கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

அனைத்து பள்ளிகளிலும் 8ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவிகளுக்கு குழந்தை திருமணம் மற்றும் பாலியல் விழிப்புணர்வு (Awareness to Girls) ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொரு 10 மாணவிகளுக்கும் Incharge ஆக ஒரு ஆசிரியை வீதம் நியமனம் செய்ய உத்தரவு...



Awareness to Girls

     அனைத்து பள்ளிகளிலும்  8 ஆம்  வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும்  மாணவிகளுக்கு குழந்தை திருமணம் மற்றும் பாலியல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொரு  10 மாணவிகளுக்கு  Incharge  ஆக ஒரு  ஆசிரியை  வீதம் நியமனம் செய்து கீழ் காணும் படிவத்தில் பூர்த்தி செய்து karurc3ceo@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு  அனுப்புமாறும் தலைமை ஆசிரியரின் கையொப்பமிட்ட copy ஐ முதன்மை கல்வி அலுவலகத்தில்   ஒப்படைக்குமாறும்   தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்கள்  கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.


குறிப்புகள்:

1. ஒருவர் கூட விடுபடாமல் பள்ளியில் பணிபுரியும் அனைத்து ஆசிரியைகளையும் incharge ஆக நியமனம் செய்ய வேண்டும்.

2. ஒவ்வொரு 10 மாணவிகளுக்கு ஒரு ஆசிரியை வீதம் incharge நியமனம் செய்யும் போது மாணவிகள் பயிலும் வகுப்பு incharge ஆசிரியை கற்பிக்கும் வகுப்பு எனவும் மேல் நிலை வகுப்பு , உயர் நிலை வகுப்பு,  நடுநிலை வகுப்பு, தொடக்க நிலை வகுப்பு எனவும்  பேதம் பிரித்து  பார்க்க வேண்டியதில்லை.

3. ஒவ்வொரு 10 மாணவிகளுக்கு ஒரு ஆசிரியை வீதம் incharge நியமனம் செய்ய வேண்டி  இருப்பினும் மாணவிகளின் எண்ணிக்கை ஆசிரியைகளின் எண்ணிக்கை  ஆகியவற்றைக்  கணக்கிட்டு சமமாக பிரித்தல் வேண்டும். 

4.ஒரே படிவத்தில் அனைத்து மாணவிகளின் பெயர்களையும் வகுப்பு வாரியாக type செய்து incharge ஆசிரியைகளின்  பெயருடன்  அனுப்பவும்.

5. சந்தேகங்களுக்கு 7373003103 என்ற எண்ணில் முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளரைத் தொடர்பு கொள்ளலாம்.

பள்ளியின் பெயர் மற்றும் முகவரியை படிவத்தின்  முதல் பக்கத்தின் மேலும்  கடைசி பக்கத்தின் அடியிலும் ( Top & Bottom ) type செய்து அனுப்பவும்.

 மாணவிகளுக்கு ஆண் ஆசிரியர்களை incharge ஆக நியமனம் செய்யக் கூடாது.

பள்ளியின் பெயர் மற்றும் முகவரியை படிவத்தின்  முதல் பக்கத்தின் மேலும்  கடைசி பக்கத்தின் அடியிலும் ( Top & Bottom ) type செய்து அனுப்பவும்.

நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்க வட்டார கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்


படிவம்👇👇

https://drive.google.com/file/d/1LrNsp0cUAbG7fxfYno1tkBBXdFFi9GDj/view?usp=drivesdk




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

தமிழ்நாடு அரசு TET மறுஆய்வு மனுவை தாக்கல் செய்துள்ளது குறித்து வழக்கறிஞர் வில்சன் MP அவர்களின் பேட்டி

TET Review Petition filed by our Tamilnadu State Govt : Advocate Wilson  தமிழ்நாடு அரசு TET மறுஆய்வு மனுவை தாக்கல் செய்துள்ளது குறித்து வழக்...