கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Bluetooth பயன்படுத்தி ஆசிரியர் தேர்வு எழுதியவர் கைது...


 உத்தரபிரதேசத்தில் ‘ப்ளூடூத்’ பயன்படுத்தி ஆசிரியர் தேர்வு எழுதி மாட்டிக் கொண்ட பெண் தேர்வரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். உத்தரபிரதேச மாநிலம் இடைநிலைக் கல்வித் தேர்வு வாரியம் சார்பில்  ஆசிரியர் தேர்வு  நடைபெற்று வருகிறது. நேற்று  ஜான்பூர் மாவட்டத்தில் 21 தேர்வு மையங்களில் தேர்வுகள் தொடங்கப்பட்டன. இந்நிலையில், தேர்வின் போது மின்னணு கருவியைப் (ப்ளூடூத்) பயன்படுத்தி பெண் தேர்வர் ஒருவர் தேர்வு எழுதிய போது கையும் களவுமாக பிடிப்பட்டார். அவர், மின்னணு சாதனத்தை தனது காதில் மாட்டிக் கொண்டு, அதிலிருந்து பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் தேர்வு எழுதி கொண்டிருந்ததை தேர்வுத்துறை மேற்பார்வையாளர்கள் கண்டறிந்தனர். அதிர்ச்சியடைந்த அவர்கள், அந்த பெண் தேர்வரை போலீசிடம் ஒப்படைத்து விசாரித்து வருகின்றனர்.


இதுகுறித்து தேர்வுத் துறை அதிகாரிகள் கூறுகையில், ‘காதில் பொருத்தப்பட்ட மின்னணு கருவியை பயன்படுத்தி தேர்வு எழுதிய பெண் தேர்வர் ஒருவர் சிக்கியுள்ளார். விசாரணையில், அவர் ஏற்கனவே பாலியில் நடந்த மற்றொரு தேர்வில் சிக்கியதாக கூறப்படுகிறது. அந்த பெண் தேர்வரின் பெயர் சுனிதா மோர்யா. போலீசார் அந்த பெண்ணை கைது செய்து விசாரித்து வருகின்றனர். அந்த பெண்ணிடமிருந்த மின்னணு கருவியை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இருப்பினும், தேர்வு எழுதிய போது அந்த பெண் மின்னணு கருவியை பயன்படுத்தி எந்தக் கேள்விக்கும் பதிலளிக்கவில்லை.


அந்த பெண் தேர்வரிடம் போலீசாருடன், எங்களது தேர்வுக்கு குழுவினரும் விசாரணை நடத்தி வருகின்றனர்’ என்றனர். நடிகர் கமல்ஹாசன் நடித்த ‘வசூல்ராஜா எம்பிபிஎஸ்’ திரைப்படத்தில், திருட்டுத்தனமாக ‘ப்ளூடூத்’ காதில் மாட்டிக்கொண்டு கமல் ஆள்மாறாட்டம் செய்து காப்பி அடிப்பது போல்,  உத்தரபிரதேச பெண் தேர்வரும் ப்ளூடூத் மூலம் வெளியாளிடம் கேள்விக்கான விடையைக் கேட்டு எழுதிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Prolonged sitting puts heart at risk - new study warns

நீண்ட நேரம் அமர்ந்தால் இதயத்திற்கு ஆபத்து - எச்சரிக்கும் புதிய ஆய்வு Prolonged sitting puts heart at risk - new study warns