கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

குரு பெயர்ச்சிப் பலன்கள் - தனுசு...



தன்னலம் கருதாமல் பிறர்நலம் கருதும் தன்னம்பிக்கை நிறைந்த தனுசுராசி அன்பர்களே... இதுவரை உங்கள் இரண்டாம் வீட்டில் அமர்ந்து நற்பலன்களை வழங்கிக்கொண்டிருந்த குருபகவான் வரும் 13.11.2021 முதல் மூன்றாம் இடமான கும்பத்துக்குப் பெயர்ச்சியாக 13.4.2022 வரை சஞ்சரிக்க இருக்கிறார். உங்களின் சுகஸ்தானமான மீன ராசிக்கு அதிபதி குருபகவான். அவர் இப்போது மூன்றாம் வீட்டில் சென்று மறைவது அத்தனை நல்ல பலன்களைத் தராது. கொஞ்சம் எச்சரிக்கையோடு செயல்பட வேண்டிய காலகட்டம் எனலாம்.


இந்தக் காலகட்டத்தில் பிறர் சொல்வதை நம்பி ஒரு காரியத்தில் இறங்கக் கூடாது. ஆசை வார்த்தைகளுக்கு மயங்க வேண்டாம். குடும்பத்துக்குள் தேவையற்ற சச்சரவுகள் ஏற்படும் என்பதால் முடிந்தவரை விட்டுக்கொடுத்துப் போவது நல்லது. சகோதர உறவுகளுடன் பேசும்போது கொஞ்சம் பதற்றம் இல்லாமல் பேசவும். தேவையற்ற உரசல்கள் வந்துபோகும்.


பொதுவாக குருபகவான் ஸ்தானபலத்தால் நற்பலன்கள் தராதபோது தன் பார்வை பலத்தால் நல்ல பலன்களை வாரி வழங்குவார். உங்கள் ராசிக்கு ஏழாம் வீட்டை குருபகவான் பார்ப்பதால் மறைந்திருந்த உங்கள் திறமைகள் வெளிப்படும். முக்கியஸ்தர்களின் அறிமுகம் கிடைக்கும். வாழ்க்கைத்துணையிடம் நீங்கள் காட்டும் அன்பு ஒன்றுக்குப் பத்தாகத் திரும்பிக் கிடைக்கும்.


குருபகவானின் பார்வை ஒன்பதாம் வீட்டின் மீது படுவதால் பணப்புழக்கம் அதிகரிக்கும். கொடுத்துத் திரும்ப வராத கடன்கள் வசூலாகும். நீங்கள் வாங்கியிருந்த கடனை திரும்பச் செலுத்துவீர்கள். குடும்பத்தில் தந்தையுடன் இருந்த மன வருத்தங்கள் நீங்கும். பிள்ளைகளும் உங்கள் பேச்சைக் கேட்டு நடப்பார்கள். மகன் அல்லது மகளுக்கு எதிர்பார்த்த கல்லூரியில் படிக்க இடம் கிடைக்கும். அவர்களின் திருமணமுயற்சிகளும் பலிதமாகும். நண்பர்கள் பணம் கேட்டுத் தொந்தரவு செய்வார்கள். கொடுப்பதற்கு முன் வாழ்க்கைத் துணையோடு ஆலோசித்துச் செய்யுங்கள்.


குருபகவான் 11ம் வீட்டைப் பார்ப்பதால் செயல்கள் தடையின்றி நிறைவேறும். பாராட்டுகள் குவியும். மூத்த சகோதரர் உதவுவார். சொத்துப் பிரச்சனைகள் சுமுகமாக முடியும். அரசியல்வாதிகள் மேலிடத்தை அனுசரித்துப் போவது அவசியம். பயணத்தின் போதும் கூடுதல் கவனம் தேவை.


குருபகவானின் சஞ்சார பலன்கள்:


13.11.2021 முதல் 30.12.2021 வரை


குருபகவான் அவிட்டம் நட்சத்திரத்தில் செல்வதால் அதிர்ஷ்ட வாய்ப்புகள் உருவாகும். புதிய சொத்துகள் வாங்குவீர்கள். பழைய கடன் பிரச்னைகளை முடிப்பீர்கள். பிள்ளைகளால் நற்பெயர் ஏற்படும். வீட்டில் சுபகாரியங்கள் நிகழும். புதிய வாகனம் வாங்கும் வாய்ப்பு கூடிவரும்.


31.12.2021 முதல் 02.03.2022 வரை


சதயம் நட்சத்திரத்தில் குருபகவான் சஞ்சரிக்கும் காலகட்டத்தில் புகழ், கௌரவம், சொல்வாக்கு, செல்வாக்கு உயரும். பிதுர்வழி சொத்துகள் கைக்கு வரும். வழக்கு சாதகமாகும். வேற்றுமதத்தவர்கள், வெளிநாட்டிலிருப்பவர்களால் உதவிக் கிடைக்கும்.


02.03.2022 முதல் 13.04.2022 வரை


குருபகவான் தன் நட்சத்திரமான பூரட்டாதி நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் இந்தக் காலகட்டத்தில் நற்பலன்களே மிகுதியாக நடக்கும். வீடுகட்டும் வேலையை எடுத்துச் செய்வீர்கள். இழந்த பணம் திரும்பக் கிடைக்கும். முடிக்கமுடியாமல் இழுபறியாக இருந்த காரியங்கள் சாதகமாகும். தடைப்பட்டுக்கொண்டிருந்த சுபகாரியங்களை மகிழ்ச்சியாக செய்துமுடிப்பீர்கள். தாய்க்கு ஏற்பட்டிருந்த ஆரோக்கிய குறைவுகள் நீங்கும். புதிய வேலைக்கு விண்ணப்பித்திருந்தவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.



வியாபாரிகளுக்கு:


புதிய முதலீடுகள் விஷயத்தில் மற்றவர்கள் சொல்வதைக் கேட்டுச் செய்யவேண்டாம். சந்தை நிலவரத்தை கவனத்தில் கொள்ளுங்கள். தேங்கிக் கிடந்த சரக்குகளைப் போராடி விற்பீர்கள். வாடிக்கையாளர்களிடம் அன்போடு நடதுகொள்ளுங்கள். பழைய பாக்கிகள் வசூலாகும். பங்குதாரர்களிடம் கராராகப் பேசவேண்டாம். ஸ்டேஷ்னரி, ஹோட்டல், விடுதிகள், கமிசன் வகைகளால் லாபமடைவீர்கள்.


உத்தியோகஸ்தர்களுக்கு:


பணியிடத்தில் தேவையற்ற பேச்சுகளைத் தவிருங்கள். மேலதிகாரியோடு விவாதம் செய்வதை விட்டுவிடுங்கள். முக்கிய பொறுப்புகள் தேடிவரும். எனவே நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருங்கள். யாரேனும் உங்களை மட்டம் தட்டிப் பேசினால் பதில் சொல்லிக்கொண்டு இருக்காதீர்கள். இடமாற்றங்கள் வந்தால் அதிர்ச்சி அடைய வேண்டாம். வேலைச்சுமை படிப்படியாகக் குறையும். அடிக்கடி விடுப்பு எடுப்பதைக் குறையுங்கள். பணி தொடர்பான வழக்குகள் கொஞ்சம் நிதானமாகச் செல்லும். பதற்றம் வேண்டாம். அடிக்கடி விடுப்பு எடுக்க வேண்டாம்.


கலைஞர்களே! பெரிய வாய்ப்புக்காக காத்திருக்காமால் கிடைக்கின்ற வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளப் பாருங்கள்.



மொத்தத்தில் இந்த குருப்பெயர்ச்சி வேலைச்சுமை, அலைச்சல்,சிறுசிறு ஏமாற்றங்களை தந்தாலும், உங்களை பக்குவப்படுத்தி வெற்றி பெற வைக்கும்.


பரிகாரம்: காஞ்சிபுரத்தில் அருள்பாலித்துக் கொண்டிருக்கும் ஸ்ரீ ஏகாம்பரநாதேஸ்வரரை வணங்குங்கள். மனவளம் குன்றியோருக்கு உதவுங்கள். தடைகள் நீங்கும்.


உங்கள் ராசி அதிபதி குருபகவான் இதுவரை இரண்டாம் இடத்தில் இருந்தார். இப்போது மூன்றாம் இடம் செல்கிறார். இரண்டாம் இடத்தில் நீச்சம் என்னும் அந்தஸ்தை அடைந்து பலவிதமான இன்னல்களுக்கு ஆளாகி விட்டீர்கள். பலவிதமான ஏமாற்றங்கள், ஒருவித மனச்சோர்வு, விரக்தி மனப்பான்மை என பலவிதமான துயரங்களை அடைந்திருப்பீர்கள். இப்போது மூன்றாம் இடமும் செல்வதால் என்ன நடக்கும் என்ற சிந்தனை இப்போது அதிகரித்திருக்கும். உண்மையில் மூன்றாம் இடம் செல்வதால் உங்களுக்கு நன்மைகள் நடக்குமே தவிர நிச்சயமாக கெடுபலன்கள் நடக்காது.


இன்னும் சொல்லப் போனால் இதுவரை இருந்த பிரச்சினைகள் அனைத்தும் முடிவுக்கு வரப்போகிறது. ஒரு நிம்மதி பெருமூச்சு விடப் போகிறீர்கள். உங்களுடைய எண்ணங்கள் அனைத்தும் இப்போது ஈடேறும். தடைபட்டு நின்ற காரியங்கள் அனைத்தும் முழுமையாக நிறைவேறும். தாமதப்பட்டு வந்த பலவிதமான வேலைகள் அனைத்தும் இப்போது தடையில்லாமல் நிறைவேறும். புதிய முயற்சிகளில் ஈடுபட வைக்கும். பயணங்கள் அதிகரிக்கும். சோம்பல் தன்மையை முற்றிலுமாக நீக்கி சுறுசுறுப்பாக குருபகவான் வைத்திருப்பார். குடும்பத்தில் ஏற்பட்டிருந்த பலவிதமான பிரச்சினைகள் அனைத்தும் இப்போது முடிவுக்கு வரும். நிம்மதியற்ற வாழ்க்கையாக இருந்த குடும்பப் பிரச்சினைகள் இனி படிப்படியாகத் தீரும். குடும்ப ஒற்றுமை அதிகரிக்கும். சகோதரர்களுடன் ஏற்பட்ட மனவருத்தங்கள் தீரும்.


கடன் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். ஒருவித பதட்டம் இருந்திருக்கும். இனி அனைத்தும் நீங்கி தெளிவான சிந்தனை உருவாகும். இனி தொட்டதெல்லாம் வெற்றிகரமாக முடியும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடக்கும். கருத்து வேறுபாடுகளால் பிரிந்த தம்பதியினர் மீண்டும் ஒன்று சேர்வார்கள். திருமண உறவு தொடர்பாக வழக்குகள் ஏதேனும் இருந்தால் இப்போது வாபஸ் பெறப்பட்டு மீண்டும் குடும்ப வாழ்க்கையில் இணைவார்கள். பாதியில் நின்ற கட்டிடப் பணிகள் தொடரும். சொத்துகள் தொடர்பான பிரச்சினைகள் முடிவுக்கு வரும். அண்டை அயலாருடன் ஏற்பட்ட சண்டை சச்சரவுகள் சமாதானமாகும். வருமானம் திருப்திகரமாக இருப்பதால் மன மகிழ்ச்சி உண்டாகும்.


அலுவலகப் பணிகளில் கடுமையான பணிச்சுமை ஏற்பட்டிருக்கும். எவ்வளவோ கஷ்டப்பட்டு திருப்திகரமாக வேலை செய்து கொடுத்தாலும் அதிலும் குற்றம் குறைகள் கண்டு அதனால் மனச்சோர்வுக்கு ஆளாகி இருப்பீர்கள். இப்போது அந்தப் பிரச்சினையை அனைத்தும் தீரும். அலுவலகத்தில் உங்களுக்கு மதிப்பு மரியாதை உயரும். இடமாற்றம் நிச்சயமாக ஏற்படும். அது விரும்பிய இடமாற்றமாக இருக்கும். வேறு நிறுவனங்களுக்கு மாறும் முயற்சி சாதகமாக இருக்கும். ஏற்கெனவே விரும்பாத இடமாற்றம் ஏற்பட்டிருந்தால் இப்போது விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். வெளிநாடுகளில் வேலைக்கு முயற்சி செய்தால் இப்போது சாதகமாக இருக்கும். அரசுப் பணிக்கு முயற்சி செய்து கொண்டிருந்தவர்கள் இப்போது முழுமையான முயற்சியில் ஈடுபட்டால் அரசு வேலை கிடைக்கும். அலுவலகத்தில் வரவேண்டிய நிலுவைத் தொகை வந்துசேரும். தாமதப்பட்டுக் கொண்டிருந்த பதவி உயர்வு கிடைக்கும். உதாசீனப்படுத்திய உயரதிகாரிகள் இப்போது வலிய வந்து ஆதரவு தருவார்கள். அனைத்து வகையிலும் இப்போது உங்களுக்கு மிகச் சாதகமான காலம் தொடங்கிவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.


சுயதொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு இப்போது மிகச் சிறப்பான தொழில் வளர்ச்சி ஏற்படக் கூடிய காலம் இது. இதுவரை உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் குரு பகவான் இருந்து நீசமான நிலையில் இருந்ததால் தொழில் தொடர்பாக ஏமாற்றங்களை சந்திக்க வேண்டியது இருந்திருக்கும். இனி அப்படிப்பட்ட ஏமாற்றங்கள் ஏதும் இருக்காது. தொழில் தொடர்பான பயணங்கள் அதிக அளவில் ஏற்படும். அதன் மூலம் ஆதாயம் கிடைக்கும். தொழில் தொடர்பாக பலவித நண்பர்களை சந்திக்க வேண்டியது வரும். அவர்கள் மூலம் ஆதாயம் கிடைக்கும். புதிய நண்பர்கள் அறிமுகமாவார்கள், அவர்கள் மூலமாக தொழில் தொடர்பான ஒப்பந்தங்கள் கிடைக்கும். ஏற்றுமதி இறக்குமதி தொழிலில் இருப்பவர்களுக்கு வருமானம் இருமடங்காக இருக்கும். இதுவரை தடை பட்டுக் கொண்டிருந்த பணவரவு இனி தடையில்லாமல் கிடைக்கும். புதிய நிறுவனங்களோடு இணைந்து தொழில் தொடங்கும் வாய்ப்பும் பலருக்கு இருக்கிறது. இதுவரை தொழில் தொடங்காதவர்கள் கூட அதற்கான முயற்சியில் ஈடுபடுவார்கள். அந்த முயற்சிக்கு ஆதரவும் உதவிகளும் கிடைக்கும்.


வியாபார வளர்ச்சி அபாரமாக இருக்கும். வியாபாரத்தில் பலவிதமான நன்மைகள் கிடைக்கும். பழைய வாடிக்கையாளர்கள் மீண்டும் வருவார்கள். வியாபாரத்தை விஸ்தரிக்க தேவையான உதவிகள் கிடைக்கும். புதிய வியாபாரங்களை ஆரம்பிக்கும் எண்ணம் ஏற்படும். அந்த எண்ணங்கள் அனைத்தும் இப்போது ஈடேறும். துணிக்கடை மற்றும் நகைக்கடை வியாபாரிகளுக்கு மிகப் பெரிய அளவிலான ஆதாயம் தரக்கூடிய காலகட்டம் தொடங்கி விட்டது. ஆடம்பரப் பொருட்கள் விற்பவர்களுக்கும் இந்த காலகட்டம் சிறப்பாக இருக்கும். வியாபாரத்தில் முழுமையான கவனம் செலுத்தினால் நிச்சயம் வெற்றி கிடைக்கும்.


பத்திரிகை மற்றும் ஊடகத் துறையில் இருப்பவர்களுக்கு மிக சிறப்பான காலகட்டம் தொடங்கிவிட்டது, பம்பரமாக சுழன்று பலவிதமான காரியங்களை சாதிப்பீர்கள். எதிர்பாராத அளவிற்கு ஒரு சிறிய செய்தி கூட புகழின் உச்சிக்கு கொண்டு செல்லும். செய்யும் தொழிலில் கண்ணும் கருத்துமாக இருந்தால் மிகப்பெரிய சாதனைகளைச் செய்யக் கூடிய நேரம் இது. உங்கள் கண்களையும் காதுகளையும் தீட்டிக்கொண்டு இருங்கள். உங்கள் மூலமாக பல விஷயங்கள் வெளிப்படும். புகழ் வெளிச்சம் மட்டுமல்லாமல் பொருளாதாரத் தேவைகளும் பூர்த்தியாகும் காலகட்டம் இது.


கலைத்துறை தொடர்பானவர்களுக்கு நல்ல காலகட்டம் தொடங்கி விட்டது, இதுவரை முடங்கிக்கிடந்த உங்களுடைய கலைத் திறமைகள் அனைத்தும் இப்போது புகழ் வெளிச்சத்திற்கு வரும். துறை சார்ந்த பயிற்சி வகுப்புகள் தொடங்கும் வாய்ப்பு பலமாக உள்ளது. தாமதப்பட்டுக் கொண்டிருந்த பணவரவுகள் இப்போது தாராளமாக கிடைக்கும். அதிகப்படியான ஒப்பந்தங்கள் கிடைக்கும். கலைத்துறையில் ஒரு முக்கியமான இடத்திற்கு நிச்சயமாக செல்வீர்கள். மதிப்பு மரியாதை கிடைக்கும். பரிசுகள் பட்டங்கள் கிடைக்கும். வீண் செலவுகள் ஏதும் செய்யாமல் சொத்துகள் சேர்க்க வேண்டும், கடன் பிரச்சினைகள் அனைத்தும் முடிவுக்கு வரும். இனி கடன் வாங்கவேண்டிய சூழ்நிலைகள் வராத அளவிற்கு வருமானம் பெருகும்.


பெண்களுக்கு மிகச் சிறப்பான நேரம் தொடங்கிவிட்டது. இதுவரை பலவிதமான துன்பங்களுக்கு ஆட்பட்டு இருந்திருப்பீர்கள். இனி உங்களுடைய துன்ப துயரங்கள் துடைத்தெறியப்படும். வீண் அவப்பெயருக்கு ஆளாகி இருப்பீர்கள். இப்போது அவப்பெயர் நீங்கி உங்கள் மீதான மதிப்பு மரியாதை உயரும். உங்களுடைய எண்ணங்கள் அனைத்தும் இப்போது நிறைவேறும். பலவிதமான ஏமாற்றங்கள் சந்தித்திருப்பீர்கள். இப்போது அனைத்தும் உங்களுக்கு சாதகமாக இருக்கும். குடும்பப் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடக்கும். திருமணம் ஆன பெண்களுக்கு புத்திர பாக்கியம் கிடைக்கும். ஆரோக்கியத்தில் ஏற்பட்ட பிரச்சினைகள் தீரும். இயல்பான சொத்து சேர்க்கை ஏற்படும். ஆடை ஆபரணச் சேர்க்கை உண்டு. பெற்றோர் வழியில் சொத்துகள் கிடைக்கும். சொந்த வீடு வாங்கும் யோகம் உண்டு. கல்வித் தகுதிக்கு தகுந்த வேலை வாய்ப்பு கிடைக்கும். வெளிநாடு செல்லும் முயற்சி இப்போது சாதகமாக இருக்கும்.


மாணவர்களுக்கு கல்வியில் அபரிமிதமான முன்னேற்றம் ஏற்படும். உயர்கல்வி மாணவர்களுக்கு இப்பொழுது கல்வியை முடித்த உடனே வேலை வாய்ப்பு கிடைக்கும். பட்டயப் படிப்பு, ஆராய்ச்சி படிப்பு பயிலும் மாணவர்களுக்கு இப்போது கல்வியில் ஏற்பட்டிருந்த தடைகள் அனைத்தும் நீங்கி, இப்போது பட்டங்களும் பதவிகளும் தேடி வரும். மிகச் சிறப்பான எதிர்காலம் தொடங்கிவிட்டது.


தனுசு ராசி நேயர்களுக்கு மிகச் சிறந்த பரிகார ஸ்தலம் திருநெல்வேலி காந்திமதி அம்மன் நெல்லையப்பர் ஆலயமாகும். நெல்லையப்பர் ஆலயத்திற்கு சென்று வணங்கி வாருங்கள். நன்மைகள் பெருகும். வாழ்க வளமுடன்.


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

23-12-2024 - School Morning Prayer Activities

   பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 23-12-2024 - School Morning Prayer Activities திருக்குறள்: பால் : பொருட்பால் அதிகாரம் : மருந்து க...