கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளிக்குள் நுழைய வெளிநபர்களுக்கு தடை...

 ‘பள்ளிக்கு தொடர்பில்லாத நபர்கள், எந்த வகையிலும் நுழைய அனுமதிக்கக் கூடாது' என, தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. 


இதுகுறித்து பள்ளி கல்வி கமிஷனர் அனுப்பிய சுற்றறிக்கை: 


மாணவ, மாணவியர், ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள், பள்ளிகளுக் குள் நுழையும் போது, உடல் வெப்ப பரிசோ தனை செய்ய வேண்டும். 


உடல் வெப்ப நிலை அதிகமாக இருப்பவர்களை, பள்ளிகளுக்குள் அனுமதிக்க கூடாது. 


சுகாதார துறை அலுவலர்களுடன் ஆலோசித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 


பள்ளிக்குள் நுழையும் போது, கிருமி நாசினி மற்றும் சோப் பயன்படுத்தி கைகளை சுத்தம் செய்வது கட்டாயம். 


அனைவரும் முகக்கவசம் அணிந்திருப்பதை உறுதி செய்ய வேண்டும். 


அனைத்து ஆசிரியர்களும் முகக்கவசம் அணிந்து, மாணவர்களுக்கு முன்மாதிரியாக திகழ வேண்டும். 


பள்ளி வளாகத்தில், சமூக இடைவெளியை கடைபிடிப்பதை உறுதி செய்ய வேண்டும். 


பள்ளிக்கு தொடர்பில்லாத நபர்கள், பள்ளிக்குள் நுழைவதை அனுமதிக்க கூடாது. இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Prolonged sitting puts heart at risk - new study warns

நீண்ட நேரம் அமர்ந்தால் இதயத்திற்கு ஆபத்து - எச்சரிக்கும் புதிய ஆய்வு Prolonged sitting puts heart at risk - new study warns