கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

தமிழ்நாட்டில் பெண் குழந்தைகளுக்கான கல்வி உதவித்தொகை நீட்டிப்பு...


தமிழகத்தில் கிராமப்புற பெண் குழந்தைகளுக்கான கல்வி ஊக்கத்தொகை வழங்குவது 10ம் வகுப்பு வரை நீட்டிக்க அரசு பரிசீலனை செய்துள்ளது. இதன் மூலம் பெண் குழந்தைகள் இடைநிற்றல் இன்றி கல்வி கற்பது உறுதி செய்யப்படும்.


கிராமப்புற பெண் குழந்தைகளுக்கு உதவும் வகையில் அரசு சார்பில் 3 முதல் ஆறாம் வகுப்பு வரை ஊக்கத்தொகை அளிக்கப்பட்டு வந்தது. தற்போது இதனை நீட்டிக்க அரசு திட்டமிட்டு உள்ளது.


3 முதல் 5 ஆம் வகுப்பு வரை உள்ள மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்புகளை சார்ந்த பெண் குழந்தைகளுக்கு ஆண்டுக்கு 500 ரூபாயும், 6 ஆம் வகுப்பு படிக்கும் மாணவியருக்கு ஆண்டுக்கு தலா 1000 ரூபாயும் ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அரசு கிராமப்புற பெண் குழந்தைகளுக்கான கல்வி ஊக்கத்தொகை வழங்குவதை 6ம் வகுப்பில் இருந்து 10ம் வகுப்பு வரை நீட்டிக்க பரிசீலனை செய்து வருகிறது. இதன் மூலம் பெண் குழந்தைகள் இடைநிற்றல் இன்றி கல்வி கற்பது உறுதி செய்யப்படும் என்று கூறப்படுகிறது.


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

2025-2026 New Income Tax Rates

    Budget Update: 2025-2026 புதிய வருமான வரி விகிதங்கள் வரம்பு 2025-2026 New Income Tax Rates • ₹0- 4 Lakh : NIL • ₹4 Lakh - ₹8 Lakh : 5% •...