கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

தமிழகத்தில் 3, 5, 8, 10ம் வகுப்பு மாணவர்களுக்கு தேசிய திறனறிவு தேர்வு ( NAS - National Achievement Survey) – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு...



 நாடு முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு நடத்தப்பட்டு தேசிய திறனறிவு தேர்வுகள் நடப்பு ஆண்டில் நவம்பர் 12ம் தேதி அன்று நடத்தப்பட இருப்பதாகவும், மாணவர்களை அதற்காக தயார்படுத்துமாறும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.


தேசிய திறனறிவு தேர்வு:


நாடு முழுவதும் கொரோனா தொற்றின் முதல் அலையின் காரணமாக கடந்த ஆண்டு முதல் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தது. நோய் பரவல் பாதிப்பு குறைந்து வந்த நேரத்தில் உயர்வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் முதல் கட்டமாக கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது. இருப்பினும், தொடர்ந்து பாதிப்புகள் அதிகரித்து வந்ததால் மாணவர்களின் நலன் கருதி பள்ளிகள் மீண்டும் மூடப்பட்டது. தொடர்ந்து நடப்பாண்டில் கொரோனா 2ம் அலையின் பாதிப்புகள் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டிருந்தது.


மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் மட்டுமே தொடர்ந்து நடத்தப்பட்டது. இதனால் மாணவர்கள் கற்றல் குறைபாடு அடைந்திருப்பதாக நடத்தப்பட்ட ஆய்வுகள் தெரிவிக்கின்றது. தற்போது கொரோனா தொற்றின் தாக்கம் குறைந்துள்ளதால் கடந்த செப்டம்பர் 1ம் தேதி முதல் 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தப்படுகிறது. மேலும், வரும் நவம்பர் 1ம் தேதி முதல் 1 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளிகள் தொடங்கப்பட உள்ளது.


இந்நிலையில், 3, 5, 8, 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு NAS எனப்படும் தேசிய திறனறித் தேர்வு நவம்பர் 12ம் தேதி நடத்தப்பட இருப்பதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. கொரோனா தொற்று ஊரடங்கு காலத்தில் மாணவர்களிடையே ஏற்பட்டுள்ள கற்றல் குறைபாடுகளை கண்டறிவதற்காக இந்த தேர்வு நடத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் 3, 5, 8, 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு கற்றல் சார்ந்து பயிற்சி அளிக்க வேண்டும் என்று முதன்மைக் கல்வி அலுவலர்கள் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிட்டுள்ளனர்.


>>>  3,5,8,10 வகுப்புகளுக்கு தேசிய அளவிலான அடைவுத் தேர்வு (National Achievement Survey - NAS Exam) நவம்பர் 12ஆம் தேதி நடத்துதல் சார்ந்து முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்...



>>> 3, 5 & 8ஆம் வகுப்பு - தேசிய அடைவுத் தேர்வு - முந்தைய தேர்வுகளின் வினாத்தாள்கள் ( 3,5,8 Std - National Achievement Survey  - NAS Previous Exam Question Papers and Answers)...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

The Chief Minister listed the educational structures of Tamil Nadu

  தமிழ்நாட்டின் கல்விக் கட்டமைப்புகளை பட்டியலிட்ட முதலமைச்சர் The Chief Minister listed the educational structures of Tamil Nadu >>...