கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 22-12-2021 - புதன் - (School Morning Prayer Activities)...

 

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 22.12.21

திருக்குறள் :


பால்:பொருட்பால்


இயல்: அரணியல்


அதிகாரம்: நாடு


குறள் எண் : 731


குறள்:

தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச்

செல்வருஞ் சேர்வது நாடு


பொருள்:

செழிப்புக் குறையாத விளைபொருள்களும், சிறந்த பெருமக்களும், செல்வத்தைத் தீயவழியில் செலவிடாதவர்களும் அமையப்பெற்றதே நல்ல நாடாகும்.


பழமொழி :

A clean hand wants no washing


பொன் குடத்துக்கு பொட்டு வேண்டுமா?



இரண்டொழுக்க பண்புகள் :


1. காடழிந்தால் மழை கெடும் எனவே இயற்கை போற்றி பாதுகாப்பேன். 


2. மழை அழிந்தால் விவசாயம் கெடும், விவசாயம் கெட்டால் உணவு அழியும். எனவே விவசாயம் பேணி பாதுகாப்பேன்


பொன்மொழி :


வெற்றிபெறுவதற்கு நிறைந்த விடா முயற்சியையும், பெரும் மனஉறுதியையும் நீங்கள்பெற்றிருக்க வேண்டும். விடா முயற்சி பெற்றவன், சமுத்திரத்தையே குடித்துவிடுவான், எனது சங்கல்ப்பத்தால் மலைகள் நொறுங்கி விழுந்தாகவேண்டும்___விவேகானந்தர்


பொது அறிவு :


1. ஏழு தீவுகளின் நகரம் எது? 


மும்பை. 


2. நான்கு அறைகளுடன் கூடிய வயிறு உடைய விலங்கு எது? 

மான்.


English words & meanings :


Academic Achievement - கல்வி சாதனை, 


Academic Performance - கல்வி செயல் திறன்


ஆரோக்ய வாழ்வு :

முந்திரிப் பருப்பு இரத்த அழுத்தத்தை குறைக்கும். பித்தக்கற்களை தவிர்க்கும். வலுவான பற்கள், ஈறுகள் மற்றும் எழும்புகள் அமைய உதவும்.


கணினி யுகம் :

Play and pause a video: Press the spacebar or the K key on your keyboard to play and pause a video.


Tip


Holding down either of these keys also plays the video in slow motion.


Jump to the start of a video


Pressing the 0 (zero) key on your keyboard will jump to the beginning of a video. The Home key also works for jumping to the start of a video.



டிசம்பர் 22


தேசிய கணித தினம் 



தேசிய கணித தினம் (National Mathematics Day) இந்தியாவில், டிசம்பர் 22 ஆம் நாள் தேசிய கணித தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய கணித தினம் 26 பிப்ரவரி 2012 அன்று சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு விழாக் கலையரங்கத்தில் நடைபெற்ற சீனிவாச ராமானுசனின் 125 வது பிறந்த நாள் கொண்டாட்டத்தின் தொடக்க விழாவில் இந்தியப் பிரதம மந்திரி டாக்டர் மன்மோகன் சிங் அவர்களால் பிரகடனம் செய்யப்பட்டது.[1]


இந்தியக் கணித மேதை ஸ்ரீனிவாச ராமானுஜன் 1887 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 22 ஆம் தேதி பிறந்தார். 1920 ஏப்ரல் 26 இல் இறந்தார். இந்திய தேசிய கணிதவியலாளரான கணித மேதை சீனிவாச இராமானுசன் அவர்கள் கணிதத்துறைக்குப் பங்காற்றியமைக்காக ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 22 ஆம் நாள் தேசிய கணித தினமாகக் கொண்டாடப்படுகிறது. 2012 ஆம் ஆண்டு தேசிய கணித ஆண்டாக அறிவிக்கப்பட்டுள்ளது.




சீனிவாச இராமானுஜன் அவர்களின் பிறந்தநாள்


சீனிவாச இராமானுஜன் (Srinivasa Ramanujan, டிசம்பர் 22, 1887 – ஏப்ரல் 26, 1920) இந்தியாவில் தமிழ்நாட்டில் ஈரோடு மாவட்டத்தில் கோட்டை பகுதியில் பிறந்த கணித அறிஞர். இராமானுசர் 33 அகவை முடியும் முன்னரே இறந்துவிட்டார். இவர் சிறு வயதிலேயே யாருடைய உதவியும் இல்லாமல் மிக மிக வியப்பூட்டும் விதத்தில் கணிதத்தின் மிக அடிப்படையான ஆழ் உண்மைகளைக் கண்டுணர்ந்தார். 1914-ஆம் ஆண்டுக்கும், 1918-ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் மூவாயிரத்திற்கும் அதிகமான புதுக் கணிதத் தேற்றங்களைக் கண்டுபிடித்தார். எண்களின் பண்புகளைப் பற்றிய எண் கோட்பாடுகளிலும், செறிவெண் கோட்பாடுகளிலும் இவர் கண்டுபிடித்துக் கூறிய ஆழ் உண்மைகள் இன்று அடிப்படை இயற்பியற் துறை முதல் மின்தொடர்புப் பொறியியல் துறை வரை பல துறைகளில் உயர்மட்டங்களில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இராமானுசன் அவர்கள் பெயரால் 1997 இல் The Ramanujan Journal என்னும் கணித ஆய்விதழ் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது.


நீதிக்கதை


நன்மை தீமை இரண்டையும் ஏற்றுக்கொள்


ஒரு வயதான விவசாயி தன் வயலில் பாடுபட்டு உழைத்து அதில் வரும் சொற்பமான வருமானத்தில் வாழ்ந்துகொண்டிருந்தார். ஒரு நாள் அவர் வளர்த்து வந்த குதிரை காணாமல் போய்விட்டது. தகவலைக் கேள்விப்பட்ட அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள் என்ன ஒரு துரதிர்ஷட நிலை? என்று பரிதாபமாக விசாரித்தனர். அவர்களின் ஆறுதலுக்கு விவசாயி மௌனமாக இருக்கலாம் என்று பதிலளித்தார்.


அடுத்த நாள் தொலைந்துப்போன அவருடைய குதிரை தன்னுடன் மூன்று குதிரைகளை அழைத்து வந்தது. இதை ஆச்சர்யமாக பார்த்த அக்கம் பக்கத்தினர், நீ ரொம்ப அதிர்ஷ்டசாலி, இப்பொழுது நான்கு குதிரை உனக்கு கிடைச்சிடுச்சு என்றனர். தனக்குக் கிடைத்த அதிர்ஷ்டத்தைப் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் மறுபடியும் இருக்கலாம் என்று கூறினார் விவசாயி. 


ஒரு வாரத்துக்குப் பிறகு, விவசாயியின் மகன் குதிரையை வேகமாக ஓட்டிச்சென்று தவறுதலாக கீழே விழுந்து காலை உடைத்துக்கொண்டான். இப்பொழுது அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள், விவசாயிடம், உனக்கு ஒரு நல்லது நடந்தால், அடுத்து ஒரு கெட்டது நடக்குதே. உன் பையன் எழுந்து நடக்க பத்து மாதத்திற்கும்மேல் ஆகும் போல இருக்கிறதே, ரொம்ப கஷ்டமான நிலைமை என்று கூறி ஆதங்கப்பட்டனர். அப்போழுதும் அந்த விவசாயி பெரிதாக வருந்தாமல் இருக்கலாம் என்று அதே பதிலைக் கூறினார்.


ஒரே வாரத்தில் அந்த நாட்டில் போர் வந்துவிட்டது. வீட்டில் இருக்கும் எல்லா இளைஞர்களும் கட்டாயம் போரில் கலந்துகொள்ள வேண்டும் என்று கட்டளை பிறப்பிக்கப்பட்டது. வீடு வீடாக ராணுவத்தினர் புகுந்து இளைஞர்களை அழைத்துச் சென்றனர். ஆனால், அந்த ஏழை விவசாயியின் மகனுக்குக் கால் உடைந்து இருந்ததால் அவனை மட்டும் அழைத்துச் செல்லவில்லை. இதைக் கண்டு ஊர் மக்கள் அந்த விவசாயியின் அதிர்ஷ்டத்தைக் கண்டு புகழ்ந்தனர். இப்போதும் அந்த விவசாயி இருக்கலாம் என்று கூறினார்.


அந்த விவசாயி ஒவ்வொருமுறையும் கூறும் பதிலைக் கேட்டுக் கொண்டிருந்த அவருடைய நண்பர், அந்த விவசாயியைப் பார்த்து, உனக்கு நல்லது நடந்தாலும், கெட்டது நடந்தாலும் இருக்கலாம் இருக்கலாம் என்றே சொல்கிறாயே ஏன்? என்று கேட்டார்.


அதற்கு அந்த விவசாயி நல்லது, கெட்டது இரண்டும் நாணயத்தின் இருபக்கங்கள். யாருக்கும் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். சுகம், துக்கம் இவை இரண்டும் ஒன்றுக்கு ஒன்று தொடர்புடையவை என்பதை உணர்ந்தாலே போதுமானது என்றார்.


இன்றைய செய்திகள்


22.12.21


◆கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் மீது இலங்கையில் கிருமி நாசினி பீய்ச்சி அடித்து மனித உரிமை மீறல் நடந்துள்ளதாக தேசிய மீனவர் பேரவை குற்றம் சாட்டியுள்ளது.


◆டிசம்பர் 26-ல் கோவையில் நடைபெறும் விழாவில் கவிஞர் விக்ரமாதித்யனுக்கு விஷ்ணுபுரம் விருது வழங்கி கவுரவிக்கப்பட உள்ளதாக விழாக் குழுவினர் தெரிவித்தனர்.


◆வடகிழக்கு பருவமழை நீடித்ததால் உதகையில் தாமதமாக பொழியும் உறைபனி: கடும் குளிரால் பொதுமக்கள் அவதி; கருகும் தாவரங்கள்.


◆2020-21-ம் நிதியாண்டில் பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை மூலம் மத்திய அரசு 4,55,069 கோடியும்,விற்பனை மற்றும் மதிப்பு கூட்டு வரியாக தமிழகம் 17,063 கோடியும் வசூல் செய்துள்ளது.


◆கரோனா தடுப்பில் இந்தியாவின் பங்களிப்பு அதிகம்: உலக சுகாதார அமைப்பு புகழாரம்.


◆அமெரிக்காவில் கடந்த வாரம் கரோனாவில் பாதிக்கப்பட்டவர்களில் 73 சதவீதம் பேருக்கு ஒமைக்ரான் இருப்பது தெரியவந்துள்ளது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் ஒமைக்ரான் வைரஸ் பரவல் 6 மடங்குஅதிகரித்துள்ளதாக அமெரிக்க நோய்த்தடுப்பு மற்றும் பாதுகாப்பு மையம் தெரிவித்துள்ளது.



◆ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி: அரையிறுதியில் இந்தியா-ஜப்பான் மோதல்.


◆உலக நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டி: இந்திய வீரர் ஸ்ரீஹரி நடராஜ் புதிய சாதனை.


◆உலக பேட்மிண்டன் கூட்டமைப்பின் தடகள ஆணைய உறுப்பினராக பிவி சிந்து நியமிக்கப்பட்டுள்ளார்.


Today's Headlines


🌸 The National Fisheries Council has accused Sri Lanka of spraying disinfectant on the arrested Tamil Nadu fisherman as a violation of human rights. 


 🌸 Lyricist Vikramaditya will be honored with the Vishnupuram Award at a function to be held in Coimbatore on December 26 announced by the function committee


🌸Delayed frost in Udagai due to prolonged northeast monsoon: Public suffering from severe cold also can see the withering of plants 


🌸During the financial year 2020-21, the Central Government collected Rs. 4,55,069 crore from petrol and diesel sales and Rs. 17,063 crore from sales and value-added tax.


 🌸 India's contribution to corona prevention is high: World Health Organization praised India 


 🌸In the United States last week, 73 percent of corona victims were diagnosed with omega.  The U.S. Centers for Disease Control and Prevention says the spread of the omega-3 virus has increased six times in the past week alone.



🌸 Asian Champions Cup Hockey: India-Japan clash in the semi-finals.


 🌸 World Swimming Championship: Indian athlete Srihari Nataraj sets a new record.


 🌸P V Sindhu has been appointed as a member of the Athletics Commission of the World Badminton Federation.

 

 Prepared by


Covai women ICT_போதிமரம்

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Google Meet for the month of November - Student Learning Survey Project - District Wise School Wise Teacher & Student Name List

 November மாதத்திற்கான Google Meet- மாணவர் கற்றல் ஆய்வு திட்டம் - மாவட்ட வாரியாக பள்ளி வாரியாக ஆசிரியர்கள் & மாணவர்கள் பெயர் பட்டியல் Go...