கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Meeting லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Meeting லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

பள்ளிக்கல்வி இயக்குநர் தலைமையில் தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பில் உள்ள சங்க பொறுப்பாளர்களுடன் பேச்சுவார்த்தை -25.07.2023 அன்று நடைபெறுதல் - இயக்குநரின் கடிதம் (Discussion with the Federation Bearers of Tamil Nadu Joint Action Council of Teachers Federations headed by the Director of School Education - To be held on 25.07.2023 - Letter from the Director)...



>>> பள்ளிக்கல்வி இயக்குநர் தலைமையில் தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பில் உள்ள சங்க பொறுப்பாளர்களுடன் பேச்சுவார்த்தை -25.07.2023 அன்று நடைபெறுதல் - இயக்குநரின் கடிதம் (Discussion with the Federation Bearers of Tamil Nadu Joint Action Council of Teachers Federations headed by the Director of School Education - To be held on 25.07.2023 - Letter from the Director)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


அக்டோபர் 15, 2022 அன்று நடைபெறவுள்ள பி.ஆர்.சி. கூட்டத்திற்கான ஏதுவாளர்களுக்கான நேரலை காணொளி (Facilitator Orientation for the upcoming BRC meet happening on 15th October 2022)...



>>> அக்டோபர் 15, 2022 அன்று நடைபெறவுள்ள பி.ஆர்.சி. கூட்டத்திற்கான ஏதுவாளர்களுக்கான நேரலை காணொளி (Facilitator Orientation for the upcoming BRC meet happening on 15th October 2022)...


❌Date: 11th October 2022, Time: 11 am❌


Link to join:  👉🏼https://youtu.be/reOf2XCnhTc


Nominated Facilitators and BRTEs are requested to attend the meet without fail


*Note*

Prior to this meet, please watch all the videos available in this link:_ 

👉🏼https://linktr.ee/tncrc4






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


பள்ளி மேலாண்மைக் குழு - ஆகஸ்ட் 2022 (SMC August Month Meeting Minutes)...

 



>>> பள்ளி மேலாண்மைக் குழு - ஆகஸ்ட் 2022 (SMC August Month Meeting Minutes)...






பள்ளிக் கல்வித் துறை சார்பாக வெளியிடப்பட்டுள்ள மாதிரி பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் (Model SMC Meeting)...



>>> பள்ளிக் கல்வித் துறை சார்பாக வெளியிடப்பட்டுள்ள மாதிரி பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் (Model SMC Meeting)...






TNSED (SMC) Parents Mobile App - பதிவிறக்கம் செய்து பயன்படுத்துவது எப்படி? (Download Link and Usage Method)...

 


TNSED (SMC) Parents Mobile App - பதிவிறக்கம் செய்து பயன்படுத்துவது எப்படி?


SMC- Mobile App- ஐ download / update செய்ய
👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼


SMC - உறுப்பினர்களின் வருகை பதிவு செய்ய புதிய செயலி

TNSED- PARENTS - MOBILE APP- Direct Link
கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து புதிய App- ஐ டவுன்லோடு செய்து கொள்ளுங்கள்...
👇👇👇👇👇👇👇

Click to download TNSED- Parents App...

https://play.google.com/store/apps/details?id=in.gov.tnschools.parent




SMC கூட்டம் - 29.07.2022

🔊SMC கூட்டத்தில் பங்குபெறும் உறுப்பினர்களின் வருகையை TNSED parent App-ல் பதிவு செய்வதற்கான வழிமுறை...


🔊USER NAME:
▪️HM or SMC தலைவர் Mobile Number


🔒PASSWORD:

▪️Smc@Last 4 digit of HM or SMC தலைவர் Mobile number

S only Capital letter




Now

TN EMIS Parent app

Updation is available 


Update it 

All SMC members can 

Login this app.


*Username: Registered HM mobile number 


*Password: Smc@last four digits of the mobile number.


*App Link


https://play.google.com/store/apps/details?id=in.gov.tnschools.parent






இன்று (02-06-2022) தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இயக்கப் பொறுப்பாளர்கள் கூட்டத்தின் முக்கிய தகவல்கள் (Informations about Today's (02-06-2022) meeting of Elementary Education Director with the Federation Bearers)...

சென்னையில் தொடக்கக்கல்வித்துறை இயக்குநர் முனைவர் திரு.அறிவொளி அவர்கள் தலைமையில் நடைபெறும் தொடக்கக்கல்வித்துறை ஆசிரியர் சங்கங்களின் ஆலோசனை கூட்டத்தில் அனைத்து சங்க நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்...






இன்று (02-06-2022) தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இயக்கப் பொறுப்பாளர்கள் கூட்டத்தின் முக்கிய தகவல்கள் (Informations about Today's (02-06-2022) meeting of Elementary Education Director with the Federation Bearers)...


 1.மாணவர்கள் சேர்க்கையை அதிகப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் ஜூன் 14 அன்று மாணவர் சேர்க்கை முகாம் தமிழ்நாடு முழுவதும் நடைபெற வேண்டும்.


 2. ஆசிரியர்கள் நோட்ஸ் ஆப் லெசன் கொண்டிருக்க வேண்டும்.


 3. எண்ணும் எழுத்தும் பயிற்சி செல்லும் ஆசிரியர்களுக்கு ஈடுசெய் விடுப்பு வழங்க வகை செய்ய ஆலோசிக்கப்படும்.


4. பள்ளிகளின் உட்கட்டமைப்பு மேம்படுத்துவதற்காக அரசு ரூ 1800 கோடி ஒதுக்கி உள்ளது.


5. ஆசிரியர்களின் கோரிக்கைகள் குறித்து ஆகஸ்ட் மாதத்திற்குள் கல்வி அமைச்சர் தலைமையில் கலந்தாலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.


6. ஒற்றை இலக்க மாணவர் பள்ளிகளை இரட்டை இலக்கத்திற்கு சேர்க்கை செய்ய ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகம், பள்ளி மேலாண்மை குழு, பொதுமக்கள் இணைந்து செயல்படுத்த வேண்டும்.


 7. ஓராசிரியர் பள்ளிகள் அனைத்தும் ஈராசிரியர் பள்ளி ஆக்கப்படும். அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன.



கோடை விடுமுறையின்போது பயிற்சி பெறும் ஆசிரியர்களுக்கு சிறப்பு தற்செயல் விடுப்பு வழங்க நடவடிக்கை. இனிவரும் ஆண்டுகளில் கோடை விடுமுறை காலங்களில் பயிற்சி கிடையாது. தொடக்கக்கல்வி இயக்குனர் உறுதி.


பள்ளிக்கல்வி துறை அலுவலக வளாகத்தில் உள்ள கூட்ட அறையில் தொடக்கக்கல்வி ஆசிரியர் சங்கங்களின் பிரதிநிதிகளுடன் ஆலோசனைக் கூட்டம் மதிப்புமிகு தொடக்கக் கல்வி இயக்குனர் மதிப்புமிகு அறிவொளி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பல்வேறு சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு கருத்துகளைத் தெரிவித்தனர். கூட்டத்தில் சங்க பிரதிநிதிகளின் கோரிக்கைகள் அடிப்படையில் பதிலளித்த இயக்குனர் கூறியதாவது, தவிர்க்க இயலாத காரணங்களால் இந்த ஆண்டு கோடை விடுமுறையில் ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதனால் ஏற்படும் சிரமத்தை ஆசிரியர்கள் பொறுத்துக் கொள்ள வேண்டும்.  கோடை விடுமுறைக்கு வெளியூர் சென்றுள்ள ஆசிரியர்கள் அந்தப் பகுதியிலேயே பயிற்சியைப் பெற ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. கோடை விடுமுறையில் பயிற்சி பெறும் ஆசிரியர்களுக்கு அந்த நாட்களுக்கு ஈடாக சிறப்பு விடுப்பு வழங்கவும் முடிவு செய்யப்படும். மேலும் அடுத்தக் கல்வி ஆண்டுகளில் இதுபோல் விடுமுறை நாட்களில் எந்த பயிற்சியும் நடக்காது என்பதை உறுதியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் என்று இயக்குனர் தெரிவித்தார்.  


சிஆர்சி பயிற்சி பெறும் 7 நாட்களும் கல்வியாண்டின் வேலை நாளான 210 நாட்களுக்குள் உட்படுத்தப்படும். 


தேவை பணியிடங்களில் மாறுதல் பெற்ற ஆசிரியர்களின் 108 பேருக்கு மட்டுமே ஊதியம் வழங்கப்படாமல் உள்ளது. ஜூன் 10-ஆம் தேதிக்குள் அவர்களுக்கு ஊதியம் வழங்கப்படும் என்பதை உறுதியுடன் தெரிவிப்பதாக இயக்குனர் கூறினார். 


தொடக்கக் கல்வித் துறைக்கு பாதகத்தை ஏற்படுத்தும் 101 மற்றும் 108 அரசாணைகள் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் அறிவித்தபடி விரைவில் ரத்து செய்யப்படும். 


பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் வகையில் ஜூன் 14-ஆம் தேதி தமிழகம் முழுவதும் மாணவர் சேர்க்கைப் பேரணி நடத்தப்படும். எதிர்காலங்களில் எமிஸ் வலைதளத்தில் ஏற்பட்டுள்ள சிரமங்கள் நீக்கப்படும். இவ்வாறு இயக்குனர் முனைவர் அறிவொளி அவர்கள் தெரிவித்தார். 



இன்று நடைபெற்ற தொடக்கக்கல்வி ஆசிரியர் சங்கங்களுடனான தொடக்க கல்வி இயக்குநர் மற்றும் உதவிஇயக்குநர் அவர்களுடனான சந்திப்பு நல்லமுறையில் நடந்தது.



இயக்குநர் அவர்கள் கீழ்க்கண்ட நடைமுறை மாற்றங்களை செய்வதாக அறிவித்தார்கள்.



 


 1. எண்ணும் எழுத்தும் என்ற புது முறை கற்பித்தலை ஆசிரியர்கள் கற்றல் கற்பித்தலை இலகுவாக்கும் அருமையான திட்டம் ...அதோடு இதை அரசிடம் ஏற்கனவே பரிந்துரைத்து அனுமதி பெற்றுவிட்டதாலும், மாண்புமிகு.முதல்வர் அவர்கள் வரும் 13 ந்தேதி துவக்கி வைக்க இருப்பதாலும், இந்த கல்வியாண்டு பள்ளி துவங்கும் முதல் நாளான 13 ஆம் தேதியே நாம் புது வழி முறைகளை கையாள வேண்டும் என்பதாலும் விடுமுறை நாட்களில் நடத்தப்படும் பயிற்சியை ரத்து செய்ய இயலாத நிலை உள்ளது*என்றும் இப்பயிற்சி நாட்களுக்கானஈடு செய்யும் விடுப்பை வழங்க தான் ஆவன செய்ததாகவும்...இனி வரும் காலங்களில் இது போல் விடுமுறை நாட்களில் பயிற்சி நடத்தப்படாது எனவும் கூறினார்கள்.



2. குறுவள மைய பயிற்சிக்கு செல்லும் 7 நாட்களும், மொத்த பள்ளி வேலை நாட்களில்(210) சேர்த்துக்கொள்ளப்படும் என்று கூறினார்கள்.



3. பள்ளிகளில் பராமரிக்கப்படும் பதிவேடுகள் மாவட்டத்திற்கு மாவட்டம் வேறுபடாமல் ஒரே மாதிரியான குறைந்த எண்ணிக்கை இருக்குமாறு உரிய சுற்றறிக்கை விரைவில் அனுப்பப்படும்


 ஒவ்வொரு மாவட்டத்திலும் பல்வேறு வகையான பதிவேடுகள் பராமரிக்க அதிகாரிகளால் நிர்பந்தப்படுத்தப்படுகிறோம் . இதனால் கற்பித்தல் பணி பாதிக்கிறது என்ற வருத்தத்தை சங்கங்கள் பதிவு செய்தன.இனிமேல் மாநிலம் முழுவதுக்குமான ஒரே மாதிரியான பதிவேடுகள் பராமரிக்க இயக்குனரே ஒரு நெறிமுறை உத்தரவிடுவதாகவும், அதை தாண்டி வேறு எந்த பதிவேடுகளையும் ஆசிரியர்கள் பராமரிக்க தேவையில்லை எனவும் கூறினார்கள்.



4.EMIS பதிவேற்றம் பற்றி அனைவரும் ஆட்சேபித்த வகையில் எதிர்காலத்தில் முற்றிலும் தவிர்க்கப்பட்டு ஆசிரியர்களுக்கு எளிய நடைமுறைகளை அறிமுகப்படுத்துவதாக உறுதியளித்தார்கள்.




5. ஆசிரியர்களை நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வுக்கு வற்புறுத்தாமல் கற்பித்தல் பணிக்கு மட்டுமே உட்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று வரும் காலங்களில் மாணவர்களுக்கான நலத்திட்டங்கள் நேரடியாக பள்ளியிலேயே கிடைக்கச் செய்வதற்கு வழிவகை செய்வதாக உறுதியளித்தார்கள்.




6.இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகள் குறித்த விரிவான விவர அறிக்கை அரசுக்கு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது விரைவில் சரி செய்யப்படும்.



7.சில மாவட்டங்களில் அடிப்படை ஊதியம் 65000த்தை கடந்த நிலையில் உள்ள இடைநிலை ஆசிரியர்களுக்கு இரண்டு ஆண்டிற்கு ஒரு முறை மட்டுமே ஊதிய உயர்வு வழங்கப்படும் முறையை ரத்து செய்து ஒவ்வொரு ஆண்டும் ஊதிய உயர்வு கிடைக்க வழிவகை செய்வதாக கூறினார்கள்.



9.தமிழகத்தில் மொத்தம் 669 பள்ளிகளில் ஓரிலக்க எண்ணிக்கையில் மாணவர்கள் உள்ளதால் அதனை ஈரிலக்க எண்ணிக்கையில் தரம் உயர்த்தி ஆசிரியர்கள் நிரவலை தடுக்க விளையும்படியும், இந்த வருடம் மாணவர்கள் சேர்க்கையை அதிகபடுத்த எதிர்வரும் 14.06.22 மாநிலம் முழுவதும் smc, pta மற்றும் உள்ளூர் அமைப்புகளுடன் இணைந்து மாணவர் சேர்க்கைப் பேரணி நடத்த வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்கள்.



10.ஆசிரியர் தேவை பணியிடத்திற்கு மாறுதல் செய்யப்பட்டு ஊதியம் வராத ஆசிரியர்களுக்கு பத்தே நாட்களில் ஊதியம் கிடைக்க விரைந்து நடவடிக்கை எடுப்பதாக கூறினார்கள்.



11. உடனடியாக 7500 நடுநிலைப்பள்ளிகளுக்கு கணினி ஆய்வகம் வழங்கப்படும்.இதனைத்தொடர்ந்து படிப்படியாக எதிர்காலத்தில் தொடக்க பள்ளிகளுக்கும் மடி கணினி வழங்க திட்டமிட்டுள்ளதாக கூறினார்கள்.



மொத்தத்தில் இயக்குனர் அவர்கள் தாயுள்ளத்தோடு பொறுமையாக அனைத்து சங்கங்களின் பொறுப்பாளர்களின் கோரிக்கைகளுக்கும், ஆதங்கங்களுக்கும், கொந்தளிப்புக்கும் மதிப்பளித்து பொறுமையுடன் விளக்கம் அளித்தார்கள்.

தொடக்கக்கல்வி இயக்கக சங்கங்கள், இடைநிலை ஆசிரியர் சங்கப் பொறுப்பாளர்கள் கலந்தாலோசனைக்கூட்டம் தொடக்கக்கல்வி இயக்குனர் தலைமையில் வரும் 02-06-2022 அன்று காலை 10 மணி அளவில் DPI வளாகம் சென்னையில் நடைபெறுகிறது (Elementary Education Teachers Associations & Secondary Grade Teachers Association Office bearers Consultative Meeting will be held on 02-06-2022 at 10 am in Chennai DPI Campus, under the chairmanship of the Director of Elementary Education) - தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 7494/ இ1/ 2022, நாள்: 26-05-2022...




>>>  தொடக்கக்கல்வி இயக்கக சங்கங்கள், இடைநிலை ஆசிரியர் சங்கப் பொறுப்பாளர்கள் கலந்தாலோசனைக்கூட்டம் தொடக்கக்கல்வி இயக்குனர் தலைமையில் வரும் 02-06-2022 அன்று காலை 10 மணி அளவில் DPI வளாகம் சென்னையில்  நடைபெறுகிறது (Elementary Education Teachers Associations & Secondary Grade Teachers Association Office bearers Consultative Meeting will be held on 02-06-2022 at 10 am in Chennai DPI Campus, under the chairmanship of the Director of Elementary Education) - தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 7494/ இ1/ 2022, நாள்: 26-05-2022...


பள்ளிக்கல்வி - மண்டல வாரியான ஆய்வுக்கூட்டம் - பள்ளிக்கல்வித் துறையின் வளர்ச்சி மற்றும் மாணவர்களின் நலன் சார்ந்த திட்டங்களின் செயல்பாடுகளை ஆய்வுக்கு உட்படுத்துதல் - பள்ளிக்கல்வி ஆணையரின் கடிதம் (School Education - Zone wise Review Meeting - Reviewing the Development of the School Education Department and the Activities of Student Welfare Programs - Letter from the Commissioner of School Education) ந.க.எண்: 59699/பிடி1/இ2/2021, நாள்: 25-11-2021...



 பள்ளிக்கல்வி - மண்டல வாரியான ஆய்வுக்கூட்டம் - பள்ளிக்கல்வித் துறையின் வளர்ச்சி மற்றும் மாணவர்களின் நலன் சார்ந்த திட்டங்களின் செயல்பாடுகளை ஆய்வுக்கு உட்படுத்துதல் - பள்ளிக்கல்வி ஆணையரின் கடிதம் (School Education - Zone wise Review Meeting - Reviewing the Development of the School Education Department and the Activities of Student Welfare Programs - Letter from the Commissioner of School Education) ந.க.எண்: 59699/பிடி1/இ2/2021, நாள்: 25-11-2021...


>>> பள்ளிக்கல்வி ஆணையரின் கடிதம் ந.க.எண்: 59699/பிடி1/இ2/2021, நாள்: 25-11-2021...


>>> School Team Visit - தமிழ்நாடு முழுவதும் பள்ளிகளை உயர் அலுவலர்கள் குழு ஆய்வு செய்வதற்கான உத்தேச அட்டவணை...


>>> தொடக்கக்கல்வித்துறை - பள்ளி விவரப் படிவம் (DEE - School Profile Format)...


தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்கள் காணொளி வாயிலாக, நடத்திய கூட்டத்தில் வழங்கிய அறிவுரைகள்...



💥 பள்ளி நிர்வாக எல்லைக்கு உட்பட்ட குடியிருப்புகளில் உள்ள மாணவர்கள் அனைவரையும் பள்ளியில் சேர்ப்பதற்கு அனைத்து ஆசிரியர்களும் முயற்சி எடுக்க வேண்டும்.


💥 பள்ளியில் சேர்க்கப்பட்ட அனைத்து மாணவர்களையும் EMIS  இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.


💥 கல்வி தொலைக்காட்சி ஒளிபரப்பு அட்டவணையை அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் கொண்டு சேர்க்க வேண்டும் .


💥 கல்வி தொலைக்காட்சி ஒளிபரப்பினை அனைத்து மாணவர்களும் பார்ப்பதற்கு ,  அனைத்து ஆசிரியர்களும் நடவடிக்கை மேற்கொண்டு, கல்வி தொலைக்காட்சி ஒளிபரப்பு குறித்து அனைத்து மாணவர்களுடனும் ஆசிரியர்கள் தினசரி உரையாட வேண்டும்.  


💥 உரையாடிய  விவரத்தினை தினசரி குறிப்பேடுகளில் ஆசிரியர்கள் பதிவு செய்துகொள்ள வேண்டும்.


💥 கல்வி ஒளிபரப்பு குறித்து மாணவர்களுக்கு சிறுசிறு ஒப்படைவு, சிறுசிறு பயிற்சிகளை வழங்கி அதனை ஆசிரியர்கள் இணைய வழியாகவோ அல்லது சமூக இடைவெளியை கடைப்பிடித்து பயிற்சி தாள்களை சரிபார்த்து திருத்தி ,மீள்பயிற்சியும், வலுவூட்டுதல் பயிற்சியும்  வழங்கிட வேண்டும். 


💥 கற்பித்தல் மற்றும் கற்றல் செயல்பாடுகள் எந்தவிதமான இடையூறும் இன்றி பேரிடர் காலத்தில் அனைத்து மாணவர்களுக்கும் கொண்டு சேர்ப்பதற்கு, ஆசிரியர்கள் அனைவரும் முன் வரவேண்டும்.


💥 அரசின் அறிவிப்புகளை முழுமையாக செயல்படுத்த வேண்டும், 


 💥 மேற்கண்டவாறு  இயக்குனர் அவர்களுடைய அறிவுரைகளை, சுற்றறிக்கை பதிவேட்டில் பதிவு செய்து அனைத்து ஆசிரியரிடமும்  கையொப்பம் பெற்று பராமரிக்க வேண்டும் 


 💥 மேலும், இயக்குனர் அவர்களுடைய  அறிவுரையை முழுமையாக தங்கள் பள்ளியில் கடைப்பிடிப்பதற்கு, நடைமுறைப் படுத்துவதற்கு அனைத்து ஆசிரியர்களும், உடனே தொடர் நடவடிக்கைகள்  மேற்கொள்ள வேண்டுமென மீண்டும் கேட்டுக் கொள்கிறோம்.

19.01.2021 அன்று, வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கு நடைபெற இருந்த ஆய்வுக் கூட்டம் காணொலிக் காட்சி(Video Conference) வாயிலாக 21.01.2021 அன்று நடைபெறும்...

 19.01.2021அன்று, அந்தந்த மாவட்ட NIC centre-ல் வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கான National Informatics Centre (NIC) மூலம் காணொலிக் காட்சி(Video Conference) வாயிலாக நடைபெற இருந்த ஆய்வுக் கூட்டம் 21.01.2021 அன்று முற்பகல் 10.30 மணி முதல் பிற்பகல் 01.30 மணி வரை நடைபெறும்.



தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள், சென்னை 6

ந.க.எண்.010390/ஜெ2/2020, நாள்.12 .01.2021


பொருள்

கல்வி - தொடக்கக் கல்வி அனைத்து வட்டாரக் அலுவலர்களுடன் 19.01.2021 அன்று காணொலி காட்சி வாயிலாக (Video Conference) நடைபெற இருந்த கூட்டம் 21.01.2021அன்று நடத்துவது - சார்ந்து.

பார்வை

        1 1முதல் 13 முடிய கூட்டப்பொருள் விவரங்கள்.

        2.  தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள், சென்னை-6,ந.க.எண்.010390 /ஜெ2/2020, நாள்.05.012021

பார்வை 2ல் காணும் இவ்வியக்கக செயல்முறைகளின்படி, 19.012021அன்று, அந்தந்த மாவட்ட NIC centre-ல் வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கான National Informatics Centre (NIC) மூலம் காணொலிக் காட்சி(Video Conference) வாயிலாக நடைபெற இருந்த ஆய்வுக் கூட்டம் 21.01.2021 அன்று முற்பகல் 10.30 மணி முதல் பிற்பகல் 01.30 மணி வரை நடைபெறும் என தெரிவிக்கப்படுகிறது.

மேலும், ஆய்வுக் கூட்டம் தொடர்பாக, ஏற்கனவே வழங்கப்பட்ட அறிவுரைகளின்படி உரிய விவரங்களுடன் வட்டாரக் கல்வி அலுவலர்கள் தயார் நிலையில் வருகை புரிய வேண்டும் எனவும், கூட்டத்தில் பங்கேற்கும் அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்களும் போதுமான சமூக இடைவெளியுடன் முகக் கவசம் அணிந்து கலந்து கொள்ள அறிவுறுத்துமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறது.

மேலும், கூட்டப்பொருள் சார்ந்த தொகுப்பு அறிக்கையினை முன்னதாக 18.012021 அன்று பிற்பகல் 03.00 மணிக்குள் இவ்வியக்கக deesections@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்.

இணைப்பு கூட்டப்பொருள் 1 முதல் 13 முடியவிவரங்கள்.

தொடக்கக்கல்வி இயக்குநர் காக..


பெறுநர்

அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள்.

அனைத்து மாவட்டக்கல்வி அலுவலர்கள்

அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்கள் முதன்மைக் கல்வி அலுவலர்கள் வழியாக


நகல்

1 அரசு முதன்மைச் செயலாளர், பள்ளிக் கல்வித் துறை, தலைமைச் செயலகம்

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Teachers are important for the development of the country - nuclear scientist pride

 ஆசிரியர்கள்தான் நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியமானவர்கள் - அணு விஞ்ஞானி பெருமிதம் Teachers are important for the development of the country -...