கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 06-10-2021 - புதன் - (School Morning Prayer Activities)...

 


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 06.10.21

  திருக்குறள் :

அதிகாரம்: கேள்வி. 

குறள் : 414

கற்றில னாயினுங் கேட்க அஃதொருவற்
கொற்கத்தின் ஊற்றாந் துணை.

பொருள்:
நூல்களைக் கற்காவிட்டாலும், கற்றவரிடம் கேட்டுத் தெரிந்து கொண்டால், அது நடை தளர்ந்தவனுக்கு உதவிடும் ஊன்றுகோலைப் போலத் துணையாக அமையும்.

பழமொழி :

A little knowledge is a dangerous thing.


அரை வைத்தியம் ஆபத்தில் முடியும்.

இரண்டொழுக்க பண்புகள் :

1. வாழ்க்கையில் ஒரு செயலை ஆரம்பிப்பதற்கு முன், எவ்வாறு செய்து முடிக்க போகிறோம் என்று திட்டமிட்டு கொள்ள வேண்டும். 

2. திட்டமிடுதல் மிக முக்கியம். திட்டமிடுவோம் செயல்படுவோம்

பொன்மொழி :

நீங்கள் பிறரிடம் எதை செலவு செய்கிறீர்களோ அதைவே நீங்கள் சம்பாதிப்பீர்கள். அன்பும் பகையும் இரட்டிப்பாகும் செலவுகள் ஆகும்....விவேகானந்தர்.

பொது அறிவு :

1.கிரிக்கெட் பீட்சின் நீளம் எவ்வளவு?

 22 கெஜம்.

2.கிரிக்கெட் ஸ்டம்பின் உயரம் எவ்வளவு?

27 அங்குலம்.

English words & meanings :

Metre - SI unit of length. நீளத்தின் அலகு. 

Meter - measuring device. அளக்கும் கருவி.

ஆரோக்ய வாழ்வு :

பல்வேறு நோய்களுக்கு அற்புத நிவாரணம் தரும் தேன்...!!




*தேனுடன் சுண்ணாம்பைக் கலந்துநன்றாகக் குழைத்து பழுக்காத கட்டிகள் மேல் பூச கட்டிகள் பழுக்கும்மீன் எண்ணெயோடு தேனைக் கலந்து உண்டு வந்தால்ஆறாத புண்கள் ஆறிவிடும்.

 * கருஞ்சீரகத்தை நீர் விட்டுக்காய்ச்சி அதில் தேன் கலந்து சாப்பிடகீழ் வாதம் போகும். வயிற்றுவலி ஏற்பட்டவர்களுக்குத் தொப்புளைச் சுற்றிலும் தேன் தடவினால் வலி நீங்கும்.

 * தேனோடு பாலோஎலுமிச்சம் பழச்சாறோ கலந்து சாப்பிட பித்த நீர்த் தொந்தரவுகள் குறையும்கல்லீரல் வலுவடையும்.

 * அரை அவுன்ஸ் தேனுடன்அரை அவுன்ஸ் இஞ்சிச்சாறு கலந்து காலை நேரங்களில் தொடர்ந்து சாப்பிட்டு வரஇரத்த சுத்தியும்இரத்த விருத்தியும் ஏற்படும்நரம்புத் தளர்ச்சிகளும் நீங்கும்.

 * அல்சர் நோய்க்கு சாப்பாட்டிற்கு முன் இரண்டு கரண்டித் தேனைத் தொடர்ந்து சாப்பிட்டு வரகுணமாகும்முருங்கைக்காய்ச் சாறுடன் சமளவு தேன் கலந்து பருகினால் நீர்க்கோவை நீங்கும்.

கணினி யுகம் :

Ctrl + Alt + 2 - Change text to heading 2

Ctrl + Alt + 3 - Change text to heading 3

அக்டோபர் 6

புலமைப்பித்தன்  அவர்களின் நினைவுநாள்  


புலமைப்பித்தன் (Pulamaipithan, அக்டோபர் 6, 1935 - செப்டம்பர் 8, 2021) தமிழ் கவிஞர் மற்றும் பாடலாசிரியர் ஆவார்.  புலமைப்பித்தன் கோயமுத்தூரில் பிறந்தவர். இவரது இயற்பெயர் ராமசாமி ஆகும். தமிழக அரசின் சிறந்த பாடலாசிரியர் விருதை நான்கு முறை பெற்றிருக்கும் புலமைப்பித்தன், சட்டமேலவை உறுப்பினர் மற்றும் அரசவைக் கவிஞர் ஆகிய பொறுப்புகளையும் அலங்கரித்திருக்கிறார்.

நீதிக்கதை

  தங்கத்தூண்டில்


ஒரு ஊருல ரமேஷ், சுரேஷ் அண்ணன், தம்பிகள் இருந்தாங்க. அவங்க ரெண்டு பேரும் மீன் பிடிச்சு வாழ்க்கை நடத்துனாங்க. ஒரு நாள் மதியம் அவங்க சாப்பிட்டுக்கிட்டு இருக்கும்போது பிச்சைக்காரன் ஒருத்தன் அங்கே வந்தான். எலும்பும் தோலுமாக இருந்த அவனைப் பார்க்கவே பரிதாபமாக இருந்துச்சாம். 

அந்த பிச்சைக்காரன் அவங்ககிட்ட சாப்பிட்டு நாலு நாளாச்சு. பசிக்குது... எதாவது தாங்கன்னு கேட்டான். ரமேஷ் அவனுக்கு கொஞ்சம் சாப்பாட்டை எடுத்து தந்தான். , இதை பார்த்த சுரேஷ். , அண்ணா! இதுப்போல சோம்பேறிங்ககிட்ட இரக்கம் காடாதனு, தடுத்தான். 

அதை கேக்காம ரமேஷ் சாப்பாட்டை குடுத்தான். அடுத்த நாளும் அதே போல சாப்பிடுற நேரத்துல பிச்சைக்காரன் வந்தான். திரும்பவும் வந்ததுனால சுரேஷ்க்கு கோவம் வந்து டேய்! சோம்பேறி பையா! அடுத்த முறை உன்னை இங்க பார்த்தா தொலைச்சுடுவேன்னு கத்தினான். மூணாவது நாளும் பிச்சை கேட்டு அங்க வந்தான். அவனப்பாத்த கோபத்துல சுரேஷ் அங்கிருந்த தூண்டில் ஒன்றை எடுத்துக்கிட்டு அவனைத் ஏரிக்கரைக்கு கூட்டி வந்தான். 

இப்படி பிச்சை எடுக்குறியே! இதெல்லாம் ஒரு பிழைப்பா? உனக்கு மீன் பிடிக்க கத்துத்தரேன். இந்த தூண்டிலை வச்சு பொழைச்சுக்கோனு சொல்லி மீன் பிடிக்குறது எப்படின்னு கத்துக்கொடுத்ட்டு போய்ட்டான். 

பல நாளாக அந்த பிச்சைக்காரன் வரவே இல்ல. அவனை மறந்து போய்ட்டாங்க. ஒரு நாள் ரமேசும், சுரேசும் டிவி பார்த்துக்கிட்டு இருந்தப்போ, ஒரு அழகான குதிரை வண்டில ஒருத்தர் வந்தார். அவர் கையில தங்கத்தால் செஞ்ச தூண்டில் ஒண்ணு இருந்துச்சு. ரமேசும், சுரேசும் அவரைப் பார்த்தாங்க. தங்கத் தூண்டிலை எனது பரிசாக வச்சுக்கோனு சுரேஷிடம் குடுத்தாரு. 

தன் வீட்டுக்கு வந்த பிச்சைக்காரன்தான் இவன் என்று ரமேஷ்க்கு தெரிஞ்சுது. அவனுக்கு சரியான கோவம். நீ சாகப் பிழைக்க இருந்தப்போ உனக்கு சாப்பாடு குடுத்து காப்பாத்தியது நான். எனக்குத்தான் இந்தத் தங்கத் தூண்டிலை தரனும். எனக்குத் தா என்று கத்தினான். ஆனால், அவரோ, இது உங்க தம்பிக்குத்தான் சேரனும்ன்னு சொன்னார். இதை ரமேஷ் கேட்காம வழக்கை கோர்டுக்கு கொண்டு போனான். நடந்ததை எல்லாம் விசாரிச்சார் ஜட்ஜ். 

ரமேஷ்யை பார்த்து, நீ இவருக்கு சாப்பாடு குடுத்து உயிரை காப்பாத்தியது உண்மைதான். ஆனா, உன் தம்பியோ இவர் வாழ்வதற்கு வழி காட்டினார். அதைப் பயன்படுத்தி இவர் பெரிய பணக்காரராயிட்டார். நிலையான உதவி செய்த சுரேஷ்க்கு இவர் தூண்டிலை பரிசா குடுத்தது சரிதான். இந்தத் தங்கத் தூண்டில் சுரேஷ்க்குத்தான்னு தீர்ப்பு! வழங்கப்பட்டது. 

நீதி :
நாம் செய்யும் உதவி அப்போதைக்கு கஷ்டம் தீர்ந்தால் மட்டும் போதாது, எப்போதும் கஷ்டம் வராதபடி உதவி செய்தல் வேண்டும்.

இன்றைய செய்திகள்

06.10.21

 ◆இரண்டாம் கட்டப் பொறியியல் கலந்தாய்வு தொடங்கியது: 30,000 மாணவர்கள் பங்கேற்பு.

◆தேசிய நெடுஞ்சாலையில் 100 முதல் 120 கி.மீ. வேகத்தில் செல்லலாம் என்ற மத்திய அரசின் அறிவிப்பாணை ரத்து; 60 முதல் 100 கி.மீ. வேகத்தில் மட்டுமே செல்லும் வகையில் புதிய அறிவிப்பாணை வெளியிட உயர் நீதிமன்றம் உத்தரவு.

◆சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில், பாஸ்போர்ட் தொடர்பான புகார்கள் மற்றும் குறைகளை வாட்ஸ்-அப் வீடியோ கால் மூலம் நிவர்த்தி செய்யும் புதிய வசதி தொடங்கப்பட்டுள்ளது.

◆அஞ்சல் துறை படிவங்களில் தமிழ் அகற்றப்பட்டுள்ளது. இதற்கு உடனடியாக உரிய மாற்றங்களை செய்யவேண்டும் என்று பொது மேலாளருக்கு சு.வெங்கடேசன் எம்.பி. கடிதம்.

◆தேசிய சாலை பாதுகாப்பு வாரியத்தை நிறுவுவதற்கான அறிவிப்பை அதன் விதிமுறைகளுடன் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் அறிவித்துள்ளது.

◆உலக அளவில் பருவநிலை மாற்றத்தால் 10 ஆண்டுகளில் 14% பவளப்பாறைகள் அழிந்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

◆இந்த ஆண்டு ஜூன் மாதம் நடந்த டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் வெண்கல பதக்கம் வென்ற காரணத்தால் லவ்லினா போர்கோஹெய்ன் மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டிக்கு நேரடியாக தகுதி பெற்று உள்ளார்.

◆உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி: 14 வயதில் தங்கம் வென்றார் இந்தியாவின் நம்யா கபூர்.

Today's Headlines

 🌸 Phase II Engineering counseling started: 30,000 students participated.

 🌸100 to 120 km speed on the National Highway was Cancelled by Federal Government. The High Court verdict to give the order for only 60 to 100 km speed limit.                                                                            

 🌸A new facility has been launched at the Chennai Regional Passport Office to address passport-related complaints and grievances through WhatsApp video calls.

 🌸 The Tamil language has been removed from post office forms.  S. Venkatesh M . P wrote a letter to the General Manager that appropriate changes should be made immediately. 

 🌸 The Ministry of Road Transport and Highways has announced the establishment of the National Road Safety Board with its regulations.

 🌸Scientists say that 14% of worldwide coral reefs have been destroyed in 10 years due to climatic changes. 

 🌸 Lovelina Borgohain has qualified directly for the Women's World Boxing Championships after winning a bronze medal at the Tokyo Olympics in June this year.

 🌸 World Cup Sniper: Namya Kapoor of India wins gold at the age of 14.
Prepared by
Covai women ICT_போதிமரம்

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Prolonged sitting puts heart at risk - new study warns

நீண்ட நேரம் அமர்ந்தால் இதயத்திற்கு ஆபத்து - எச்சரிக்கும் புதிய ஆய்வு Prolonged sitting puts heart at risk - new study warns