கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

எண்ணும் எழுத்தும் திட்டம் : ஆசிரியர்களின் பணிகள் (Ennum Ezhuthum Scheme : Teachers' Duties)...

 


எண்ணும் எழுத்தும் திட்டம் : ஆசிரியர்களின் பணிகள் (Ennum Ezhuthum Scheme : Teachers' Duties)...


1) அனைத்து அரசு மற்றும் அரசுதவி பெறும் பள்ளிகள் இணைப்பு 1-இல் அளிக்கப்பட்ட அட்டவணையைப் பயன்படுத்த வேண்டும். 


2) ஆசிரியர் கையேட்டில் அளிக்கப்பட்டவாறும் மற்றும் பயிற்சியில் பெற்றவாறும் நிலைவாரியான கற்பித்தல் அணுகுமுறையை ஆசிரியர்கள் பின்பற்ற வேண்டும். 


3) 2 மற்றும் 3 வகுப்புகளில் 04.07.2022முதல் 08.07.2022வரை குழந்தைகளின் கற்றல் நிலையைக் கண்டறிய அடிப்படைக் கற்றல் நிலை அறிதல் மதிப்பீட்டைச் செயல்படுத்த வேண்டும். மதிப்பீட்டை முடித்தப் பிறகு குழந்தைகளின் கற்றல் நிலை சார்ந்த அறிக்கையை ஆசிரியர் மட்டுமே அறியமுடியும். ஆசிரியர்கள் அவ்வறிக்கையை நகல் எடுத்துப் பராமரிக்கலாம். 


4) அனைத்துக் குழந்தைகளிடமும் பருவத்திற்கு ஒரு தமிழ், ஆங்கிலம் மற்றும் கணக்கிற்கான பயிற்சி நூல்கள் இருக்க வேண்டும். ஒன்றாம் வகுப்பு குழந்தைகளிடம் அரும்பு பயிற்சி நூலும் இரண்டாம் வகுப்புக் குழந்தைகளிடம் மொட்டு பயிற்சி நூலும் மூன்றாம் வகுப்புக் குழந்தைகளிடம் மலர் பயிற்சி நூலும் வழங்கப்பட வேண்டும். 


5) அரும்பு பயிற்சி நூல், அரும்பு நிலைக்கான செயல்பாடுகளைக் கொண்டிருக்கும். மொட்டு பயிற்சி நூல், அரும்பு மற்றும் மொட்டு நிலைக்கான செயல்பாடுகளைக் கொண்டிருக்கும். மலர் பயிற்சி நூல், அரும்பு, மொட்டு மற்றும் மலர் நிலைக்கான செயல்பாடுகளைக் கொண்டிருக்கும். 


6) அரும்பு,மொட்டு மற்றும் மலர் பயிற்சி நூல் செயல்பாடுகள் முறையே நீலம், மஞ்சள் மற்றும் பச்சை வண்ணத்தில் அளிக்கப்பட்டிருக்கும். 


7) அனைத்து ஆசிரியர்களும் இணைப்பு 2-இல் உள்ள பாடக்குறிப்புப் படிவத்தினை ஒவ்வொரு வாரமும் நிரப்ப வேண்டும். பாடவாரியான மாதிரி பாடக் குறிப்புகளும் இணைப்பு 2-இல் அளிக்கப்பட்டுள்ளன. 


8) எண்ணும் எழுத்தும் திட்டத்தின் மைய நோக்கம் எண்ணறிவு மற்றும் எழுத்தறிவின் தரத்தினை மேம்படுத்துவது ஆகும். எனவே, அறிவியல் மனப்பாங்குடன் சமூகத் திறன்கள் தமிழ், ஆங்கிலம் மற்றும் கணக்குப் பாடங்களுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. இணைப்பு 3-இல் உள்ள ஒருங்கிணைக்கப்படாத சூழ்நிலையியல், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடத்தலைப்புகளை, இணைப்பு 1- கால அட்டவணையில் குறிப்பிட்டுள்ளவாறு அந்தந்த வகுப்புகளுக்குக் கற்பிக்க வேண்டும். 


9) அனைத்து வகுப்பறைகளிலும் கற்பிக்கப்படும் பாடம் மற்றும் பாடப்பொருளின் அடிப்படையில் கற்றல் களங்கள் அமைக்கப்பட வேண்டும். கற்றல் களங்கள்e என்பவை குழந்தைகளின் ஆர்வத்தையும் ஈடுபாட்டையும் ஊக்குவிக்கவும் அவர்களை வகுப்பறைச் செயல்பாடுகளில் பங்கேற்கச் செய்வதற்கும் வழிவகுக்கும். 


10) கற்றல் களங்களில் ஒவ்வொரு பாடத்தையும் கற்பிப்பதற்கான பின்னணி மற்றும் சூழலை ஏற்படுத்த வேண்டும். களம் அமைத்துக் கற்பித்தப்பின் அவ்வகுப்பறையில்e பயன்படுத்தப்பட்ட பொருள்கள், கதை, பாடல், படைப்பு, செயல்பாடு, பொம்மலாட்டம், வினாடிவினா மற்றும் படித்தல் களங்களில் காட்சிப்படுத்தப்படும். கூடுதலாக பாடம் சார்ந்த குழந்தைகள் செய்த செயல்பாடுகளும் களத்தில் காட்சிப்படுத்தப்படும். 


11) அனைத்து ஆசிரியர்களும் மாணவர் வருகையைப் பதிவு செய்யும் அதே TNSED செயலியைத் தங்கள்e அலைபேசியில் பதிவிறக்கம் செய்துகொள்ள/ மேம்படுத்திக்கொள்ள வேண்டும். இச்செயலியின் உள்ளேயே எண்ணும் எழுத்தும் மதிப்பீட்டிற்கான கட்டகமும் உள்ளது. 


12)அனைத்து ஆசிரியர்களும் எண்ணும் எழுத்தும் செயலியில் தங்கள் வகுப்பறைத் தகவல்களைe உள்ளீடு செய்யவேண்டும். இதனை ஒருமுறை செய்தால் போதுமானது. 


13)வளரறி மதிப்பீடு(அ)-க்குரிய செயல்பாடுகள், செயல்திட்டங்களின் பட்டியல் இணைப்பு-4இல் கொடுக்கப்பட்டுள்ளது. 


14)அவற்றுள், எவையேனும் 4 செயல்பாடுகளை மட்டும் தமிழ், ஆங்கிலம், கணக்குப் பாடங்களுக்குத் தனித்தனியாகச் செயலியில் பதிவு செய்ய வேண்டும். அது சார்ந்த அறிக்கையை நகல் எடுத்து வைத்துக் கொள்ளவும். 


15)ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமைகளில் வளரறி மதிப்பீடு (ஆ) செயல்பாடுகளை எண்ணும் எழுத்தும் செயலி வாயிலாக நடத்த வேண்டும். மதிப்பீட்டை நடத்துவதற்கான நேரம், கால அட்டவணையில் (இணைப்பு 2) கொடுக்கப்பட்டுள்ளது. இம்மதிப்பீடு. சூலை 22.07.2022முதல் நடத்தப்பட வேண்டும்.


16)வளரறி மதிப்பீடுகள் அனைத்தும் ஒவ்வொரு குழந்தைக்கும் தனித்தனியாக நடத்தப்பட வேண்டும். மேலும் விளையாட்டுமுறையில் (செயல்பாட்டின் அடிப்படையில்) நடத்தப்பட வேண்டும். 


17)செயலி வாயிலாக மதிப்பீட்டினை எவ்வாறு நடத்துவது என்பதற்கான வழிகாட்டுதல் குறிப்புகள், Digital Video Module வாயிலாக அளிக்கப்படும். 


18) பருவ இறுதியில் நடத்தப்படும் தொகுத்தறி மதிப்பீடுகளும் (Summative Assessments) குழந்தைகளின் கற்றல் அடைவைச் சோதிக்கும் வகையில் எண்ணும் எழுத்தும் மதிப்பீட்டுச்செயலி வாயிலாக ஆசிரியர்களுக்கு அளிக்கப்படும். 


19) கற்றல் களங்கள் குறித்த ஒளிப்படங்களை எண்ணும் எழுத்தும் செயலியில் பதிவேற்றம் செய்து கொள்ளவும் வாய்ப்பு வழங்கப்படும்.


20)அனைத்து ஆசிரியர்களும் எண்ணும் எழுத்தும் செயலியைப் பயன்படுத்தித் திட்டமிட்டபடியும் கால் அட்டவணையில் உள்ளவாறும் மதிப்பீடுகளைச் செயல்படுத்த வேண்டும். 


21)ஆசிரியர்கள், வளரறி மற்றும் தொகுத்தறி மதிப்பீடுகளைப் பராமரிக்கத் தேவையான தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டுப் படிவங்கள் (in CCE formats) செயலியில் இருக்கும். இதைத் தவிர தனியாக ஆசிரியர்கள் எந்தப் பதிவேட்டையும் பராமரிக்க வேண்டியதில்லை.


>>> எண்ணும் எழுத்தும் திட்ட வழிகாட்டு நெறிமுறைகள் - தொடக்கக்கல்வி இயக்குனர் மற்றும் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநரின் செயல்முறைகள்...



>>> கல்வி அஞ்சல் Whatsapp குழுவில் இணைய...



>>> கல்வி அஞ்சல் Telegram குழுவில் இணைய...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

The Chief Minister listed the educational structures of Tamil Nadu

  தமிழ்நாட்டின் கல்விக் கட்டமைப்புகளை பட்டியலிட்ட முதலமைச்சர் The Chief Minister listed the educational structures of Tamil Nadu >>...