கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

VRS weightage அரசாணை எண்: 53, நாள்: 08-06-2022 ஏன்? எதற்கு?



VRS weightage அரசாணை எண்: 53, நாள்: 08-06-2022 ஏன்? எதற்கு?


விருப்ப ஓய்வூதியர் வெயிட்டேஜ் தொடர்பாக, தமிழ்நாடு மனிதவள மேம்பாட்டுத் துறை (FR-II)-ன்  அரசாணை நிலை எண் 53 (நாள் 8.6.2022) சில தினங்களுக்குமுன் வெளிவந்தது. இது தொடர்பான பல்வேறு செய்திகளும் ஊகங்களும் ஊடகங்களில் வெளிவந்தது நாம் அனைவரும் அறிந்ததே. அது சார்ந்த தெளிவை அரசு ஊழியர் & ஆசிரியர்கள் மத்தியில் ஏற்படுத்தவே இப்பதிவு.


முதலில் நாம் தெளிவாகத் தெரிந்துகொள்ள வேண்டியது என்னவென்றால் அச்சு - காட்சி - மின்னணு செய்தி ஊடகத்தினரில் 99.9% பேருக்கு நமது துறைசார் நடைமுறைகள் 100% புரியவும் செய்யாது தெரியவும் செய்யாது. அவ்வப்போது வருவதை இயன்றவரை Highlight ஆக்கி வெளியிட்டுவிடுவர். அவ்வளவே.


சரி விசயத்த்திற்கு வருவோம்.


50 வயதிற்கு மேற்பட்ட / 20 வருடங்கள் பணி நிறைவு செய்த அரசு ஊழியர் தனது ஓய்வுக் காலத்திற்கு முன்பே தனது சொந்த விருப்பத்தின்பேரில் பணி  ஓய்வு  (Voluntary Retirement in Service) பெற விண்ணப்பிக்கலாம்.


வழக்கமான பணி மூப்பால் ஓய்வு பெறும் ஊழியரின் ஓய்வூதியம் என்பது அவரது இறுதி மாத அடிப்படை ஊதியத்தில் அதிகபட்சம் 50% என்ற அளவில் இருக்கும். அதற்கான கணக்கீடு,

Last month Basic Pay X (Years of service ÷ 66).


அதேபோன்று விருப்ப ஓய்வு பெறுவோருக்கான ஓய்வூதியக் கணக்கீட்டிற்கு, அவரது எஞ்சிய பணிக்காலத்தில் இருந்து அதிகபட்சமாக 5 ஆண்டுகள் வரை அவரது Years of service-ல் கூடுதலாகச் சேர்த்துக் கொள்ளப்படும். இதற்குப் பெயர்தான் அந்த VRS Weightage. இது மிகப் பழைய வழக்கமான நடைமுறையே.


அந்த 5 ஆண்டுகளைக் கூட்டுவதால் அவரின் வயது 58-ஐத் தாண்டிவிடக்கூடாது / அவரது பணிக்காலம் 33 ஆண்டுகளைத் தாண்டிவிடக்கூடாது. அதாவது 55 வயதில் ஒருவர் VRS கோரினால் கூடுதலாக 3 ஆண்டுகளை மட்டுமே அவரது Pension Calculation-ல் சேர்த்து கணக்கிடலாம். அதேபோல் 32 வருடங்கள் பணிபுரிந்தவருக்கு கூடுதலாக 1 ஆண்டு மட்டும் சேர்த்துக் கொள்ளப்படும். அந்த Weightage-ற்கான மாதிரி அட்டவணை,


பணிக்காலத்தைப் பொறுத்து,

28 + 5 (= 33)

29 + 4 (= 33)

30 + 3 (= 33)

31 + 2 (= 33)

32 + 1 (= 33)


வயதைப் பொறுத்து எனில்,

53 + 5 (= 58)

54 + 4 (= 58)

55 + 3 (= 58)

56 + 2 (= 58)

57 + 1 (= 58)


இந்த Weightage 1997 முதல் நடைமுறையில் உள்ளது. இது தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான அடிப்படை விதிகளின் 56-ஆம் விதியான ஓய்வூதிய விதிகளில் 3-வது பிரிவான விருப்ப ஓய்வூதியப் பிரிவில் வரிசை எண் D-ல் குறிப்பிடப்பட்டுள்ளது.


சரி. . . அதென்ன 58 வயது. . .? வேறொன்னுமில்ல அப்ப பணி ஓய்வு வயது 58. ஆனால் இப்ப பணி ஓய்வு வயது. . . .? 59-ஆகி 60 -ல வந்து நிக்குது.


பணிசார் அடிப்படை விதிகள் சார்ந்து மேற்கொள்ளப்படும் எந்தவொரு மாற்றமும் முதலில் துறைசார் அரசாணையாகப் பிறப்பிக்கப்பட்டாலும், அதன்பின் பணிசார் விதிகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதற்கான 'திருத்தத் தீர்மான அரசாணை' கூடுதலாகப் பிறப்பிக்கப்படும்.


அதன்படியே, 07.5.2020 முதல் ஓய்வு வயதை 59-ஆக்கியதற்கு  பின்வரும் திருத்தமும்,


54 + 5 (= 59)

55 + 4 (= 59)

56 + 3 (= 59)

57 + 2 (= 59)

58 + 1 (= 59)


பின்னர் 25.2.2021 முதல் 60-ஆக்கியதற்கு மேற்படி திருத்தத்தை மீண்டும் பின்வமாறு திருத்தியும்


55 + 5 (= 60)

56 + 4 (= 60)

57 + 3 (= 60)

58 + 2 (= 60)

59 + 1 (= 60)


புதிய ஓய்வு வயதிற்கான VRS Weightage பற்றிய 'திருத்தத் தீர்மான அரசாணை' தற்போது வெளியிடப்பட்டுள்ளது.


>>>  விருப்ப ஓய்வு பெறும் அரசு ஊழியர்களுக்கு புதிய வெயிட்டேஜ் தொடர்பான அரசாணை (நிலை) எண்: 53, நாள்: 08-06-2022 வெளியீடு (G.O.(Ms) No: 53, Dated: 08-06-2022 - Revision of Weightage with reference to age for Government Servants retiring Voluntarily)...






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

TNSED Schools App New Version: 0.3.1 - Updated on 18-07-2025

தற்போது TNSED Schools  App-ல் Break Fast & Noon Meal பதிவு செய்வதற்கான  புதிய அப்டேட் வெளியாகியுள்ளது TNSED Schools App New Version: 0.3...