பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 16-02-2026 ; School Morning Prayer Activities
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
🌀🌀🌀🌀🌀🌀🌀🌀🌀
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்
நாள்:- 16.02.2026
கிழமை:- திங்கள்
திருக்குறள்:
அதிகாரம் 51
தெரிந்து தெளிதல்
குறள் 501:
விளக்க உரை:
அறம், பொருள், இன்பம், உயிர்காக அஞ்சும் அச்சம் ஆகிய நான்கு வகையாலும் ஆராயப்பட்ட பிறகே ஒருவன் (ஒரு தொழிலுக்கு உரியவனாகத்) தெளியப்படுவான்.
அற்ப அறிவு அல்லற்கிடம்.
இரண்டொழுக்க பண்புகள் :
1. மூத்தோர் சொல் வார்த்தையும் முழு நெல்லிக்காயும் முதலில் கசக்கும் பின் இனிக்கும்.
2. எனவே மூத்தோர் சொல் கேட்டு நடப்பேன்.
பொன்மொழி :
நீங்கள் செய்யும் தர்மம் உங்கள் செல்வத்தை ஒருபோதும் குறைக்காது - நபிகள் நாயகம்
பொது அறிவு :
01.உலகிலேயே மிகவும் விலை உயர்ந்த பழம் எது?
யுபரி கிங் மெலன்
Yubari King melon
02.இந்தியாவில் உச்ச நீதிமன்ற நீதிபதிகளை யார் நியமிக்கிறார்கள்?
குடியரசுத் தலைவர்
President
English words :
foliage –all the leaves of a tree or plant.
ஒரு மரம் அல்லது செடியின் இலைத்தொகுதி.
launch – start something new,
புதிதாக ஒன்றைத் தொடங்குதல்
தமிழ் இலக்கணம்:
சும்மா.... 2
1. சும்மா சொல்லிக் கொண்டு இருக்க மாட்டேன்
2. கொஞ்ச நேரம் சும்மா இருக்க மாட்டியா?
3. சும்மா சும்மா ஏன் வருகிறாய்?
சமீபத்திய ஆய்வில், ஆஸ்பர்கிலஸ் டெரியஸ் மற்றும் என்ஜியோடோன்டியம் ஆல்பம் ஆகிய இரண்டு பூஞ்சைகள் பாட்டில் மூடிகள் மற்றும் உணவுப் பாத்திரங்களுக்குப் பயன்படுத்தப்படும் பாலிப்ரோப்பிலீன் என்ற பிளாஸ்டிக் வகையை உடைக்கும் என்று ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். பூஞ்சைகளால் பாலிப்ரொப்பிலீனின் ஆய்வக மாதிரிகளை வெறும் 140 நாட்களில் உடைக்க முடிந்தது, இது நூற்றுக்கணக்கான ஆண்டுகளில் பிளாஸ்டிக்கை தானே சிதைவடைவதற்கு எடுக்கும் குறிப்பிடத்தக்க முன்னேற்றமாகும்.
பிப்ரவரி 16
தாதாசாகெப் பால்கே அவர்களின் நினைவுநாள்
ஒரு வரம் மூன்று பலன்கள்
ஒரு ஊரில் ஏழை மீனவன் ஒருவன் இருந்தான். அவனுடைய அம்மாவிற்குக் கண்பார்வை இல்லை. அவனுக்கு வெகு நாட்களாகக் குழந்தையும் இல்லை. ஒரு நாள் அவன் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றான். அப்போது, கரையில் ஒதுங்கிக் கிடந்த பெரிய மீனொன்று அவனைப் பார்த்துக் கெஞ்சியது. மீனவனே, நான் சாதாரண மீன் இல்லை. கடலில் உள்ள மீன்களுக்கெல்லாம் தலைவன். ஆழ்கடலில் வசிக்கும் நான், ஒரு பெரிய அலையில் சிக்கி இந்தக் கரைப் பகுதிக்கு வந்துவிட்டேன். இப்போது நீந்த முடியாத அளவிற்கு மிகவும் சோர்வாக உள்ளேன். எனக்கு ஒரு உதவி செய் மீனவனே. என்னை பத்திரமாக ஆழ்கடலுக்குக் கொண்டு போய்ச் சேர்த்துவிட்டால் உனக்கு ஒரு வரம் தருவேன்.
மீனவன் அந்த மீனைத் தூக்கி படகில் போட்டான். மிகவும் கஷ்டப்பட்டு படகைச் செலுத்திக் கொண்டுபோய் மீனை நடுக்கடலில் விட்டான். பிறகு, என்ன வரம் கேட்பது என்று யோசித்தான். அவனால் ஒரு முடிவு எடுக்க முடியவில்லை. எனவே அவன் சொன்னான். மீன்களின் ராஜாவே, நீ சொன்னபடி நான் செய்துவிட்டேன். ஆனால், என்ன வரம் கேட்பது என்று எனக்கு இப்போது தெரியவில்லை. வீட்டுக்குச் சென்று மற்றவர்களிடம் கலந்து ஆலோசித்துவிட்டு நாளை வந்து கேட்கிறேன். மீனும், நீ ஒரே ஒரு வரம்தான் கேட்க வேண்டும் என்று நினைவுபடுத்தி நன்றி கூறிச் சென்றது. மீனவன் வீட்டுக்குச் சென்றான். வீட்டில் பெற்றோரிடமும், மனைவியிடமும் நடந்ததைக் கூறினான். ராஜா மீனிடம் என்ன வரம் கேட்பது என்று ஆலோசித்தான்.
அவனது தந்தை கூறினார்: மகனே, நாம் நெடுங்காலமாக இந்த ஓட்டைக் குடிசையில்தான் வாழ்ந்து வருகிறோம். நமக்கு ஒரு நல்ல வீடு வேண்டும் என்று ராஜா மீனிடம் கேளேன்.
அடுத்ததாக அவனது அம்மா சொன்னார்கள்: மகனே, எனக்குக் கண் தெரியாமல் மிகவும் சிரமமாக இருக்கிறது. என் கண்கள் பார்வை பெற வேண்டும் என்று அந்த மீனிடம் கேள்.
கடைசியாக மனைவி கேட்டாள்: நமக்குத் திருமணம் ஆகி பல வருடங்கள் ஆகிவிட்டன. இன்னும் நமக்கு ஒரு குழந்தை இல்லை. எனவே, அந்த மீனிடம் நமக்கு ஒரு குழந்தை வேண்டும் என்று கேளுங்கள்.
மறுநாள், அந்த மீனவன் கடலுக்குச் சென்று ராஜா மீனிடம் ஒரே ஒரு வரம்தான் கேட்டான். அந்த ஒரு வரத்தில் அவன் பெற்றோரின் ஆசையும், அவன் மனைவின் விருப்பமும் நிறைவேறின. அப்படி அவன் என்ன வரம் கேட்டான்?
விடை:
என் மகன் கீழே விளையாடிக் கொண்டிருப்பதை, எங்கள் வீட்டு மாடியிலிருந்து என் பெற்றோர் பார்த்து மகிழ வேண்டும் என்பது தான் அவன் கேட்ட வரம்.
இன்றைய செய்திகள்
16.02.2026
⭐சென்னையில் 'L' வடிவ மேம்பாலத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
⭐இந்தியாவின் முதல் நீருக்கடியில் செல்லும் சாலை-ரெயில் சுரங்கப்பாதை அசாமில் அமைகிறது!
⭐இந்தியாவில் சுமார் 4 கோடியே 20 லட்சம் பேர் தைராய்டால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன.
🏀 விளையாட்டுச் செய்திகள்
🏀 டி20 தொடர்: முதல் போட்டியில் ஆஸ்திரேலியா மகளிர் அணியை எளிதாக வீழ்த்தியது இந்தியா.
🏀 டி20 உலகக் கோப்பை 2026: 9 விக்கெட் வித்தியாசத்தில் நேபாளத்தை வீழ்த்தியது வெஸ்ட் இண்டீஸ்
Today's Headlines
⭐Chief Minister M.K. Stalin inaugurated the 'L' shaped flyover in Chennai.
⭐ India's first underwater road-rail tunnel to be built in Assam.
⭐ Studies suggest that around 42 million people in India are suffering from thyroid disorder.
🏀T 20 World Cup 2026: West Indies beat Nepal by 9 wickets
🏀 International Table Tennis Tournament is being held in Chennai.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.