கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

தமிழகத்தின் உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிப்பு: இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது - தேர்தல் ஆணையம் செய்தி குறிப்பு வெளியீடு...

 


தமிழகத்தின் உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிப்பு: இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது - தேர்தல் ஆணையம் செய்தி குறிப்பு வெளியீடு...


 

>>> Click here to Download Election Commission Announcement...  



 முதல் கட்ட வாக்குப்பதிவு மற்றும் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு எந்தெந்த மாவட்டங்களில் எந்தெந்த ஒன்றியங்கள்


2 கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் மாவட்டங்கள் மற்றும் மாவட்ட ஊராட்சி வார்டுகள்,  ஊராட்சி ஒன்றிய வார்டுகள்,  கிராம ஊராட்சிகள் மற்றும் கிராம ஊராட்சி வார்டுகளை உள்ளடக்கிய  ஊராட்சி ஒன்றியங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.


முதல்கட்ட வாக்குப்பதிவு : (06.10.2021)


செங்கல்பட்டு மாவட்டத்தின் இலத்தூர், புனித  தோமையார்மலை, திருக்கழுக்குன்றம்,  திருப்போரூர் ஊராட்சி ஒன்றியங்கள். 


 காஞ்சிபுரம் மாவட்டத்தின் காஞ்சிபுரம், உத்திரமேரூர், வாலாஜாபாத்.



 

 விழுப்புரம் மாவட்டத்தின் செஞ்சி,  கண்டமங்கலம், முகையூர், ஒலக்கூர், திருவெண்ணெய்நல்லூர், வானூர், விக்கிரவாண்டி.



 

 கள்ளிக்குறிச்சி மாவட்டத்தின்  ரிஷிவந்தியம், திருநாவலூர், திருக்கோவிலூர்,உளுந்தூர்பேட்டை. 


வேலூர் மாவட்டத்தின்  குடியாத்தம், கீவகுப்பம்,  காட்பாடி, பேர்ணாம்பட்டு.


திருப்பத்தூர் மாவட்டத்தின் சோலையார்பேட்டை,  கந்திலி, நாட்றம்பள்ளி,  திருப்பத்தூர்.


 ராணிப்பேட்டை மாவட்டத்தின்  ஆற்காடு, திமிரி, வாலாஜா.


 திருநெல்வேலி மாவட்டத்தின் அம்பாசமுத்திரம்,  சேரன்மகாதேவி,  மானூர்,  பாளையங்கோட்டை,  பாப்பாக்குடி.


 தென்காசி மாவட்டத்தின்  ஆலங்குளம்,  கடையம், கீழ்ப்பாவூர், மேலநீலிதநல்லூர், வாசுதேவநல்லூர் ஆகிய ஊராட்சி ஒன்றியங்கள்.


இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு :(09-10-2021)


செங்கல்பட்டு மாவட்டத்தின் அச்சிறுப்பாக்கம், சித்தாமூர், காட்டாங்கொளத்தூர்.


 காஞ்சிபுரம் மாவட்டத்தின் குன்றத்தூர், திருபெரும்புதூர். 


 விழுப்புரம் மாவட்டத்தின் காணை, கோலியனூர், மயிலம், மரக்காணம், மேல்மலையனூர், வல்லம்.


 கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் சின்னசேலம், கள்ளக்குறிச்சி,  கல்வராயன் மலை, சங்கராபுரம், தியாகதுருகம்.


வேலூர் மாவட்டத்தின்  அணைக்கட்டு, கணியம்பாடி, வேலூர். இராணிப்பேட்டை மாவட்டத்தின் அரக்கோணம், காவேரிப்பாக்கம்,  நெமிலி, சோளிங்கர்.


 திருப்பத்தூர் மாவட்டத்தின் ஆலங்காயம், மாதனூர். திருநெல்வேலி மாவட்டத்தின் களக்காடு, நான்குனேரி, இராதாபுரம், வள்ளியூர்.


 தென்காசி மாவட்டத்தின் கடையநல்லூர், குருவிகுளம், சங்கரன்கோவில், செங்கோட்டை, தென்காசி ஊராட்சி ஒன்றியங்கள்.


வாக்காளர்கள் பெயர் சேர்ப்பு, நீக்கம் உள்ளிட்ட பணிகள் விரைந்து முடிக்கப்பட்டு கடந்த மாதம் 31-ம் தேதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டிருந்தது. இந்நிலையில், 9 மாவட்டங்களுக்கும் அக்டோபர் 6 மற்றும் 10ம் தேதிகளில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.



தமிழகத்தின் 9 மாவட்டங்களுக்கு அக்டோபர் 6 மற்றும் 10ம் தேதிகளில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.



தமிழ்நாட்டில் பெரிய மாவட்டங்களாக இருந்த நெல்லை, விழுப்புரம், காஞ்சிபுரம், வேலூர் ஆகிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டன. புதிதாக தென்காசி, கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய  மாவட்டங்கள் உதயமாகின. இந்த 9 மாவட்டங்களை தவிர்த்து மற்ற 27 மாவட்டங்களுக்கு கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது.  அப்போது பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி  பதவிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை.



இந்த மாவட்டங்களுக்கு உடனடியாக தேர்தலை நடத்த வேண்டும் என்று  தொடரப்பட்ட வழக்கில் செப்டம்பர் மாதத்திற்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து,  iஇந்த மாவட்டங்களுக்கு விரைவில் தேர்தல் நடத்தப்படும் என்று ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை மீதான மானிய கோரிக்கை விவாதத்தின் போது  கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.



வாக்காளர்கள் பெயர் சேர்ப்பு, நீக்கம் உள்ளிட்ட பணிகள் விரைந்து முடிக்கப்பட்டு கடந்த மாதம் 31-ம் தேதி வாக்காளர் பட்டியலும் வெளியானது. 



இந்நிலையில், தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் இன்று மாலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது,  தமிழகத்தின் 9 மாவட்டங்களுக்கு அக்டோபர் 6 மற்றும் 10ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக  உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என்று அறிவித்தார். வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 12ம் தேதி நடைபெறும் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Free Note Books Requirement List from EMIS as on 27.12.2024 - DEE Proceedings

  2025-26 ஆம்‌ கல்வியாண்டில்‌ அரசு / அரசு நிதியுதவி பெறும்‌ தொடக்க மற்றும்‌ நடுநிலைப்‌ பள்ளிகளில்‌ 1 முதல்‌ 8ஆம்‌ வகுப்பு வரை  பயிலும்‌ மாணவ...