கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

ஐப்பசி மாத (18-10-2021) ராசி பலன்கள், வழிபாடுகள்...



மேஷம்

ஐப்பசி மாத  ராசிபலன்கள்

 மேஷ ராசி அன்பர்களே! இந்த மாதம் மனதில் நினைத்திருந்த காரியங்களில் இருந்துவந்த தடை, தாமதங்கள் நீங்கும். எந்தவொரு செயலாக இருந்தாலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். உத்தியோகம் தொடர்பான பணிகளில் உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கப் பெறுவீர்கள். வாகன பழுதுகளை சீர் செய்வீர்கள். பாகப்பிரிவினை சார்ந்த செயல்பாடுகளில் இருந்துவந்த இழுபறிகள் குறையும். மனதில் இனம் புரியாத புதுவிதமான ஆசைகள் மற்றும் எண்ணங்கள் தோன்றி மறையும். வாழ்க்கைத்துணைவர் வழியில் அனுசரித்து செல்வது நல்லது. கடன் தொடர்பான பிரச்சனைகளுக்கு நண்பர்களின் உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். எதிர்பாராத சில தனவரவுகள் கிடைக்கும். சமூகம் சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு சாதகமான சூழ்நிலைகள் ஏற்படும். 



வழிபாடு :


 சிவபெருமானை வழிபாடு செய்துவர மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சியுடன் செயல்படுவீர்கள்.

---------------------------------------





ரிஷபம்

ஐப்பசி மாத  ராசிபலன்கள்

 ரிஷப ராசி அன்பர்களே! இந்த மாதம் மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். குழந்தைகளின் வழியில் சுப விரயங்கள் ஏற்படும். பணிபுரியும் இடத்தில் எதிர்பார்த்திருந்த சில மாற்றங்கள் உண்டாகும். பொருளாதார நெருக்கடிகள் குறையும். தனித்திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் ஏற்படும். குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். தம்பதியர்கள் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து செல்லவும். மாணவர்களுக்கு பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு சார்ந்த விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். அது சம்பந்தமான விஷயங்களில் சற்று விழிப்புணர்வுடன் செயல்படவும். வியாபார பணிகளில் பொறுமையுடன் செயல்பட வேண்டும். உறவினர்களிடத்தில் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து செல்லவும்.



வழிபாடு :


 விநாயகரை வழிபாடு செய்துவர காரியத்தடைகள் குறையும்.

---------------------------------------






மிதுனம்

ஐப்பசி மாத  ராசிபலன்கள்

 மிதுன ராசி அன்பர்களே! இந்த மாதம் புதிய வேலை தொடர்பான முயற்சிகள் சாதகமாக நிறைவு பெறும். செயல்பாடுகளில் ஒருவிதமான சோர்வும், மந்தத்தன்மையும் அவ்வப்போது ஏற்பட்டு நீங்கும். மறைமுக திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சூழ்நிலைபகள் உண்டாகும். போட்டி, பொறாமைகள் குறையும். உடன்பிறந்தவர்கள் வழியில் ஆதரவான சூழ்நிலைகள் காணப்படும். இன்ப சுற்றுலா சென்று வருவீர்கள். பூர்வீக சொத்துக்களின் மூலம் விரயங்கள் ஏற்படும். மாணவர்கள் உயர்கல்வி தொடர்பான விஷயங்களில் பெரியோர்களிடம் கலந்தாலோசித்து முடிவெடுப்பது நல்லது. எதிர்பாராத சில செய்திகளின் மூலம் விரயங்கள் உண்டாகும். மனதில் இனம் புரியாத சஞ்சலங்களும், அச்சமும் ஏற்பட்டு நீங்கும்.



வழிபாடு :


 காலபைரவரை வழிபாடு செய்துவர முயற்சிகளில் இருந்துவந்த தடை, தாமதங்கள் குறையும்.

---------------------------------------





கடகம்

ஐப்பசி மாத  ராசிபலன்கள்

 கடக ராசி அன்பர்களே! இந்த மாதம் தனவரவுகள் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றமான வாய்ப்புகள் காணப்படும். வீடு மற்றும் அதை சார்ந்த விஷயங்களின் மூலம் ஆதாயம் ஏற்படும். அரசு சார்ந்த செயல்பாடுகளில் நிதானத்துடன் முடிவு எடுக்கவும். உறவினர்களின் வழியில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். மனை சார்ந்த செயல்பாடுகளின் மூலம் ஆதாயமடைவீர்கள். குடும்ப உறுப்பினர்களிடம் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து செல்வதன் மூலம் மனவருத்தங்கள் குறையும். அடிப்படை கல்வியில் ஏற்ற, இறக்கமான சூழ்நிலைகள் காணப்படும். நீண்ட நேரம் கண் விழிப்பதை தவிர்ப்பது நல்லது. எதிராக செயல்பட்ட சிலர் சாதகமாக செயல்படுவார்கள். உயர் அதிகாரிகளின் மறைமுக ஆதரவுகள் ஏற்படும்.



வழிபாடு :


 ஆஞ்சநேயரை வழிபாடு செய்துவர தனவரவுகளில் இருந்துவந்த நெருக்கடிகள் குறையும்.

---------------------------------------






சிம்மம்

ஐப்பசி மாத  ராசிபலன்கள்

 சிம்ம ராசி அன்பர்களே! இந்த மாதம் பணிபுரியும் இடத்தில் எதிர்பாராத சில மாற்றங்கள் ஏற்படும். வியாபாரம் நிமிர்த்தமாக வெளியூர் பயணங்கள் சென்று வருவீர்கள். அரசு சார்ந்த ஊழியர்கள் பொதுமக்களுடன் நிதானத்துடன் நடந்து கொள்ளவும். புதிய நபர்களின் அறிமுகங்கள் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும். பழைய செயல்பாடுகள் மற்றும் சிந்தனைகளின் மூலம் ஒருவிதமான சோர்வு ஏற்பட்டு நீங்கும். தகவல் சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். கமிஷன், வியாபாரம் சம்பந்தமான பணிகளில் லாபம் அதிகரிக்கும். தற்பெருமை சிந்தனைகளை குறைத்துக் கொள்வது நல்லது. ஒரு செயலை மேற்கொள்ளும் பொழுது தகுந்த ஆலோசனைகள் பெற்று மேற்கொண்டால் நன்மைகள் ஏற்படும். சாதுர்யமான பேச்சுக்களின் மூலம் சாதகமான சூழ்நிலைகளை உருவாக்குவீர்கள்.



வழிபாடு :


 சூரியதேவரை வழிபாடு செய்துவர எண்ணங்களில் தெளிவு பிறக்கும்.

---------------------------------------






கன்னி

ஐப்பசி மாத  ராசிபலன்கள்

 கன்னி ராசி அன்பர்களே! இந்த மாதம் செய்யும் முயற்சிகளுக்கு ஏற்ப வெற்றி கிடைக்கும். மனதில் நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் இருந்துவந்த பிரச்சனைகள் குறையும். வியாபார பணிகளில் புதிய ஒப்பந்தங்கள் சாதகமாக அமையும். வெளிநாட்டு தொழில் தொடர்பான முயற்சிகளின் மூலம் லாபம் அதிகரிக்கும். எதிர்பாராத சில தனவரவுகளால் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் காணப்படும். மறைமுகமாக இருந்துவந்த எதிர்ப்புகளை அறிந்து வெற்றி கொள்வீர்கள். கணிதம் சார்ந்த பணிகளில் நுட்பத்தினை வெளிப்படுத்துவீர்கள். சமூகம் சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு புதிய பணிகளும், அதிகாரங்களும் கிடைக்கும். வெளிவட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். சூடான பேச்சுக்களை குறைத்துக் கொள்வது நல்லது. செலவுகளின் தன்மைகளை அறிந்து செய்வது நல்லது.



வழிபாடு :


 கபாலீஸ்வரரை வழிபாடு செய்துவர மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி உண்டாகும்.

---------------------------------------





துலாம்

ஐப்பசி மாத  ராசிபலன்கள்

 துலாம் ராசி அன்பர்களே! இந்த மாதம் பெருந்தன்மையான செயல்பாடுகளின் மூலம் அனைவரிடத்திலும் மதிப்புகள் அதிகரிக்கும். எதிர்பாராத சில பொறுப்புகளின் மூலம் உயர்வும், அலைச்சலும் ஏற்படும். தந்தைவழி உறவினர்களிடம் விட்டுக்கொடுத்து செல்லவும். புதிய வேலை தொடர்பான முயற்சிகளில் ஈடுபடுபவர்களுக்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். உத்தியோக பணிகளில் சில கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு நடக்க வேண்டிய சூழ்நிலைகள் ஏற்படும். பெரிய மனிதர்களின் அறிமுகங்கள் கிடைக்கும். மனதில் நினைத்த சில காரியங்கள் நிறைவேறும். ஆன்மிக பணிகளில் ஈடுபாடு ஏற்படும். மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும். தேர்வு தொடர்பான விஷயங்களில் இருந்துவந்த குழப்பங்கள் குறையும்.



வழிபாடு :


 அர்த்தநாரீஸ்வரரை வழிபாடு செய்துவர வியாபார பணிகளில் லாபங்கள் மேம்படும்.

---------------------------------------





விருச்சிகம்

ஐப்பசி மாத  ராசிபலன்கள்

 விருச்சிக ராசி அன்பர்களே! இந்த மாதம் உத்தியோகம் சம்பந்தமான வெளியூர் பயணங்கள் சாதகமாக அமையும். அரசு சார்ந்த பணிகளில் சிறு சிறு விரயங்கள் ஏற்பட்டு நீங்கும். மகிழ்ச்சியான அனுபவங்கள் கிடைக்கப் பெறுவீர்கள். உத்தியோகம் நிமிர்த்தமான பணிகளில் சாதகமான சூழ்நிலைகள் ஏற்படும். பெண்களுக்கு தோற்றப்பொலிவு மேம்படும். வாழ்க்கைத்துணைவர் பற்றிய சிந்தனைகள் அதிகரிக்கும். ஜவுளி சார்ந்த வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். இலக்கியம் மற்றும் எழுத்து தொடர்பான பணிகளில் நுட்பத்திறமைகளின் மூலம் பாராட்டுக்கள் கிடைக்கப் பெறுவீர்கள். வியாபாரம் நிமிர்த்தமான சிந்தனைகளின் மூலம் மன அமைதி குறையும். ஆராய்ச்சி சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு பொறுப்புகளும், அலைச்சலும் ஏற்படும்.



வழிபாடு :


அங்காள பரமேஸ்வரி வழிபாடு செய்துவர எண்ணிய எண்ணங்கள் நிறைவேறும்.

---------------------------------------






தனுசு

ஐப்பசி மாத  ராசிபலன்கள்

தனுசு ராசி அன்பர்களே! இந்த மாதம் போட்டிகளில் ஈடுபட்டு வெற்றி அடைவீர்கள். மனதில் நினைத்த ஆசைகள் நிறைவேறும். உயர் அதிகாரிகளால் ஏற்பட்டிருந்த நெருக்கடிகள் படிப்படியாக குறையும். செயல்பாடுகளில் இருந்த எதிர்ப்புகளை வெற்றி கொண்டு சாதகமான பலன்களை அடைவீர்கள். அரசு சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு மேன்மையான சூழ்நிலைகள் காணப்படும். வாழ்க்கைத்துணைவரின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். பணப்புழக்கம் மேம்படும். புதிய நபர்களின் அறிமுகங்களால் மாற்றமான வாய்ப்புகள் ஏற்படும். சமூகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்கள் பொறுமையுடன் செயல்படுதல் அவசியம்.



வழிபாடு :


முருகப்பெருமானை வழிபாடு செய்துவர சாதகமான உதவிகள் கிடைக்கும்.

---------------------------------------







மகரம்


ஐப்பசி மாத ராசிபலன்கள்

மகர ராசி அன்பர்களே! இந்த மாதம் சுபகாரியம் தொடர்பான சுப விரயங்கள் ஏற்படும். வாகனம் மற்றும் புதிய வீடு வாங்குவது தொடர்பான எண்ணங்கள் கைகூடும். பரம்பரை தொழில் மேற்கொள்பவர்களுக்கு சிறப்பான வாய்ப்புகள் காணப்படும். உங்களின் பலம் மற்றும் பலவீனங்களை அறிந்து கொள்வீர்கள். எதிர்ப்புகள் குறைந்து மகிழ்ச்சியான சூழ்நிலைகள் காணப்படும். வேடிக்கை மற்றும் விளையாட்டு தொடர்பான விஷயங்களில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். வியாபார பணிகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்துவந்த மந்தத்தன்மை நீங்கும். எதிர்பாலின மக்களால் அனுகூலமான சூழ்நிலைகள் காணப்படும். தரகு மற்றும் கமிஷன் தொடர்பான செயல்பாடுகளில் ஆதாயமடைவீர்கள். 


வழிபாடு :


மகாலட்சுமியை வழிபாடு செய்துவர பொருளாதாரம் மேம்படும்.



கும்பம்


ஐப்பசி மாத ராசிபலன்கள்

கும்ப ராசி அன்பர்களே! இந்த மாதம் பாகப்பிரிவினை தொடர்பான விஷயங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பெற்றோர்களின் ஆசீர்வாதங்கள் கிடைக்கப் பெறுவீர்கள். புதிய நபர்களின் அறிமுகங்கள் கிடைக்கும். சகோதர வழியில் நன்மைகள் கிடைக்கப் பெறுவீர்கள். நெருக்கமானவர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். வழக்கு சார்ந்த பணிகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். தனவரவுகளில் இருந்துவந்த நெருக்கடிகள் குறையும். தந்தைவழி உறவினர்களின் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கப் பெறுவீர்கள். மாணவர்களுக்கு உயர்கல்வி தொடர்பான முயற்சிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். வியாபாரம் நிமிர்த்தமாக அந்நியர்களின் அறிமுகங்கள் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும். உத்தியோகம் நிமிர்த்தமாக நீண்ட தூர பயணங்கள் மேற்கொள்வதற்கான சூழ்நிலைகள் சிலருக்கு அமையும்.


வழிபாடு :


லட்சுமி நரசிம்மரை வழிபாடு செய்து வர ஆரோக்கியமும், சுகமும் மேம்படும்.



மீனம்


ஐப்பசி மாத ராசிபலன்கள்

மீன ராசி அன்பர்களே! இந்த மாதம் இழுபறியாக இருந்துவந்த தனவரவுகள் கிடைக்கப் பெறுவீர்கள். எதிர்பார்த்திருந்த சில உதவிகள் காலதாமதமாக கிடைக்கும். வர்த்தகம் தொடர்பான பணிகளில் எதிர்பாராத முன்னேற்றம் உண்டாகும். நெருக்கமானவர்களை பற்றி புரிந்து கொள்வதற்கான சூழ்நிலைகள் ஏற்படும். வழக்கு சார்ந்த செயல்பாடுகளில் நுட்பமான விஷயங்களை அறிந்து கொள்வீர்கள். செய்யும் முயற்சிகளில் திருப்தியான முடிவுகள் கிடைக்கப் பெறுவீர்கள். வாழ்க்கைத்துணைவருடன் அனுசரித்து செல்வது நல்லது. எந்தவொரு செயலையும் காலதாமதமின்றி உடனுக்குடன் செய்து முடிப்பது உங்களின் மீதான நம்பிக்கையை மேம்படுத்தும். வாகன பயணங்களில் தேவையான கோப்புகளையும், நிதானத்தையும் கடைபிடிக்கவும்.


வழிபாடு :


சப்த கன்னியர்களை வழிபாடு செய்துவர மேன்மையான வாய்ப்புகள் உண்டாகும்.




இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

26-01-2025 - School Morning Prayer Activities

     பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 26-01-2025 - School Morning Prayer Activities 76வது குடியரசு தின வாழ்த்துகள்... திருக்குறள்: பால்: ...