கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

01-07-2021 முதல் கேஸ் சிலிண்டர் முதல் வங்கி சேவைகள் வரை கட்டணங்கள் உயர்வு உட்பட செய்யப்பட்டுள்ள மாற்றங்கள்...



ஜூலை 1 முதல் பல விதமான சேவைகளில் மாற்றங்கள் ஏற்படவுள்ளன. அந்த வகையில் கேஸ் சிலிண்டர் முதல் வங்கி சேவைகள் வரை சில புதிய மாற்றங்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், அவை அமலுக்கு வர உள்ளன. 


முதலாவதாக, நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான SBI வங்கி அதன் வாடிக்கையாளர்கள் பயன்படுத்தும் பண பரிமாற்ற சேவைகளில் பல மாற்றங்களை அறிவித்துள்ளது. அதாவது SBI வங்கியில் பணம் செலுத்துவது, பணம் எடுப்பது, காசோலை போன்ற சேவைகளுக்கு கட்டணங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.


அதன் படி SBI வாடிக்கையாளர்கள் ஒரு மாதத்தில் ஒரு இலவசமாக 4 முறை  பண பரிமாற்றம் செய்து கொள்ளலாம். அதே நேரத்தில் 4 முறைக்கு மேலான  பரிவர்த்தனைக்கு 15 ரூபாய் கட்டணம் மற்றும் GST யும் வசூலிக்கப்படும். இது தவிர SBI வங்கியில் காசோலை பரிவர்த்தனையில் 10 காசோலைகள் புத்தகத்திற்கு 40 ரூபாயுடன் GST கட்டணமும், 25 காசோலைகள் அடங்கிய புத்தகத்துக்கு 75 ரூபாயுடன் GST கட்டணமும், வசூலிக்கப்படவுள்ளது.


அதே நேரத்தில் ஒவ்வொரு மாதமும் மாற்றமடையும் LPG சிலிண்டரின் விலையானது வரும் ஜூலை 1 ஆம் தேதி முதல் மீண்டுமாக அதிகரிக்கவுள்ளது. முன்னதாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், கேஸ் சிலிண்டர் விலையிலும் சில மாற்றங்கள் ஏற்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் சாதாரண மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படக்கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது.


 இது தவிர சிண்டிகேட் வங்கி கனரா வங்கியுடன் இணைக்கப்பட்டுள்ளதால் அவ்வங்கியின் IFSC கோடுகள் மாறவுள்ளது. அந்த வகையில் சிண்டிகேட் வங்கியின் வாடிக்கையாளர்கள் பழைய IFSC கோர்டுகளை வைத்து பண பரிமாற்றம் செய்ய முடியாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் ஸ்விப்ட் கோடு, MICR கோடுகள், காசோலை என அனைத்திலும் நாளை முதல் புதிய மாற்றங்கள் ஏற்படவுள்ளன. 


மேலும் ஹீரோ மோட்டார் கார்ப்பின் இருசக்கர வானங்களின் விலையும் 3 ஆயிரம் ரூபாய் வரை அதிகரிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


மேலும் ஆந்திரா வங்கி மற்றும் கார்பொரேஷன் வங்கி வாடிக்கையாளர்கள் புதிய காசோலைகளை பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப் பட்டுள்ளது.


 தொடர்ந்து கடந்த 2 வருடங்களாக வருமானவரி தாக்கல் செய்யாதவர்களுக்கு, ஜூலை 1 முதல் டிடிஎஸ் பிடித்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர ஜூலை 1 ஆம் தேதி முதல் வருமான வரித்துறையின் இணையதளத்தில் புதிய வசதிகள்  அமல்படுத்தப்படவுள்ளது.


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Prolonged sitting puts heart at risk - new study warns

நீண்ட நேரம் அமர்ந்தால் இதயத்திற்கு ஆபத்து - எச்சரிக்கும் புதிய ஆய்வு Prolonged sitting puts heart at risk - new study warns