கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு 3 நாட்கள் திறன் மேம்பாட்டு பயிற்சி...



மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் அவர்களின் செயல்முறைகளுக்கிணங்க தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளில் 5 - ம் வகுப்பு சமூக அறிவியியல் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு செயல்திட்டம் அடிப்படையிலான கற்றல் ( Project Based Learning ) திறன் மேம்பாட்டு பயிற்சி காணொளி வாயிலாக அளிக்க தேவையான வளங்களை உருவாக்கும் பணிமனை தருமபுரி மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் ( நீலாபுரம் ) 11.10.2021 முதல் 13.10.2021 வரை மூன்று நாட்கள் காலை 9.30 மணி முதல் மாலை 5.00 வரை நடைபெறவுள்ளது.


எனவே இணைப்பில் கண்டுள்ள ஆசிரியர்களை பணிமனையில் கலந்துகொள்ள ஏதுவாக பணிவிடுப்பு செய்திட ஆவன செய்யுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


இணைப்பு : பணிமனையில் கலந்து கொள்ளும் ஆசிரியர்கள் விவரம்.


குறிப்பு : பணிமனையில் கலந்து கொள்ளும் ஆசிரியர்கள் 5 - ம் வகுப்பு சமூக அறிவியியல் பாடப்புத்தகங்கள் பருவம் 1,2,3 எடுத்துவரவேண்டும்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

NHIS 2026 குறித்த 1009 பக்க முழுமையான அரசாணை

NHIS 2026 குறித்த 1009 பக்க முழுமையான அரசாணை G.O.Ms.No.122, Dated : 24-06-2026  புதிய மருத்துவக் காப்பீட்டு திட்டம் - 2026 அரசாணை (நிலை) எண்...