கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 01-10-2021 - வெள்ளி (School Morning Prayer Activities)...

 


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 01.10.21

 திருக்குறள் :

அதிகாரம்: கல்லாமை

குறள் :408

நல்லார்கண் பட்ட வறுமையின் இன்னாதே
கல்லார்கண் பட்ட திரு.

பொருள்: முட்டாள்களிடம் குவிந்துள்ள செல்வம், நல்லவர்களை வாட்டும் வறுமையை விட அதிக துன்பத்தைத் தரும்.

பழமொழி :

Every tide has its ebb


ஏற்றம் உண்டு எனில் இறக்கமும் உண்டு

இரண்டொழுக்க பண்புகள் :

1. பொறுமையை விட மேலான தவமில்லை எனவே எப்போதும் பொறுமையாக இருப்பேன் .

2.திருப்தியை விட மேலான இன்பமில்லை எனவே எனக்கு உள்ள பொருட்செல்வம் போதும் என்று இன்புற்று இருப்பேன்

பொன்மொழி :

உண்மையில் பக்தி உடையவர் எத்தகைய செல்வ நிலையிலும் வறுமை நிலையிலும் தானம் செய்து கொண்டே இருப்பார்...... திருக்குர்ஆன்

பொது அறிவு :

1.உலகின் மிகப் பழமையான விளையாட்டு எது? 

போலோ.

2.கோல்ப் விளையாட்டு எங்கு தோன்றியது?

ஸ்காட்லாந்து.

English words & meanings :

Pedal - Foot-operated lever. மிதி கட்டை

Peddle - to sell goods or services. இடம் விட்டு இடம் சென்று பொருட்களை விற்றல்

ஆரோக்ய வாழ்வு :

பருப்பு வகைகளின் நன்மைகள்

1)சுண்டல்

கொண்டைக்கடலையில் ஒரு வகை தான், இந்த சுண்டல்.

இதனை உணவில் அதிகம் சேர்த்து வந்தால், இதயம் ஆரோக்கியமாக இருக்கும்.

2)கடலைப் பருப்பு

கடலைப் பருப்பு அதிகம் சாப்பிட உடல் வலுவோடு ஆரோக்கியமாக இருக்கும்.

குறிப்பாக இதனை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், நீரிழிவு மற்றும் கரோனரி இதய நோய் போன்றவை ஏற்படுவது குறையும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

3)சிவப்பு காராமணி

சிவப்பு காராமணி புற்றுநோய், கொலஸ்ட்ரால் போன்றவை ஏற்படுவதைக் குறைக்கும்.

இதில் நிறைந்துள்ள வைட்டமின் K, மூளையின் செயல்பாட்டை சீராக வைக்கும்.

4)தட்டை பயறு

தட்டை பயறில் கரையக்கூடிய நார்ச்சத்து இருப்பதால், இது இதய நோய் ஏற்படுவதை தடுக்கும்.

மேலும் இதில் பொட்டாசியம், இரும்புச்சத்து, வைட்டமின் சி மற்றும் ஜிங்க் நிறைந்துள்ளது

5)உளுத்தம் பருப்பு

இட்லிக்கும், தாளிப்பதற்கு பயன்படுத்தும் உளுத்தம் பருப்பில், கொழுப்பு குறைவாகவும், புரோட்டீன் மற்றும் நார்ச்சத்து அதிகம் அடங்கியுள்ளது.

மேலும் இதில் அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் நிறைந்திருக்கிறது

கணினி யுகம் :

Ctrl + Shift + F - Change the font. 

Ctrl + Space - Reset highlighted text to default font

அக்டோபர் 1

அனைத்துலக முதியோர் நாள்




ஐக்கிய நாடுகள் அவை அறிவித்துள்ளபடி சர்வதேச முதியோர் தினம் (International Day of Older Persons) உலகம் முழுவதும் அக்டோபர் 1 ஆம் நாள் கொண்டாடப்படுகிறது. உலகம் முழுவதிலும் உள்ள மூத்த குடிமக்களை மதிக்கவும், மரியாதையை செலுத்தவும், குடும்பம்சமூகம் மற்றும் நாட்டுக்கு அவர்கள் ஆற்றிய சேவைகளை நினைவு கூறும் வகையிலும், அவர்களின் அறிவுஆற்றல் மற்றும் சாதனைகளை பார்த்துக் கற்றுக்கொள்ளவும் மக்களுக்கு எடுத்துரைக்கும் நாளாக காணப்படுகிறது.



அன்னி வூட் பெசண்ட்  அவர்களின்  பிந்தநாள் 



அன்னி வூட் பெசண்ட் (Annie Wood Besantஅக்டோபர் 11847 – செப்டம்பர் 201933) என்பவர் பெண் விடுதலைக்காகப் போராடியவர், எழுத்தாளர் மற்றும் பேச்சாளர் ஆவார். "லிங்க்" என்ற பெயரில் பத்திரிகையைத் தொடங்கி, இந்தியாவிலும் அயர்லாந்திலும் விடுதலைப் போராட்டங்களுக்கு ஆதரவாக எழுதினார். பெண்கள் விடுதலை, தொழிலாளர் உரிமைகள், குடும்பக் கட்டுப்பாடு போன்ற பலவற்றிலும் தனது கருத்துகளை வெளிப்படையாகத் தெரிவித்தார்.


நீதிக்கதை

 குறையா? நிறையா?


ஒரு கிராமத்தில் ஒரு ஏழை வாழ்ந்து வந்தான். அவன் தினமும் ஆற்றிலிருந்து தண்ணீர் எடுத்து வருவான். தண்ணீர் எடுத்து வர அவன் இரண்டு பானைகளை வைத்திருந்தான். இரண்டு பானைகளில் ஒன்றில் சிறிய ஓட்டை இருந்தது. அதனால் ஒவ்வொரு நாளும் வீட்டிற்கு வரும் பொழுது, பானையில் பாதியளவு நீரே இருக்கும். குறையில்லாத பானை குறையுள்ள பானையைப் பார்த்து எப்பொழுதும் அதன் குறையைக் கிண்டலும் கேலியும் செய்துகொண்டே இருக்கும். இப்படியே இரண்டு வருடங்கள் ஆனது. கேலியைப் பொறுக்கமுடியாத பானை அதன் எஜமானனைப் பார்த்து ஐயா! என் குறையை நினைத்து நான் மிகவும் கேவலமாக உணர்கிறேன். என் குறையை நீங்கள் சரிசெய்யுங்களேன் என்றது. 

பானையே! நாம் வரும் பாதையில், உன் பக்கம் இருக்கும் அழகான பூச்செடிகள் வரிசையைக் கவனித்தாயா? என்று அதன் எஜமானன் கேட்டான். உன்னிடமிருந்து தண்ணீர் சிந்துவது எனக்கு முன்னமே தெரியும். அதனால்தான் வழி நெடுவில் பூச்செடி விதைகளை விதைத்து வைத்தேன். அவை நீ தினமும் சிந்திய தண்ணீரில் இன்று பெரிதாக வளர்ந்து எனக்கு தினமும் அழகான பூக்களை அளிக்கின்றன. அவற்றை வைத்து நான் வீட்டை அலங்கரிக்கிறேன். இறைவனுக்குப் பூஜை செய்கிறேன். மீதமுள்ள பூக்களை விற்றுப் பணம் சம்பாதிக்கிறேன் என்று கூறினான். இதைக் கேட்ட பானை அதன் வருத்ததை நிறுத்திவிட்டது. அடுத்தவர் பேச்சைப்பற்றிக் கவலைப்படாமல் தன் வேலையைக் கருத்துடன் செய்யத்தொடங்கியது. 

நீதி :
மற்றவர்கள் பேசுவதை நினைத்துக்கொண்டு இருந்தால் நாம் நிம்மதியாக வாழமுடியாது.

இன்றைய செய்திகள்

01.10.21

■கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள காற்றாலைகளில் பன்னாட்டு நிறுவனங்களின் பங்களிப்புடன் நவீன உத்தியில் மின்சாரம் தயாரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

■தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

■மதுரவாயல்- துறைமுகம் இடையே 2 அடுக்கில் பறக்கும் சாலை திட்டம்; திட்ட அறிக்கை கிடைத்ததும் பணிகள் தொடங்கப்படும்: நெடுஞ்சாலைத் துறை செயலர் தீரஜ் குமார் தகவல்.


■நிபா வைரஸுக்கு எதிரான நோய் எதிர்ப்புத்திறன் அதனைப் பரப்பும் வவ்வால்களிடமே இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகக் கூறியிருக்கிறார் கேரள சுகாதார அமைச்சர் வீனா ஜார்ஜ்.

■தாய்லாந்தில் கனமழையால் 70 ஆயிரம் வீடுகள் வரை நீரில் மூழ்கி உள்ளன. 7 பேர் வரை உயிரிழந்து உள்ளனர்.

■செவ்வாய் கிரகத்தின் கண்காணிப்பு பணிகள் சில வாரங்கள் நிறுத்தம்; நாசா அறிவிப்பு.

■ஜூனியர் துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப்:தொடக்க நாளில் அசத்திய இந்திய வீரர்கள்.

■இந்தியாவின் அதிவேக மோட்டார் சைக்கிள் பந்தய வீராங்கனை என்ற சாதனையைப் படைத்துள்ளார்27 வயதான கல்யாணி பொடேகர்.

Today's Headlines

📃The Minister of Information and Technology has stated that steps will be taken to generate electricity in a modern manner with the participation of multinational companies in the wind farms in the Kanyakumari district.

 📃The Met Office has forecast heavy rains in Tamil Nadu and Pondicherry for the next four days.

  📃2-lane flyover project between Maduravayal-Port;  Once the project report is received, work will start: Highways Secretary Dhiraj Kumar.

 📃Kerala Health Minister Veena George has said that bats have been found to be immune to the Nipah virus.

📃 Heavy rains in Thailand have submerged up to 70,000 homes.  Up to 7 people have been killed.

 📃Mars observation missions halted for a few weeks;  NASA announcement.

📃 In Junior Sniper Championship our Indian players' rock on an opening day.

📃 27-year-old Kalyani Bodekar, has become the fastest motorcyclist in India.
Prepared by
Covai women ICT_போதிமரம்

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

The Chief Minister listed the educational structures of Tamil Nadu

  தமிழ்நாட்டின் கல்விக் கட்டமைப்புகளை பட்டியலிட்ட முதலமைச்சர் The Chief Minister listed the educational structures of Tamil Nadu >>...