கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இன்று (02-06-2022) தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இயக்கப் பொறுப்பாளர்கள் கூட்டத்தின் முக்கிய தகவல்கள் (Informations about Today's (02-06-2022) meeting of Elementary Education Director with the Federation Bearers)...

சென்னையில் தொடக்கக்கல்வித்துறை இயக்குநர் முனைவர் திரு.அறிவொளி அவர்கள் தலைமையில் நடைபெறும் தொடக்கக்கல்வித்துறை ஆசிரியர் சங்கங்களின் ஆலோசனை கூட்டத்தில் அனைத்து சங்க நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்...






இன்று (02-06-2022) தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இயக்கப் பொறுப்பாளர்கள் கூட்டத்தின் முக்கிய தகவல்கள் (Informations about Today's (02-06-2022) meeting of Elementary Education Director with the Federation Bearers)...


 1.மாணவர்கள் சேர்க்கையை அதிகப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் ஜூன் 14 அன்று மாணவர் சேர்க்கை முகாம் தமிழ்நாடு முழுவதும் நடைபெற வேண்டும்.


 2. ஆசிரியர்கள் நோட்ஸ் ஆப் லெசன் கொண்டிருக்க வேண்டும்.


 3. எண்ணும் எழுத்தும் பயிற்சி செல்லும் ஆசிரியர்களுக்கு ஈடுசெய் விடுப்பு வழங்க வகை செய்ய ஆலோசிக்கப்படும்.


4. பள்ளிகளின் உட்கட்டமைப்பு மேம்படுத்துவதற்காக அரசு ரூ 1800 கோடி ஒதுக்கி உள்ளது.


5. ஆசிரியர்களின் கோரிக்கைகள் குறித்து ஆகஸ்ட் மாதத்திற்குள் கல்வி அமைச்சர் தலைமையில் கலந்தாலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.


6. ஒற்றை இலக்க மாணவர் பள்ளிகளை இரட்டை இலக்கத்திற்கு சேர்க்கை செய்ய ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகம், பள்ளி மேலாண்மை குழு, பொதுமக்கள் இணைந்து செயல்படுத்த வேண்டும்.


 7. ஓராசிரியர் பள்ளிகள் அனைத்தும் ஈராசிரியர் பள்ளி ஆக்கப்படும். அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன.



கோடை விடுமுறையின்போது பயிற்சி பெறும் ஆசிரியர்களுக்கு சிறப்பு தற்செயல் விடுப்பு வழங்க நடவடிக்கை. இனிவரும் ஆண்டுகளில் கோடை விடுமுறை காலங்களில் பயிற்சி கிடையாது. தொடக்கக்கல்வி இயக்குனர் உறுதி.


பள்ளிக்கல்வி துறை அலுவலக வளாகத்தில் உள்ள கூட்ட அறையில் தொடக்கக்கல்வி ஆசிரியர் சங்கங்களின் பிரதிநிதிகளுடன் ஆலோசனைக் கூட்டம் மதிப்புமிகு தொடக்கக் கல்வி இயக்குனர் மதிப்புமிகு அறிவொளி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பல்வேறு சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு கருத்துகளைத் தெரிவித்தனர். கூட்டத்தில் சங்க பிரதிநிதிகளின் கோரிக்கைகள் அடிப்படையில் பதிலளித்த இயக்குனர் கூறியதாவது, தவிர்க்க இயலாத காரணங்களால் இந்த ஆண்டு கோடை விடுமுறையில் ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதனால் ஏற்படும் சிரமத்தை ஆசிரியர்கள் பொறுத்துக் கொள்ள வேண்டும்.  கோடை விடுமுறைக்கு வெளியூர் சென்றுள்ள ஆசிரியர்கள் அந்தப் பகுதியிலேயே பயிற்சியைப் பெற ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. கோடை விடுமுறையில் பயிற்சி பெறும் ஆசிரியர்களுக்கு அந்த நாட்களுக்கு ஈடாக சிறப்பு விடுப்பு வழங்கவும் முடிவு செய்யப்படும். மேலும் அடுத்தக் கல்வி ஆண்டுகளில் இதுபோல் விடுமுறை நாட்களில் எந்த பயிற்சியும் நடக்காது என்பதை உறுதியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் என்று இயக்குனர் தெரிவித்தார்.  


சிஆர்சி பயிற்சி பெறும் 7 நாட்களும் கல்வியாண்டின் வேலை நாளான 210 நாட்களுக்குள் உட்படுத்தப்படும். 


தேவை பணியிடங்களில் மாறுதல் பெற்ற ஆசிரியர்களின் 108 பேருக்கு மட்டுமே ஊதியம் வழங்கப்படாமல் உள்ளது. ஜூன் 10-ஆம் தேதிக்குள் அவர்களுக்கு ஊதியம் வழங்கப்படும் என்பதை உறுதியுடன் தெரிவிப்பதாக இயக்குனர் கூறினார். 


தொடக்கக் கல்வித் துறைக்கு பாதகத்தை ஏற்படுத்தும் 101 மற்றும் 108 அரசாணைகள் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் அறிவித்தபடி விரைவில் ரத்து செய்யப்படும். 


பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் வகையில் ஜூன் 14-ஆம் தேதி தமிழகம் முழுவதும் மாணவர் சேர்க்கைப் பேரணி நடத்தப்படும். எதிர்காலங்களில் எமிஸ் வலைதளத்தில் ஏற்பட்டுள்ள சிரமங்கள் நீக்கப்படும். இவ்வாறு இயக்குனர் முனைவர் அறிவொளி அவர்கள் தெரிவித்தார். 



இன்று நடைபெற்ற தொடக்கக்கல்வி ஆசிரியர் சங்கங்களுடனான தொடக்க கல்வி இயக்குநர் மற்றும் உதவிஇயக்குநர் அவர்களுடனான சந்திப்பு நல்லமுறையில் நடந்தது.



இயக்குநர் அவர்கள் கீழ்க்கண்ட நடைமுறை மாற்றங்களை செய்வதாக அறிவித்தார்கள்.



 


 1. எண்ணும் எழுத்தும் என்ற புது முறை கற்பித்தலை ஆசிரியர்கள் கற்றல் கற்பித்தலை இலகுவாக்கும் அருமையான திட்டம் ...அதோடு இதை அரசிடம் ஏற்கனவே பரிந்துரைத்து அனுமதி பெற்றுவிட்டதாலும், மாண்புமிகு.முதல்வர் அவர்கள் வரும் 13 ந்தேதி துவக்கி வைக்க இருப்பதாலும், இந்த கல்வியாண்டு பள்ளி துவங்கும் முதல் நாளான 13 ஆம் தேதியே நாம் புது வழி முறைகளை கையாள வேண்டும் என்பதாலும் விடுமுறை நாட்களில் நடத்தப்படும் பயிற்சியை ரத்து செய்ய இயலாத நிலை உள்ளது*என்றும் இப்பயிற்சி நாட்களுக்கானஈடு செய்யும் விடுப்பை வழங்க தான் ஆவன செய்ததாகவும்...இனி வரும் காலங்களில் இது போல் விடுமுறை நாட்களில் பயிற்சி நடத்தப்படாது எனவும் கூறினார்கள்.



2. குறுவள மைய பயிற்சிக்கு செல்லும் 7 நாட்களும், மொத்த பள்ளி வேலை நாட்களில்(210) சேர்த்துக்கொள்ளப்படும் என்று கூறினார்கள்.



3. பள்ளிகளில் பராமரிக்கப்படும் பதிவேடுகள் மாவட்டத்திற்கு மாவட்டம் வேறுபடாமல் ஒரே மாதிரியான குறைந்த எண்ணிக்கை இருக்குமாறு உரிய சுற்றறிக்கை விரைவில் அனுப்பப்படும்


 ஒவ்வொரு மாவட்டத்திலும் பல்வேறு வகையான பதிவேடுகள் பராமரிக்க அதிகாரிகளால் நிர்பந்தப்படுத்தப்படுகிறோம் . இதனால் கற்பித்தல் பணி பாதிக்கிறது என்ற வருத்தத்தை சங்கங்கள் பதிவு செய்தன.இனிமேல் மாநிலம் முழுவதுக்குமான ஒரே மாதிரியான பதிவேடுகள் பராமரிக்க இயக்குனரே ஒரு நெறிமுறை உத்தரவிடுவதாகவும், அதை தாண்டி வேறு எந்த பதிவேடுகளையும் ஆசிரியர்கள் பராமரிக்க தேவையில்லை எனவும் கூறினார்கள்.



4.EMIS பதிவேற்றம் பற்றி அனைவரும் ஆட்சேபித்த வகையில் எதிர்காலத்தில் முற்றிலும் தவிர்க்கப்பட்டு ஆசிரியர்களுக்கு எளிய நடைமுறைகளை அறிமுகப்படுத்துவதாக உறுதியளித்தார்கள்.




5. ஆசிரியர்களை நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வுக்கு வற்புறுத்தாமல் கற்பித்தல் பணிக்கு மட்டுமே உட்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று வரும் காலங்களில் மாணவர்களுக்கான நலத்திட்டங்கள் நேரடியாக பள்ளியிலேயே கிடைக்கச் செய்வதற்கு வழிவகை செய்வதாக உறுதியளித்தார்கள்.




6.இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகள் குறித்த விரிவான விவர அறிக்கை அரசுக்கு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது விரைவில் சரி செய்யப்படும்.



7.சில மாவட்டங்களில் அடிப்படை ஊதியம் 65000த்தை கடந்த நிலையில் உள்ள இடைநிலை ஆசிரியர்களுக்கு இரண்டு ஆண்டிற்கு ஒரு முறை மட்டுமே ஊதிய உயர்வு வழங்கப்படும் முறையை ரத்து செய்து ஒவ்வொரு ஆண்டும் ஊதிய உயர்வு கிடைக்க வழிவகை செய்வதாக கூறினார்கள்.



9.தமிழகத்தில் மொத்தம் 669 பள்ளிகளில் ஓரிலக்க எண்ணிக்கையில் மாணவர்கள் உள்ளதால் அதனை ஈரிலக்க எண்ணிக்கையில் தரம் உயர்த்தி ஆசிரியர்கள் நிரவலை தடுக்க விளையும்படியும், இந்த வருடம் மாணவர்கள் சேர்க்கையை அதிகபடுத்த எதிர்வரும் 14.06.22 மாநிலம் முழுவதும் smc, pta மற்றும் உள்ளூர் அமைப்புகளுடன் இணைந்து மாணவர் சேர்க்கைப் பேரணி நடத்த வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்கள்.



10.ஆசிரியர் தேவை பணியிடத்திற்கு மாறுதல் செய்யப்பட்டு ஊதியம் வராத ஆசிரியர்களுக்கு பத்தே நாட்களில் ஊதியம் கிடைக்க விரைந்து நடவடிக்கை எடுப்பதாக கூறினார்கள்.



11. உடனடியாக 7500 நடுநிலைப்பள்ளிகளுக்கு கணினி ஆய்வகம் வழங்கப்படும்.இதனைத்தொடர்ந்து படிப்படியாக எதிர்காலத்தில் தொடக்க பள்ளிகளுக்கும் மடி கணினி வழங்க திட்டமிட்டுள்ளதாக கூறினார்கள்.



மொத்தத்தில் இயக்குனர் அவர்கள் தாயுள்ளத்தோடு பொறுமையாக அனைத்து சங்கங்களின் பொறுப்பாளர்களின் கோரிக்கைகளுக்கும், ஆதங்கங்களுக்கும், கொந்தளிப்புக்கும் மதிப்பளித்து பொறுமையுடன் விளக்கம் அளித்தார்கள்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

District Level Thirukkural Quiz Competition Question Paper and Answers held on 21-12-2024

   குமரிமுனை அய்யன் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா ஆண்டு - அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான திருக்குறள் வினாடி வினா போட்டிகள் கேள்விகள...