கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 03-11-2021 - புதன் - (School Morning Prayer Activities)...

 


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 03.11.21

  திருக்குறள் :


பால்: பொருட்பால்


இயல்:அரசியல்


அதிகாரம்: தெரிந்து செயல் வகை


குறள் எண் : 464


குறள்:

தெளிவி லதனைத் தொடங்கார் இளிவென்னும்

ஏதப்பா டஞ்சு பவர்.


பொருள் :

களங்கத்துக்குப் பயப்படக் கூடியவர்கள்தான் விளைவுகளை எண்ணிப் பார்த்து அந்தக் களங்கம் தரும் காரியத்தில் இறங்காமல் இருப்பார்கள்.


பழமொழி :

Be slow to promise but quick to perform



ஆலோசித்து வாக்கு கொடு விரைந்து நிறைவேற்று.




இரண்டொழுக்க பண்புகள் :


1.தனக்கு இல்லாத குணத்தையும் இயல்பையும் தகுதியையும் ,


2. இருப்பதாகக் காட்டிக் கொள்வதில்லை இயற்கை. 2. நானும் அதை போலவே இல்லாதவற்றை இருப்பது போல் காட்டி பெருமை கொள்ள மாட்டேன்


பொன்மொழி :


உண்மை எப்போதும் எளிமையிலிருந்தே கண்டறியப்பட வேண்டும். குழப்பத்தில் இருந்து அல்ல - ---ஐசக் நியூட்டன்



பொது அறிவு :


1. காந்திஜி உருவம் பொறித்த அஞ்சல் அட்டையை முதலில் வெளியிட்ட நாடு எது? 


போலாந்து. 


2. பகவத்கீதை எத்தனை மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது? 


55 மொழிகளில்.


English words & meanings :


Back on your feet - start to work after a period of illness. சுகம் பெற்று மறுபடியும் வேலை செய்வது. 


Salt of the earth - good character people very important for the humans. மனிதர்களுக்கு உப்பாக இருந்து பாதுகாத்தல்

ஆரோக்ய வாழ்வு :


குழந்தைகளுக்கு பயிற்சி


தசைகள், எலும்பு, மூட்டுக்களை பலமாக்கவும், கை, கால் வலுவடையவும் பயிற்சிகளை செய்யலாம். குழந்தைகளுக்கு எளிய உடற்பயிற்சிகளை சொல்லித் தரலாம்.  உடல் ஆரோக்கியமாக இருக்கும். மூளை நன்கு சுறுசுறுப்படையும், எப்போதும் உடல் ஃபிட்டாக இருக்கும்.


குழந்தைகளுக்குத் தொங்குவது என்றால் ரொம்பப் பிடிக்கும். அதிகம் உயரம் இல்லாத வீட்டின் உத்தரக் கம்பின் மேல் குழந்தையின் கைகளை வைத்து தொங்கும் பயிற்சி. இப்படி தினமும் ஐந்து நிமிடம் தொங்குவதால், தோள்பட்டை மற்றும் ஆம்ஸ் பகுதி நன்கு வலுவடையும்.

காலையில் ஸ்கிப்பிங் விளையாடச் சொல்லலாம். மனம் ஒருநிலைப்படும். வியர்வை வெளியேறி, புத்துணர்ச்சி கிடைக்கும்.

குழந்தைகளை ஓடவிட்டு, கூடவே நாமும் ஓடலாம்.  இதனால், குழந்தைகளுக்குப் பெற்றோரின் மீதான நெருக்கம் அதிகரிக்கும்.  உடல் சோர்வு நீங்கும்.

நீச்சல், டென்னிஸ், கிரிக்கெட், கூடைப்பந்து போன்ற விளையாட்டுகளில் பயிற்சி கொடுக்கலாம். உயரம் குறைவாக இருந்தால், அவர்களுக்குக் கூடைப்பந்துப் பயிற்சி பலன் தரும்.

நன்றாக ஓடி ஆடி விளையாடினாலே, அது ஒருவகையில் பயிற்சிதான்.

நீச்சல், ஓட்டப்பந்தயம், கால்பந்து, கிரிக்கெட் என விளையாட்டுக்களில் ஈடுபடும்  குழந்தைகள், தினமும் கட்டாயம் உடல் வலுவை மேம்படுத்த சில பயிற்சிகளைச் செய்ய வேண்டும்.

பள்ளியைவிட்டுத் திரும்பியதும் சைக்கிள் ஓட்டலாம், ஓடிப் பிடித்து விளையாடலாம்.

படிகளில் ஏறி இறங்கலாம். ரத்த ஓட்டம் சீராகும்.

அருகில் உள்ள பூங்காவுக்குச் சென்று அவர்களுக்குப் பிடித்த விளையாட்டை விளையாடச் சொல்லாம். எந்தப் பயிற்சியில் ஈடுபடும்போதும், பெற்றோர் பிள்ளைகளைத் தொடர்ந்து கண்காணித்தபடியே இருக்கவேண்டியது அவசியம்.


கணினி யுகம் :


Ctrl+ Arrow up - Bring to front, 


Ctrl+ Arrow down - Send to back


நவம்பர் 03


அமார்த்ய குமார் சென் அவர்களின் பிறந்தநாள்


அமார்த்ய குமார் சென் (Amartya Sen, பிறப்பு: நவம்பர் 3, 1933) இந்தியாவைச் சேர்ந்த ஒரு பொருளாதார அறிஞர் ஆவார். இவர் 1998 இல் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெற்றார். மேலும் 1999 இல் பாரத ரத்னா விருதும் பெற்றார். இவர் மேற்கு வங்காளத்தில் உள்ள சாந்தி நிகேதனில் பிறந்தார்.[1]


நீதிக்கதை


ஆமை ஒன்று  ஆற்றைக் கடப்பதற்காக ஆற்றில் இறங்கியது.  அப்போது ஒரு தேள் ஓடிவந்து, " ஆமை அண்ணா, ஆமை அண்ணா!  நான் அவசரமா அக்கரைக்குப் போக வேண்டி இருக்குது.  உன் முதுகில்  ஒரு ஓரமா  இடம் கொடுத்தீன்னா நான் பாட்டுக்கு அமைதியா  அக்கரை போய் சேர்ந்துடுவேன் " என்றது. 

ஆமைக்குப் பாவமாக இருந்தது.  இருந்தாலும்  ஒரு எச்சரிக்கைக்காக ,

 " ஒன்னப் பாத்தா எனக்கும்  பாவமாதான் இருக்குது.  முதுகுல  ஏத்திக்கிட்டுப் போறேன் .  ஆனா வழியில  எதாச்சும் சேட்டை கீட்டை பண்ணினேன்னு வச்சுக்கோ ,  உரிச்சுப் புடுவேன் . ஆமா"

முதுகில் ஏற்றிக்கொண்டது.

தேளும் சந்தோஷமாய் ஏறிக்கொண்டது. சிறிது தூரம்  போனதும்  தேளுக்கு ஒரு சந்தேகம்  ,"பாறை மாதிரி  இருக்குதே இந்த  ஓடு!  இதுல நம்மால கொட்ட முடியுமா?  சரி. லேசா கொட்டித்தான் பாப்போமே"

மெல்ல ஒரு கொட்டு கொட்டியது. ஆமை கேட்டது

 " ஏய் என்ன பண்ற ?

" இல்லண்ணே. தெரியாம கொடுக்கு பட்டுடிச்சு.  மன்னிச்சுடுங்க" இது தேள். 

   ஆமை அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.  கரையை  அடைய  இன்னும் பாதி தூரம் இருந்தது.  தேளுக்கு மீண்டும் ஒரு எண்ணம், " லேசாகக் கொட்டியதால்தான் ஓடு கொஞ்சம் கூட  அசையவில்லையோ! கொஞ்சம் அழுத்தமாகக்  கொட்டினால்? சற்று  அழுத்தமாகவே கொட்டியது.

ஆனாலும்  ஓடு கொஞ்சம் கூட அசையவில்லை.

" என்னடா தம்பி,  புத்தியக்காட்டுறியா? "

என்றது ஆமை .

" அட  இல்லண்ணே.  கொஞ்சம் வழுக்குற மாதிரி இருந்தது.  கொஞ்சம் கொடுக்கால அழுத்திப் பிடிச்சிக்கிட்டேன். அதுக்குப் போயி பெருசா பேசுறியே! "

என்றது தேள்.  ஆமை தலையை  அசைத்துக் கொண்டே ஏதோ முணுமுணுத்துக் கொண்டே

நீந்தியது. கொஞ்சம் நேரம் சென்றது.  இப்போது கரைக்கு  இன்னும் சில  அடி தூரம்தான்.  இப்போது தேளுக்கு  தைரியத்துடன் கொஞ்சம் அகங்காரமும் வந்துவிட்டது.  

"நான் கொட்டுனா எவ்வளவு பெரிய யானையெல்லாம் அலறி ஓடும்!  சின்ன மிருகமா இருந்தா வாயில் நுரை தள்ளி செத்தே போகும். இந்த தம்மாத்தூண்டு ஆமைப்பயல் அசையக்கூட மாட்டுறானே. இதோ கரையும் நெருங்கிடுச்சு. கடைசியாக ஒரு தடவை கொட்டிப் பாக்கலாம் "

பலத்தையெல்லாம் திரட்டி  அழுத்தமாக ஒரு போடு போட்டது. 

ஆமைக்கு இப்போது கோபம் வந்தது.  

"நீ சரியா வரமாட்டே போலிருக்கே" என்றது.  தேளுக்கு கரையை நெருங்கிவிட்ட தைரியம். 

" பிறந்த நாள் முதலாவே கொட்டிக் கொட்டிப் பழகிட்டேன். இந்தப் பத்து நிமிஷம் பயணத்துக்காகல்லாம் பழக்கத்தை  மாத்திக்க முடியாது.  இது பழக்கதோஷம். நீதாம்ப்பா கொஞ்சம் அனுசரிச்சிப் போகணும்" என்றது.  

ஆமை சிரித்தபடியே சொன்னது , " உனக்கு இருக்கும் பழக்கதோஷம் மாதிரியே  எனக்கும் ஒன்னு  உண்டு.  அது இதுதான் " என்றபடியே நீருக்குள் மூழ்கி எழுந்தது.  எழுந்து பார்த்தால் தேள்  ஆமையின் முதுகில் இல்லை.  அது ஆமை நீருக்குள்  முழுகும்போதே வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு செத்துப் போய்விட்டது.

நீதி : உதவி செய்பவர்களை வருந்த செய்தால் அழிவு நிச்சயம்


இன்றைய செய்திகள்


03.11.21


◆பள்ளிகள் திறப்பு: 'அறிவியல் அறிவோம்' நிகழ்ச்சி மூலம் உற்சாகமூட்டும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம்.


◆ஐஏஎஸ் முதல்நிலைத் தேர்வில் வென்றோர் உதவித்தொகையுடன் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம் என்று அகில இந்திய குடிமைப் பணித் தேர்வுப் பயிற்சி மையம் அழைப்பு விடுத்துள்ளது.


◆கனமழை காரணமாகத் தமிழகத்தில் நான்கு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


◆தீபாவளி அன்று பசுமைப் பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும். காலை 6 மணிமுதல் 7 மணி வரை, இரவு 7 முதல்8 மணி வரை என 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதிக்கப்படும் என்று சுற்றுச்சூழல் துறை தெரிவித்துள்ளது.


◆நாட்டில் 92% அதிகமான பள்ளி ஆசிரியர்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.


◆2070-ம் ஆண்டுக்குள் இந்தியா, கார்பன் உமிழ்வை பூஜ்ஜியமாகக் குறைக்க இலக்கு வைத்துள்ளது என்று பருவநிலை மாறுபாடு மாநாட்டில் இந்திய பிரதமர் தெரிவித்துள்ளார்.


◆டி20 உலகக்கோப்பை: வங்காளதேசத்தை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா அபார வெற்றி.



Today's Headlines


🌸Schools are reopened: Tamil Nadu Science Movement encouraging students through "Know Science" program


🌸If the IAS students cleared the preliminary they can apply for the coaching with a scholarship says All India Administrative Services coaching center.


🌸Due to the heavy rains, there is an Orange alert for four districts of TN


🌸During Deepavali people has to burst green crackers only. The timing is morning 6 to 7 and night 7 to 8 said the Department of Environment


🌸In our Nation, more than 92% of school teachers got vaccinated. Information from the central government 


🌸Before 2070 India fixed the goal for the emission of Carbon as Zero said PM in Seasonal Changes Meet.


 🌸T20 World Cup: South Africa beat Bangladesh.

 

 Prepared by


Covai women ICT_போதிமரம்

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

The Chief Minister listed the educational structures of Tamil Nadu

  தமிழ்நாட்டின் கல்விக் கட்டமைப்புகளை பட்டியலிட்ட முதலமைச்சர் The Chief Minister listed the educational structures of Tamil Nadu >>...