கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 26-10-2021 - செவ்வாய் - (School Morning Prayer Activities)...

 


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 26.10.21

  திருக்குறள் :


பால்:பொருட்பால்


இயல்:அரசியல்


அதிகாரம்:குற்றம் கடிதல்.


குறள் எண் : 437


குறள்:

செயற்பால செய்யா திவறியான் செல்வம்

உயற்பால தன்றிக் கெடும்.


பொருள்:

செய்யத்தக்க நன்மைகளைச் செய்யாமல் பொருளைச் சேர்த்து வைத்திருப்பவனுடைய செல்வம் பயன் இல்லாமல் அழியும்.


பழமொழி :

Do not cry for the moon.



எட்டாக் கனிக்கு ஆசைப்படாதே.


இரண்டொழுக்க பண்புகள் :


1. பெற்ற உதவிக்கு நன்றி சொல்லுவேன். செய்த தவறுக்கு மன்னிப்பு கோருவேன். 


2. இதன் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்து என் வாழ்வில் சிறந்த மனிதனாக விளங்குவேன்


பொன்மொழி :


வாழ்வில் செலவில்லாமல் சம்பாதிக்கும் விசயங்கள் புன்னகை,தூக்கம்,கனவுகள்,உறவுகள்,நட்புகள்.. இவைகளை பற்றினால் வீண் செலவுகளான பிரச்சனைகள் வரா....ரமண மகரிஷி




பொது அறிவு :


1.தமிழ்நாட்டில் முக்கடல்களும் சந்திக்கும் இடம் எது? 


கன்னியாகுமரி. 


2."வாசனைப் பொருட்களின் ராணி" என்றழைக்கப்படும் பொருள் எது? 


ஏலக்காய்.


English words & meanings :


Jump the gun - doing something too soon without thinking, யோசிக்காமல் செய்ய படும் செயல், 


ring the bell - something sounds familiar but can't remember exactly, ஒரு காரியம் மங்கலாக நினைவுக்கு வருவது

ஆரோக்ய வாழ்வு :


இரத்த சோகைக்கான சில வீட்டு சிகிச்சைகள்!


* பேரிச்சம் பழத்தை தேனில் ஊற வைத்து, தினமும் 2 பேரிச்சம் பழம் உட்கொண்டு வந்தால், உடலில் இரத்த சிவப்பணுக்களின் அளவை அதிகரித்து, இரத்த சோகையைப் போக்கலாம்.


 * உடலில் பொட்டாசியம் குறைவாக இருந்தாலும், இரத்த சோகை ஏற்படும். அன்றாட உணவில் வெள்ளரிக்காயை சேர்த்து வாருங்கள். வெள்ளரிக்காயில் நீர்ச்சத்து மட்டுமின்றி, பொட்டாசியம் ஏராளமாக நிறைந்துள்ளது.


* இரத்த சோகை பிரச்சனை இருப்பவர்கள், பழங்களில் ஆப்பிள் ஜூஸ் மற்றும் காய்கறி ஜூஸ்களில் பீட்ரூட், பசலைக்கீரை போன்றவற்றைக் கொண்டு ஜூஸ் செய்து தினமும் குடித்து வருவதன் மூலம் இரத்த சோகையைப் போக்கலாம்.


* தேனில் இரும்புச்சத்து ஏராளமாக நிறைந்துள்ளதால், இவற்றை சர்க்கரைக்கு பதிலாக பயன்படுத்தி வர, உடலில் இரத்த சிவப்பணுக்களின் அளவை அதிகரிக்கலாம்.


* இரத்த சோகை இருப்பவர்கள் வைட்டமின் சி நிறைந்த உணவுகளை உட்கொள்வது நல்லது. ஏனெனில் வைட்டமின் சி சத்து தான் உடலில் இரும்புச்சத்து உறிஞ்ச உதவும்.


* இரத்த சோகை இருப்பவர்கள், நட்ஸ் சாப்பிடுவதன் மூலம் அதனைத் தடுக்கலாம். அதிலும் பாதாமை தினமும் உட்கொண்டு வந்தால், ஹீமோகுளோபின் அளவு வேகமாக அதிகரிக்கும்.    


கணினி யுகம் :


Ctrl + Alt + 2 - Change text to heading 2. 


Ctrl + Alt + 3 - Change text to heading 3


நீதிக்கதை


இறைவன் படைப்பு


ஒரு காட்டில் ஒரு முயல் ஓடி விளையாடிக் கொண்டிருந்தது. அதை பார்த்துக் கொண்டிருந்த ஆமை. நம்மால் ஏற்கனவே வேகமாக போக முடியாது இதில், முதுகில் வேறு பாரமாக ஓடும். முயலைப் பார்த்து பொறாமைப்படுவதில் பயன் இல்லை என்னை இப்படிப் படைத்ததற்காக ஆண்டவனைத்தான் நொந்து கொள்ளவேண்டும் என ஆமை எண்ணியது.


அப்போது அன்று இறை எதுவும் கிடைக்காததால் அலைந்து கொண்டிருந்த சிங்கம், விளையாடிக்கொண்டிருந்த முயலைப்பிடிக்க பாய்ந்தது. முயல் ஒரே ஓட்டமாக ஓடி ஒளிந்தது. ஆமையோ, தன் கூட்டுக்குள் முடங்கியது.


சிறிது நேரத்தில் சிங்கம் சென்றுவிட முயல் பயத்தில் அவ்விடம் வந்ததும், ஆமை தன் கூட்டிலிருந்து தலையை நீட்டிப் பார்த்தது. ஒவ்வொரு விநாடியும் மரணபயத்திலேயே முயல் வாழ்நாளை கழிக்க வேண்டியிருக்கையில், விலங்குகளிடமிருந்து காத்துக்கொள்ள தன் முதுகிலேயே தனக்கு கூட்டையும் கொடுத்த இறைவனை நிந்தித்தது எவ்வளவு தவறு என உணர்ந்தது.


இறைவன் படைப்பில் ஒவ்வொரு உயிர்க்கும் ஒவ்வொரு தனித்தன்மை உண்டு. அந்த தனித்தன்மையை உபயோகித்து ஆபத்துக் காலங்களில் தப்பிக்கலாம். இதுவே இறைவன் கருணை என்பதை உணர்ந்தது ஆமை.


இன்றைய செய்திகள்


26.10.21


●முதுகலை எம்.டி. யோகா, இயற்கை மருத்துவப் படிப்புகளுக்கு நவம்பர் 20 வரை விண்ணப்பிக்கலாம் என்று இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி இயக்குநர் தெரிவித்துள்ளார். 


●தமிழகத்தில் முதல்முறையாக டீசல் விலை ரூ.100-ஐக் கடந்துள்ளதால், சரக்கு லாரிகளின் வாடகைக்கட்டணம் 20 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.


●காய்ச்சல், தொண்டை அலர்ஜி, அஜீரணத்துக்கான 43 மருந்துகள் தரமற்றவை: மத்திய தரக் கட்டுப்பாட்டு வாரியம் தகவல்.


●நாடுமுழுவதும் கடந்த 2014ம் ஆண்டு முதல் அனுமதி வழங்கப்பட்ட 157 புதிய மருத்துவக் கல்லூரிகளுக்காக ரூ.17,691.08 கோடி மத்திய அரசு முதலீடு செய்துள்ளது.



●7 வயதுக்குள்ளான பள்ளி மாணவர்களுக்கு மன அழுத்தத்தைக் குறைப்பதற்காக, வீட்டுப் பாடங்களை ரத்து செய்யும் புதிய சட்டத்தை சீனா பிறப்பித்துள்ளது.


●உரிய நேரத்தில் உணவு கிடைக்காவிட்டால் லட்சக்கணக்கான ஆப்கானியர்களும், குழந்தைகளும் உயிரிழக்கக் கூடும் என்று உலக உணவு திட்டம் அமைப்பு எச்சரித்துள்ளது.


●ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் முதல் இந்திய தலைமை பயிற்சியாளர் காலித் ஜமீல் : நார்த் ஈஸ்ட் யுனைடெட் எஃப்சி அறிவிப்பு.


●ஆண்களுக்கான உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி செர்பியா தலைநகர் பெல்கிரேடில் நேற்று தொடங்கியது. இதில் 105 நாடுகளை சேர்ந்த 600-க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொள்கிறார்கள்.


Today's Headlines


● Postgraduate MD.  The Director of Indian Medicine and Homeopathy has said that students can apply for yoga and natural medicine courses till November 20.


 ● For the first time in Tamil Nadu, the diesel price has crossed Rs.  As a result, there may be a risk of a hike in the prices of essential commodities, including rice and pulses.


●  43  drugs for fever, throat allergy, indigestion are substandard: Federal Quality Control Board information.


 ● The Central Government has invested Rs.17,691.08 crore for 157 new medical colleges across the country which have been sanctioned since 2014.


● China has enacted a new law canceling homework to reduce stress for school children under the age of 7.


 ● The World Food Program (WFP) has warned that millions of Afghans and children could die if food is not provided in a timely manner.


●  Khalid Jameel, the first Indian head coach of the ISL football series: North East United FC announcement.


● The World Boxing Championships for men started yesterday in the Serbian capital Belgrade.  It is attended by more than 600 players from 105 countries.

 

 Prepared by


Covai women ICT_போதிமரம்

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 08-11-2024

       பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 08-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: "பால்: பொருட்பால் அதிகாரம்...