கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 18-10-2021 - திங்கள் - (School Morning Prayer Activities)...



 பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 18.10.21

 திருக்குறள் :


அதிகாரம்: அறிவுடைமை


குறள் : 424


எண்பொருள வாகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய்

நுண்பொருள் காண்ப தறிவு.


பொருள்:

நாம் சொல்ல வேண்டியவைகளை எளிய முறையில் கேட்போரின் இதயத்தில் பதியுமாறு சொல்லிப் பிறர் சொல்லும் நுட்பமான கருத்துக்களையும் ஆராய்ந்து தெளிவதே அறிவுடைமையாகும்.


பழமொழி :

A willful man will have a way.


                           

மனம் இருந்தால் மார்க்கம் உண்டு


இரண்டொழுக்க பண்புகள் :


1. உள்ளது எதுவோ அது இறைவன் கொடுத்தது என்று மகிழ்ச்சியாய் இருப்போம்.



2. இல்லாதது எதுவோ அது இனி இறைவன் கொடுக்கப் போவது என்று நம்பிக்கையோடு இருப்போம்.


பொன்மொழி :


நன்மைகள் தீமைகள் யாவற்றிற்கும் நீங்களே காரணம் என்பதை உணர்வீர்கள் எனில் உங்கள் செயல்களில் விவேகம் உண்டாகும்.


------ விவேகானந்தர்


பொது அறிவு :


1.நீர் அருந்தாத நீர் வாழ் உயிரினம் எது? 


டால்பின். 


2.மீன்கள் இல்லாத ஆறு எது? 


ஜோர்டான் ஆறு.


English words & meanings :


Hot potatoe(Idioms )- something dangerous or difficult, 


heart in the mouth - nervous

ஆரோக்ய வாழ்வு :


இரத்த பிளேட்லெட் அதிகரிக்கும் உணவுகள் 


✔பப்பாளி மற்றும் பப்பாளி இலை பிளேட்லெட் எண்ணிக்கையை அதிகரிக்கும். 


✔மாதுளையின் சிவப்பு விதைகளில் ஆக்ஸிஜனேற்ற அழற்சி எதிர்ப்பு மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பண்புகள் கொண்ட சத்துக்கள் நிறைந்துள்ளன. மாதுளை பிளேட்லெட் எண்ணிக்கையை அதிகரிக்க உதவுகிறது. 


✔ பூசணிக்காய் வைட்டமின் ஏ நிறைந்துள்ளது. பிளேட்லெட்டுகளின் வளர்ச்சியை ஆதரிக்க செய்கிறது. மேலும் உடல் செல்களால் உற்பத்தி செய்யப்படும் புரதங்களை ஒழுங்குப்படுத்துகிறது. 


✔ கீரைகள், முட்டைக்கோஸ் மற்றும் வெந்தயக்கீரை போன்ற இலைக்கீரைகளில் வைட்டமின் கே அதிகமாக உள்ளது. உங்கள் பிளேட்லெட் எண்ணிக்கை கீழே வரும் போது அதிகமாக எடுக்க வேண்டும்.

கணினி யுகம் :


Ctrl + Shift + C - Create a new contact 


Ctrl + Shift + J - Create a new journal entry



அக்டோபர் 18


தாமசு ஆல்வா எடிசன் அவர்களின் நினைவுநாள்  


தாமசு ஆல்வா எடிசன் (Thomas Alva Edison, பெப்ரவரி 11, 1847 – அக்டோபர் 18, 1931) ஒரு அமெரிக்கக் கண்டுபிடிப்பாளரும், தொழிலதிபரும் ஆவார். இவர் ஒளி விளக்கு, ஒலிவரைவி, திரைப் படக்கருவி உள்ளிட்ட பல கருவிகளை உருவாக்கினார். திரள் உற்பத்தி, ஒன்றுபட்ட பெரிய குழுப்பணி ஆகிய கோட்பாடுகளைப் பயன்படுத்திய முதல் கண்டுபிடிப்பாளர்களுள் ஒருவர். ஆக்க மேதை எடிசன் தன் 84 ஆம் வயதில், 1931 அக்டோபர் 18 ஆம் தேதி நியூஜெர்சியில் உள்ள வெஸ்ட் ஆரஞ்ச் நகரில் காலமானார். அமெரிக்க ஜனாதிபதி ஹெர்பர்ட் ஹூவர் எடிசனின் உடல் அடக்கத்தின் போது அமெரிக்காவெங்கும் மின்விளக்குகளை, ஒரு நிமிடம் அணைக்கும்படி ஆணையிட்டிருந்தார். அக்டோபர் 21 ஆம் தேதி மாலை 9:59 மணிக்கு அவரது உடல் அடக்கமானது. அக்டோபர் 21 ஆம் தேதி மாலை நியூ யார்க்கில் 'சுதந்திர தேவி சிலையின்'(Statue of Liberty) கையில் இருந்த தீப்பந்தம் ஒளி இழந்தது! 




நீதிக்கதை


மரவெட்டியின் வேண்டுதல்


மரம் வெட்டும் தொழிலாளி ஒருவன், மரத்தில் ஏறி விறகு கட்டைகளை வெட்டுவதை வாடிக்கையாக கொண்டிருந்தான். ஒருமுறை மரத்தில் ஏறியவன் கிளைகளை வெட்டிக் கொண்டே மேல் நோக்கி சென்றான். சிறிது நேரத்தில் மரத்தின் உச்சிக்கு சென்றுவிட்டான். அப்போதுதான் கீழே கவனித்தான். கால் வைத்து இறங்குவதற்கு கூட கிளை இல்லாமல் எல்லாவற்றையும் வெட்டிவிட்டு மேலே சென்றிருந்தான்.


அந்த உயரத்தில் இருந்து கீழே பார்ப்பதற்கு அவனுக்கு பயமாக இருந்தது. கீழே இறங்க முடியாதே என கவலைப்பட்ட அவனுக்கு பயம் குடலைப் புரட்டியது. உடனே கடவுளிடம் வேண்டினான். கடவுளே, நீ என்னை பத்திரமாக தரையிறக்கினால், நான் என் பசுவை உன் கோவிலுக்கு தானமாக தருகிறேன் என்றான். வேண்டிக்கொண்டிருக்கும்போதே லேசாக சறுக்க, மரத்தில் இருந்து வழுக்கி சற்று கீழே வந்தான். இப்போது முன்புபோல உயரம் தெரியவில்லை. இப்போது அவனுக்கு கொஞ்சம் தைரியம் வந்தது.


பசு இல்லை கடவுளே, நான் உனக்கு எனது ஆட்டைத் தருகிறேன் என மீண்டும் வேண்டினான். இப்போதும் சறுக்கியது. இன்னும் கீழே வந்தான். ஆட்டை என்னால் தர முடியாது கடவுளே, நான் உனக்கு கோழியை தருகிறேன் என்றான். மீண்டும் சறுக்கி வழுக்க, ரொம்பவே கீழே இறங்கிவிட்டான். இப்போது அவனுக்கு பயம் போய்விட்டது. என்னால் கோழியும் தர முடியாது கடவுளே, நான் உனக்கு ஒரு முட்டையை படைக்கிறேன் என்றான். இப்போதும் சறுக்கல் எடுக்க இன்னும் கீழே இறங்கினான். இப்போது அவன் தரையில் இருந்து சில அடிகள் உயரத்தில் இருந்தான். 


உடனே அவன், உனக்கு எதையும் தர முடியாது கடவுளே, நானே கீழே இறங்கிக் கொள்கிறேன் என்று மரத்தில் இருந்து கீழே குதித்தான். விறகு கட்டைகளை பொறுக்கிக் கொண்டு மகிழ்ச்சியாக பாடிக்கொண்டு வீடு திரும்பினான். பயம் விலக விலக மனிதனின் நடவடிக்கைகள் படிப்படியாக மாறிவிடுகின்றன.


இன்றைய செய்திகள்


18.10.21


 * கேரளாவில் கனமழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதகளில் ஹெலிகாப்டர் மூலம் நிவாரணப் பொருட்களை வழங்கும் பணியில் இந்திய கப்பல்படை.


*கன்னியாகுமரி மாவட்டம் தொடர் கனமழை - திருவட்டாறில் இருந்து அரை கி.மீ. தொலைவில் உள்ள பறளியாற்றில் சீறிப் பாயும் வெள்ளம்


* உபயோகித்த சமையல் எண்ணெயில் பயோடீசல்: கின்னஸ் சாதனைக்கு கோவை உணவுப் பாதுகாப்புத்துறை முயற்சி.


* இ-ஷ்ரம் இணையளத்தில் 4 கோடி அமைப்பு சாரா தொழிலாளர்கள் பதிவு: ரூ.2.0 லட்சம் இழப்பீடு பெறலாம்.


* டி20 உலகக் கோப்பை முதல் சுற்று, முதல் லீக் போட்டியில் ஓமன் மற்றும் பாப்புவா நியூ கினியா அணிகள் மோதின. ஓமன் அணி 13.4 ஓவர்களில் 131/0 ரன்கள் சேர்த்து 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.


* தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணி 3-0 என்ற கோல் கணக்கில் நேபாளத்தை வீழ்த்தி சாம்பியன் கோப்பையை 8-வது முறையாக  கைப்பற்றியது.



Today's Headlines


 🌸 Indian Navy deploys relief supplies by helicopter in areas affected by heavy rains and floods in Kerala.


 🌸 Kanyakumari district heavy rains - half a km from Thiruvattar.  Extreme levels of flood danger were announced in at least two places.


 🌸 Biodiesel in Used Cooking Oil: Guinness World Record for Coimbatore Food Safety Initiative.


 🌸 4 crore unorganized workers registered on the e-Shram website: Rs 2.0 lakh compensation can be obtained.


 🌸 Oman and Papua New Guinea clash in the first round and first league match of the T20 World Cup.  Oman won by 10 wickets at 131/0 in 13.4 overs.


 🌸 India beat Nepal 3-0 to win the Champions Trophy at the South Asian Football Championship.

 Prepared by


Covai women ICT_போதிமரம்

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

G.O. (D) No. 278, Dated : 17-12-2024 - TN Govt nominated TRB as the nodal agency for conducting SET

TRB மூலம் பேராசிரியர் தகுதித் தேர்வு (TNSET) - மூன்றாண்டுகள் நடத்துவதற்கான அரசாணை G.O. (D) No. 278, Dated : 17-12-2024 வெளியீடு TAMILNADU St...