கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 02-11-2021 - செவ்வாய் - (School Morning Prayer Activities)...

 


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 02.11.21

  திருக்குறள் :


பால்: பொருட்பால்


இயல்:அரசியல்


அதிகாரம்: தெரிந்து செயல் வகை


குறள் எண் : 465


குறள்:

வகையறச் சூழா தெழுதல் பகைவரைப்

பாத்திப் படுப்பதோ ராறு.


பொருள் :

முன்னேற்பாடுகளை முழுமையாக ஆராய்ந்து செய்யாமல் பகைவரை ஒடுக்க முனைவது அந்தப் பகைவரின் வலிமையை நிலையாக வளர்க்கும் வழியாக ஆகிவிடும்.


பழமொழி :


Cast no dirt into the well that gives  you water


 உண்ட  வீட்டிற்கு  இரண்டகம் பண்ணாதே.



இரண்டொழுக்க பண்புகள் :


1. எப்போதும் நாம் தான் வல்லவன் என்ற

அகந்தையை ஒதுக்கி ..நல்லவனாய் வாழு நாளும் சிறக்கும் நீயும் சிறப்பாய்.


 2. எண்ணம் உறுதியாக உன்னதமாக இருந்தால், எண்ணியபடி உயரலாம்.


பொன்மொழி :


என்றும் நினைவில் கொள்ளவேண்டும், மனிதனாகப் பிறந்தவன் பயனின்றி அழியக்கூடாது - ---கார்ல் மார்க்ஸ்



பொது அறிவு :


1. போக்குவரத்து காவலர்களே இல்லாத நாடு எது? 


நியூசிலாந்து. 


2. உலகின் அதிக அளவு சிலை வடிக்கப்பட்ட மனிதர் யார்? 


லெனின்.


English words & meanings :


Idioms 


up in the air - haven't yet decided about a plan, இன்னும் முடிவு செய்யவில்லை.


 I wasn't born yesterday - not believe others saying because you are old. இளையவர்கள் சொல்வதை எளிதில் நம்பாத முதியோர்

ஆரோக்ய வாழ்வு :


ஆடாதொடை இலையின் மருத்துவ குணம்

சித்தர்கள் பயன்படுத்திய பல மூலிகை வகைகளில் ஆடாதோடை மிகவும் முக்கியமானது. இந்த இலையின் அறிவியல் பெயர் Adhatoda vasica. வாசை என்ற  வேறு பெயறும் உண்டு. இது Acanthaceae என்ற தாவர குடும்பத்தை சார்ந்தது.    


ஆடாதொடை இலை பொதுவாக இருமல், சளி மற்றும் தொண்டைக் கட்டுக்கு அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த இலைகளில் அல்கலாய்டு என்ற வேதிப்பொருள்கள் இருப்பதால் நுரையீரல் சம்மந்தமான பிரச்சனைகளை சரி செய்ய உதவுகிறது.

ஆடாதோடின், வைட்டமின் சி, கேலக்டோஸ், டானின், அல்கலாய்டுகள் போன்ற  வேதிப்பொருள்கள் உள்ளன.

தொண்டை கரகரப்பு, அதிக சளி மற்றும் சுவாசப் பாதைகளை சீராக வைத்துக்கொள்ளவும், நோய்களை குணப்படுத்தவும் உதவுகிறது.

இரத்த அழுத்தத்தை குறைக்கவும், நரம்பு சம்மந்தமான பிரச்சனைகளை சரி செய்யவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது.

வயிற்று எரிச்சலை சரி செய்யவும், சீத கழிச்சல் சரி செய்யவும், கர்ப்ப பைகளை வலுப்படுத்தவும், உடலில் புற்றுநோய் செல்களை வளரவிடாமல் தடுத்து புற்று நோய் வராமல் தடுக்க உதவுகிறது.


கணினி யுகம் :


Num+ - zoom in, 


Num- - zoom out,


நவம்பர் 02


ஜார்ஜ் பெர்னாட் ஷா அவர்களின் நினைவுநாள்  


ஜார்ஜ் பெர்னாட் ஷா (1856 ஆம் ஆண்டு ஜூலை 26 - 1950 ஆம் ஆண்டு நவம்பர் 2 ) ஒரு அயர்லாந்து நாடக ஆசிரியராவார். இசை மற்றும் இலக்கிய விமர்சனமே அவரது முதல் இலாபத் தன்மை கொண்ட எழுத்துப் படைப்புகள் ஆகும். அதில் தனது திறனைக் கொண்டு மிக நேர்த்தியான பத்திரிகைப் படைப்புகள் பலவற்றை எழுதினார். அவரது பிரதான திறமை நாடகமே ஆகும். மேலும் அவர் 60க்கும் மேற்பட்ட நாடகங்களை எழுதியுள்ளார். கிட்டத்தட்ட அவரது அனைத்து எழுத்துப் படைப்புகளும் சமூகத்தில் பெருவாரியாக நிலவிவரும் சிக்கல்களைப் பற்றியதாகவே இருக்கும். ஆனால் அவற்றின் மிக முக்கிய கருப்பொருள்களை மிகவும் மனதால் ஏற்றுக்கொள்ளும் படி மாற்றுவதற்கு அவற்றில் ஒரு நகைச்சுவை அம்சமும் இழையோடியபடி இருக்கும். 


இலக்கியத்திற்கான நோபல் பரிசு (1925) மற்றும் ஆஸ்கார் (1938) விருது ஆகிய இரண்டையும் பெற்றவர் இவர் ஒருவரே. 


நீதிக்கதை


வேலை ஒன்று சம்பளம் இரண்டு


சத்ரபதி சிவாஜியின் அரண்மனையில் வேலை செய்தவர்களில் ஒரு பணியாளருக்கு 100 ரூபாயும் இன்னொருவருக்கு 150 ரூபாயும் சம்பளம். ஆனால் இருவருக்கும் ஒரே வேலைதான். குறைந்த சம்பளம் வாங்கியவர் இது பற்றி சிவாஜியிடமே கேட்டுவிட்டான். அப்போது வாசலில் ஏதோ சப்தம் கேட்டது. சிவாஜி அந்த பணியாளனிடம் வாசலில் சத்தம் கேட்கிறது போய் பார்த்து வா என்றான். அவன் போன வேகத்தில் திரும்பி வந்தான். ராஜா ஒரு யானை போய்க்கொண்டிருக்கிறது என்றான். அது என்ன யானை? என்றார் சிவாஜி. இவன் திரும்பவும் போய் வந்து ஆண் யானை மகாராஜா என்றான். அதன் விலை என்ன? என்றதும் திரும்ப யானைக்காரனை பார்க்க ஓடினான் பணியாளன். இப்படி ஒவ்வொரு கேள்விக்கும் ஓடி ஓடி சென்று பார்த்துவர வேண்டியதாயிற்று. 


சிவாஜி அடுத்த பணியாளனை அழைத்தார். வாசலில் சத்தம் கேட்கிறது. பார்த்து வா என்றார். அவன் சற்று நேரத்தில் திரும்பி வந்தான். மகாராஜா அங்கே ஒரு ஆண் யானை போகிறது. மிகுந்த லட்சனமானது. தந்தத்தின் நீளம் மட்டும் ஐந்தடி இருக்கும். விலை ஆயிரம் பொன் பெறும் என்று விவரமாக எடுத்துரைத்தான். சிவாஜி முதல் பணியாளனை ஒரு பார்வை பார்த்தார். அதன் பிறகு அவனிடம் கூலி பற்றி வாய் திறக்கவே இல்லை.


இன்றைய செய்திகள்


02. 11.21


★தீபாவளிக்கு மறுநாளும் அரசு விடுமுறை: தமிழக அரசு அறிவிப்பு.


★அடுத்த 2 மாதங்கள் சவாலாக இருக்கும் நோய் தடுப்பு பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்: மாவட்ட ஆட்சியர்களுக்கு சுகாதாரத் துறை செயலாளர் அறிவுறுத்தல்.


★கேரளாவுக்கு நீர்திறப்பு அதிகரிப்பு; முல்லை பெரியாறு அணை பகுதியில் தமிழக தலைமை பொறியாளர் ஆய்வு.


★மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் வன்னியர்களுக்கு 10.5% உள் இட ஒதுக்கீடு சட்டம் ரத்து: உயர் நீதிமன்றம் உத்தரவு.


★மருத்துவ நுழைவுத் தேர்வான நீட் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. மதிப்பெண் விவரங்கள் என்டிஏ எனப்படும் தேசியத் தேர்வுகள் முகமை சார்பில் மாணவர்களின் மெயிலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.


★2022-ம் ஆண்டில் ரயில்வே துறை சார்பில் நடத்தப்பட்டு வரும் பல பள்ளிகளை மூட திட்டமிடப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மூடப்படும் ரயில்வே பள்ளிகளில் படிக்கும் மாணவர்களை கேந்திரியா வித்யாலயா அல்லது மாநில அரசுப்பள்ளிகளில் சேர்க்கவும் ரயில்வே முடிவு செய்துள்ளது.


★ஜி 20 காலநிலை மாநாட்டில் நேரில் கலந்து கொள்ளாதற்கு ரஷ்ய மற்றும் சீன நாட்டுத் தலைவர்களை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கண்டித்துள்ளார்.


★பிரிட்டனின் ஸ்காட்லாந்தில் உள்ள கிளாஸ்கோ நகரில் பருவநிலை மாற்ற மாநாடு நேற்று தொடங்கியது.


★23 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆசிய கோப்பை கால்பந்து : தகுதி சுற்றில் ஜொலித்த இந்திய அணி.

       

★உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர்கள் கால்இறுதிக்கு முன்னேறினர்.



Today's Headlines


★ TN Government declared a holiday on the 5th the next day after Deepavali. 


 ★ The next 2 will be a great challenge for all of us. So we should focus on preventive measures: Secretary of the Health Department instructs all district collectors.


 ★ Increase in the water supply to Kerala;  Chief Engineer of Tamil Nadu inspects Mulla Periyar Dam.


 ★ Repeal of 10.5% Internal Reservation Act for Vanni in the division of Most Backward Classes: High Court gave verdict today.


 ★ NEET the Medical Entrance Exam  Results have been released.  Score details are mailed to students on behalf of the National Examinations Agency (NDA).


 ★ According to reports, it is said that the Railway Department planned to close many schools run by it in 2022.  Railways have also decided to enroll the students studying there in Kendriya Vidyalaya or state government schools.


 ★ US President Joe Biden has reprimanded Russian and Chinese leaders for not attending the G20 climate summit in person.


 ★ The Climate Change Conference kicked off yesterday in Glasgow, Scotland, UK.


 ★ Asian Cup Football for Under-23s: The Indian team that shone in the qualifying round.


 ★ Indian boxers advance to quarterfinals of World Boxing Championship

 

 Prepared by


Covai women ICT_போதிமரம்

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 07-11-2024

        பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 07-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: "பால் :பொருட்பால் அதிகாரம்...