கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 03-12-2021 - வெள்ளி - (School Morning Prayer Activities)...



 பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 03.12.21

 திருக்குறள் :


பால்: அறத்துப்பால்


இயல் :துறவறவியல்


அதிகாரம் :அருளுடைமை


குறள் எண்: 241

குறள்: அருட்செல்வம் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம்

பூரியார் கண்ணும் உள.


பொருள்: செல்வங்கள் பலவற்றுள்ளும் மேலான செல்வம் அருளால்

வரும் செல்வமே. பொருள் செல்வமோ இழிந்தவரிடத்தும் உள்ளன.


பழமொழி :

Face the danger boldly than live in fear.

அஞ்சி வாழ்வதை விட ஆபத்தை எதிர் கொள்


இரண்டொழுக்க பண்புகள் :


1. உழாத நிலமும், இறைக்காத கிணறும், உழைக்காத உடலும் கெடும் இத்தவறை செய்ய மாட்டேன். 


2. இரக்கமில்லாத மனமும், இயற்கை அழிக்கும் நாடும் கெடும். எனவே இல்லாதவர்களுக்கு இரங்குவேன், இயற்கை வளம் ஒரு நாளும் அழிக்க மாட்டேன்.


பொன்மொழி :


எவன் பிறர் நற்செயல்களைப் பார்த்து மகிழ்ச்சி கொள்ளவில்லையோ,அவனால் நல்ல

செயல்கள் எதையும் செய்ய முடியாது. ------ஜேம்ஸ் ஆலன்.



பொது அறிவு :


1. மனிதனின் உமிழ்நீரின் PH மதிப்பு என்ன? 

6.5-7.5.


 2. வானவில்லில் 7 வண்ணங்கள் உள்ளன என்பதை கண்டுப்பிடித்தவர் யார்?

ஐசக் நியூட்டன்.


English words & meanings :

Attire - proper clothing wear to go out, வெளியில் அணிந்து செல்லும் தகுந்த ஆடை 


ditch - to get rid of, வேண்டாம் என்று ஒதுக்குதல், தள்ளுதல்


ஆரோக்ய வாழ்வு :

கொத்தவரங்காய் கெட்ட கொழுப்பைக் குறைத்து இதயத்தை ஆரோக்கியமாக வைத்து கொள்ளும். உடலில் உள்ள நச்சு தன்மை அகற்றி இரத்த ஓட்டம் சீராக்கும் 


கணினி யுகம் :

Ctrl + shift + 8 - Show non- printed marks. 


 Ctrl + shift + A - Activate all caps


டிசம்பர் 03

பன்னாட்டு மாற்றுத்திறனாளிகள் நாள்

உலக மக்கள் அனைவரும் மாற்றுத்திறனாளிகளின் பிரச்சனைகளைப் புரிந்து கொள்வதுடன், அவர்களுக்கு மேன்மையும், உரிமைகளும் வழங்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தால் ஐ.நா சபை உலகம் முழுவதும் பன்னாட்டு மாற்றுத்திறனாளிகள் நாள் (பன்னாட்டு ஊனமுற்றோர் நாள்) என டிசம்பர் 3ஐ அனுசரிக்கின்றது.


1981-ம் ஆண்டை உலக மாற்றுத்திறனாளிகள் ஆண்டாக ஐக்கிய நாடுகள் அவை அறிவித்தது. 1992-ஆம் ஆண்டு டிசம்பர் 3-ம் தேதியை பன்னாட்டு மாற்றுத்திறானாளிகள் நாளாக அறிவித்தது. அன்று முதல் ஒவ்வொரு ஆண்டும் இந்த நாள், உலக நாடுகளால் பன்னாட்டு மாற்றுத்திறனாளிகள் நாள் என கொண்டாடப்படுகின்றது.


டாக்டர் இராஜேந்திரப் பிரசாத் அவர்களின் பிறந்தநாள்

டாக்டர் இராஜேந்திரப் பிரசாத் (Dr. Rajendra Prasad இந்தி: डा॰ राजेन्द्र प्रसाद; 3 டிசம்பர் 1884 – 28 பிப்ரவரி 1963) இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவரும் இந்திய விடுதலைப் போராட்ட வீரரும் ஆவார். காங்கிரஸ் கட்சித் தலைவர்களுள் ஒருவர். 1950 முதல் 1962 வரை இந்திய குடியரசுத் தலைவராக இருந்தார். இரு முறை குடியரசுத் தலைவர் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே குடியரசுத் தலைவர்.



தியான் சந்த் அவர்களின் நினைவு நாள்

தியான் சந்த் (Dhyan Chand, இந்தி: ध्यान चंद); பிறப்பு: அலகாபாத்தில் ஆகத்து 29, 1905 – இறப்பு:திசம்பர் 3, 1979), என்பவர் இந்திய வளைதடிப் பந்தாட்ட வீரர் ஆவார். வளைதடிப்பந்தாட்ட வரலாற்றில் சிறந்த விளையாட்டு வீரராகக் கருதப்படுகிறார் [1] 1928 ஆம் ஆண்டு ஆம்ஸ்டர்டமிலும் 1932 ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சலசிலும் [2] 1936ஆம் ஆண்டு பெர்லினிலும் நடைபெற்ற ஒலிம்பிக் விளையாட்டுக்களில் [3] தங்கப் பதக்கம் பெற்ற இந்திய அணியில் பங்கேற்றிருந்தார். [4] 1928 முதல் 1964 வரையிலான காலங்களில் நடந்த எட்டு ஒலிம்பிக் விளையாட்டுக்களில் இவர் இடம்பெற்றிருந்த ஆடவர் வளைதடிப் பந்தாட்டத்தில் ஏழு போட்டிகளில் இந்தியா தங்கப் பதக்கம் வென்றுள்ளது.


நீதிக்கதை

முயற்சியே வெற்றியைத் தேடி தரும்

கதை :

ஒரு ஊரில் சலவைத் தொழிலாளி ஒருவர் இருந்தார். அவரிடம் வயதான கழுதை ஒன்று இருந்தது. அதற்கு வயதாகிப் போனதால் பொதி சுமக்கச் சிரமப்பட்டது. நடக்கவும் சிரமப்பட்டது. ஒருநாள் தொழிலாளி தன் கழுதையுடன் சென்று கொண்டிருந்தபோது கழுதை வழியில் இருந்த பாழடைந்த கிணற்றுக்குள் விழுந்து விட்டது. 


எப்படியாவது அந்தக் கழுதையைத் தொலைத்து விட நினைத்திருந்த தொழிலாளி இதுதான் சமயமென்று நினைத்தார். கழுதையை மேலே தூக்கிவிடாமல் அப்படியே கிணற்றில் புதைத்து விடுவோம் என அருகில் இருந்தவர்களைக் கூப்பிட்டார். 


கழுதை அப்படியே புதைந்து போகட்டும் என்று எல்லோருமாகச் சேர்ந்து மண்வெட்டி கொண்டு வந்து அருகிலிருந்த மண்ணை வெட்டிக் கிணற்றுக்குள் தள்ளினர். ஆரம்பத்தில் தன் மீது விழும் மண்ணைக் கண்டு திகைத்த கழுதை பின்பு சுதாரித்துக் கொண்டது. 


தனக்கு நேரும் துன்பத்தை எண்ணி வருந்திக் கொண்டிருந்தால் பயனில்லை. ஏதாவது செய்து தப்பிக்க வேண்டும் என நினைத்தது. தன் மீது விழும் மண்ணை உடம்பைச் சிலிர்த்து உதறியபடியே கொஞ்சம் கொஞ்சமாக அடி எடுத்து வைத்து வெளியே வர முயற்சித்தது. 


மேலே இருந்தவர்களும் மண்ணை வெட்டிப் போட்டுக் கொண்டேயிருந்தனர். தப்பிக்க வேண்டுமென்ற குறிக்கோளே பிரதானமாக இருந்ததால் கழுதையும் வேகமாக மண்ணை உதறி விட்டபடி மேலே ஏறி வந்துவிட்டது. 


தொழிலாளியும் கழுதையின் விடாமுயற்சியில் வியந்து மனமிறங்கி தன்னுடன் அழைத்துச் செல்ல முடிவு செய்தான். மனிதர்களாகிய நமக்கும் பல விதங்களில் சோதனைகளும் துன்பங்களும் வந்து சேரலாம். அதையே நினைத்து உழன்று கொண்டிராமல் அதை எல்லாம் உதறித் தள்ளி விட்டு மீண்டு வர முயற்சி செய்வதே புத்திசாலித்தனம். 


நீதி :

தம்மை நோக்கி அளவுக் கடந்த பிரச்சனைகள் வந்தாலும் அதனை கடந்து முன்வர வேண்டும்.


இன்றைய செய்திகள்


03.12.21


◆தமிழகத்தில் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழை பயிற்று மொழியாக்கக்கோரிய மனுவை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.


◆கரோனா காலத்தில் அவுட்சோர்சிங் முறையில் பணியாற்றியவர்களுக்கு நடைபெறவுள்ள சுகாதாரப் பணியாளர்கள், ஆய்வாளர்கள் தேர்வில் கூடுதல் மதிப்பெண் அளிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளதாக  மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை  அமைச்சர் தெரிவித்துள்ளார்.


◆இல்லம் தேடி கல்வி திட்ட விழிப்புணர்வு பிரச்சாரப் பணிகளால் மீண்டது நாட்டுப்புறக் கலைஞர்களின் வாழ்வாதாரம்.


◆இந்தியாவிலும் புகுந்தது ஒமைக்ரான் வைரஸ்: கர்நாடகாவில் இருவருக்கு தொற்று: 5 மடங்கு வீரியமானது என மத்திய அரசு எச்சரிக்கை.


◆23  நாடுகளில் ஒமைக்ரான் வைரஸ் பரவல்: பரவல் மேலும் அதிகரிக்கலாம் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை.


◆உலக இறுதி சுற்று பேட்மிண்டன்: தொடக்க ஆட்டங்களில் இந்தியாவின் சிந்து, ஸ்ரீகாந்த் வெற்றி.


◆உலக தடகள அமைப்பின் சார்பில் இந்த ஆண்டின் சிறந்த பெண் விருது இந்தியாவின் அஞ்சு பாபி ஜார்ஜுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.



Today's Headlines


 🌸The Madurai branch of the High Court has dismissed a petition that ask for Tamil as teaching language in Kendriya Vidyalaya schools in Tamil Nadu.


🌸 The Minister of Medicine and Public Welfare has said that the way has been paved to give extra marks in the examination of health workers and inspectors to be held for those who worked in the outsourcing system during the Corona period.


 🌸 Livelihood for Folk Artists recovered by Home Based Education Project Awareness Campaigns.


🌸Omicron virus enters India: Two infected in Karnataka: union government warns that the virus will affect 5 times more severe.


 🌸Omicron virus outbreak in 23 countries: World Health Organization warns of further more spread.


 🌸 World Final Round Badminton: India's Sindhu, Srikanth win in opening matches.


 🌸 Anju Bobby George of India has been announced as this year's Best Female Award on behalf of the World Athletics Association.

 Prepared by


Covai women ICT_போதிமரம்

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

G.O. (D) No. 278, Dated : 17-12-2024 - TN Govt nominated TRB as the nodal agency for conducting SET

TRB மூலம் பேராசிரியர் தகுதித் தேர்வு (TNSET) - மூன்றாண்டுகள் நடத்துவதற்கான அரசாணை G.O. (D) No. 278, Dated : 17-12-2024 வெளியீடு TAMILNADU St...