கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 22.06.2022 - School Morning Prayer Activities...



 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 22.06.2022 - School Morning Prayer Activities...

 திருக்குறள் :


பால்:பொருட்பால்


இயல்:குடியியல்


அதிகாரம்: குடிமை


குறள் : 953


நகைஈகை இன்சொல் இகழாமை நான்கும்

வகையென்ப வாய்மைக் குடிக்கு.


பொருள்:

முகமலர்ச்சி, ஈகைக்குணம், இனியசொல், பிறரை இகழாத பண்பாடு ஆகிய நான்கு சிறப்புகளும் உள்ளவர்களையே வாய்மையுள்ள குடிமக்கள் என்று வகைப்படுத்த முடியும்


பழமொழி :

Spoken words can never be taken back


தீயில் இட்ட நெய் திரும்ப வருமா?


இரண்டொழுக்க பண்புகள் :


1. பெற்றோர் ஆசிரியர்கள் நான் நலம் பெறவே ஆலோசனை கூறுவர். கண்டிப்பாக அந்த அறிவுரைகள் படி நடக்க முயற்சி செய்வேன். 


2. நல்ல பண்புகள் கடை பிடித்து நல்ல செயல்கள் நாள் தோறும் செய்வேன்


பொன்மொழி :


பூமியை விட்டுச் செல்லும் முன் என்னிடம் பாவமே இல்லை' என்னும் உயர்நிலையை அடைய முயற்சி செய்!


பொது அறிவு :


1.வெள்ளைத் தங்கம் எனக்கூறப்படுவது எது? 


பருத்தி. 


 2. வெறிநாய்க்கடிக்கு சிகிச்சை கண்டுபிடித்தவர் யார்? 


லூயி பாஸ்டர்.


English words & meanings :


Fletcher - a person who makes and sells arrows. Noun. அம்புகள் செய்து விற்பவர். பெயர்ச்சொல் 


ஆரோக்ய வாழ்வு :


வாழைப்பூவை வாரத்திற்கு இரண்டு முறை சாப்பிட்டு வந்தால் வயிற்றுப் புண்கள் ஆறும். செரிமானத்தன்மை அதிகரிக்கும்.


NMMS Q - 8


rain' என்பது 'water' எனவும், 'water என்பது 'sea' எனவும், 'sea' என்பது 'cloud' எனவும் அழைக்கப்பட்டால் தாகம் எடுக்கும்போது அருந்துவது எது? 


விடை: sea



நீதிக்கதை



முயற்சி வேண்டும்


ஒருநாள் தன் தோட்டத்தில் விளைந்த காய்கறிகளைப் பறித்து மூட்டைக் கட்டி மாட்டு வண்டியில் ஏற்றிக் கொண்டு அவற்றை விற்க நகரத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தான். அப்போது, சாலையின் ஒரு திருப்பத்தில் வண்டியின் ஒரு சக்கரம் பள்ளத்தில் போய் விழ, வண்டி சாய்ந்து விட்டது. கடவுளே! இது என்ன சோதனை? எனக்கு உதவி செய்! என்று அவன் மனமுருக வேண்டினான். கடவுள் உதவிக்கு வரவில்லை. இரண்டாம் முறை, மூன்றாம் முறையென பலமுறை கடவுளை உதவிக்கு அழைத்தும், அவர் வரவில்லை. வேறு யாரும் உதவிக்கு வரவில்லை. 


கடைசியில், பள்ளத்தில் விழுந்திருந்த சக்கரத்தைத் தானே தூக்கி சாலையில் நகர்த்தி வைக்க முயற்சி செய்தான். என்ன ஆச்சரியம்? தனியாக தன்னால் தூக்க முடியாது என்று அவன் நினைத்திருக்க, எளிதாக சக்கரம் பள்ளத்திலிருந்து எழுந்து விட்டது. அப்போதுதான், அவன் தன் பின்னால் நின்று கொண்டிருந்த ஒரு வழிப்போக்கன் சக்கரத்தைத் தூக்குவதில் உதவி செய்தது தெரிய வந்தது. அவனை வணங்கியவன் மிகவும் நன்றி ஐயா! கடவுள் செய்யாத உதவியை நீ செய்து விட்டாய்! என்றான். 


கடவுளே! உதவி செய்! என்று சொல்லியபடி கையைக் கட்டிக் கொண்டு உட்கார்ந்திருந்தால், கடவுள் எப்படி உதவி செய்வார்? நீயே முயற்சி செய்தால்தான், கடவுள் உனக்கு உதவி செய்வார். அதற்கு நீதான் அவருக்கு, ஒரு வாய்ப்பு தர வேண்டும்! என்று கூறிவிட்டு அந்த ஆள் தன் வழியே நடந்தான்.


இன்றைய செய்திகள்


22.06.22


◆தமிழகத்தில் தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்தக் கோரிய வழக்கில், "தற்போதைய கல்வி முறைக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் உள்ள தேசிய கல்விக் கொள்கையால் இடைநிற்றல் அதிகரிக்கும்" என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது.


◆மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதி திட்டத்தின் கீழ் தகுதியான மாணவிகளின் விவரங்களை சமர்ப்பிக்க கல்லூரிகளுக்கு உயர்கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.


◆"ஓய்வுபெற்ற காவல்துறை உயர் அதிகாரிகள், நீதிபதிகளின் வீடுகளில் உள்ள ஆர்டர்லிகளை உடனடியாக திரும்பப்பெற வேண்டும்" என்று காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.


◆தமிழகத்தில் 15 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


◆‘அக்னி பாதை’ திட்டத்தில் சேர அடுத்த மாதம் முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று இந்திய ராணுவம் அறிவித்துள்ளது.


◆வெள்ளத்தில் தவிக்கும் அசாம்: இதுவரை 73 பேர் உயிரிழப்பு; 43 லட்சம் பேர் பாதிப்பு.


◆சீனாவில் 60 ஆண்டுகளில் இல்லாத கனமழை: மக்கள் இயல்பு வாழ்கை பாதிப்பு.


◆இந்தியா, எத்தியோபியா, துருக்கி, வியட்நாம் ஆகிய நாடுகளுக்குச் செல்லும் குடிமக்களுக்கான கரோனா கட்டுப்பாடுகளை சவுதி அரேபியா நீக்கியுள்ளது.


◆திருவாரூரில் நடந்த மாநில அளவிலான கைப்பந்து போட்டியில் பெண்கள் பிரிவில் ஈரோடு அணி முதலிடத்தை பிடித்தது.


◆டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட் விற்பனை தொடக்கம்.


◆105 வயதில் 100 மீட்டர் தடகள போட்டியில் கலந்து கொண்டு அசத்திய மூதாட்டி ராம்பாய்.


Today's Headlines


* The Government of Tamil Nadu has filed a petition in the Chennai High Court against the  case which is asking the implementation of the National Education Policy in Tamil Nadu. As per the petition TN government says"the National Education Policy which is disturbing the present education system will increase the dropouts".


* The Department of Higher Education has directed the colleges to submit the details of the eligible students under the Muvalur Ramamirtham Ammayar Higher Education Guarantee Scheme.


* The Chennai High Court has directed the police to "immediately withdraw the orderlies in the houses of retired senior police officers and judges".


 * The Chennai Meteorological Department has forecast heavy rains in 15 districts of Tamil Nadu.


 * The Indian Army has announced that you can apply online from next month to join the ‘Agni Path’ scheme.


* Assam shaken by floods: 73 dead so far;  43 lakh people affected.


* Heavy rains in China a record break in 60 years: affected the normal life of people.


* Saudi Arabia has lifted corona restrictions on citizens traveling to India, Ethiopia, Turkey and Vietnam.


* Erode team topped the women's division in the state level volleyball tournament held at Thiruvarur.


*  Ticket sales for TNPL cricket match started


* At the age of 105 an old lady named Ramabai became an awesome old woman by competing in the 100 meters.

 


>>> கல்வி அஞ்சல் Whatsapp குழுவில் இணைய...



>>> கல்வி அஞ்சல் Telegram குழுவில் இணைய...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Live Webinar Link for Head Masters and English Teachers

தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆங்கில ஆசிரியர்களுக்கான Live Webinar Link  (THOOTHUKKUDI, VILLUPURAM, SALEM, DHARMAPURI, ERODE, TANJAVUR Dt only) ...