கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

COVID 19 நோய்‌ சிகிச்சைக்கு RTPCR- Test Report Negative என்று பெறப்பட்டாலும்‌ CT Scan Report முடிவின்‌ அடிப்படையில்‌ NHIS திட்டத்தில்‌ அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளில்‌ காசில்லா சிகிச்சை பெறலாம் - CM Special Cell Reply...



 COVID 19 நோய்‌ சிகிச்சைக்கு RTPCR- Test Report Negative என்று பெறப்பட்டாலும்‌ CT Scan Report முடிவின்‌ அடிப்படையில்‌ NHIS திட்டத்தில்‌ அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளில்‌ காசில்லா சிகிச்சை பெறலாம் - CM Special Cell Reply...


எடப்பாடியைச் சேர்ந்த T.A.KAMALAKKANNAN என்பவரது கோரிக்கை...

கோரிக்கை எண் (Petition Number) : 2021/1192096/FD

கோரிக்கை (Petition): 

மாண்புமிகு தமிழக முதல்வர்‌ ஐயா அவர்களுக்கு பணிவான வணக்கம்‌. 

தமிழக அரசு ஊழியர்‌ மற்றும்‌ ஆசிரியர்களுக்கு தமிழக அரசின்‌ கீழ்‌ மாதம்‌ மாதம்‌ சம்பளத்தில்‌ பிடித்தம்‌ செய்யும்‌ HEALTH INSURANCE (NHIS) தொகை ரூ.180 ரூபாய்க்கான சரியான சிகிச்சை செலவினங்களை சம்மந்தபட்ட INSURANCE நிறுவனம்‌ வழங்குவதில்லை.

உதாரணமாக கொரணா தொற்றில்‌ PCR TESTல்‌ NEGATIVE வந்த பிறகு CT SCAN எடுக்கும்‌ போது நுரையீரலில்‌ தொற்று இருப்பது கண்டுடறியப்பட்டு மருத்துவமனையில்‌ சேர்ந்து சிகிச்சை அளிக்கும்‌ போது ஏற்படும்‌ செலவிற்கு INSURANCE கம்பெனி பொறுப்பேற்க மறுக்கிறார்கள்‌. அதே தனிப்பட்ட முறையில்‌ தனியார்‌ INSURANCE COMPANY-ல்‌ INSURANCE எடுக்கும்போது அவர்கள்‌ செலவின தொகையை ஏற்றுக்கொள்கிறார்கள்‌. எனவே அரசு ஊழியர்கள்‌ அல்லது ஆசிரியர்கள்‌ எந்தவொரு (எந்த நோயாக இருந்தாலும்‌ சரி) நோயின்‌ மூலம்‌ தீவிரமாக பாதிக்கபட்டு மருத்துவமனையில்‌ அனுமதிக்கப்பட்டு அதற்காக ஏற்படும்‌ மருத்துவ செலவினங்களை அந்த INSURANCE COMPANY ஏற்றுக்கொள்வதற்கு தாங்கள்‌ நடவடிக்கை மேற்கொள்ளபடவேண்டும்‌. இதற்கான சரியான வழிகாட்டல்‌ நெறிமுறைகளை சம்மந்தபட்ட INSURANCE COMPANYக்கு வழங்குவதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ள மிகவும்‌ பணிவுடன்‌ கேட்டுக்கொள்கிறேன்‌. நன்றி.


CM Special Cell Reply: 

ஏற்கப்பட்டது. அரசுக்‌ கடித எண்‌.36962/நிதி(சம்பளம்‌)/2020, நாள்‌.11.11.2020-ன்‌ படி கோவிட்‌ 19 நோய்‌ சிகிச்சைக்கு RTPCR- Test Report Negative என்று பெறப்பட்டாலும்‌ CT Scan Report முடிவின்‌ அடிப்படையில்‌ புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தில்‌ அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளில்‌ காசில்லா சிகிச்சை வழங்க காப்பீட்டு நிறுவனத்திற்கு தெளிவுரை வழங்கப்பட்டுள்ளது என்ற தகவல்‌ மனுதாரருக்கு கருவூல கணக்கு ஆணையரக கடித 20548/புமகாதி-4/2021 நாள்‌.07.07.21 மூலம் தெரிவிக்கப்பட்டது என்ற தகவல்‌ தெரிவிக்கலாகிறது.


>>> Click here to Download CM Special Cell Reply...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

07-01-2025 - School Morning Prayer Activities

     பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 07-01-2025 - School Morning Prayer Activities திருக்குறள்: பால்: பொருட்பால் அதிகாரம்: மருந்து ...