கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

குருபெயர்ச்சி பலன்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
குருபெயர்ச்சி பலன்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

குருப்பெயர்ச்சி பலன்கள் - மீனம்...

 



குருப்பெயர்ச்சி பலன்கள் - மீனம்...



குருபெயர்ச்சி பலன்கள் 2023 - 2024

இதுவரை மீன ராசிக்கு ஜென்ம ஸ்தானத்தில் இருந்துவந்த குரு பகவான் சித்திரை மாதம் 09ஆம் தேதி (22.04.2023) ராசிக்கு குடும்ப ஸ்தானமான இரண்டாம் இடத்திற்கு சஞ்சாரம் செய்ய இருக்கின்றார்.


குருவானவர் தான் நின்ற ராசியிலிருந்து,


ஐந்தாம் பார்வையாக சிம்ம ராசியான

சத்ரு ஸ்தானத்தையும்,


ஏழாம் பார்வையாக துலாம் ராசியான

அஷ்டம ஸ்தானத்தையும்,


ஒன்பதாம் பார்வையாக தனுசு ராசியான

தொழில் ஸ்தானத்தையும் பார்வையிட இருக்கின்றார்.

எதிலும் விவேகத்துடன் செயல்படும் மீன ராசி அன்பர்களே!!

குரு குடும்ப ஸ்தானத்தில் நிற்பதால் வாக்கு பலிதமாகும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். புதிய நபர்களின் அறிமுகங்கள் ஏற்படும். மனதளவில் இருந்துவந்த கவலைகள் குறைந்து நிம்மதி பிறக்கும். சுப நிகழ்ச்சிகளின் மூலம் மகிழ்ச்சியான தருணங்கள் ஏற்படும். கருத்து வேறுபாடுகள் படிப்படியாக குறையும். தன, தான்ய விருத்தி உண்டாகும். குடும்ப உறவுகள் இடத்தில் அனுசரித்து செல்லவும்.

பலன்கள்:


குரு ஐந்தாம் பார்வையாக சத்ரு ஸ்தானத்தை பார்ப்பதால் தந்தையின் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். எதிர்ப்புகளால் ஏற்பட்ட இன்னல்கள் விலகும். போட்டி, பொறாமை கொண்டவர்கள் உங்களை விட்டு விலகி செல்வார்கள். வழக்குகளில் இருந்துவந்த சட்ட சிக்கல் குறைந்து எண்ணிய முடிவு கிடைக்கும். கடன் சார்ந்த பிரச்சனைகள் கட்டுப்பாட்டிற்குள் வரும்.


குரு ஏழாம் பார்வையாக அஷ்டம ஸ்தானத்தை பார்ப்பதால் மனதில் இருந்துவந்த குழப்பங்கள் குறையும். விலகி சென்ற தூரத்து உறவினர்கள் விரும்பி வருவார்கள். பிற மதத்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். இழுபறியான சில விஷயங்களுக்கு முடிவு ஏற்படும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகளின் மூலம் புதிய அனுபவங்கள் கிடைக்கும்.


குரு ஒன்பதாம் பார்வையாக தொழில் ஸ்தானத்தை பார்ப்பதால் மனதில் எண்ணிய பணிகளை செய்து முடிப்பீர்கள். விசா கிடைப்பதில் இருந்த தாமதங்கள் விலகும். கௌரவ பொறுப்புகளின் மூலம் மேன்மை உண்டாகும். ஆன்மிக காரியங்களில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். புதிய வீடு மற்றும் மனை வாங்குவது சார்ந்த எண்ணங்கள் கைகூடும்.

பொருளாதாரம்:


எதிர்பாராத சில வரவுகளின் மூலம் சேமிப்புகள் அதிகரிக்கும். பேச்சுத்திறமையின் மூலம் பொருளாதார முன்னேற்றம் ஏற்படும். குடும்ப உறுப்பினர்களின் மூலம் ஆதரவான சூழ்நிலைகள் உண்டாகும்.

உடல் ஆரோக்கியம்:


நோய், நொடிகள் குறைந்து ஆரோக்கியம் மேன்மையடையும். தோற்றப்பொலிவில் சில மாற்றங்கள் உண்டாகும். உடன் இருப்பவர்களை பற்றிய புரிதல்கள் ஏற்படும். மூச்சுத்திணறல், சளி தொந்தரவு போன்றவைகள் குறையும்.

பெண்களுக்கு:


பெண்கள் மனம் விரும்பிய ஆடை, ஆபரணங்களை வாங்கி மகிழ்வீர்கள். குழந்தைகள் மீதான கவலைகள் படிப்படியாக குறையும். கணவன், மனைவிக்கிடையே அனுசரித்து செல்வது நல்லது. நெருக்கமானவர்களிடத்தில் சந்தேக உணர்வுகள் மேம்படும். கல்வி கற்றவர்களுக்கு திறமைக்கேற்ற புதிய வாய்ப்புகள் கிடைக்கும். அரசு சார்ந்த உதவிகள் சாதகமாகும். திருமணமானவர்களுக்கு மகிழ்ச்சியான செய்திகள் வந்து சேரும். குடும்பத்தில் புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும்.

மாணவர்களுக்கு:


மாணவர்களுக்கு கல்வியில் இருந்துவந்த குழப்பங்கள் குறைந்து தெளிவு பிறக்கும். ஞாபக மறதி பிரச்சனைகள் குறையும். ஆசிரியர்களின் ஆலோசனைகள் கிடைக்கப்பெறுவீர்கள். விளையாட்டு விஷயங்களில் புதிய அனுபவங்கள் ஏற்படும். உயர்கல்வி தொடர்பான உதவிகள் சிலருக்கு சாதகமாகும். நண்பர்கள் வழியில் அலைச்சலும், ஆதாயமும் ஏற்படும். பேச்சுத்திறமைகளின் மூலம் பாராட்டுகளை பெறுவீர்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு:


உத்தியோக பணிகளில் சில மாற்றங்கள் ஏற்படும். விருப்பமான துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உடன் இருப்பவர்களால் ஒத்துழைப்பு மேம்படும். அரசு சார்ந்த உதவி சிலருக்கு சாதகமாக அமையும். புதிய வேலை நிமிர்த்தமான முயற்சிகளில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த முடிவு கிடைக்கும். அரசு பணிகளில் இருப்பவர்களுக்கு பாராட்டும், மதிப்பும் மேம்படும். தாமதமாகிக் கொண்டிருந்த பதவி உயர்வு சிலருக்கு சாதகமாக அமையும்.

வியாபாரிகளுக்கு:


தொழில், வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். மறைமுகமாக இருந்துவந்த போட்டிகள் குறையும். விவசாய பணிகளில் விவேகத்துடன் செயல்பட்டால் நல்ல லாபத்தை அடைய முடியும். வாடிக்கையாளர்களை கவருவதற்கான முயற்சிகள் ஈடேறும். அரசு சார்ந்த வழியில் இருந்த நெருக்கடிகள் விலகும். எதிர்பார்த்த கடன் சார்ந்த உதவிகள் சாதகமாக அமையும்.

கலைஞர்களுக்கு:


கலை சார்ந்த துறைகளில் உள்ள சில தடைகளால் புதிய அனுபவங்கள் கிடைக்கும். உங்களின் தனித்திறமைகள் வெளிப்படும். அறிமுகமில்லாத துறையில் பெரிய அளவிலான முதலீடுகளில் சிந்தித்து செயல்படவும். எதிர்பாராத வெளியூர் பயணங்களின் மூலம் மாற்றம் உண்டாகும். சிலருக்கு அரசு தொடர்பான மரியாதைகள் கிடைக்கும்.

அரசியல்வாதிகளுக்கு:


அரசியல்வாதிகளுக்கு திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். முற்போக்கான சிந்தனைகளின் மூலம் மாற்றத்தை உருவாக்குவீர்கள். துறை சார்ந்த சபைகளில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். உயர் அதிகாரிகள் இடத்தில் உங்கள் மீதான நம்பிக்கை அதிகரிக்கும்.

நன்மைகள்:


குடும்ப ஸ்தானத்தில் நிற்கின்ற குருவினால் எதிர்பாராத சில திடீர் அதிர்ஷ்டகரமான வாய்ப்புகள் ஏற்படும். இழுபறியான சுபகாரியங்கள் எதிர்பாராத சில உதவிகளால் நிறைவுபெறும்.

கவனம்:


குடும்ப ஸ்தானத்தில் நிற்கின்ற குருவினால் குடும்ப உறுப்பினர்கள் இடத்தில் அனுசரித்து செல்வதும், பேச்சுக்களால் மற்றவர்களை அடக்கி ஆளும் எண்ணத்தை குறைத்துக் கொள்வதும் நல்லது.

வழிபாடு:


கும்பகோணத்திற்கு அருகில் உள்ள ஆலங்குடி குரு பகவானை வியாழக்கிழமையில் தரிசித்து வரவும்.


வயது முதிர்ந்த ஏழைகளுக்கு அன்னதானம் செய்வது மேன்மையை உருவாக்கும்.

மேற்கூறப்பட்டுள்ள பலன்கள் யாவும் பொதுபலன்களே..!! அவரவர்களின் திசாபுத்திக்கு ஏற்ப பலன்களில் மாற்றம் உண்டாகும்.


 

குருப்பெயர்ச்சி பலன்கள் - கும்பம்...

 


குருப்பெயர்ச்சி பலன்கள் - கும்பம்...



குருபெயர்ச்சி பலன்கள் 2023 - 2024

இதுவரை கும்ப ராசிக்கு குடும்ப ஸ்தானமான இரண்டாம் இடத்தில் இருந்துவந்த குரு பகவான் சித்திரை மாதம் 09ஆம் தேதி (22.04.2023) ராசிக்கு சகோதர ஸ்தானமான மூன்றாம் இடத்திற்கு சஞ்சாரம் செய்ய இருக்கின்றார்.


குருவானவர் தான் நின்ற ராசியிலிருந்து,


ஐந்தாம் பார்வையாக சிம்ம ராசியான

களத்திர ஸ்தானத்தையும்,


ஏழாம் பார்வையாக துலாம் ராசியான

பாக்கிய ஸ்தானத்தையும்,


ஒன்பதாம் பார்வையாக தனுசு ராசியான

லாப ஸ்தானத்தையும் பார்வையிட இருக்கின்றார்.

எந்த சூழ்நிலையிலும் நிதானமாக செயல்பட்டு, எண்ணியதை நிறைவேற்றிக் கொள்ளும் கும்ப ராசி அன்பர்களே!!

குரு சகோதர ஸ்தானத்தில் நிற்பதால் அதிரடியான சில செயல்களின் மூலம் வியாபாரத்தில் இருக்கும் போட்டிகளை வெற்றி கொள்வீர்கள். வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். அக்கம்-பக்கம் இருப்பவர்கள் ஆதரவாக இருப்பார்கள். மனதில் நம்பிக்கையுடன் புதிய முடிவினை எடுப்பீர்கள். கலை சார்ந்த துறைகளில் ஈடுபாடு ஏற்படும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள்.

பலன்கள்:


குரு ஐந்தாம் பார்வையாக களத்திர ஸ்தானத்தை பார்ப்பதால் வெளிநாடு தொடர்பான விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள். வழக்குகளில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். சுபகாரியம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் கைகூடும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். நீண்ட நாட்களாக இருந்துவந்த கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும்.


குரு ஏழாம் பார்வையாக பாக்கிய ஸ்தானத்தை பார்ப்பதால் குடும்ப பெரியவர்கள் ஒத்துழைப்பாக செயல்படுவார்கள். பயணங்களின் மூலம் புதிய அனுபவங்கள் கிடைக்கும். விவேகமான செயல்பாடுகளின் மூலம் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து கொள்வீர்கள். மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். திருப்பணி சார்ந்த செயல்பாடுகளில் ஈடுபாடு ஏற்படும். புதிய விஷயங்களை கற்றுக் கொள்வீர்கள்.


குரு ஒன்பதாம் பார்வையாக லாப ஸ்தானத்தை பார்ப்பதால் மனதில் நினைத்த பணிகளை செய்து முடிப்பீர்கள். அதிர்ஷ்டகரமான சில வாய்ப்புகளின் மூலம் முன்னேற்றம் ஏற்படும். கடினமான பணிகளையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். கலை சார்ந்த துறைகளில் திறமைகள் வெளிப்படும். இறை சார்ந்த பணிகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். புதிய மனை வாங்குவது சார்ந்த முயற்சிகள் கைகூடும். உடன் இருப்பவர்களின் ஆலோசனைகள் மாற்றத்தை உருவாக்கும்.

பொருளாதாரம்:


பணவரவுகளில் ஏற்ற, இறக்கமான சூழல் ஏற்படும். திடீர் செய்திகளின் மூலம் சேமிப்புகள் குறையும். எதிர்பாராத சில வரவுகளின் மூலம் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். 

உடல் ஆரோக்கியம்:


உடல் ஆரோக்கியத்தில் பிரச்சனைகள் ஏற்படலாம். அஜீரணம், உடல் சோர்வு போன்றவை அவ்வப்போது தோன்றி மறையும். குடும்ப உறுப்பினர்களின் மூலம் மனக்குழப்பம் ஏற்படும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது.

பெண்களுக்கு:


பெண்கள் தன்னம்பிக்கையுடன் எதிலும் செயல்பட வேண்டும். சகோதரர்களின் வழியில் அனுசரித்து செல்ல வேண்டிய சூழல் அடிக்கடி உண்டாகும். சுபகாரிய முயற்சிகள் கைகூடும். கணவன், மனைவிக்கிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். தந்தை வழியில் ஆதரவான சூழல் ஏற்படும். வெளி இடங்களுக்கு போகும்போது உடைமைகளில் கவனம் வேண்டும். பிரிந்து போன உறவினர்கள் விரும்பி வருவார்கள். பூர்வீக சொத்துக்கள் கிடைப்பதில் இருந்துவந்த பிரச்சனைகள் விலகும்.

மாணவர்களுக்கு:


மாணவர்கள் கல்வியில் கவனத்துடன் இருக்கவும். கடினமான முயற்சிகளின் மூலம் வெற்றி பெறுவீர்கள். மற்றவர்களின் தனிப்பட்ட செயல்களில் தலையிடுவதை தவிர்க்கவும். அரசு வழியில் எண்ணிய சில உதவிகள் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கான செயல்களில் ஆர்வம் மேம்படும். 

உத்தியோகஸ்தர்களுக்கு:


உத்தியோகத்தில் திடீர் பொறுப்புகளின் மூலம் மதிப்புகள் மேம்படும். திட்டமிடாத சில பயணங்களின் மூலம் அனுகூலம் ஏற்படும். அரசு அதிகாரிகளுக்கு புதிய இடமாற்றங்கள் ஏற்படலாம். புதிய வேலை தொடர்பான முயற்சிகளில் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்ளவும். சட்டம் மற்றும் அதிகாரம் தொடர்பான பணிகளில் சாதகமான சூழல் ஏற்படும். மருத்துவம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும்.

வியாபாரிகளுக்கு:


வியாபாரத்தில் போட்டிகள் சற்று அதிகமாக இருக்கும். அரசு தொடர்பான வரிகளை உரிய நேரத்தில் செலுத்துவது நல்லது. புதிய பங்குதாரர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். புதிய நபர்களிடத்தில் கவனத்துடன் இருக்கவும். கொடுக்கல், வாங்கலில் பெரிய முதலீடுகளை தவிர்க்கவும். விவசாய பணிகளில் முயற்சிக்கு ஏற்ப ஆதாயமும், செல்வச்சேர்க்கையும் உண்டாகும். வியாபார ரீதியாக கூட்டாளிகளின் ஒத்துழைப்புகள் சாதகமாகும். வெளியூர் தொடர்பான நபர்களின் மூலம் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

கலைஞர்களுக்கு:


கலை துறைகளில் இருப்பவர்களுக்கு ஆதாயமான பலன்கள் உண்டாகும். செய்யும் முயற்சிக்கு உண்டான பலன்கள் கிடைக்கும். எதிர்பாலின மக்களிடம் கவனம் வேண்டும். அவ்வப்போது சிறு சிறு வதந்திகள் ஏற்பட்டு நீங்கும். நவீனத்துவமான முறைகளை பயன்படுத்தி முன்னேற்றம் அடைவீர்கள். நிலுவையில் இருந்துவந்த படைப்புகள் வெளிப்படும். 

அரசியல்வாதிகளுக்கு:


அரசியல்வாதிகள் எதிலும் விவேகத்துடன் செயல்படுவது நல்லது. எதிராக இருப்பவர்களை வெற்றி கொள்வீர்கள். பேச்சுக்களில் நிதானத்தை கடைபிடிப்பது உங்கள் மீதான நம்பிக்கையை மேம்படுத்தும். அரசு ஒப்பந்தத்தின் மூலம் மறைமுகமான வருமானம் கிடைக்கும். தொண்டர்களை அரவணைத்து செல்வது காரிய அனுகூலத்தை ஏற்படுத்தும்.

நன்மைகள்:


மனதில் நினைத்திருந்த ஆசைகள் நிறைவேறும். வெளிவட்டாரத்தில் செல்வாக்குகள் மேம்படும். செல்வ சேர்க்கை ஏற்படும்.

கவனம்:


எந்த ஒரு செயலிலும் தன்னம்பிக்கையுடன் செயல்படவும். உங்கள் மீது சிறு சிறு வதந்திகள் ஏற்பட்டு நீங்கும். செயல்களில் துரிதத்தை விட விவேகம் சிறப்பானதாகும்.

வழிபாடு:


செவ்வாய்க்கிழமைதோறும் ஆஞ்சநேயருக்கு நெய் தீபமேற்றி மலர்களால் அர்ச்சனை செய்து வழிபடவும்.


ஊனமுற்ற ஏழை எளியவர்களுக்கு இயன்ற உதவிகளை செய்வது மேன்மையை ஏற்படுத்தும்.

மேற்கூறப்பட்டுள்ள பலன்கள் யாவும் பொதுபலன்களே..!! அவரவர்களின் திசாபுத்திக்கு ஏற்ப பலன்களில் மாற்றம் உண்டாகும்.


 


குருப்பெயர்ச்சி பலன்கள் - மகரம்...

 


குருப்பெயர்ச்சி பலன்கள் - மகரம்...



குருபெயர்ச்சி பலன்கள் 2023 - 2024

இதுவரை மகர ராசிக்கு சகோதர ஸ்தானமான மூன்றாம் இடத்தில் இருந்துவந்த குரு பகவான் சித்திரை மாதம் 09ஆம் தேதி (22.04.2023) ராசிக்கு சுக ஸ்தானமான நான்காம் இடத்திற்கு சஞ்சாரம் செய்ய இருக்கின்றார்.



குருவானவர் தான் நின்ற ராசியிலிருந்து,


ஐந்தாம் பார்வையாக சிம்ம ராசியான

அஷ்டம ஸ்தானத்தையும்,


ஏழாம் பார்வையாக துலாம் ராசியான

தொழில் ஸ்தானத்தையும்,


ஒன்பதாம் பார்வையாக தனுசு ராசியான

போக ஸ்தானத்தையும் பார்வையிட இருக்கின்றார்.

எதிலும் நிதானத்துடனும், பொறுமையுடனும் செயல்பட்டு வெற்றி காணக்கூடிய மகர ராசி அன்பர்களே!!

குரு சுக ஸ்தானத்தில் நிற்பதால் நெருக்கமானவர்களிடம் மனம் விட்டு பேசுவதன் மூலம் புரிதல்கள் அதிகரிக்கும். சமூக பணி தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். வரவுகளை சரியான முறையில் முதலீடுகள் செய்வது சார்ந்த ஆலோசனைகள் கிடைக்கும். பயணங்களின் மூலம் அலைச்சல்கள் ஏற்படும். வீடு மாற்றம் தொடர்பான எண்ணங்கள் ஈடேறும். அரசு சார்ந்த செயல்களில் தாமதம் ஏற்படும். புதிய மனை வாங்குவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும்.



பலன்கள்:


குரு ஐந்தாம் பார்வையாக அஷ்டம ஸ்தானத்தை பார்ப்பதால் காப்பீடு சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு லாபம் உண்டாகும். தூரத்து உறவினர்கள் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். பயனற்ற விவாதங்களை குறைத்து கொள்ளவும். வெளிவட்டாரங்களில் பொறுமையை கடைபிடிக்கவும். தந்தைவழி உறவுகளிடத்தில் அனுசரித்து செல்லவும். செயல்படும் விதத்தில் மாற்றம் காணப்படும். மற்றவர்களை சரியான முறையில் பயன்படுத்தி ஆதாயத்தை உருவாக்குவீர்கள்.


குரு ஏழாம் பார்வையாக தொழில் ஸ்தானத்தை பார்ப்பதால் உத்தியோக பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். செயல்பாடுகளில் இருந்துவந்த ஆர்வமின்மை குறையும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். சமூகம் தொடர்பான பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். மருத்துவ படிப்பில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும். கௌரவ பதவிகளின் மூலம் செல்வாக்கு மேம்படும்.


குரு ஒன்பதாம் பார்வையாக போக ஸ்தானத்தை பார்ப்பதால் உலகியல் வாழ்க்கையை பற்றிய புரிதலும், புதிய கண்ணோட்டமும் பிறக்கும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். மற்றவர்களின் வார்த்தைகளை நம்பி செயல்களில் இறங்குவதை குறைத்துக் கொள்ளவும். இனம்புரியாத சில கவலைகளின் மூலம் செயல்பாடுகளில் ஒருவிதமான சோர்வு உண்டாகும். புதிய முதலீடுகளில் தகுந்த ஆலோசனை பெற்று முடிவு எடுக்கவும்.

பொருளாதாரம்:


வருமான வாய்ப்புகள் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்பால் வாழ்க்கை தரம் உயரும். எதிர்பாராத சுபகாரிய செலவுகள் அதிகரிக்கும். வியாபார பணிகளில் இருந்த தேக்க நிலை குறையும். வாகன காப்பீடுகளை புதுப்பித்து கொள்ளவும்.

உடல் ஆரோக்கியம்:


தாயின் ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் கவனம் வேண்டும். அவ்வப்போது தசை பிடிப்புகள் ஏற்பட்டு நீங்கும். பழைய நினைவுகளின் மூலம் ஒருவிதமான சோர்வு உண்டாகும்.

பெண்களுக்கு:


பெண்கள் வாழ்க்கைத் துணைவரிடம் அனுசரித்து செல்லவும். மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு உண்டாகும். செயல்களில் வேகத்தை விட விவேகம் வேண்டும். பலம், பலவீனத்தை உணர்ந்து செயல்படுவது நல்லது. குடும்பத்தில் அர்த்தமில்லாத பிரச்சனைகள் அவ்வப்போது ஏற்பட்டு நீங்கும். சில இடங்களில் உங்களை பற்றி தவறான விமர்சனங்கள் ஏற்பட்டு நீங்கும்.

மாணவர்களுக்கு:


மாணவர்கள் ஒன்றுக்கு இரண்டு முறை படிப்பது நன்று. ஞாபக மறதி தொடர்பான பிரச்சனைகள் தோன்றி மறையும். சிந்தனையின் போக்கில் கவனம் வேண்டும். நண்பர்கள் வழியில் அலைச்சல்கள் ஏற்படும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வெளிநாடு பயணம் சார்ந்த எண்ணங்கள் ஈடேறும்.

உத்தியோகஸ்தர்களுக்கு:


உத்தியோக பணிகளில் இருந்துவந்த தடுமாற்றம் விலகும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த இடமாற்ற முயற்சிகள் ஈடேறும். உத்தியோகத்தில் சில மறைமுகமான போட்டிகளை சந்திக்க வேண்டி இருக்கும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். எதிர்பாராத சில உதவிகளின் மூலம் உயர்வான வாய்ப்புகள் கிடைக்கும். பணி நிமிர்த்தமான குடும்ப பிரிவினைகள் நீங்கும்.

வியாபாரிகளுக்கு:


வியாபாரம் தொடர்பான பணிகளில் ஒத்துழைப்பான சூழல் ஏற்படும். எதிராக செயல்பட்டவர்கள் சிலர் ஒதுங்கி செல்வார்கள். புதுமையான சில யுக்திகளால் வாடிக்கையாளர்களை கவர்வீர்கள். நீங்கள் எதிர்பார்த்த வங்கி கடன் கிடைக்கும். வியாபார ஸ்தலங்களை அபிவிருத்தி செய்வதற்கான முயற்சிகள் ஈடேறும். கடன் சார்ந்த நெருக்கடிகள் சிலருக்கு குறையும். கொடுக்கல், வாங்கல் தொடர்பான விஷயங்களில் சிந்தித்து செயல்படவும்.

கலைஞர்களுக்கு:


கலைத் துறையினருக்கு மத்திமமான வரவு உண்டாகும். தவறிய சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். மூத்த கலைஞர்களின் ஒத்துழைப்புகள் மனதிற்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும். விவாதங்களில் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். உடன் இருப்பவர்களால் நெருக்கடிகள் ஏற்பட்டு நீங்கும்.

அரசியல்வாதிகளுக்கு:


அரசியல்வாதிகளுக்கு மேன்மையான வாய்ப்புகள் கிடைக்கும். எதிர்ப்புகளை சாதகமாக பயன்படுத்தி முன்னேற்றத்தினை உருவாக்கி கொள்வீர்கள். அரசு சார்ந்த ஒப்பந்தங்களின் மூலம் அனுகூலம் ஏற்படும். ஆடம்பரமான கற்பனைகளை குறைத்து கொள்ளவும். செயல்பாடுகளில் துரிதம் உண்டாகும். எதிர்பார்த்த சில பதவிகள் சாதகமாக அமையும்.

நன்மைகள்:


சுக ஸ்தான குருவினால் நீண்ட நாட்களாக தடைபட்ட செயல்களை செய்து முடிப்பதற்கும், செல்வாக்கினை மேம்படுத்தி கொள்வதற்கும் சூழல் ஏற்படும்.

கவனம்:


சுக ஸ்தான குருவினால் சிந்தனையின் போக்கில் கவனத்துடன் இருக்கவும். உயர் அதிகாரிகளிடம் சூழ்நிலைக்கு ஏற்றவாறு விட்டுக்கொடுத்து செல்லவும்.

வழிபாடு:


செவ்வாய்க்கிழமை தோறும் ஸ்ரீ பிரத்யங்கரா தேவியை வழிபட முயற்சிகளில் இருந்துவந்த எதிர்ப்புகளை வெற்றி கொள்வீர்கள்.


துப்புரவு பணியாளருக்கு உதவி செய்வதன் மூலம் மனதில் இருந்துவந்த சோர்வு விலகும்.

மேற்கூறப்பட்டுள்ள பலன்கள் யாவும் பொதுபலன்களே..!! அவரவர்களின் திசாபுத்திக்கு ஏற்ப பலன்களில் மாற்றம் உண்டாகும்.


 

குருப்பெயர்ச்சி பலன்கள் - தனுசு...

 


குருப்பெயர்ச்சி பலன்கள் - தனுசு...



குருபெயர்ச்சி பலன்கள் 2023 - 2024

இதுவரை தனுசு ராசிக்கு சுக ஸ்தானமான நான்காம் இடத்தில் இருந்துவந்த குரு பகவான் சித்திரை மாதம் 09ஆம் தேதி (22.04.2023) ராசிக்கு புத்திர ஸ்தானமான ஐந்தாம் இடத்திற்கு சஞ்சாரம் செய்ய இருக்கின்றார்.


குருவானவர் தான் நின்ற ராசியிலிருந்து,


ஐந்தாம் பார்வையாக சிம்ம ராசியான

பாக்கிய ஸ்தானத்தையும்,


ஏழாம் பார்வையாக துலாம் ராசியான

லாப ஸ்தானத்தையும்,


ஒன்பதாம் பார்வையாக தனுசு ராசியான

ஜென்ம ஸ்தானத்தையும் பார்வையிட இருக்கின்றார்.

இறை நம்பிக்கையும், கம்பீரமான தோற்றமும் கொண்ட தனுசு ராசி அன்பர்களே!!

குரு புத்திர ஸ்தானத்தில் இருப்பதால் குழந்தைகளின் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். கலைத்துறையில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். புதுமையான சில சிந்தனைகளின் மூலம் சம்பாதிக்கும் வழிகளை அறிவீர்கள். பந்தயம் சார்ந்த செயல்களை தவிர்ப்பது நல்லது. உடன் இருப்பவர்களின் மூலம் புதிய அனுபவம் கிடைக்கும். விருந்து, கேளிக்கைகளில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள்.

பலன்கள்:


குரு ஐந்தாம் பார்வையாக பாக்கிய ஸ்தானத்தை பார்ப்பதால் கலை நுட்பமான விஷயங்கள் மீது ஆர்வம் அதிகரிக்கும். புதுவிதமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். மடம் சார்ந்த பொறுப்புகளில் இருப்பவர்களுக்கு செல்வாக்கு அதிகரிக்கும். மனதில் நினைத்த ஆசைகள் நிறைவேறும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். ஆராய்ச்சி சார்ந்த சிந்தனைகள் மேம்படும். பூர்வீக சொத்துக்களின் மூலம் அனுகூலமான பலன்கள் கிடைக்கும்.


குரு ஏழாம் பார்வையாக லாப ஸ்தானத்தை பார்ப்பதால் மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி அடைவதற்கான தருணங்கள் உண்டாகும். புத்திசாலித்தனமான செயல்பாடுகளின் மூலம் ஆசைகளை நிறைவேற்றி கொள்வீர்கள். வழக்குகளில் சாதகமான முடிவு ஏற்படும். வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான எண்ணங்கள் ஈடேறும். மூத்த சகோதரர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும்.


குரு ஒன்பதாம் பார்வையாக ஜென்ம ஸ்தானத்தை பார்ப்பதால் எந்தவொரு செயலையும் முன் நின்று செய்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். மற்றவர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். செயல்பாடுகளில் துரிதம் உண்டாகும். கௌரவ பதவிகளின் மூலம் செல்வாக்கு அதிகரிக்கும். பழக்கவழக்கங்களில் மாற்றம் ஏற்படும்.

பொருளாதாரம்:


பொருளாதாரத்தில் சுபிட்சமான நிலை உண்டாகும். கடன் சார்ந்த இன்னல்களுக்கு முடிவுகள் கிடைக்கும். சொந்த பூமியில் மனை வாங்கக்கூடிய வாய்ப்புகள் சிலருக்கு உண்டாகும். பூர்வீக சொத்துக்களில் சற்று சிந்தித்து முடிவு எடுக்கவும். தனவருவாய் சார்ந்த எண்ணங்கள் மேம்படும். 

உடல் ஆரோக்கியம்:


உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். மனதளவில் புதிய தெளிவுடன் காணப்படுவீர்கள். சிந்தனையில் தெளிவும், புத்துணர்ச்சியும் வெளிப்படும். பசியின்மை சார்ந்த இன்னல்கள் குறையும். செயல்பாடுகளில் ஞாபகமறதி ஏற்பட்டு நீங்கும்.

பெண்களுக்கு:


கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமையும், மகிழ்ச்சியும் உண்டாகும். குடும்பத்தில் புதிய நபர்களின் வருகைகள் புத்துணர்ச்சியை ஏற்படுத்தும். குழந்தைகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். தந்தை வழியில் ஆதரவான சூழ்நிலைகள் காணப்படும். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். இறை சார்ந்த எண்ணங்கள் மேம்படும். சுபகாரியத்தில் இருந்துவந்த தடைகள் விலகும். பொன், பொருட்கள் சேர்க்கை உண்டாகும்.

மாணவர்களுக்கு:


ஆசிரியர்களின் ஆலோசனைகள் தெளிவினை ஏற்படுத்தும். உயர்கல்வி தொடர்பான தேடல்கள் உண்டாகும். கலை சார்ந்த துறைகளில் ஈடுபாடுகள் ஏற்படும். தொழில்நுட்ப கல்வியில் மாற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். வெளியூர் மற்றும் வெளிநாடு சென்று படிப்பதற்கான வாய்ப்புகள் சாதகமாகும். போட்டித் தேர்வுகளில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கும்.

உத்தியோகஸ்தர்களுக்கு:


உத்தியோக பணிகளில் நல்ல திருப்பங்கள் ஏற்படும். உயர் அதிகாரிகள் வழியில் ஒத்துழைப்புகள் கிடைக்கும். பங்கு வர்த்தகம் தொடர்பான செயல்பாடுகளில் முயற்சிக்கு ஏற்ற லாபங்களை அடைவீர்கள். ஆசிரியர் பணியில் சாதகமற்ற சூழல் ஏற்பட்டு நீங்கும். மருத்துவ பணிகளில் மதிப்புகள் அதிகரிக்கும். சட்டம் சார்ந்த பணிகளில் இருப்பவர்கள் நுணுக்கமான விஷயங்களை புரிந்து கொள்வீர்கள்.

வியாபாரிகளுக்கு:


ஏற்றுமதி மற்றும் இறக்குமதி சார்ந்த விஷயங்களில் லாபகரமான வாய்ப்புகள் உண்டாகும். வேலையாட்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். கூட்டாளிகளின் அறிமுகம் மற்றும் ஒத்துழைப்புகள் மேம்படும். தொழில் ரீதியான அரசு உதவிகள் சாதகமாகும். புதிய வாடிக்கையாளர்களின் ஆதரவுகள் கிடைக்கும். கொடுக்கல், வாங்கலில் சிந்தித்து செயல்படவும். 

கலைஞர்களுக்கு:


கலை சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு மேன்மை ஏற்படும். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வெளியூர் அல்லது வெளிநாட்டிற்கு சென்று நிகழ்ச்சிகளை நடத்துவதற்கான சூழல் அமையும். மறைமுகமான திறமைகளை வெளிப்படுத்தி வாய்ப்புகளை பெறுவீர்கள். புதிய தொழில்நுட்பம் சார்ந்த கருவிகள் மீது ஈடுபாடு அதிகரிக்கும். புதிய ஒப்பந்தங்கள் சாதகமாகும். 

அரசியல்வாதிகளுக்கு:


கட்சி பணிகளில் எதிர்பார்த்த பொறுப்புகள் கிடைக்கும். வெளி நபர்களின் மறைமுக ஆதரவின் மூலம் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். நண்பர்களின் ஆலோசனைகள் மனதிற்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவீர்கள். திடீர் பயணங்களின் மூலம் செல்வாக்குகள் அதிகரிக்கும். 

நன்மைகள்:


புத்திர ஸ்தானத்தில் இருக்கின்ற குருவினால் வெளிவட்டாரங்களில் செல்வாக்குகள் மேம்படும். நீண்ட நாட்களாக தடைபட்ட சில ஆசைகள் நிறைவேறும். உடல் தோற்றத்தில் புதிய மாற்றம் ஏற்படும்.

கவனம்:


புத்திர ஸ்தானத்தில் இருக்கின்ற குருவினால் ஆடம்பரமான சிந்தனைகள் மேம்படும். இனம்புரியாத கற்பனையால் அவ்வப்போது ஒருவிதமான சோர்வு ஏற்படும். எங்கும் தற்பெருமை இன்றி செயல்படவும்.

வழிபாடு:


அர்த்தநாரீஸ்வரரை வழிபாடு செய்துவர செய்யும் செயல்களில் இருந்துவந்த தடை, தாமதங்கள் நீங்கி வெற்றி கிடைக்கும்.


வயதான ஆன்மிக பெரியோர்களுக்கு உதவிகள் செய்வதன் மூலம் எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.

மேற்கூறப்பட்டுள்ள பலன்கள் யாவும் பொதுபலன்களே..!! அவரவர்களின் திசாபுத்திக்கு ஏற்ப பலன்களில் மாற்றம் உண்டாகும்.



குருப்பெயர்ச்சி பலன்கள் - விருச்சிகம்...

 


குருப்பெயர்ச்சி பலன்கள் - விருச்சிகம்...



குருபெயர்ச்சி பலன்கள் 2023 - 2024

இதுவரை ராசிக்கு புத்திர ஸ்தானமான ஐந்தாம் இடத்தில் இருந்துவந்த குரு பகவான் சித்திரை மாதம் 09ஆம் தேதி (22.04.2023) ராசிக்கு சத்ரு ஸ்தானமான ஆறாம் இடத்திற்கு சஞ்சாரம் செய்ய இருக்கின்றார்.


குருவானவர் தான் நின்ற ராசியிலிருந்து,


ஐந்தாம் பார்வையாக சிம்ம ராசியான

தொழில் ஸ்தானத்தையும்,


ஏழாம் பார்வையாக துலாம் ராசியான

போக ஸ்தானத்தையும்,


ஒன்பதாம் பார்வையாக தனுசு ராசியான

குடும்ப ஸ்தானத்தையும் பார்வையிட இருக்கின்றார்.

எதிலும் துடிப்புடன் செயல்படும் விருச்சிக ராசி அன்பர்களே !!

குரு சத்ரு ஸ்தானத்தில் இருப்பதால் குடும்பத்தில் சிறு சிறு விவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். எதிர்பாராத சுபகாரியங்கள் நடைபெறும். வழக்கு சார்ந்த சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும். தாழ்வு மனப்பான்மையின்றி செயல்பட கற்றுக் கொள்ளவும்.

பலன்கள்: 


குரு ஐந்தாம் பார்வையாக தொழில் ஸ்தானத்தை பார்ப்பதால் சொந்த ஊர் செல்வது தொடர்பான பயண சிந்தனைகள் மேம்படும். உங்களது நேர்மைக்கு உண்டான மதிப்பு கிடைக்கும். எதிர்பார்த்த கடன் சார்ந்த உதவிகள் சாதகமாக அமையும். அடுத்து என்ன செய்வது என்பது குறித்து தெளிவான புரிதல் உண்டாகும்.


குரு ஏழாம் பார்வையாக போக ஸ்தானத்தை பார்ப்பதால் சுபகாரிய செலவுகள் அதிகரிக்கும். தேவையற்ற விவாதங்களால் பகைமை ஏற்படலாம். வாக்குறுதி அளிக்கும் போது சூழ்நிலையை அறிந்து செயல்படவும். மற்றவர்களின் தனிப்பட்ட விஷயங்களை அறிந்து கொள்வதை குறைத்துக் கொள்வது நல்லது.


குரு ஒன்பதாம் பார்வையாக குடும்ப ஸ்தானத்தை பார்ப்பதால் உலக நடைமுறைகளைப் பற்றிய புரிதல் அதிகரிக்கும். அரசு விதிகளுக்கு உட்பட்டு நடப்பது தேவையற்ற விரயத்தை குறைக்கும். கொள்கைப் பிடிப்பு குணம் அதிகரிக்கும். எதிர்பாராத சில அதிர்ஷ்டகரமான வாய்ப்புகள் ஏற்படும். பெருந்தன்மையான செயல்பாடுகளின் மூலம் புதிய அறிமுகம் கிடைக்கும்.

பொருளாதாரம்:


பொருளாதாரத்தில் ஏற்ற, இறக்கமான சூழ்நிலைகள் உண்டாகும். விருப்பமான பொருட்களை தேவை இருப்பின் மட்டும் வாங்கிக் கொள்ளவும். ஆடம்பர எண்ணங்களால் நெருக்கடிகள் ஏற்படும்.

உடல் ஆரோக்கியம்:


உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். எண்ணிய சில பணிகளை செய்து முடிப்பதில் ஆர்வமின்மை உண்டாகும். குடும்ப உறுப்பினர்களின் மூலம் தேவையில்லாத அலைச்சல்கள் ஏற்படும்.

பெண்களுக்கு:


பெண்கள் பயனற்ற விவாதங்களை குறைத்துக் கொள்வது நல்லது. எதிர்பார்த்த சுபகாரியங்கள் நடைபெறுவதில் காலதாமதம் உண்டாகும். குடும்ப விஷயங்களை ரகசியமாக வைத்துக் கொள்ளவும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். மற்றவர்களின் செயல்பாடுகளில் தலையிடாமல் இருப்பது நல்லது. கணவன், மனைவிக்கிடையே சிறு சிறு விவாதங்கள் தோன்றி மறையும்.

மாணவர்களுக்கு:


மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வமின்மை உண்டாகும். பாடங்களை ஒன்றுக்கு இரண்டு முறை படிப்பது நல்லது. பெரியோர்களிடம் விதண்டாவாதங்களை குறைத்துக் கொள்ளவும். உயர்நிலை கல்வியில் அரசு சார்ந்த உதவி கிடைக்கும். ஆராய்ச்சி சார்ந்த கல்வியில் வெளியூர் சென்று படிப்பதற்கான வாய்ப்புகள் சிலருக்கு கைகூடும்.

உத்தியோகஸ்தர்களுக்கு:


உத்தியோக பணிகளில் எதிர்பார்ப்பின்றி செயல்படுவது மனதிற்கு அமைதியை கொடுக்கும். புதிய வேலைகள் அமைந்தாலும் நெருக்கடியான சூழ்நிலைகள் குறையாது. எதிர்பார்த்த ஊதிய உயர்வுகள் தாமதமாக கிடைக்கும். 

வியாபாரிகளுக்கு:


வியாபாரப் பணிகளில் சந்தை நிலவரங்களை அறிந்து புதிய முதலீடுகளை மேற்கொள்ளவும். கொடுக்கல், வாங்கலில் கவனம் வேண்டும். மறைமுகமான சில போட்டிகளால் லாபம் குறையும். புதிய நவீன கருவிகளால் விரயங்கள் அதிகரிக்கும். கால்நடை வியாபாரத்தில் மத்திமமான லாபம் கிடைக்கும். வர்த்தகப் பணிகளில் விவேகத்துடன் செயல்படவும்.

கலைஞர்களுக்கு:


கலை சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். வெளியூர் தொடர்பான வாய்ப்புகளில் கவனம் வேண்டும். இனம்புரியாத சில குழப்பங்கள் அவ்வப்போது ஏற்பட்டு நீங்கும். எதிலும் போட்டிகள் அதிகமாக இருக்கும்.

அரசியல்வாதிகளுக்கு:


சமூகப் பணியில் இருப்பவர்களுக்கு ஒரு புதிய பாதை புலப்படும். பத்திரிக்கை துறைகளில் இருப்பவர்களிடம் அனுசரித்து செல்லவும். மாறுபட்ட அணுகுமுறைகளின் மூலம் புதிய வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்வீர்கள். உடனிருப்பவர்களின் தேவைகளை அறிந்து செயல்படுவதன் மூலம் நன்மை உண்டாகும்.

நன்மைகள்:


சத்ரு ஸ்தானத்தில் இருக்கின்ற குருவினால் நெருக்கமானவர்களை பற்றிய புரிதலும், தொழில் வியாபாரத்தில் புதிய பரிணாமத்தையும், வரவுகளை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகளும் உண்டாகும்.

கவனம்:


சத்ரு ஸ்தானத்தில் இருக்கின்ற குருவினால் எதிலும் சிக்கனத்துடன் செயல்படவும். கணவன், மனைவி இடையே விட்டுக்கொடுத்து செல்லவும்.

வழிபாடு:


திருச்செந்தூர் முருகரை வழிபாடு செய்துவர குடும்பத்தில் ஆதரவான சூழ்நிலைகள் உண்டாகும்.


மலைப்பகுதிகளில் மரங்களை நடுவதும், பாதிக்கப்பட்ட நிலையில் இருக்கக்கூடிய மரங்களை பராமரிப்பதும் பணிகளில் இருக்கக்கூடிய தடைகளை குறைக்கும்.

மேற்கூறப்பட்டுள்ள பலன்கள் யாவும் பொதுபலன்களே..!! அவரவர்களின் திசாபுத்திக்கு ஏற்ப பலன்களில் மாற்றம் உண்டாகும்.


 

குருப்பெயர்ச்சி பலன்கள் - துலாம்...




குருப்பெயர்ச்சி பலன்கள் - துலாம்...



குருபெயர்ச்சி பலன்கள் 2023 - 2024

இதுவரை துலாம் ராசிக்கு ஆறாம் இடமான சத்ரு ஸ்தானத்தில் இருந்த குரு பகவான் சித்திரை மாதம் 09ஆம் தேதி (22.04.2023) ராசிக்கு ஏழாம் இடமான களத்திர ஸ்தானத்திற்கு சஞ்சாரம் செய்ய இருக்கின்றார்.


குருவானவர் தான் நின்ற ராசியிலிருந்து,


ஐந்தாம் பார்வையாக சிம்ம ராசியான

லாப ஸ்தானத்தையும்,


ஏழாம் பார்வையாக துலாம் ராசியான

ராசி ஸ்தானத்தையும்,


ஒன்பதாம் பார்வையாக தனுசு ராசியான

சகோதர ஸ்தானத்தையும் பார்வையிட இருக்கின்றார்.

அனைவரையும் சமமாக கருதும் துலாம் ராசி அன்பர்களே!!

குரு களத்திர ஸ்தானத்தில் இருப்பதால் மனதில் நினைத்த செயல்களை செய்து முடிப்பீர்கள். வியாபாரம் நிமிர்த்தமான முயற்சிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். சிந்தனைகளில் இருந்துவந்த குழப்பங்கள் குறையும். வித்தியாசமான அணுகுமுறைகளின் மூலம் மாற்றம் ஏற்படும்.

பலன்கள்: 


குரு ஐந்தாம் பார்வையாக லாப ஸ்தானத்தை பார்ப்பதால் தனவரவு மேம்படும். வழக்கு சார்ந்த பணிகளில் வெற்றி கிடைக்கும். தந்தை வழி உறவுகளால் ஆதாயம் உண்டாகும். மனதில் இறை சார்ந்த சிந்தனைகள் மேம்படும். பொன், பொருள் சேர்க்கை தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும்.


குரு ஏழாம் பார்வையாக ஜென்ம ராசியை பார்ப்பதால் குணநலன்களில் மாற்றம் ஏற்படும். சிந்தனையில் தெளிவு பிறக்கும். நண்பர்கள் வழியில் ஒத்துழைப்புகள் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். உடன் இருப்பவர்களை பற்றிய புரிதல் உண்டாகும். மறதி தொடர்பான பிரச்சனைகள் குறையும்.


குரு ஒன்பதாம் பார்வையாக சகோதர ஸ்தானத்தை பார்ப்பதால் மறைமுகமான திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுகளை பெறுவீர்கள். மனை விருத்தி தொடர்பான முயற்சிகள் கைகூடும். வாகன பயணங்களின் மூலம் திருப்திகரமான சூழல் அமையும். நிதானமான செயல்பாடுகளின் மூலம் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றிக் கொள்வீர்கள்.

பொருளாதாரம்:


பொருளாதாரத்தில் இருந்துவந்த நெருக்கடியான சூழ்நிலைகள் மறையும். எதிர்பாராத சில திடீர் வாய்ப்புகளால் வரவுகள் மேம்படும். வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். பூர்வீக சொத்துக்களின் மூலம் வருமானம் மேம்படும். செய்கின்ற முயற்சிக்கு ஏற்ப சேமிப்புகள் அதிகரிக்கும்.

உடல் ஆரோக்கியம்:


உடல் ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும். மனதளவில் இருந்துவந்த சில குழப்பங்கள் மறையும். பணிகளில் இருந்துவந்த பொறுப்புகள் குறையும். முழங்கால் மற்றும் காது தொடர்பான பிரச்சனைகள் உண்டாகும்.

பெண்களுக்கு:


மனதில் எண்ணியவை நிறைவேறும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் கைகூடும். தனிப்பட்ட மற்றும் குடும்ப விஷயங்களை நண்பர்களிடம் பகிர்வதை தவிர்க்கவும். புதிய தொழில்நுட்ப கருவிகளை வாங்கி மகிழ்வீர்கள். வாழ்க்கைத் துணையுடன் அனுசரித்து செல்லவும். அக்கம்-பக்கம் இருப்பவர்களின் ஒத்துழைப்புகள் மேம்படும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். விலகி சென்றவர்களை பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும்.

மாணவர்களுக்கு:


மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். உயர்கல்வியில் இருந்துவந்த தடை, தாமதங்கள் குறையும். போட்டிகளில் ஈடுபட்டு பாராட்டுகளை பெறுவீர்கள். தகவல் தொடர்புத் துறை சார்ந்த கல்வியில் முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும். முயற்சிக்கு ஏற்ப நல்ல மதிப்பெண்கள் கிடைக்கும்.

உத்தியோகஸ்தர்களுக்கு:


உத்தியோக பணிகளில் இருப்பவர்கள் உணர்ச்சிவசமான பேச்சுக்களை குறைத்துக் கொள்வது நல்லது. புதிய வேலை தொடர்பான முயற்சிகள் கைகூடும். சிலருக்கு புதிய பதவிகள் கிடைக்கும். புதிய பயிற்சிகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். உபரி வருமானத்திற்கான எண்ணங்கள் மேம்படும். நெருக்கடியான கடன் சார்ந்த பிரச்சனைகள் நீங்கும்.

வியாபாரிகளுக்கு:


தொழில் நிமிர்த்தமான புதிய முதலீடுகள் அதிகரிக்கும். செய்யும் முயற்சிக்கு உண்டான அங்கீகாரம் கிடைக்கும். வாசனை திரவியம் சார்ந்த வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். கட்டுமான பணிகளில் வரவுகள் அதிகரிக்கும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்புகள் மேம்படும். பங்குச்சந்தை தொடர்பான செயல்பாடுகளில் கவனம் வேண்டும்.

கலைஞர்களுக்கு:


கலை சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். எழுத்துக்களின் மூலம் பலரின் மனதினை வெற்றி கொள்வீர்கள். பின்னணி இசை மற்றும் குரல் சார்ந்த துறைகளில் அனுகூலமான சூழல் உண்டாகும். தற்காப்பு கலைகள் மீதான ஈடுபாடுகள் அதிகரிக்கும்.

அரசியல்வாதிகளுக்கு:


கட்சி நிமிர்த்தமான பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். வெளிவட்டாரங்களில் செல்வாக்கும், ஆதரவும் மேம்படும். புதிய முயற்சிக்கு ஏற்ப மாற்றமான சூழல் உண்டாகும். உயர்பொறுப்பில் இருப்பவர்களிடம் அனுசரித்து செல்லவும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் மனதில் மாற்றம் உண்டாகும்.

நன்மைகள்:


களத்திர ஸ்தானத்தில் இருக்கின்ற குருவினால் மனதில் புதுவிதமான எண்ணங்களும், எதையும் செய்ய முடியும் என்ற தன்னம்பிக்கையும், செல்வாக்கை மேம்படுத்தி கொள்வதற்கான வாய்ப்பும் கிடைக்கும்.

கவனம்:


களத்திர ஸ்தானத்தில் இருக்கின்ற குருவினால் கணவன், மனைவிக்கிடையே விட்டுக்கொடுத்து செல்வதும், புதிய நபர்களின் தன்மைகளை அறிந்து நட்பு கொள்வதும் மேன்மையை உருவாக்கும்.

வழிபாடு:


திருவண்ணாமலையில் வீற்றிருக்கும் அண்ணாமலையாரை வணங்கி வர வாழ்க்கையில் புதிய அத்தியாயம் பிறக்கும்.


ஏழ்மை நிலையில் இருப்பவர்களுக்கும், கலை சார்ந்த துறைகளில் உள்ள மூத்த கலைஞர்களுக்கும் உதவுவதன் மூலம் மனதில் தெளிவும், புத்துணர்ச்சியும் உண்டாகும். 

மேற்கூறப்பட்டுள்ள பலன்கள் யாவும் பொதுபலன்களே..!! அவரவர்களின் திசாபுத்திக்கு ஏற்ப பலன்களில் மாற்றம் உண்டாகும்.


 

குருப்பெயர்ச்சி பலன்கள் - கன்னி...

 



குருப்பெயர்ச்சி பலன்கள் - கன்னி...



குருபெயர்ச்சி பலன்கள் 2023 - 2024

இதுவரை கன்னி ராசிக்கு ஏழாம் இடமான களத்திர ஸ்தானத்தில் இருந்த குரு பகவான் சித்திரை மாதம் 09ஆம் தேதி (22.04.2023) ராசிக்கு எட்டாம் இடமான அஷ்டம ஸ்தானத்திற்கு சஞ்சாரம் செய்ய இருக்கின்றார்.


குருவானவர் தான் நின்ற ராசியிலிருந்து,


ஐந்தாம் பார்வையாக சிம்ம ராசியான

போக ஸ்தானத்தையும்,


ஏழாம் பார்வையாக துலாம் ராசியான

குடும்ப ஸ்தானத்தையும்,


ஒன்பதாம் பார்வையாக தனுசு ராசியான

சுக ஸ்தானத்தையும் பார்வையிட இருக்கின்றார்.

கனிவும், கனவுகளும் கொண்ட கன்னி ராசி அன்பர்களே!!

குரு அஷ்டம ஸ்தானத்தில் நிற்பதால் தூரத்து உறவினர்களிடம் ஆதரவான சூழல் ஏற்படும். நீண்ட நாள் பிரச்சனைகளின் மூலம் மனதில் கவலைகள் ஏற்பட்டு நீங்கும். சுபகாரிய செயல்களில் அலைச்சல்கள் அதிகரிக்கும். நண்பர்களை பற்றிய புரிதல்கள் மேம்படும். வழக்கு சார்ந்த செயல்களில் திடீர் திருப்பங்கள் ஏற்படும். பழைய சிந்தனைகளின் மூலம் செயல்பாடுகளில் ஒருவிதமான தடுமாற்றம் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே அனுசரித்து செல்லவும்.

பலன்கள்: 


குரு ஐந்தாம் பார்வையாக போக ஸ்தானத்தை பார்ப்பதால் சிந்தனைகளில் ஏற்ற, இறக்கங்கள் உண்டாகும். செயல்பாடுகளில் இருந்துவந்த கட்டுப்பாடுகள் குறையும். ஆன்மிகத்தில் ஈடுபாடுகளும், விரயங்களும் ஏற்படும். பணிபுரியும் இடத்தில் அலைச்சல்கள் உண்டாகும். மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.


குரு ஏழாம் பார்வையாக குடும்ப ஸ்தானத்தை பார்ப்பதால் தனவருவாய் மற்றும் பொருள் சேர்க்கை பற்றிய எண்ணங்கள் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை ஏற்படும். எதிர்பாராத சில அதிர்ஷ்டகரமான வாய்ப்புகள் ஏற்படும். வாழ்க்கைத் துணைவரின் ஆரோக்கியம் சார்ந்த சிக்கல்கள் குறையும். உங்கள் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். புதிய நபர்களின் அறிமுகங்களின் மூலம் மாற்றமும், மகிழ்ச்சியும் பிறக்கும்.


குரு ஒன்பதாம் பார்வையாக சுக ஸ்தானத்தை பார்ப்பதால் வாகன மாற்றம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். பெரியோர்களின் ஆலோசனைகள் மனதில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும். வீடு மற்றும் மனை வாங்குவது தொடர்பான எண்ணங்கள் கைகூடும். பயணங்கள் சார்ந்த விஷயங்கள் ஈடேறும். சிந்தனையின் போக்கில் புதுமைகள் பிறக்கும்.

பொருளாதாரம்:


கடன் சார்ந்த நெருக்கடிகள் குறைவதற்கான வாய்ப்புகள் அமையும். வாக்கு சாதுரியத்தின் மூலம் வரவுகளை மேம்படுத்திக் கொள்வீர்கள். எதிர்பாராத சில அதிர்ஷ்டகரமான வாய்ப்புகளின் மூலம் மேன்மை உண்டாகும். விலை உயர்ந்த பொருட்கள் மற்றும் ஆபரணங்களை வாங்கி மகிழ்வீர்கள்.

உடல் ஆரோக்கியம்:


ஆரோக்கியம் சார்ந்த செயல்களில் கவனம் வேண்டும். நெருக்கமானவர்களிடம் மனம் விட்டு பேசுவதன் மூலம் தெளிவு பிறக்கும். வாகன பயணத்தில் விவேகம் வேண்டும். எதிர்பாராத திடீர் மருத்துவ செலவுகளால் சேமிப்பு குறையும்.

பெண்களுக்கு:


பெண்களுக்கு குடும்பத்தில் ஆதரவான சூழல் உண்டாகும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் மேம்படும். சிந்தனையின் போக்கில் கவனம் வேண்டும். பிடித்த உடைகள் மற்றும் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தாய்மாமன் வழியில் ஆதரவான சூழ்நிலைகள் காணப்படும். எதிலும் திட்டமிட்டு செயல்படுவது நல்லது. அவ்வப்போது மறதி சார்ந்த பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். உடன்பிறந்தவர்களிடம் விட்டுக்கொடுத்து செல்லவும். ஆடம்பரமான சிந்தனைகளை குறைத்து கொள்ளவும். மனதில் ஆராய்ச்சி தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும்.

மாணவர்களுக்கு:


மாணவர்கள் உயர்கல்வியில் நல்ல ஆலோசனை பெற்று முடிவு எடுப்பது நல்லது. சாதுரியமான பேச்சுக்களின் மூலம் சாதகமான சில வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்வீர்கள். புதிய நபர்களிடம் கவனம் வேண்டும். விதண்டாவாத பேச்சுக்களை குறைத்து கொள்ளவும். விருப்பமான சில துறைகள் கிடைக்க படிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும். 

உத்தியோகஸ்தர்களுக்கு:


உத்தியோகஸ்தர்களுக்கு அரசு பணிகளில் மறைமுக ஆதாயம் உண்டாகும். மற்றவரின் செயல்பாடுகளில் தலையிடுவதை குறைத்துக் கொள்ளவும். புதிய வேலை நிமிர்த்தமான முயற்சிகளில் சாதகமான செய்திகள் கிடைக்கும். எதிர்பாராத சில வரவுகள் கிடைக்கும். பழக்கவழக்கத்தில் சில மாற்றங்கள் ஏற்படும். எதிர்பாராத சில செய்திகளின் மூலம் நெருக்கடிகள் ஏற்படும்.

வியாபாரிகளுக்கு :


வியாபாரத்தை அபிவிருத்தி செய்வதற்கான முயற்சிகள் கைகூடும். நறுமணப் பொருட்கள் சார்ந்த விஷயங்களில் லாபம் மேம்படும். விவசாயம் மற்றும் உணவு சார்ந்த பணிகளில் மேன்மை உண்டாகும். ஒப்பந்த பணிகளில் இருந்துவந்த தடை, தாமதங்கள் குறையும். கால்நடைகள் சார்ந்த வியாபாரத்தில் லாபம் ஏற்படும். 

கலைஞர்களுக்கு:


கலை சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு பொருளாதார சிக்கல்கள் குறையும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் புதிய அனுபவம் உண்டாகும். கொடுக்கல், வாங்கலில் கவனம் வேண்டும். எண்ணங்களை செயல் வடிவில் மாற்றுவதற்கான உதவிகள் சாதகமாகும். வாழ்க்கைத் துணை வழியில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை ஏற்படும்.

அரசியல்வாதிகளுக்கு:


சமூகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு செல்வாக்கு அதிகரிக்கும். வழக்கு சார்ந்த விஷயங்களில் நிதானமாக செயல்படவும். கட்சி நிமிர்த்தமாக எதிர்பார்த்திருந்த சில புதிய பொறுப்புகள் கிடைக்கும். கூட்டாளிகள் ஆதரவாக இருப்பார்கள். உங்கள் மீது இருந்த சிறு சிறு வதந்திகள் மறையும். முயற்சிக்கு உண்டான பலன்கள் கிடைக்கும்.

நன்மைகள்:


அஷ்டம ஸ்தானத்தில் இருக்கின்ற குருவினால் எதிலும் சுதந்திரத்தன்மையுடனும், குடும்ப உறுப்பினர்களின் ஆதரவுடனும், மாற்றமான சிந்தனைகளுடனும் செயல்படுவீர்கள்.

கவனம்:


அஷ்டம ஸ்தானத்தில் இருக்கின்ற குருவினால் ஆர்வமின்மையும், எண்ணிய சில பணிகள் நடைபெறுவதில் தாமதமும், புதிய அனுபவமும் பிறக்கும்.

வழிபாடு:


வெள்ளிக்கிழமைதோறும் மகாலட்சுமியை வழிபட செயல்பாடுகளில் இருந்துவந்த தடைகள் விலகும்.


பாதுகாப்பு வீரர்களுக்கு இனிப்பு பண்டங்களை வாங்கி தருவதன் மூலம் சிந்தனையின் போக்கில் சில மாற்றங்கள் ஏற்படும். 

மேற்கூறப்பட்டுள்ள பலன்கள் யாவும் பொதுபலன்களே..!! அவரவர்களின் திசாபுத்திக்கு ஏற்ப பலன்களில் மாற்றம் உண்டாகும்.


 

குருபெயர்ச்சி பலன்கள் - சிம்மம்...

 



குருபெயர்ச்சி பலன்கள் - சிம்மம்...



குருபெயர்ச்சி பலன்கள் 2023 - 2024

இதுவரை சிம்ம ராசிக்கு எட்டாம் இடமான அஷ்டம ஸ்தானத்தில் இருந்த குரு பகவான் சித்திரை மாதம் 09ஆம் தேதி (22.04.2023) ராசிக்கு ஒன்பதாம் இடமான பாக்கிய ஸ்தானத்திற்கு சஞ்சாரம் செய்ய இருக்கின்றார்.


குருவானவர் தான் நின்ற ராசியிலிருந்து,


ஐந்தாம் பார்வையாக சிம்ம ராசியான

ராசி ஸ்தானத்தையும்,


ஏழாம் பார்வையாக துலாம் ராசியான

சகோதர ஸ்தானத்தையும்,


ஒன்பதாம் பார்வையாக தனுசு ராசியான

புத்திர ஸ்தானத்தையும் பார்வையிட இருக்கின்றார்.

விடாமுயற்சி மற்றும் சாதனைகள் பல செய்யும் சிம்ம ராசி அன்பர்களே!!

குரு பாக்கிய ஸ்தானத்தில் நிற்பதால் மனதில் புதுவிதமான ஆராய்ச்சி சார்ந்த சிந்தனைகள் ஏற்படும். எதிலும் தற்பெருமை இன்றி செயல்படவும். தடைபட்ட சில பணிகளை செய்து முடிப்பீர்கள். உங்கள் கருத்துக்களுக்கு மதிப்புகள் அதிகரிக்கும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் அமையும். எண்ணிய பணிகள் எதிர்பார்த்த விதத்தில் நிறைவேறும்.

பலன்கள்:


குரு ஐந்தாம் பார்வையாக ஜென்ம ஸ்தானத்தை பார்ப்பதால் மனதில் நினைத்த சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். உடல் தோற்றப்பொலிவில் சில மாற்றம் ஏற்படும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல் உண்டாகும். ஆன்மிகம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். உணவு விஷயங்களில் கவனத்துடன் இருக்கவும்.


குரு ஏழாம் பார்வையாக சகோதர ஸ்தானத்தை பார்ப்பதால் செய்யும் முயற்சிக்கு உண்டான பலன்கள் கிடைக்கும். சகோதரர் வழியில் ஒத்துழைப்புகள் அதிகரிக்கும். புதிய தொழில்நுட்பம் பற்றிய புரிதல் மேம்படும். வித்தியாசமான சில அணுகுமுறைகளின் மூலம் எண்ணியதை நிறைவேற்றி கொள்வீர்கள். மனதில் எதையும் செய்து முடிக்க முடியும் என்ற தன்னம்பிக்கை அதிகரிக்கும்.


குரு ஒன்பதாம் பார்வையாக புத்திர ஸ்தானத்தை பார்ப்பதால் கடினமான பணிகளையும் எளிமையாக செய்து முடிப்பீர்கள். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை மேம்படும். உயர் அதிகாரிகளின் ஆதரவுகள் கிடைக்கும். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். நீண்ட நாள் ஆசைகளை நிறைவேற்றுவதற்கான வாய்ப்புகள் அமையும். பொழுதுபோக்கு தொடர்பான செயல்பாடுகளில் ஆர்வம் மேம்படும்.

பொருளாதாரம் :


பொருளாதாரத்தில் மேன்மையான நிலைகள் உண்டாகும். புதிய வகை காதணிகளை வாங்கி மகிழ்வீர்கள். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் ஏற்படும். புதிய வாகனம் வாங்கும் முயற்சிகள் கைகூடும். பழைய இழப்புகளை சரிசெய்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். 

உடல் ஆரோக்கியம் : 


உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் படிப்படியாக குறையும். குழந்தைகளின் எண்ணங்களை அறிந்து செயல்படவும். மனதளவில் இருந்துவந்த சில குழப்பங்கள் விலகி தெளிவுகள் உண்டாகும். தேவையற்ற பயணங்களை தவிர்க்கவும்.

பெண்களுக்கு:


வாழ்க்கைத் துணைவர் பற்றிய புரிதல் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். முயற்சிக்கு ஏற்ற முன்னேற்றத்தை அடைவீர்கள். கடன் தொடர்பான பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். போட்டி தேர்வுகளில் சாதகமான முடிவு கிடைக்கும். மற்றவர்களுக்கு உதவும் பொழுது சிந்தித்து செயல்படவும். விலகி இருந்தவர்கள் விரும்பி வருவார்கள்.

மாணவர்களுக்கு:


மாணவர்களுக்கு கல்வியில் இருந்துவந்த ஆர்வமின்மை குறையும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். உயர்கல்வியில் இருந்துவந்த குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். விளையாட்டுப் போட்டிகளில் ஈடுபாடு ஏற்படும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் சாதகமாக அமையும்.

உத்தியோகஸ்தர்களுக்கு:


உத்தியோக பணிகளில் சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். பணிகளில் இருந்துவந்த இடையூறுகள் விலகும். ஊதிய உயர்வு சார்ந்த முயற்சிகள் கைகூடும். முயற்சிக்கு ஏற்ப புதிய வேலைகள் சாதகமாகும். சக ஊழியர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். வழக்கு தொடர்பான சில விஷயங்களால் விரயங்கள் உண்டாகும்.

வியாபாரிகளுக்கு:


கூட்டாளிகளின் ஆதரவுகள் கிடைக்கும். வெளியூர் மற்றும் வெளிநாடு தொடர்பான வியாபாரங்களில் லாபம் ஏற்படும். நுணுக்கமான சிந்தனைகளின் மூலம் போட்டிகளை வெற்றிக் கொள்வீர்கள். வேலையாட்களின் ஆதரவுகள் மேம்படும். நவீன தொழில்நுட்ப கருவிகளை வாங்கி மகிழ்வீர்கள். அரசு வழியில் எதிர்பார்த்த சில உதவிகள் தாமதமாக கிடைக்கும். கொடுக்கல், வாங்கலில் இருந்த இழுபறியான நிலைகள் மறையும்.

கலைஞர்களுக்கு:


கலை சார்ந்த துறைகளில் ஏற்படும் விமர்சனங்களை சாதகமாக பயன்படுத்தி முன்னேறுவீர்கள். அரசு வழியில் நன்மைகள் ஏற்படும். புதிய ஒப்பந்தங்கள் சாதகமாக அமையும். எதிர்பாராத சில திடீர் மாற்றங்களும், வாய்ப்புகளும் உண்டாகும்.

அரசியல்வாதிகளுக்கு:


அரசியல்வாதிகளுக்கு வெளிவட்டாரங்களில் புதுவிதமான அனுபவங்கள் கிடைக்கும். எதிர்பாராத கட்சி நிமிர்த்தமான சில செலவுகளால் நெருக்கடிகள் ஏற்பட்டு நீங்கும். திடீர் பயணங்களால் மறைமுக வருவாயும், ஆதாயமும் கிடைக்கும். மேடைப் பேச்சுக்களில் தகுந்த ஆவணங்களை கொண்டு உரையாடுவது நல்லது.

நன்மைகள்:


பாக்கிய ஸ்தானத்தில் இருக்கின்ற குருவினால் மனதில் புதிய தெளிவும், செயல்களில் புதிய உத்வேகமும் உண்டாகும்.

கவனம்:


பாக்கிய ஸ்தானத்தில் இருக்கின்ற குருவினால் எதிலும் தற்பெருமை இன்றியும், மற்றவர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளித்தும் செயல்படவும்.

வழிபாடு:


குலதெய்வத்தை வழிபாடு செய்து வருவதன் மூலம் நினைத்ததை நிறைவேற்றி கொள்வதற்கான வாய்ப்புகள் சாதகமாக அமையும்.


மகாலட்சுமியை வழிபாடு செய்து வர முயற்சிகளில் இருந்துவந்த தடைகள் விலகி முன்னேற்றம் உண்டாகும்.

மேற்கூறப்பட்டுள்ள பலன்கள் யாவும் பொதுபலன்களே..!! அவரவர்களின் திசாபுத்திக்கு ஏற்ப பலன்களில் மாற்றம் உண்டாகும்.


குருபெயர்ச்சி பலன்கள் - கடகம்...

 


குருபெயர்ச்சி பலன்கள் - கடகம்



குருபெயர்ச்சி பலன்கள் 2023 - 2024

இதுவரை கடகம் ராசிக்கு ஒன்பதாம் இடமான பாக்கிய ஸ்தானத்தில் இருந்த குரு பகவான் சித்திரை மாதம் 09ஆம் தேதி (22.04.2023) ராசிக்கு பத்தாம் இடமான தொழில் ஸ்தானத்திற்கு சஞ்சாரம் செய்ய இருக்கின்றார்.


குருவானவர் தான் நின்ற ராசியிலிருந்து,


ஐந்தாம் பார்வையாக சிம்ம ராசியான

குடும்ப ஸ்தானத்தையும்,


ஏழாம் பார்வையாக துலாம் ராசியான

சுக ஸ்தானத்தையும்,


ஒன்பதாம் பார்வையாக தனுசு ராசியான

சத்ரு ஸ்தானத்தையும் பார்வையிட இருக்கின்றார்.

கனிவும், கற்பனை வளமும் கொண்ட கடக ராசி அன்பர்களே!!

குரு தொழில் ஸ்தானத்தில் நிற்பதால் வியாபாரம் நிமிர்த்தமான எண்ணங்கள் அதிகரிக்கும். மாறுபட்ட அணுகுமுறைகளின் மூலம் எண்ணியதை நிறைவேற்றிக் கொள்வீர்கள். மனதளவில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் அலைச்சலும், அனுபவமும் ஏற்படும். உடன்பிறந்தவர்கள் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும்.

பலன்கள்:


குரு ஐந்தாம் பார்வையாக குடும்ப ஸ்தானத்தை பார்ப்பதால் சாதுரியமான பேச்சுக்களால் தடைபட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். பொருளாதாரம் தொடர்பான நெருக்கடிகள் குறையும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவீர்கள். குடும்பத் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள்.


குரு ஏழாம் பார்வையாக சுக ஸ்தானத்தை பார்ப்பதால் தாய்வழி உறவுகளால் அனுகூலம் ஏற்படும். புதிய வீடு மற்றும் வாகனங்களை வாங்கி மகிழ்வீர்கள். கால்நடை தொடர்பான பணிகளில் மேன்மை உண்டாகும். பெரியோர்களின் ஒத்துழைப்புகள் மனதிற்கு திருப்தியை ஏற்படுத்தும். வங்கி சார்ந்த கடன் உதவிகள் கிடைக்கும்.


குரு ஒன்பதாம் பார்வையாக சத்ரு ஸ்தானத்தை பார்ப்பதால் எதிர்ப்புகளால் இருந்துவந்த இன்னல்கள் குறையும். பயனற்ற விவாதங்களை குறைத்துக் கொள்ளவும். எதிலும் அவசரப்படாமல் நிதானமாக சிந்தித்து செயல்படவும். வழக்கு தொடர்பான விஷயங்களில் சாதகமான முடிவுகள் ஏற்படும். ஆடம்பரப் பொருட்கள் தொடர்பான விரயங்களை குறைத்துக் கொள்வது நல்லது.

பொருளாதாரம்:


எதிர்பார்த்த வரவுகள் கிடைத்தாலும் அதற்கு ஏற்ப சுப விரயங்களும் ஏற்படும். முதலீடு சார்ந்த விஷயங்களில் ஆலோசனை பெறவும். நெருக்கடியான சூழ்நிலைகள் மறையும்.

உடல் ஆரோக்கியம்:


உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். சிந்தனைகளில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கி தெளிவுகள் பிறக்கும். பார்வை தொடர்பான பிரச்சனைகள் குறையும். உணவு சார்ந்த விஷயங்களில் சில மாற்றங்களால் நன்மைகள் அதிகரிக்கும். தந்தையின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படும்.

பெண்களுக்கு:


சுய தொழில் நிமிர்த்தமான முயற்சிகளில் குறைந்த அளவிலான முதலீடுகள் மேற்கொள்வது நல்லது. பொன், பொருள் சேர்க்கை அதிகரிக்கும். குழந்தைகளுக்கு நல்ல இடத்தில் வரன் அமையும். கொடுக்கல், வாங்கல் விஷயங்களில் நெருக்கமானவர்களிடம் வருத்தங்கள் நேரிடலாம். மனதிற்குப் பிடித்த விலை உயர்ந்த பொருட்களை வாங்குவீர்கள். கணவன், மனைவிக்கிடையே அனுசரித்து நடந்து கொள்வது நல்லது.

மாணவர்களுக்கு:


கல்வியில் இருந்துவந்த ஆர்வமின்மை குறையும். ஆசிரியர்களின் ஆலோசனைகள் புதிய நம்பிக்கையை உருவாக்கும். மருத்துவம் தொடர்பான விஷயங்களில் ஈடுபாடுகள் அதிகரிக்கும். விளையாட்டுப் போட்டிகளில் புதிய அனுபவங்கள் ஏற்படும். வெளிநாடு தொடர்பான கல்வி வாய்ப்பு சாதகமாக அமையும்.

உத்தியோகஸ்தர்களுக்கு:


வேலை நிமிர்த்தமான முயற்சிகள் கைகூடும். உயர் அதிகாரிகளிடம் சிறு சிறு விவாதங்கள் தோன்றி மறையும். பணி நிமிர்த்தமான பயணங்களை அடிக்கடி மேற்கொள்வதற்கான சூழ்நிலைகள் ஏற்படும். உபரி வருமானம் குறித்த சிந்தனைகள் அதிகரிக்கும். சக பணியாளர்களை அரவணைத்து செல்வதன் மூலம் ஒத்துழைப்புகள் மேம்படும். நிர்வாகம் தொடர்பான விஷயங்களை அறிந்து செயல்படவும்.

வியாபாரிகளுக்கு:


சாதுரியமான செயல்பாடுகளின் மூலம் தொழில் சார்ந்த பிரச்சனைகளை வெற்றிக் கொள்வீர்கள். வேலையாட்களிடம் தட்டிக்கொடுத்து செயல்படவும். புதிய நபர்களை நம்பி அறிமுகம் இல்லா தொழில்களில் இறங்குவதை தவிர்க்கவும். பங்குதாரர்கள் வழியில் சிறு சிறு விவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். ஏற்றுமதி மற்றும் இறக்குமதி தொடர்பான துறைகளில் லாபம் உண்டாகும்.

கலைஞர்களுக்கு:


கலை சார்ந்த துறைகளில் உள்ளவர்களுக்கு வித்தியாசமான வாய்ப்புகள் கிடைக்கும். மறைமுகமான போட்டிகளை அறிந்து வெற்றிக் கொள்வீர்கள். நடைமுறை அறிந்து எதார்த்தமான படைப்புகளால் கீர்த்தி பெறுவீர்கள். சில சிந்தனைகளின் மூலம் நெருக்கடிகளை ஏற்படுத்திக் கொள்வீர்கள்.

அரசியல்வாதிகளுக்கு:


புதிய பதவி மற்றும் பொறுப்புகள் சில தாமதங்களுக்குப் பின்பே சாதகமாக அமையும். வெளிவட்டாரத்தில் மதிப்புகள் மேம்படும். வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான வாய்ப்புகள் சாதகமாக அமையும். எதிராக செயல்பட்டவர்களுக்கு மாறுபட்ட முறையில் பதிலடி கொடுப்பீர்கள்.

நன்மைகள்:


தொழில் ஸ்தானத்தில் நிற்கின்ற குருவினால் குடும்பத்தில் உங்கள் மீதான நம்பிக்கையும், ஆதரவும் அதிகரிக்கும். சிந்தனையின் போக்கில் புதிய மாற்றங்கள் பிறக்கும். மாறுபட்ட அனுபவங்களின் மூலம் மனப்பக்குவம் உண்டாகும்.

கவனம்:


தொழில் ஸ்தானத்தில் இருக்கின்ற குருவினால் செய்கின்ற செயல்களிலும், எடுத்துச் செல்லும் உடைமைகளிலும், ஜாமீன் தொடர்பான விஷயங்களிலும் கவனத்துடன் இருக்க வேண்டும்.

வழிபாடு:


வியாழக்கிழமைதோறும் தட்சிணாமூர்த்தியை வழிபாடு செய்து வர முயற்சிகளில் இருந்துவந்த தடைகள் விலகும்.


வசதி குறைவாக இருக்கின்ற வயதான ஆசிரிய பெருமக்களுக்கு உதவி செய்து ஆசி பெறுவதன் மூலம் எதிர்பார்த்த சில மாற்றமான வாய்ப்புகள் கிடைக்கும்.

மேற்கூறப்பட்டுள்ள பலன்கள் யாவும் பொதுபலன்களே..!! அவரவர்களின் திசாபுத்திக்கு ஏற்ப பலன்களில் மாற்றம் உண்டாகும்.


 

குருபெயர்ச்சி பலன்கள் - மிதுனம்...

 



குருபெயர்ச்சி பலன்கள் - மிதுனம்



குருபெயர்ச்சி பலன்கள் 2023 - 2024

இதுவரை மிதுன ராசிக்கு பத்தாம் இடமான தொழில் ஸ்தானத்தில் இருந்த குரு பகவான் சித்திரை மாதம் 09ஆம் தேதி (22.04.2023) ராசிக்கு பதினொன்றாம் இடமான லாப ஸ்தானத்திற்கு சஞ்சாரம் செய்ய இருக்கின்றார்.


குருவானவர் தான் நின்ற ராசியிலிருந்து,


ஐந்தாம் பார்வையாக சிம்ம ராசியான

சகோதர ஸ்தானத்தையும்,


ஏழாம் பார்வையாக துலாம் ராசியான

புத்திர ஸ்தானத்தையும்,


ஒன்பதாம் பார்வையாக தனுசு ராசியான

களத்திர ஸ்தானத்தையும் பார்வையிட இருக்கின்றார்.

கலகலப்பு நிறைந்த மிதுன ராசி அன்பர்களே!!

குரு லாப ஸ்தானத்தில் நிற்பதால் தடைபட்டு வந்த சுபகாரியம் தொடர்பான முயற்சிகள் கைகூடும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வழக்கு தொடர்பான விஷயங்களில் சாதகமான முடிவுகள் ஏற்படும். சமூக பணிகளில் இருப்பவர்கள் ஆதரவானவர்களை புரிந்து கொள்வீர்கள். புதிய வீடு மற்றும் மனை வாங்குவது தொடர்பான எண்ணங்கள் ஈடேறும்.

பலன்கள்:


குரு ஐந்தாம் பார்வையாக சகோதர ஸ்தானத்தை பார்ப்பதினால் மனதில் நினைத்த பணிகளை செய்து முடிப்பீர்கள். உடன்பிறந்தவர்களால் ஒத்துழைப்புகள் ஏற்படும். தகவல் தொடர்பு துறைகளில் இருப்பவர்களுக்கு சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். மறைமுக திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுகளை பெறுவீர்கள்.


குரு ஏழாம் பார்வையாக புத்திர ஸ்தானத்தை பார்ப்பதினால் திருமணமானவர்களுக்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். சிந்தனைகளில் இருந்த குழப்பங்கள் நீங்கி தெளிவுகள் பிறக்கும். பூர்வீக சொத்துக்களின் மூலம் ஆதாயம் உண்டாகும். பொன், பொருள் சேர்க்கை மேம்படும்.


குரு ஒன்பதாம் பார்வையாக களத்திர ஸ்தானத்தை பார்ப்பதினால் நண்பர்கள் வழியில் ஒத்துழைப்புகள் கிடைக்கும். பலதரப்பட்ட மக்களின் அறிமுகம் கிடைக்கும். உணவு சார்ந்த துறைகளில் லாபம் ஏற்படும். பழக்கவழக்கங்களில் இருந்துவந்த தயக்கங்கள் குறையும். வர்த்தகம் தொடர்பான பணிகளில் முன்னேற்றம் ஏற்படும்.

பொருளாதாரம்:


வருமான ரகசியங்களை பகிராமல் இருக்கவும். வெளியூர் மற்றும் வெளிநாடு தொடர்பான வணிகத்தில் ஆலோசனைகளை பெற்று முடிவு எடுக்கவும். புத்திசாலித்தனமாக செயல்பட்டு சேமிப்பை பயன்படுத்துங்கள்.

உடல் ஆரோக்கியம்:


உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். புத்துணர்ச்சியான சிந்தனைகளின் மூலம் மன மகிழ்ச்சி அடைவீர்கள். மருத்துவம் தொடர்பான விரயங்கள் குறையும். குடும்பத்தில் இருப்பவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள்.

பெண்களுக்கு:


பொருளாதாரத்தில் முன்னேற்றமான சூழ்நிலைகள் அமையும். வரவை மேம்படுத்துவதற்கான முயற்சிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் ஈடேறும். குழந்தைகள் வழியில் மகிழ்ச்சி உண்டாகும். அசையா சொத்துக்கள் வாங்கி மகிழ்வீர்கள். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். நண்பர்கள் மற்றும் வாழ்க்கைத் துணைவர்கள் ஒத்துழைப்பாக செயல்படுவார்கள்.

மாணவர்களுக்கு:


மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். நுணுக்கமான சில விஷயங்களை எளிதில் புரிந்து கொள்வீர்கள். பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களில் ஆர்வத்தை குறைத்துக் கொள்வது நல்லது. விளையாட்டு மற்றும் போட்டிகளில் பங்கு பெற்று பாராட்டுகளை பெறுவீர்கள். அரசு தொடர்பான உதவிகள் கிடைக்கும்.

உத்தியோகஸ்தர்களுக்கு:


உத்தியோக பணிகளில் திறமையை வெளிப்படுத்தி பாராட்டுக்களை பெறுவீர்கள். எதிராக செயல்பட்டவர்கள் விலகி செல்வார்கள். புதிய விஷயங்களை கற்றுக் கொள்வதற்கான சூழ்நிலைகள் அமையும். புதிய நபர்களின் ஒத்துழைப்புகள் மன நிம்மதியை ஏற்படுத்தும். வெளியூர் தொடர்பான வேலைவாய்ப்புகள் சாதகமாக அமையும்.

வியாபாரிகளுக்கு:


வியாபார பணிகளில் இருந்துவந்த போட்டிகள் குறையும். வெளிநாடு மற்றும் வெளியூர் தொடர்பான வியாபாரத்தில் சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். கொடுக்கல், வாங்கலில் லாபம் ஏற்படும். எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். வியாபாரம் நிமிர்த்தமான தேவைகளை நிறைவேற்றிக் கொள்வீர்கள். வழக்கு சார்ந்த விஷயங்களில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். விவசாய பணிகளில் நவீன கருவிகளை பயன்படுத்தி நன்மை அடைவீர்கள்.

கலைஞர்களுக்கு:


கலை சார்ந்த துறைகளில் புதுமையான வாய்ப்புகள் கிடைக்கும். வெளிவட்டாரத்தில் செல்வாக்குகள் அதிகரிக்கும். உயர் பொறுப்பில் இருப்பவர்களுக்கு ஆதரவுகள் கிடைக்கும். இலக்கியம் சார்ந்த துறைகளில் முன்னேற்றம் ஏற்படும். பலதுறை சம்பந்தப்பட்ட புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும்.

அரசியல்வாதிகளுக்கு:


அரசியல் துறைகளில் இருப்பவர்களுக்கு எதிர்ப்புகளின் மூலம் ஆதாயமும், செல்வாக்கும் அதிகரிக்கும். தொண்டர்களின் ஆதரவுகளை பெறுவீர்கள். கட்சி தொடர்பாக எதிர்பாராத சில விரயங்கள் இருந்தாலும், அனுகூலம் உண்டாகும். கௌரவமான சில பொறுப்புகள் கிடைக்கப் பெறுவீர்கள்.

நன்மைகள்:


லாப குருவினால் நல்ல முன்னேற்றமும், சிந்தனைகளில் தெளிவும் பிறக்கும். புதிய நபர்களின் அறிமுகமும், எதிர்பார்த்த உதவிகளும் கிடைக்கப் பெறுவீர்கள்.

கவனம்:


லாப குருவினால் சமூகப் பணிகளில் இருப்பவர்கள் விவேகத்துடன் செயல்பட்டால் நல்ல மாற்றத்தை உருவாக்க முடியும். ஆடம்பரமான சிந்தனைகளை குறைத்துக் கொள்ளவும்.

வழிபாடு:


ஜென்ம நட்சத்திரத்தன்று திருச்செந்தூரில் உள்ள தமிழ் கடவுள் முருகரை வழிபாடு செய்து வர மேன்மை ஏற்படும்.


பசு மாட்டிற்கு தீவனம் மற்றும் தட்டு கொடுத்து உதவுவதன் மூலம் செயல்களில் இருந்துவந்த தடைகள் விலகும்.

மேற்கூறப்பட்டுள்ள பலன்கள் யாவும் பொதுபலன்களே..!! அவரவர்களின் திசாபுத்திக்கு ஏற்ப பலன்களில் மாற்றம் உண்டாகும்.


 

குருப்பெயர்ச்சி பலன்கள் - ரிஷபம் - 2023 - 2024...

 


குருப்பெயர்ச்சி பலன்கள் - ரிஷபம் - 2023 - 2024...



குருபெயர்ச்சி பலன்கள் 2023 - 2024

இதுவரை ரிஷப ராசிக்கு பதினொன்றாம் இடமான லாப ஸ்தானத்தில் இருந்த குரு பகவான் சித்திரை மாதம் 09ஆம் தேதி (22.04.2023) ராசிக்கு பனிரெண்டாம் இடமான போக ஸ்தானத்திற்கு சஞ்சாரம் செய்ய இருக்கின்றார்.


குருவானவர் தான் நின்ற ராசியிலிருந்து,


ஐந்தாம் பார்வையாக சிம்ம ராசியான

சுக ஸ்தானத்தையும்,


ஏழாம் பார்வையாக துலாம் ராசியான

சத்ரு ஸ்தானத்தையும்,


ஒன்பதாம் பார்வையாக தனுசு ராசியான

அஷ்டம ஸ்தானத்தையும் பார்வையிட இருக்கின்றார்.

கலகலப்பான பேச்சுக்களின் மூலம் அனைவரையும் தன் வசப்படுத்தி கொள்ளும் ரிஷப ராசி அன்பர்களே!!

குரு போக ஸ்தானத்தில் நிற்பதால் சுபகாரியம் தொடர்பான விரயங்கள் ஏற்படும். முன்கோபத்தினால் சிறு சிறு வாய்ப்புகளையும் தவறவிடுவீர்கள். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். ஆசைகளைக் குறைத்துக் கொண்டு கிடைக்கும் சிறு சிறு காரியங்களில் மகிழ்ச்சி அடைவது நல்லது. சரியான நேரத்திற்கு உணவு உட்கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு மேன்மையை ஏற்படுத்தும். மனநிலையில் திடீர் மாற்றங்கள் பிறக்கும். பயனற்ற விவாதங்களை குறைத்துக் கொள்ளவும்.

பலன்கள்:


குரு தன்னுடைய ஐந்தாம் பார்வையாக சுக ஸ்தானத்தை பார்ப்பதினால் வருமானத்தை மேம்படுத்துவதற்கான எண்ணங்கள் கைகூடும். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் படிப்படியாக குறையும். மனதில் நீண்ட நாட்களாக இருந்த குழப்பங்களுக்கு தெளிவான முடிவுகள் பிறக்கும். உறவினர்கள் வழியில் ஒத்துழைப்புகள் கிடைக்கும். வீடு மற்றும் மனை வாங்குவது தொடர்பான முயற்சிகள் ஈடேறும். 


குரு தன்னுடைய ஏழாம் பார்வையாக சத்ரு ஸ்தானத்தை பார்ப்பதினால் கடன் சார்ந்த விஷயங்களில் சிந்தித்து செயல்படவும். வேலை சார்ந்த முயற்சிகள் ஈடேறும். வழக்குகளில் சமரசத் தீர்வு கிடைக்கும். தேவையற்ற வீண் விவாதங்களை தவிர்க்கவும். மற்றவர்களை பற்றிய விமர்சன கருத்துக்களை தவிர்ப்பது நல்லது. ஆடம்பரமான செலவுகளை குறைத்துக் கொள்ளவும். அதிக வட்டிக்கு கடன் வாங்குவதை தவிர்க்கவும். உடன் இருப்பவர்களிடம் அனுசரித்து செல்லவும். சிறிய வாய்ப்புகளையும் பயன்படுத்திக் கொள்வது நல்லது. நினைத்த சில பணிகள் தாமதத்திற்கு பின் நிறைவேறும்.


குரு தன்னுடைய ஒன்பதாம் பார்வையாக அஷ்டம ஸ்தானத்தை பார்ப்பதினால் எதிர்காலம் சார்ந்த எண்ணங்கள் மனதில் மேம்படும். தந்தையின் உடல்நிலையில் கவனம் வேண்டும். சொத்துக்களை வாங்கும் பொழுது வில்லங்கம் ஏதாவது உள்ளதா என்பதை தீர விசாரித்த பின்பு வாங்கவும். மற்றவர்கள் செய்யும் தவறுகளுக்கு சில நேரங்களில் பொறுப்பேற்க வேண்டிய சூழ்நிலைகள் உண்டாகும். வாகன பயணங்களில் விவேகம் வேண்டும்.

பொருளாதாரம்:


வரவுக்கு ஏற்ற செலவுகளால் பொருளாதாரத்தில் ஏற்ற, இறக்கங்கள் உண்டாகும். எடுக்கும் சில முயற்சிகளில் விரயங்களுக்கு பின்பு நற்பலன்கள் ஏற்படும். புதிய பொருட்களின் சேர்க்கையினால் கையிருப்புகள் குறையும். ஜாமீன் கையெழுத்து போடுவதை தவிர்க்கவும். எதிர்பாராத தனம் சார்ந்த உதவிகள் கிடைக்கும். 

உடல் ஆரோக்கியம்:


உடல் ஆரோக்கியத்தில் அவ்வப்போது சிறு சிறு பிரச்சனைகள் ஏற்படும். பழைய சிந்தனைகளின் மூலம் வீண் சஞ்சலங்கள் உண்டாகும். பலதரப்பட்ட அனுபவங்களின் மூலம் எதையும் சமாளிக்கக்கூடிய மனப்பக்குவம் ஏற்படும். மருத்துவ செலவுகளால் நெருக்கடிகள் உண்டாகும்.

பெண்களுக்கு:


பெண்களுக்கு இறை வழிபாடு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். பணிபுரியும் இடத்தில் மற்றவர்கள் விஷயங்களில் தலையிடுவதை தவிர்க்கவும். நெருக்கமானவரிடம் கொடுக்கல், வாங்கலை முடிந்த அளவுக்கு தவிர்ப்பது நல்லது. எதிர்பாராத சில திடீர் திருப்பங்கள் ஏற்படலாம்.

மாணவர்களுக்கு:


மாணவர்களுக்கு முயற்சிக்கு ஏற்ப மதிப்பெண் கிடைக்கும். கல்வியில் கவனத்துடன் இருப்பது நல்ல மதிப்பெண் பெற வழிவகுக்கும். ஞாபக மறதி மற்றும் செயல்பாடுகளில் ஒருவிதமான மந்தத்தன்மை ஏற்படும். எதிர்பார்த்த சில உதவிகள் தாமதமாக கிடைக்கும். அலைபாயும் சிந்தனைகளால் தேவையற்ற பிரச்சனைகளில் சிக்கிக் கொள்ளாதீர்கள். எதிர்பாலின நண்பர்களிடத்தில் கவனம் வேண்டும்.

உத்தியோகஸ்தர்களுக்கு:


உத்தியோக பணிகளில் எதிர்பாராத இடமாற்றங்கள் ஏற்படும். பணி நிமிர்த்தமான அலட்சியங்கள் அதிகரிக்கும். முன்கோபத்தை குறைத்துக் கொள்வது நல்லது. கைமாறாக கொடுத்த தொகை கிடைப்பதில் தாமதம் ஏற்படும். எளிதில் முடிக்க வேண்டிய சில பணிகள் கூட தாமதமாக முடிப்பீர்கள். பிறரை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்காதீர்கள்.

வியாபாரிகளுக்கு:


தொழிலில் போட்டிகள் மேம்படும். வியாபாரம் தொடர்பான வெளியூர் பயணம் அதிகரிக்கும். வேலையாட்களின் ஒத்துழைப்புகள் ஓரளவு கிடைக்கும். வியாபாரம் நிமிர்த்தமான சொந்த ஊர் பயணங்களை அடிக்கடி மேற்கொள்வீர்கள். புதிய முதலீடு தொடர்பான செயல்களில் கவனம் வேண்டும். கமிஷன் தொடர்பான பணிகளில் சிந்தித்து செயல்பட்டால் அனுகூலம் பிறக்கும். கூட்டாளிகளிடம் சிறு சிறு விவாதங்கள் ஏற்படும்.

கலைஞர்களுக்கு:


கலைத்துறையில் எதிர்பாராத புதுவிதமான வாய்ப்புகள் உண்டாகும். நீண்ட நாட்களாக தடைபட்ட தனவரவுகள் கிடைக்கும். உடன் இருப்பவர்களிடம் ரகசியங்கள் பகிர்வதை தவிர்க்கவும். பேச்சுக்களில் நிதானத்தை கடைபிடிப்பது உங்கள் மீதான நம்பிக்கையை ஏற்படுத்தும்.

அரசியல்வாதிகளுக்கு:


அரசியல்வாதிகள் மக்களின் எண்ணங்களை புரிந்து கொண்டு செயல்படுவது நல்லது. உயர் அதிகாரிகளால் சில நெருக்கடியான சூழ்நிலைகள் ஏற்படும். அரசு தொடர்பான பணிகளில் எதிர்பாராத சில நெருக்கடிகள் உண்டாகும். உங்கள் மீதான வதந்திகளால் குழப்பங்கள் உண்டாகும்.

நன்மைகள்:


போக குருவினால் கால்நடை தொடர்பான பணிகளில் மேன்மை ஏற்படும். எதிர்பார்த்த கடன் சார்ந்த உதவிகள் சாதகமாக அமையும். தவறுகளை திருத்திக் கொள்வதற்கான வாய்ப்புகள் ஏற்படும்.

கவனம்:


போக குருவினால் கணவன், மனைவிக்கிடையே அனுசரித்து நடந்து கொள்ளவும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் அதிகரிக்கும். நெருக்கமானவர்களின் மூலம் சில சங்கடங்கள் ஏற்படும்.

வழிபாடு:


பௌர்ணமி தோறும் குலதெய்வ வழிபாடு செய்து வர இன்னல்கள் குறையும்.


ஆதரவற்ற சிறுவர்களுக்கு இனிப்பு பண்டங்களை வாங்கி தருவது மனநிம்மதியை ஏற்படுத்தும்.

மேற்கூறப்பட்டுள்ள பலன்கள் யாவும் பொதுபலன்களே..!! அவரவர்களின் திசாபுத்திக்கு ஏற்ப பலன்களில் மாற்றம் உண்டாகும்.


 

குரு பெயர்ச்சி பலன்கள் : 22-04-2023 முதல் 01-05-2024 முடிய (Guru Peyarchi Palangal : 22-04-2023 to 01-05-2024)...



 குரு பெயர்ச்சி பலன்கள் : 22-04-2023 முதல் 01-05-2024 முடிய (Guru Peyarchi Palangal : 22-04-2023 to 01-05-2024)....


>>> குருபெயர்ச்சி பலன்கள் - மேஷம்...


>>> குருபெயர்ச்சி பலன்கள் - ரிஷபம்...


>>> குருபெயர்ச்சி பலன்கள் - மிதுனம்...


>>> குருபெயர்ச்சி பலன்கள் - கடகம்...


>>> குருபெயர்ச்சி பலன்கள் - சிம்மம்...


>>> குருபெயர்ச்சி பலன்கள் - கன்னி...


>>> குருபெயர்ச்சி பலன்கள் - துலாம்...


>>> குருபெயர்ச்சி பலன்கள் - விருச்சிகம்...


>>> குருபெயர்ச்சி பலன்கள் - தனுசு...


>>> குருபெயர்ச்சி பலன்கள் - மகரம்...


>>> குருபெயர்ச்சி பலன்கள் - கும்பம்...


>>> குருபெயர்ச்சி பலன்கள் - மீனம்...



குரு பெயர்ச்சி பலன்கள் 2022 - 2023 (Guru Peyarchi Palangal)...

 


குரு பெயர்ச்சி பலன்கள் 2022 - 2023 (Guru Peyarchi Palangal)...


🐏 குரு பெயர்ச்சி பலன்கள் - மேஷம்...


🐄 குரு பெயர்ச்சி பலன்கள் - ரிஷபம்...


👬 குரு பெயர்ச்சி பலன்கள் - மிதுனம்...


🦀 குரு பெயர்ச்சி பலன்கள் - கடகம்...


🦁 குரு பெயர்ச்சி பலன்கள் - சிம்மம்...


👩🏻 குரு பெயர்ச்சி பலன்கள் - கன்னி...


⚖️ குரு பெயர்ச்சி பலன்கள் - துலாம்...


🦂 குரு பெயர்ச்சி பலன்கள் - விருச்சிகம்...


🏹 குரு பெயர்ச்சி பலன்கள் - தனுசு...


🐳 குரு பெயர்ச்சி பலன்கள் - மகரம்...


🏺 குரு பெயர்ச்சி பலன்கள் - கும்பம்...


🦈 குரு பெயர்ச்சி பலன்கள் - மீனம்...


குரு பெயர்ச்சி பலன்கள் 2022 - 2023 - மீனம் (Guru Peyarchi Palangal - Meenam)...

 


 குரு பெயர்ச்சி பலன்கள் 2022 - 2023  - மீனம் (Guru Peyarchi Palangal - Meenam)...




மற்றவர்களின் வளர்ச்சியைக் கண்டு மகிழ்பவர்களே...!



தனக்கென எதையும் எடுத்து வைத்துக் கொள்ளாதவர்களே! மூட நம்பிக்கைகளில் மூழ்காமல் அறிவுப்பூர்வமாக சிந்திப்பவர்களே! உங்கள் ராசிக்கு லாப வீட்டிலும், 12-ம் வீட்டிலும் அமர்ந்து வீண்பழி, விரக்தி, விரயச் செலவு என்று உங்கள் நிம்மதியைக் குலைத்த குருபகவான் இப்போது 14.04.2022 முதல் 22.04.2023 வரை ராசிக்குள்ளேயே ஆட்சிப் பெற்று அமர்ந்து ஜென்மகுருவாக நீடிப்பதால் மன உளைச்சல், டென்ஷன், வேலைச்சுமை அதிகரிக்கும். சில நேரங்களில் பெரிய நோய்கள் இருப்பது போன்ற பயம் வந்து போகும். அடிக்கடி மருத்துவ பரிசோதனை செய்து கொள்வது நல்லது. மெடிக்ளைம் எடுத்துக் கொள்ளுங்கள்.



குரு பகவான் 7-ம் வீட்டையும் பார்ப்பதால் கணவன் - மனைவிக்குள் அன்பு குறையாது. சோர்ந்து கிடந்த நீங்கள் இனி சுறுசுறுப்பாவீர்கள். அரசாங்கத்தால் ஆதாயம் உண்டு. குரு பகவான் உங்களின் 5-ம் வீட்டைப் பார்ப்பதால் குழந்தை பாக்யம் கிட்டும். பிள்ளைகளால் உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் பெருமையடைவீர்கள். மகனுக்கு எதிர்பார்த்த நிறுவனத்திலேயே வேலை கிடைக்கும். மகளின் கல்யாணம் தடபுடலாக நடந்து முடியும். வழக்குகள் சாதகமாக அமையும். குலதெய்வம் கோயிலை புதுப்பிப்பீர்கள். குருபகவான் உங்களின் 9-ம் வீட்டைப் பார்ப்பதால் வராது என்றிருந்த பணம் கைக்கு வந்து சேரும். தந்தைவழி பாட்டன் சொத்துகள் வந்து சேரும். அரசு காரியங்கள் நல்ல விதத்தில் முடியும்.



பெரிய முடிவுகள் எடுக்கும்போது உணர்ச்சிவசப்படவேண்டாம். குடும்பத்தில் நடக்கும் சின்னச் சின்ன சண்டை சச்சரவுகளை எல்லாம் பெரிதாக்க வேண்டாம். அவசரப்பட்டு யாருக்கும் வாக்குறுதி அளிக்க வேண்டாம். குறுக்கு வழிகளைத் தவிர்ப்பது நல்லது. உடன்பிறந்தவர்களுடன் அவ்வப்போது கருத்துவேறுபாடுகள் நிலவி வந்ததே, இனி பாசமாக பேசுவார்கள். என்றாலும் அவர்களால் கொஞ்சம் செலவுகளும் இருக்கும். தந்தையாருடன் இருந்த மனக்கசப்புகள் நீங்கும். அவரின் உடல்நிலை சீராகும். ஆன்மிகவாதிகள், சித்தர்களின் ஆசி கிட்டும். அக்கம் பக்க வீட்டார்கள் அன்பாக பேசுகிறார்களே என்று குடும்ப அந்தரங்க விஷயங்களை சொல்லிக் கொண்டிருக்காதீர்கள்.



குருபகவானின் பாதச்சாரப் பலன்கள்:



14.04.2022 முதல் 29.04.2022 வரை: இக்காலகட்டங்களில் உங்கள் ராசிநாதனும், ஜீவனாதிபதியுமான குருபகவான் தன் நட்சத்திரமான பூரட்டாதி நட்சத்திரத்தின் 4-ம் பாதத்தில் செல்வதால் எந்த வேலையையும் திறம்பட செய்து முடிப்பீர்கள். உத்யோகத்தில் கவுரவப் பதவி வரும்.



30.04.2022 முதல் 24.02.2023 வரை: மேற்கண்ட நாட்களில் உங்களின் லாப, விரயாதிபதியான சனிபகவானின் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் தடைகள் நீங்கும். வீடு வாங்க, கட்ட லோன் கிடைக்கும். ஷேர் மூலம் பணம் வரும். குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும்.



24.02.2023 முதல் 22.04.2023 வரை: இக்காலகட்டத்தில் குரு பகவான் உங்கள் சுக, சப்தமாதி பதியான புதனின் ரேவதி நட்சத்திரத்தில் செல்வதால் நண்பர்கள் உறவினர்களுடன் கருத்து மோதல்கள் வரக்கூடும். புதன் பாதகாதிபதியாக இருப்பதால் தாயாரின் உடல்நலத்தில் கவனம் தேவை. வியாபாரிகளே, போட்டியாளர்களை எதிர்கொள்வதாக எண்ணிக் கொண்டு பெரிய முதலீடுகளைப் போடாதீர்கள். அனுபவமில்லாத புதுத் துறையில் கால்பதிக்க வேண்டாம். ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். உணவு, கமிஷன், ஷேர் மூலம் லாபமுண்டு. கூட்டுத் தொழிலில் பங்குதாரர்கள் அவ்வப்போது பிரச்சினை செய்தாலும் இறுதியில் உங்கள் பேச்சுக்கு கட்டுப்படுவார்கள்.



உத்யோகஸ்தர்களே, மேலதிகாரியுடன் இருந்து வந்த பனிப்போர் மறையும். திறமைகளை வெளிப்படுத்த நல்ல சந்தர்ப்பங்கள் அமையும். வேலைச்சுமை அதிகமாக இருந்தாலும் சமாளித்து விடுவீர்கள். ஜனவரி, பிப்ரவரி, மார்ச் மாதங்களில் புது வாய்ப்புகள், பொறுப்புகள் தேடி வரும். உங்களை குறை சொல்லிக் கொண்டிருந்த சக ஊழியர்கள் இனி மதிப்பார்கள். மூத்த அதிகாரிகள் உங்களின் ஆலோசனைக்கு முக்கியத்துவம் அளிப்பார்கள். இந்த குரு பெயர்ச்சி வாழ்க்கையின் ஏற்ற இறக்கங்களை கற்றுத் தருவதுடன், அவ்வப்போது வெற்றியையும் தருவதாக அமையும்.



பரிகாரம்: சென்னை திருவலிதாயத்தில் (பாடி) அருள்பாலிக்கும் ஸ்ரீகுருபகவானை அனுஷம் நட்சத்திரம் நடைபெறும் நாளில் நெய் விளக்கேற்றி வணங்குங்கள். புற்றுநோயால் பாதித்தவர்களுக்கு உதவுங்கள். நல்லது நடக்கும்.




குருப்பெயர்ச்சி பலன் - மீனம்

குருபெயர்ச்சி பலன்கள் 2022 - 2023
வாக்கிய பஞ்சாங்கத்தின்படி 13.04.2022 முதல் 22.04.2023 வரை

திருக்கணித பஞ்சாங்கத்தின்படி 13.04.2022 முதல் 22.04.2023 வரை


குருதேவர் தான் நின்ற ராசியிலிருந்து

ஐந்தாம் பார்வையாக புத்திர ஸ்தானத்தையும், 

ஏழாம் பார்வையாக களத்திர ஸ்தானத்தையும்,

ஒன்பதாம் பார்வையாக பாக்கிய ஸ்தானத்தையும் பார்வையிடுகின்றார்.
பொறுமை குணம் கொண்ட மீன ராசி அன்பர்களே...!
இந்த வருட குருபெயர்ச்சியில் இதுவரையில் மீன ராசிக்கு பனிரெண்டாம் இடத்தில் இருந்துவந்த குருபகவான் ஜென்ம ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார்.

குருவானவர் தான் இருக்கும் இடத்தை விட பார்க்கும் இடத்தை வாழ வைக்கும் தன்மை கொண்டவர் ஆவார். அதனால்தான் குரு பார்வை கோடி புண்ணியம் என்று அழைக்கப்படுகின்றது.
பலன்கள் :

திருமணமானவர்களுக்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். இதுவரை மனதளவில் இருந்துவந்த குழப்பங்கள் யாவும் நீங்கி புத்துணர்ச்சியும், தெளிவும் பிறக்கும். குடும்பத்துடன் இணைய நினைத்தவர்களுக்கு எண்ணங்கள் கைகூடும். தாய்மாமன் வழியில் மகிழ்ச்சியான சூழ்நிலைகளும், கருத்து வேறுபாடுகளும் குறையும். திருப்பணி தொடர்பான செயல்பாடுகளில் ஆர்வம் மேம்படும். உத்தியோகம் நிமிர்த்தமான புதிய வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
பொருளாதாரம் :

பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான சிந்தனைகள் அதிகரிக்கும். எதிர்காலம் தொடர்பான முதலீடுகள் மேம்படும். உறவினர்கள் வழியில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும்.
உடல் ஆரோக்கியம் :

உடல் ஆரோக்கியம் மற்றும் பயணம் தொடர்பான விஷயங்களில் விழிப்புணர்வு வேண்டும். உணவு சார்ந்த விஷயங்களில் சற்று விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.
பெண்களுக்கு :

சுபகாரியம் தொடர்பான முயற்சிகள் கைகூடும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்துவந்த தடைகள் நீங்கும். உத்தியோகத்தில் முன்னேற்றமான சூழ்நிலைகள் காணப்படும். புதிய முயற்சிகளில் சிந்தித்து செயல்படவும். குழந்தைகள் வழியில் மேன்மை உண்டாகும்.
மாணவர்களுக்கு :

அன்றைய பாடங்களை அன்றே படித்து முடிப்பது நல்லது. தேவையில்லாத விஷயங்களை குறைத்துக் கொள்ளவும். நண்பர்களிடம் அளவுடன் பழகுவது நல்லது. நுட்பமான சில விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். மாணவர்களுக்கு கல்வி தகுதிக்கேற்ற உத்தியோக வாய்ப்புகள் கிடைக்கும்.
உத்தியோகஸ்தர்களுக்கு :

உத்தியோக பணிகளில் வெளியூர் மற்றும் வெளிநாடு தொடர்பான வேலைவாய்ப்புகள் சாதகமாக அமையும். பணிபுரியும் இடத்தில் ஊதிய உயர்வுகளும், பொறுப்புகளும் அதிகரிக்கும்.
வியாபாரிகளுக்கு :

பாகப்பிரிவினை தொடர்பான முயற்சிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். கூட்டு வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். வியாபார பணிகளில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். ஏற்றுமதி, இறக்குமதி சார்ந்த விஷயங்களில் ஆதாயமடைவீர்கள். அழகுசாதனப் பொருட்கள் தொடர்பான துறைகளில் முன்னேற்றம் உண்டாகும்.
விவசாயிகளுக்கு :

விவசாயம் சார்ந்த துறைகளில் அலைச்சல்கள் அதிகரிக்கும். பாசன வசதி தொடர்பான பிரச்சனைகள் படிப்படியாக குறையும். அரசு தொடர்பான கடன் சார்ந்த உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள்.
அரசியல்வாதிகளுக்கு :

பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கப் பெறுவீர்கள். பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு மதிப்பு மேம்படும். உங்களின் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். மாவட்டம் தொடர்பான செயல்பாடுகளில் புதிய வாய்ப்புகள் ஏற்படும்.
கலைஞர்களுக்கு :

கலை சார்ந்த துறைகளில் அனுகூலமான சூழ்நிலைகள் காணப்படும். உயர்மட்ட மக்களிடத்தில் பிரபலம் அடைவீர்கள். திறமைக்குண்டான விருதுகளும், பாராட்டுகளும் சாதகமாக அமையும். 
நன்மைகள் :

வர இருக்கின்ற குருபெயர்ச்சியின் மூலமாக மனதில் தோன்றும் புதுவிதமான சிந்தனைகளை செயல்வடிவமாக மாற்றுவதற்கு உண்டான வாய்ப்புகளும், பெரியோர்களின் அரவணைப்பும் கிடைக்கப் பெறுவீர்கள்.
கவனம் :

வர இருக்கின்ற குருபெயர்ச்சியில் தற்பெருமை சார்ந்த சிந்தனைகளை குறைத்துக் கொள்வது நல்லது.
வழிபாடு :

வியாழக்கிழமைதோறும் தட்சிணாமூர்த்தியை வழிபாடு செய்துவர செயல்பாடுகளில் வேகம் அதிகரிக்கும்.
மேற்கூறப்பட்டுள்ள பலன்கள் யாவும் பொதுபலன்களே...!! அவரவர்களின் திசாபுத்திக்கு ஏற்ப பலன்களில் மாற்றம் உண்டாகும்.

 

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Husband should be given leave to look after wife during maternity - High Court

மகப்பேறு காலத்தில் மனைவியை கவனிக்க கணவருக்கு விடுமுறை வழங்க வேண்டும் - உயர்நீதிமன்றம் Husband should be given leave to look after wife durin...