>>> ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வுக்கான விண்ணப்பம் EMIS மூலம் பதிவு செய்யும் முறை...
EMIS-ல் தற்போது ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வுக்கான Option கொடுக்கப்பட்டுள்ளது.
பள்ளிக் கல்வித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள அரசு உயர்நிலை / மேல்நிலை மற்றும் தொடக்க / நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் சார்ந்து 2021-2022க்கான பொது மாறுதல் கலந்தாய்விற்கான மாறுதல் விண்ணப்பங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய கீழ்க்கண்டுள்ளவாறு வழிமுறைகள் தெரிவிக்கப்படுகிறது .
1. அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் தத்தம் மாறுதல் விண்ணப்பங்களை தமது பள்ளியில் உள்ள EMIS இணையதளத்தில் ( Teacher Transfer பதிவேற்றம் செய்து , பள்ளியின் தலைமை ஆசிரியரின் ஒப்பம் பெற்று , அதன் நகல் 02 பிரதிகளை அந்தந்த மாவட்டக் கல்விக் கல்வி அலுவலகத்தில் 08.01.2022- அன்று காலை 10.00 மணிக்குள் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் ஒப்படைப்பு செய்ய வேண்டும்.
2. அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் தத்தம் மாறுதல் விண்ணப்பங்களை தமது பள்ளியில் உள்ள EMIS இணையதளத்தில் ( Teacher Transfer ) பதிவேற்றம் செய்து , பள்ளியின் தலைமை ஆசிரியரின் ஒப்பம் பெற்று . அதன் நகல் 02 பிரதிகளை அந்தந்த வட்டாரக் கல்வி அலுவலகத்தில் 08.01.2022 அன்று காலை 10.00 மணிக்குள் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் ஒப்படைப்பு செய்ய வேண்டும்
3. மேற்காணும் அரசு உயர்நிலை / மேல்நிலை மற்றும் தொடக்க / நடுநிலைப் பள்ளிகளின் ஆசிரியர்களின் பொது மாறுதல் விண்ணப்பங்களின் நகல் 1 - னை தத்தம் மாவட்டக் கல்வி அலுவலகம் வாயிலாக தொகுத்து , அரியலூர் முதன்மைக் கல்வி அலுவலகத்தில் 08.01.2022 அன்று மதியம் 3.00 மணிக்குள் மாவட்டக் கல்வி அலுவலர்கள் ஒப்படைக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்படுகிறது.