கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளிக் கல்வி – உயர்நீதிமன்ற உத்தரவினால் பெறப்படும் அபராத /பங்களிப்புத் தொகை - அரசு தொடக்க / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளை சீரமைக்க ஆணை பிறப்பித்தல் – அத்தொகையின் செலவினம் சார்பாக அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அறிவுரை வழங்கி பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள் ந.க.எண்: 035296/என்2/இ1/2021, நாள்: 09-08-2021 (Penalty / Contribution Received by High Court Order - Issuing Order to Reorganize Government Primary / Middle / High / Higher Secondary Schools - Proceedings of the Commissioner of School Education advising all Chief Educational Officers on the expenditure of that amount)...

 


பல்வேறு குற்ற / பிற வழக்குகளில் சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் அதன் மதுரைக் கிளை ஆணைகளில் பள்ளிகளின் சீரமைப்பு பணிகளுக்காக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களின் வங்கிக் கணக்கிற்கு மனுதாரர்களின் அபராத / பங்களிப்பு தொகை செலுத்த ஆணைகள் வழங்கப்பட்டு மேற்சொன்ன தொகைகள் தொடர்புடைய முதன்மைக் கல்வி அலுவலரின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படுகிறது. அவ்வாறு பெறப்படும் தொகையை கொண்டு கீழ்காணுமாறு அரசு தொடக்க / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளுக்கு மிக மிக அவசியமான பணிகளுக்கு செலவிட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. 


மிகவும் பழுதடைந்த அல்லது பெண்கள் கழிப்பிடம் இல்லாத பள்ளிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படவேண்டும். 


கழிவறைகளை சீர்படுத்த மற்றும் தூய்மை படுத்த முன்னுரிமை அளிக்கப்படவேண்டும்.


• இன்றியமையாத குடிநீர் குழாய் இணைப்பு வசதிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படவேண்டும்.


• கழிவுநீர் இணைப்பு சரிசெய்தல் , மிக குறைந்த செலவினம் உள்ள மின்சாரம் , கட்டடம் , வளாக தூய்மைப்பணிகள் மற்றும் சுற்றுச்சுவர்களின் ஏற்படும் பழுது மற்றும் பராமரிப்பு செலவுகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படவேண்டும்.



>>> பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள் ந.க.எண்: 035296/என்2/இ1/2021, நாள்: 09-08-2021...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

The Chief Minister listed the educational structures of Tamil Nadu

  தமிழ்நாட்டின் கல்விக் கட்டமைப்புகளை பட்டியலிட்ட முதலமைச்சர் The Chief Minister listed the educational structures of Tamil Nadu >>...