கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

சிறுபான்மையினர் கல்வி உதவித்தொகை(Minorities Scholarship) குறித்த தகவல்கள்...


சிறுபான்மையினர் கல்வி உதவித்தொகை பற்றி அறிந்து கொள்வோம்...


 சிறுபான்மை சமூகங்களில் முஸ்லிம்கள், பௌத்தர்கள், சமணர்கள், சீக்கியர்கள், கிறிஸ்த்துவர்கள் மற்றும் பார்ஸிகள் இனத்தைச் சார்ந்த மாணவ -  மாணவிகள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.


அனைத்து செயல்பாடுகளும் NSP எனப்படும் National Scholarship Portal மூலம்  Online வழியாகத்தான் நடைபெறும்.. ஒன்றாம் வகுப்பு முதல் ஆராய்ச்சி படிப்பு வரை பாலின பேதமின்றி சிறுபான்மை இனத்தைச் சேர்ந்தோர் விண்ணப்பிக்கலாம்.


👉🏻 'Pre-Matric' உதவித்தொகை


1 முதல் 5 ஆம் வகுப்பு வரை - வருடத்திற்கு ரூ .1000 


6 முதல் 10 ஆம் வகுப்பு வரை - வருடத்திற்கு ரூ .1000 முதல் ரூ . 5000 வரை


விண்ணப்பிக்கத் தகுதிகள்:


1.ஆண்டு வருமான வரம்பு- ரூ .1 லட்சம்


குறிப்பு: நடைமுறையில் ரூ.72,000 மிகாது இருக்குமாறு வாங்கிக் கொள்ளவும்.


2.முந்தைய வகுப்பில் 50% மதிப்பெண்கள்  எடுத்திருக்க வேண்டும்


 👉🏻 'Post Matric' உதவித்தொகை


11 மற்றும் 12 வது வகுப்பு - வருடத்திற்கு ரூ.6000 


இளங்கலை பட்டப்படிப்பு - வருடத்திற்கு ரூ.6000 முதல் 12000 


விண்ணப்பிக்கத் தகுதிகள்:


1.ஆண்டு வருமான வரம்பு - ரூ .2 லட்சம்


2.முந்தைய வகுப்பில் 50% மதிப்பெண்கள் எடுத்திருக்க வேண்டும்


  👉🏻 'Merit Cum Means' உதவித்தொகை

 

தொழில்முறை மற்றும் தொழில்நுட்ப படிப்புகள் - வருடத்திற்கு ரூ .25000 / 30000 


விண்ணப்பிக்கத் தகுதிகள்:


1.ஆண்டு வருமான வரம்பு - 2.5 லட்சம்


2.முந்தைய வகுப்பில் 50% மதிப்பெண்கள் எடுத்திருக்க வேண்டும்


www.scholarships.gov.in

 (தேசிய உதவித்தொகை வலைத்தள பக்கம்)


 ஆன்லைனில் விண்ணப்பங்களைச் சமர்ப்பித்த பிறகு, விண்ணப்பத்தின் நகலை மாவட்ட சிறுபான்மையினர் நல அலுவலகம்/ நிறுவனம் / கல்லூரியில் சமர்ப்பிக்கவும்.

  

இணைக்கப்பட வேண்டிய ஆவணங்கள்...

 

1.ஆதார் அட்டை

 

2.பாஸ்போர்ட் அளவு புகைப்பட அட்டை 

 

3.கடந்த ஆண்டு மதிப்பெண் பட்டியல்

 

4.இருப்பிடச் சான்று

 

5.வருமான சான்றிதழ்

 

6.ஜாதி சான்றிதழ்

 

7.வங்கி புத்தகத்தின் நகல் IFSC எண்ணுடன்.


>>> இந்த தகவலை PDF கோப்பாக தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 07-11-2024

        பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 07-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: "பால் :பொருட்பால் அதிகாரம்...