ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி, கரூர் மாவட்டம்
கரூர் முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களின் செயல்முறைகள்
ந.க.எண். 36 / தரக்கண்காணிப்பு/ஒ.ப.க / 2022, நாள்:15.03.2022
பொருள்: ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி - கரூர் மாவட்டம் - 2021-22 -மாவட்டக் கல்வி அலுவலர்கள், வட்டாரக் கல்வி அலுவலர்கள், வட்டார வளமைய பொறுப்பு மேற்பார்வையாளர்கள், குறுவளமைய ஆசிரியர் பயிற்றுநர்கள் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் - பள்ளிப் பார்வை - அறிவுரை வழங்குதல் - சார்பு.
பார்வை:
1. முதன்மைக் கல்வி அலுவலரின் ஆலோசனை, நாள். 01.03.2022
2.ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி, மாநிலத் திட்ட இயக்குநர் அவர்களின் கடிதம் ந.க.எண். 3379/ B7/ BRC / CRC / SS /2021 நாள் : 25.01.2022.
3. அரசாணை நிலை எண். 202. பள்ளிக் கல்வித் (அகஇ2) துறை, நாள்: 11.11.2019.
4. ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி, மாநிலத் திட்ட இயக்குநர் அவர்களின் கடிதம் ந.க.எண். 2448/B7/ BRC / CRC / SS / 2019 நாள் : 07.08.2019...
பார்வை (1) மற்றும் (2)இன் படி, கரூர் மாவட்டத்தில் மாவட்ட மற்றும் ஒன்றிய அளவிலான அலுவலர்கள் பார்வையிடுவது சார்பாக கீழ்க்கண்ட அறிவுரைகள் வழங்கப்படுகிறது.
மாவட்ட மற்றும் ஒன்றிய அளவிலான அலுவலர்கள்
மாவட்டக் கல்வி அலுவலர்கள் தினமும் காலை 9.30 மணிக்கு முன்பாக 2 பள்ளிகளை பார்வையிடுதல் வேண்டும்.
வட்டாரக் கல்வி அலுவலர்கள் தினமும் காலை 9:30 மணிக்கு முன்பாக 2 பள்ளிகளை பார்வையிடுதல் வேண்டும்.
வட்டார வளமைய பொறுப்பு மேற்பார்வையாளர்கள் மற்றும் குறுவளமைய ஆசிரியர் பயிற்றுநர்கள் தினமும் 4பள்ளிகள் பார்வையிடுதல் வேண்டும்.
குறுவளமையத்திற்குட்பட்ட பள்ளிகளை குறுவளமைய ஆசிரியர் பயிற்றுநர்கள் பார்வையிடும்போது தொடர்ச்சியாக ஒரே பள்ளிகளை பார்வையிடுதல் கூடாது. அனைத்து பள்ளிகளையும் வாரம் ஒரு முறையாவது கட்டாயம் பார்வையிடுதல் வேண்டும்.
தொடர் பள்ளிப் பார்வையின் போது ஒரே வகுப்பினை தொடர்ந்து பார்வையிடுதலை தவிர்க்க வேண்டும்.
பள்ளிகளை பார்வையிடும் ஆய்வு அலுவலர்கள் அனைவரும் பாடப் பிரிவு முழுவதையும் கவனிக்க வேண்டும்.
பள்ளிப் பார்வைப் பதிவேட்டில் பார்வையிட்ட வகுப்பில் கற்றல் கற்பித்தல் சார்ந்து தவறாது குறிப்புரை எழுதுதல் வேண்டும்.