கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 20-10-2021 - புதன் - (School Morning Prayer Activities)...



 பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 20.10.21

  திருக்குறள் :


அதிகாரம்: அறிவுடைமை


குறள் : 427


அறிவுடையார் ஆவ தறிவார் அறிவிலார்

அஃதறி கல்லா தவர்.


பொருள்:

ஒரு விளைவுக்கு எதிர் விளைவு எப்படியிருக்குமென அறிவுடையவர்கள்தான் சிந்திப்பார்கள்; அறிவில்லாதவர்கள் சிந்திக்க மாட்டார்கள்.


பழமொழி :

Come in events cast their shadow before.



யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே.


இரண்டொழுக்க பண்புகள் :


1. உள்ளது எதுவோ அது இறைவன் கொடுத்தது என்று மகிழ்ச்சியாய் இருப்போம்.



2. இல்லாதது எதுவோ அது இனி இறைவன் கொடுக்கப் போவது என்று நம்பிக்கையோடு இருப்போம்.


பொன்மொழி :


வைராக்கியம்,அகந்தை,பிறப்பு, இறப்பு,மூப்பு,பிணி,இவைகளால் ஏற்படும் நன்மை தீமைகள் யாவற்றையும் சிந்தித்து உணர்வது தான் ஞானியின் இயல்பு --- கீதை


பொது அறிவு :


1.இந்திய அரசியல் அமைப்பில் அங்கீகரிக்கப்பட்ட மொழிகள் எத்தனை? 


22 மொழிகள். 


2. செஸ் விளையாட்டு தோன்றிய நாடு எது? 


இந்தியா.


English words & meanings :


Until the cow comes home (Idioms )-to wait for a long time, 


burn the bridges - destroy or cut off the ways to go back


ஆரோக்ய வாழ்வு :


வெங்காயத் தாளின் மருத்துவ பயன்கள்


* உணவுகளில் அதிகமாக பயன்படுத்தப்படும் ஸ்ப்ரிங் ஆனியன்ஸ் என அழைக்கப்படும் வெங்காயதாள் உடலுக்கு பல நன்மைகளை அளிக்கிறது. வெங்காயத்தாள் கீரை வகையை சார்ந்தது.


* வெங்காயத்தில் உள்ளதை போலவே வெங்காயத்தாளிலும் கந்தகச்சத்து அதிகளவில் உள்ளது. வெங்காயத்தாளில் விட்டமின் சி, விட்டமின் பி2, விட்டமின் ஏ, விட்டமின் கே போன்ற பல விட்டமின்கள் அடங்கியுள்ளன.


* வெங்காயத்தாளில் உள்ள பாக்டீரிய எதிர்ப்பு பண்புகள், செரிமான உபாதைகளுக்கு நிவாரணம் வழங்கும்.இதில் உள்ள பெக்டின் பெருங்குடல் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பை குறைக்கிறது.


* வெங்காயத்தாள் கண் நோய் மற்றும் மற்ற கண் பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வை வழங்குகிறது.


* வெங்காயப்பூ மற்றும் வெங்காய சாற்றை இரவில் வெறும் வயிற்றில் 48 நாட்கள் பருகிவர காச நோய் குணமடையும்.



கணினி யுகம் :


Ctrl + Shift + ! - Format number in comma format 


Ctrl + Shift + $ - Format number in currency format



அக்டோபர் 20


ஆனி சலிவன் அவர்களின் நினைவுநாள்  


ஆனி சலிவன் (Anne Sullivan) (1866 ஏப்ரல் 14 - 1936 அக்டோபர் 20 ) இவர், தலைசிறந்த ஆசிரியரும், பார்க்கவும் கேட்கவும் இயலாத எலன் கெல்லர் வாழ்க்கையில் புதிய விடியல் பிறக்க வழிவகுத்துத் தந்தவருமாகவும் அறியப்படுகிறார். கண் பார்வையற்ற, காது கேளாத, பேசும் திறனும் அற்ற குழந்தையான ஹெலனுக்கு புரியும் வகையில் தன் போதனை முறையை மாற்றினார். தண்ணீர் கொட்டும் குழாயின் அடியில் அவள் கையை நீட்டிப் பிடித்து, உள்ளங்கையில் w-a-t-e-r என்று மீண்டும் மீண்டும் எழுதி மனதில் அறியவைத்தார். அப்போதுதான் அந்தக் குழந்தைக்கு, தன் கையில் ஓடிக்கொண்டிருக்கும் பொருளுக்கு ஒரு பெயர் உள்ளது, அதுதான் இது என்பது புரியத் தொடங்கியது. ஆறே மாதங்களில் இவர் ஹெலனுக்கு 575 வார்த்தைகள், ஒரு சில பெருக்கல் வாய்ப்பாடுகளையும் புடையெழுத்து (பிரைய்லி (Braille) முறையையும் கற்றுக்கொடுத்தார். இவரைக் குறித்து ஹெலன் கெல்லர் எழுதிய ‘மை டீச்சர்’ என்ற நூல் மிகவும் பிரபலமான ஒன்றாகும். சுய முனைப்பால் மகத்தான உயரங்களை எட்டியவரும் உலகுக்கே ஒரு முன்னுதாரண ஆசிரியராகவும் பரிணமித்த ஆனி சலிவன் 1936-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 10-ம் நாள் 70-வது வயதில் காலமானார்.


நீதிக்கதை


நண்பகல் தூக்கம்


ஒரு நாள் மத்தியம் வெயில் அதிகமாக இருந்தது. மரத்தடியில் ஒருவன் நன்றாக தூங்கிக்கொண்டிருந்தான். 


அந்த வழியாக வந்த ஒரு விறகுவெட்டி அவனைப்பார்த்து, இவன் கடுமையான உழைப்பாளி போல தெரிகிறது. உழைத்த களைப்பால் தான் இந்த வெயிலிலும் இப்படி உறங்குகிறான் என நினைத்துக் கொண்டுச் சென்றான். 


அடுத்ததாக திருடன் ஒருவன் அந்த வழியாக வந்தான். இரவு முழுவதும் கண்விழித்து திருடி இருப்பான். அதனால்தான் இந்த சுட்டெரிக்கும் வெயிலிலும் அடித்துப் போட்டது போல் தூங்குகிறான் என நினைத்துக்கொண்டுச் சென்றான். 


மூன்றாவதாக குடிகாரன் ஒருவன் வந்தான். காலையிலேயே நன்றாக குடித்துவிட்டும் குடிமயக்கத்தில் இப்படி விழுந்து கிடக்கிறான் என நினைத்துக்கொண்டுச் சென்றான். 


சற்று நேரத்தில் துறவி ஒருவர் வந்தார். இந்த நண்பகலில் இப்படி உறங்கும் இவர் முற்றும் துறந்த ஞானியாகத்தான் இருக்க வேண்டும் என அவரை வணங்கிவிட்டுச் சென்றார். 


நீதி :

நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே.


இன்றைய செய்திகள்

20 .10.21

◆ஆசிரியர்கள் நேரடி நியமனத்துக்கான வயது வரம்பு 40-ல் இருந்து 45 ஆக உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.



◆சென்னையில் பல்வேறு வழித்தடங்களில் 100 மின்சார பேருந்துகளை வரும் ஜனவரியில் இயக்குவதற்கான பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. மேலும், 6 இடங்களில் சார்ஜிங் மையங்களும் அமைக்கப்பட உள்ளன.



◆நெம்மேலியில் கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையம் அமைக்கும் பணி தீவிரம்: முதல்வர் ஆய்வு.


◆ கீழடி அகழ்வாய்வு தளத்தில் முதன் முறையாகக் கண்டறியப்பட்ட ‘மீன் சின்ன பொறிப்புடன்’ கூடிய உறை கிணறு


◆கேரளாவில் கனமழை, நிலச்சரிவால் இதுவரை 35 பேர் உயிரிழந்துள்ளனர்.


◆தமிழக அரசு, ஐரோப்பிய தமிழர்கள் நிதியால் கொலோன் பல்கலை. தமிழ் பிரிவு நீட்டிப்பு.



◆கனடாவில் 5 முதல் 11 வயதினருக்கு கரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான வேண்டுகோளை அந்நாட்டு சுகாதாரத் துறைக்கு பைஸர் நிறுவனம் வைத்துள்ளது.



◆ஆப்கானிஸ்தான் தொடர்பாக ரஷ்யா நடத்தும் பேச்சுவார்த்தையில் பங்கேற்கவில்லை என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.


◆பாரிபாஸ் ஓபன் டென்னிஸ் போட்டியில் இங்கிலாந்து வீரர் கேமரூன் நோரி, ஸ்பெயின் வீராங்கனை பாலா படோசா ஆகியோர் சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தனர்.


◆டென்மார்க் ஓபன் பேட்மிண்டனில் இந்தியாவின் கிதம்பி சக வீரரான பிரணீத்துடன் விளையாடி முதல் சுற்றில் வெற்றி பெற்றுள்ளார்.


Today's Headlines


 🌸 The government has raised the age limit for direct appointment of teachers from 40 to 45.



 🌸Work is in full swing to operate 100 electric buses on various routes in Chennai by next January.  In addition, charging stations are to be set up at 6 locations.



 🌸  For setting up  seawater treatment plant at Nemmely the work has been speed up : Chief Minister done Inspection on that.


 🌸 In Keezhadi Evacuation first time a covered well was discovered with the inscription of Fish 


 🌸Heavy rains and landslides in Kerala have claimed 35 lives so far.


 🌸 Government of Tamil Nadu, University of Cologne funded by European Tamils.  Tamil section extended.



🌸 Pfizer  has placed a request to the Canadian Department of Health to vaccinate 5- to 11-year-olds in Canada.



 🌸The United States has said that they would not take part in Russia's talks about Afghanistan.


 🌸 England's Cameron Nori and Spain's Bala Padosa won and achieved the Baribas Open tennis championship


🌸 Kitambi of India wins first round at the Danish Open Badminton with his teammate Praneeth.

 Prepared by


Covai women ICT_போதிமரம்

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 07-11-2024

        பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 07-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: "பால் :பொருட்பால் அதிகாரம்...