கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

DIET லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
DIET லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

1-5 வகுப்புகள் கையாளும் ஆசிரியர்களுக்கு CRC பயிற்சி நடைபெறும் தேதிகள் அறிவிப்பு - DIET முதல்வரின் கடிதம்(Notification of Dates of CRC Training for Teachers handling Classes 1-5 - Letter from DIET Principal)...

 

1-5 வகுப்புகள் கையாளும் ஆசிரியர்களுக்கு குறுவள மைய (CRC) பயிற்சி நடைபெறும் தேதிகள் அறிவிப்பு - DIET முதல்வரின் கடிதம்(Notification of Dates of CRC Training for Teachers handling Classes 1-5 - Letter from DIET Principal)...


>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



CRC பயிற்சி

 

1 to 3 வகுப்புகளுக்கு - 30/11/2023


4 to 5  வகுப்புகளுக்கு - 02/12/2023


மேற்கண்ட தேதிகளில் நடைபெற உள்ளது.

2022ஆம் ஆண்டிற்கான மாநிலக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் கீழ் SCERT மற்றும் DIET இல் 155 பணியிடங்கள் முதுநிலை விரிவுரையாளர்கள் / விரிவுரையாளர்கள் / இளநிலை விரிவுரையாளர்கள் பதவிகளுக்கான நேரடி நியமனம் - அறிவிப்பு எண். 02/2022, நாள்: 20.08.2022 (Direct Recruitment for the 155 Posts of Senior Lecturers / Lecturers / Junior Lecturers in SCERT and DIET under the State Council of Educational Research and Training for the year 2022 - Notification No. 02/2022, Date: 20.08.2022)...



>>> 2022ஆம் ஆண்டிற்கான மாநிலக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் கீழ் SCERT மற்றும் DIET இல் 155 பணியிடங்கள் முதுநிலை விரிவுரையாளர்கள் / விரிவுரையாளர்கள் / இளநிலை விரிவுரையாளர்கள் பதவிகளுக்கான நேரடி நியமனம் - அறிவிப்பு எண். 02/2022, நாள்: 20.08.2022 (Direct Recruitment for the 155 Posts of Senior Lecturers / Lecturers / Junior Lecturers in SCERT and DIET under the State Council of Educational Research and Training for the year 2022 - Notification No. 02/2022, Date: 20.08.2022)...






தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு 3 நாட்கள் திறன் மேம்பாட்டு பயிற்சி...



மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் அவர்களின் செயல்முறைகளுக்கிணங்க தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளில் 5 - ம் வகுப்பு சமூக அறிவியியல் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு செயல்திட்டம் அடிப்படையிலான கற்றல் ( Project Based Learning ) திறன் மேம்பாட்டு பயிற்சி காணொளி வாயிலாக அளிக்க தேவையான வளங்களை உருவாக்கும் பணிமனை தருமபுரி மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் ( நீலாபுரம் ) 11.10.2021 முதல் 13.10.2021 வரை மூன்று நாட்கள் காலை 9.30 மணி முதல் மாலை 5.00 வரை நடைபெறவுள்ளது.


எனவே இணைப்பில் கண்டுள்ள ஆசிரியர்களை பணிமனையில் கலந்துகொள்ள ஏதுவாக பணிவிடுப்பு செய்திட ஆவன செய்யுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


இணைப்பு : பணிமனையில் கலந்து கொள்ளும் ஆசிரியர்கள் விவரம்.


குறிப்பு : பணிமனையில் கலந்து கொள்ளும் ஆசிரியர்கள் 5 - ம் வகுப்பு சமூக அறிவியியல் பாடப்புத்தகங்கள் பருவம் 1,2,3 எடுத்துவரவேண்டும்.



புதுமை முயற்சிகளுடன் பாட வீடியோக்கள்; 'ஆன்லைன்' வகுப்பு, இனி 'போர்' அடிக்காது...



 புதுமை முயற்சிகளுடன் பாட வீடியோக்கள்; 'ஆன்லைன்' வகுப்பு, இனி 'போர்' அடிக்காது...


ஒரே புத்தகத்தில் உள்ள பல்வேறு பகுதிகளை தனித்தனி ஆசிரியர்கள் வகுப்பெடுப்பதால் மாணவர்கள் சோர்வின்றி ஆன்லைன் வகுப்பில் பங்கேற்பதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். 


பெருந்தொற்று காலத்திலும் கற்பித்தல் பணிக்கு பெரிதும் உதவுவது அரசின் கல்வி தொலைக்காட்சிதான். பள்ளிகள் திறக்கும் வரையில் இணைப்பு பாட பயிற்சிகளும், படித்ததை நினைவுகூறுவதை பரிசோதிக்கும் வகுப்புகளும் ஒளிபரப்பாகி வருகின்றன.


ஒவ்வொரு பாடத்திற்கும் அரைமணி நேரம். ஒரே புத்தகத்தில் உள்ள பல்வேறு பகுதிகளை தனித்தனி ஆசிரியர்கள் வகுப்பெடுப்பதால் மாணவர்களும், வகுப்பறை இல்லாத குறையை போக்குவதால் ஆசிரியர்களும் அதிகளவு கல்வி சேனலில் பங்கெடுத்து வருகின்றனர். 


இதுகுறித்து திருப்பூர் மாவட்ட ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன துணை முதல்வர் விமலா கூறியதாவது: கல்வித் தொலைக்காட்சியையும் தனியார் தொலைக்காட்சிகளையும் மாணவர்கள் பார்க்க தவறிவிட்டால், யூடியூப்பில் (kalvitvofficial) அடுத்தநாள் காலையில் பார்த்து கொள்ளலாம். 


அதில் வகுப்பு வாரியாக வீடியோக்கள் இருக்கும். இதனால் எந்த இடத்தில் இருந்தாலும் மாணவர்களால் வகுப்புகளை கவனிக்க முடியும். தமிழ்நாடு ஆசிரியர் பயிற்சி மற்றும் கல்வி ஆராய்ச்சி நிறுவனத்தின் உதவியோடு, 32 மாவட்டங்களில் உள்ள ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் (DIET) பாடம் எடுக்கப்படுகிறது.


இதற்காக மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் ஒத்துழைப்புடன் முதுகலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், தொடக்க பள்ளி ஆசிரியர்களை டயட்டுக்கு வர சொல்வோம். 


அங்கு வகுப்பெடுப்பது படம் பிடிக்கப்பட்டு சென்னைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. திருப்பூர் மாவட்டத்தில் நேற்றுடன், 70 எபிசோடுகள் எடிட்டிங் செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 


ஒவ்வொரு டயட்டிலும் கேமராமேன், எடிட்டிங் என அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களும் இருப்பார்கள். விரைவில் புதுமையான முறையில் நிகழ்ச்சிகளை முன்னெடுக்கவும் திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு, அவர் கூறினார்.


Two Days Training For BT Teachers - CEO Proceedings...

 


05.03.2021 முதல் 06.03.2021 வரை இரண்டு நாட்களுக்கு அறிவியல் ஆசிரியர்களுக்கு ஆய்வக கருவிகளை பாடப்பொருளோடு தொடர்பு படுத்துதல் மற்றும் பயன்படுத்துதல் பயிற்சி நடைபெற உள்ளது.


பயிற்சியில் கலந்து கொள்ள மாவட்டத்தில் உள்ள மேல்நிலைப் பள்ளிகளில் 6, 7, 8 ஆம் வகுப்புகளை கையாளும் அறிவியல் ஆசிரியர்கள் ஒரு பள்ளிக்கு ஒரு ஆசிரியர் வீதம் பயிற்சியில் கலந்து கொள்ளும் பொருட்டு பணி விடுவிப்பு செய்ய தலைமையாசிரியர்கள் அறிவுறுத்தப் படுகிறார்கள்.


>>> Click here to Download CEO Proceedings & DIET Principal Letter...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Free Note Books Requirement List from EMIS as on 27.12.2024 - DEE Proceedings

  2025-26 ஆம்‌ கல்வியாண்டில்‌ அரசு / அரசு நிதியுதவி பெறும்‌ தொடக்க மற்றும்‌ நடுநிலைப்‌ பள்ளிகளில்‌ 1 முதல்‌ 8ஆம்‌ வகுப்பு வரை  பயிலும்‌ மாணவ...