கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

M.Phil., படிப்புக்கு கட்டணமில்லை - உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் அறிவிப்பு...

 கட்டணமில்லாமல் எம்.ஃபில். படிப்பு, இலவச விடுதி: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் அறிவிப்பு...


*உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் சார்பில் இலவசத் தங்கும் விடுதி வசதியுடன், கட்டணமில்லாமல் எம்.ஃபில். படிக்க விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுகுறித்து, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

 

*''தமிழ்மொழி வளர்ச்சிக்கெனத் தமிழக அரசால் தோற்றுவிக்கப்பட்ட உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் தமிழ்ப் பல்கலைக்கழக ஏற்புடன், தமிழ் ஆய்வியல் நிறைஞர் பட்டம் (M.Phil.), ஆண்டுதோறும் தொடர்ந்து நடத்தப்பெற்று வருகிறது. 2021- 22ஆம் கல்வியாண்டிற்கான ஆய்வியல் நிறைஞர் பட்டப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை தொடங்கப் பெறவுள்ளது.


*மாணவர்கள் முதுகலைப் பட்டப்படிப்பில் பெற்ற மொத்த மதிப்பெண்களில் 50% மற்றும் நுழைவுத் தேர்வில் பெற்ற மதிப்பெண்களில் 50% ஆகியவை சேர்த்துக் கணக்கிட்டுத் தேர்வுப் பட்டியல் அமைக்கப்படும். தெரிவு செய்யப்பட்ட மாணவர்களின் பட்டியல் உயரளவு மதிப்பெண் வரிசையில் தமிழ்நாடு அரசின் இனவாரி சுழற்சி அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.


*தேர்வு செய்யப்பெறும் மாணவர்கள் உரிய கல்வித் தகுதிக்கான மூலச் சான்றுகளையும் அவற்றின் ஒளிப்பட நகல்கள் (ஒவ்வொன்றிலும் இரண்டு வீதம்) எடுத்துவரவேண்டும். அசல் சான்றிதழ்கள் அனைத்தும் சரிபார்க்கப்பட்டு மாணவர்கள் சேர்க்கைக்கு அனுமதிக்கப்படுவர்.


*விண்ணப்பங்களை நிறுவன வலைதளத்தில் (www.ulakaththamizh.in) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அஞ்சல் வழியிலும் பெற்றுக் கொள்ளலாம்.


*விண்ணப்பங்கள் வந்துசேரவேண்டிய கடைசி நாள்: 16.08.2021


*நுழைவுத் தேர்வு நடைபெறும் நாள், நேரம் ஆகியன தகுதியுடைய விண்ணப்பதாரர்களுக்குப் பின்னர் தெரிவிக்கப்படும்.


*கல்விக் கட்டணம்: கிடையாது.


*மாணவ, மாணவியர்க்குத் தனித்தனியே கட்டணம் இல்லாத தங்கும் விடுதி வசதி உள்ளது.


*மேலும் விவரங்களுக்கு:


இயக்குநர்,

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்,

இரண்டாம் முதன்மைச் சாலை,

மையத் தொழில்நுட்பப் பயிலக வளாகம்,

தரமணி, சென்னை - 113,


*தொலைபேசி : 044-2254 2992.


*சேர்க்கை தொடர்பான விதிமுறைகள்/ தகவல்களை www.ulakaththamizh.in என்ற இணைய முகவரியில் தெரிந்துகொள்ளலாம்’’.



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

G.O. (D) No. 278, Dated : 17-12-2024 - TN Govt nominated TRB as the nodal agency for conducting SET

TRB மூலம் பேராசிரியர் தகுதித் தேர்வு (TNSET) - மூன்றாண்டுகள் நடத்துவதற்கான அரசாணை G.O. (D) No. 278, Dated : 17-12-2024 வெளியீடு TAMILNADU St...