பாடுகளில் ஈடுபடுவது கொரோனா தொற்று பரவுவதற்கு வழிவகுக்கும் என்பதால் இதனைத் தவிர்க்க உரிய நடவடிக்கை மேற்கொள்வது அவசியம் என கருதப்படுகிறது.

சமீபத்தில் இது தொடர்பான ஒரு பொது நல வழக்கினை விசாரித்த  சென்னை உயர்நீதிமன்றம் கடைகளின் ஊழியர்கள் உணவு பொருட்கள், மளிகை பொருட்கள், பேக்கரி பொருட்கள் ஆகியவற்றை பார்சல் செய்யும் போது உறைகளை கையால் எச்சில் தொட்டு பிரித்தல், வாயால் ஊதுதல் போன்ற செயல்களால் கொரோனா வைரஸ் பரவும் ஆபத்து உள்ளது என்பது குறித்து கடை ஊழியர்களுக்கு அறிவுறுத்தவும் அவர்கள் அத்தகைய செயல்பாடுகளில் ஈடுபடுவதை தவிர்க்க போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தியுள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் வெற்றி பெற பொதுமக்களின் பங்களிப்பும் அவசியம் என்பது மறுக்க முடியாத கூற்றாகும். உணவு பொருட்கள், மளிகை பொருட்கள், பேக்கரி பொருட்கள் ஆகியவற்றை பார்சல் செய்யும் போது உறைகளை கையால் எச்சில் தொட்டு எடுத்தல், வாயால் ஊதி பிரித்தல் போன்ற செயல்களால் கொரோனா தொற்று பரவும் அபாயம் உள்ளதை கடை உரிமையாளர்கள் கவனத்தில் கொண்டு அவர்களுடைய ஊழியர்களுக்கு தக்க அறிவுரைகள் வழங்கவும், அத்தகைய செயல்பாடுகளில் ஊழியர்கள் ஈடுபடாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

* உணவக பார்சல் சேவையில் உறைகளின் பயன்பாடு தவிர்க்க முடியாததாக உள்ளது.

* மளிகை, இறைச்சி, மீன் கடைகளிலும் உறைகளின் பயன்பாடு அதிகரித்துள்ளது.

* கடை ஊழியர்கள் எச்சில் தொட்டு உறைகளை எடுப்பது, பொருட்களை உள்ளே போட ஊதுவது போன்ற கொரோனா தொற்று பரவ வழிவகுக்கும் செயல்பாடுகளை தவிர்க்க உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியது.




இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

NMMS 2024-2025 Final Answer Key

  NMMS 2024-2025 Final Key Answer Released by DGE >>> Click Here to Download...