கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இன்றைய (11-08-2022) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...

 



மேஷம்

ஆகஸ்ட் 11, 2022



குடும்பத்தில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கப் பெறுவீர்கள். வாகன பயணங்களின் மூலம் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். வியாபாரம் ரீதியான பணிகளில் அரசு சார்ந்த உதவி கிடைக்கும். புதிய வாகனம் வாங்குவது தொடர்பான வாய்ப்புகள் அமையும். ஆக்கப்பூர்வமான நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்




அஸ்வினி : மகிழ்ச்சியான நாள்.


பரணி : எண்ணங்கள் கைகூடும். 


கிருத்திகை : வாய்ப்புகள் அமையும்.

---------------------------------------





ரிஷபம்

ஆகஸ்ட் 11, 2022



எதிர்பார்த்த சில பணிகள் நிறைவேறுவதில் அலைச்சல்கள் உண்டாகும். உடன்பிறந்தவர்களிடத்தில் அனுசரித்து நடந்து கொள்ளவும். எழுத்து தொடர்பான துறைகளில் இருப்பவர்களுக்கு புதிய அனுபவம் ஏற்படும். வியாபாரம் நிமிர்த்தமான முதலீடுகளில் தகுந்த ஆலோசனைகளை பெற்று முடிவு எடுக்கவும். திறமைக்கு உண்டான அங்கீகாரம் காலதாமதமாக கிடைக்கும். நன்மை நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு 


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்




கிருத்திகை : அலைச்சல்கள் உண்டாகும். 


ரோகிணி : அனுபவம் ஏற்படும். 


மிருகசீரிஷம் : ஆலோசனைகள் கிடைக்கும்.

---------------------------------------





மிதுனம்

ஆகஸ்ட் 11, 2022



மனதில் ஏற்பட்ட இனம்புரியாத சிந்தனைகளால் குழப்பத்துடன் காணப்படுவீர்கள். எதிர்பாராத சில செலவுகளின் மூலம் சேமிப்பு குறையும். ஆசை வார்த்தைகளை நம்பி வாக்குறுதிகள் அளிப்பதை குறைத்து கொள்ளவும். விலை உயர்ந்த பொருட்களை கையாளும் பொழுது கவனத்துடன் செயல்படவும். குடும்ப உறுப்பினர்களிடம் பயனற்ற விவாதங்களை குறைத்து கொள்ளவும். கவனம் வேண்டிய நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம் 




மிருகசீரிஷம் : குழப்பமான நாள்.


திருவாதிரை : வாக்குறுதிகளை தவிர்க்கவும். 


புனர்பூசம் : கவனத்துடன் செயல்படவும்.

---------------------------------------





கடகம்

ஆகஸ்ட் 11, 2022



வியாபார பணிகளில் புதுவிதமான சூழ்நிலைகள் ஏற்படும். சுபகாரியம் தொடர்பான விஷயங்களில் ஒன்றுக்கு இரண்டு முறை சிந்தித்து செயல்படவும். பொருளாதாரத்தில் ஏற்ற, இறக்கமான சூழ்நிலைகள் ஏற்படும். நண்பர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு புத்துணர்ச்சியை உண்டாக்கும். வாழ்க்கை துணைவரை பற்றிய சிந்தனைகள் அதிகரிக்கும். அன்பு நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு 


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்




புனர்பூசம் : சிந்தித்து செயல்படவும்.


பூசம் : ஏற்ற, இறக்கமான நாள்.


ஆயில்யம் : சிந்தனைகள் அதிகரிக்கும். 

---------------------------------------





சிம்மம்

ஆகஸ்ட் 11, 2022



உத்தியோகம் நிமிர்த்தமான வெளியூர் பயணங்கள் கைகூடும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபார பணிகளில் இருந்துவந்த தடைகள் விலகும். சுபகாரியம் தொடர்பான முயற்சிகள் கைகூடும். தடைபட்ட சில பணிகளை செய்து முடிப்பீர்கள். நெருக்கமானவர்களிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். உதவி நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு 




மகம் : பயணங்கள் கைகூடும். 


பூரம் : தடைகள் விலகும். 


உத்திரம் : ஒற்றுமை அதிகரிக்கும்.

---------------------------------------





கன்னி

ஆகஸ்ட் 11, 2022



மனதில் புதுவிதமான சிந்தனைகள் தோன்றும். குழந்தைகளின் எதிர்காலம் தொடர்பான முயற்சிகள் கைகூடும். பெரியோர்களின் ஆலோசனைகளால் சில முக்கிய முடிவை எடுப்பீர்கள். சேமிப்பை மேம்படுத்துவது தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். சுபகாரியம் தொடர்பான முயற்சிகள் கைகூடும். பூர்வீக சொத்துக்களின் மூலம் ஆதாயம் ஏற்படும். போட்டிகள் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு 


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு  




உத்திரம் : சிந்தனைகள் தோன்றும். 


அஸ்தம் : ஆலோசனைகள் கிடைக்கும்.


சித்திரை : முயற்சிகள் கைகூடும். 

---------------------------------------





துலாம்

ஆகஸ்ட் 11, 2022



உயர் பொறுப்பில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். அரசு சார்ந்த பணிகளில் இருந்துவந்த இழுபறியான சூழ்நிலைகள் குறையும். தாய்வழி உறவினர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். உத்தியோக பணிகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். மனதில் நினைத்த எண்ணங்கள் ஈடேறுவதற்கான சூழல் அமையும். பொறுமை வேண்டிய நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்




சித்திரை : அறிமுகம் கிடைக்கும். 


சுவாதி : அனுசரித்து செல்லவும்.


விசாகம் : எண்ணங்கள் ஈடேறும்.

---------------------------------------





விருச்சிகம்

ஆகஸ்ட் 11, 2022



செயல்பாடுகளில் இருந்துவந்த மறைமுக எதிர்ப்புகளை புரிந்து கொள்வீர்கள். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். நண்பர்களின் வழியில் அனுசரித்து செல்வதன் மூலம் சாதகமான வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவீர்கள். உடல் ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும். புதிய தொழில்நுட்பம் சார்ந்த கருவிகளின் மீது ஈடுபாடு உண்டாகும். தெளிவு வேண்டிய நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு 


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை 




விசாகம் : புரிதல் உண்டாகும்.


அனுஷம் : சாதகமான நாள்.


கேட்டை : இன்னல்கள் குறையும். 

---------------------------------------





தனுசு

ஆகஸ்ட் 11, 2022



குடும்பத்தில் எதிர்பாராத தனவரவு மேம்படும். குழந்தைகளின் வழியில் அலைச்சலும், அனுபவமும் கிடைக்கப் பெறுவீர்கள். உத்தியோக பணிகளில் மாற்றமான சூழ்நிலைகள் ஏற்படும். வியாபார பணிகளில் புதிய நுட்பமான சிந்தனைகளை செயல்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். இழுபறியான சில செயல்களின் மூலம் ஆதாயம் உண்டாகும். ஆர்வம் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம் 




மூலம் : வரவு மேம்படும்.


பூராடம் : மாற்றமான நாள்.


உத்திராடம் : ஆதாயம் உண்டாகும். 

---------------------------------------





மகரம்

ஆகஸ்ட் 11, 2022



வியாபார பணிகளில் அனுபவமிக்கவர்களின் அறிமுகம் கிடைக்கும். சுபகாரிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். புதிய செயல்களில் சிந்தித்து செயல்படவும். வாழ்க்கை துணைவரின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். உத்தியோக பணிகளில் பதற்றமின்றி செயல்படவும். ஓய்வு நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு 


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்




உத்திராடம் : அறிமுகம் கிடைக்கும்.


திருவோணம் : சிந்தித்து செயல்படவும். 


அவிட்டம் : மகிழ்ச்சியான நாள். 

---------------------------------------





கும்பம்

ஆகஸ்ட் 11, 2022



உத்தியோக பணிகளில் இருந்துவந்த பொறுப்புகள் குறையும். குழந்தைகளிடம் கனிவாக பழகவும். விலகி சென்றவர்களை பற்றிய புரிதல் உண்டாகும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் மாற்றம் பிறக்கும். செயல்பாடுகளில் அனுபவம் வெளிப்படும். பக்தி நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு  


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : வெண் சாம்பல்




அவிட்டம் : பொறுப்புகள் குறையும்.


சதயம் : புரிதல் உண்டாகும்.


பூரட்டாதி : மாற்றம் பிறக்கும். 

---------------------------------------





மீனம்

ஆகஸ்ட் 11, 2022



வியாபார அபிவிருத்திக்கான எண்ணங்கள் அதிகரிக்கும். குழந்தைகளோடு இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். உத்தியோக பணிகளில் மதிப்பு மேம்படும். தனவரவின் மூலம் சேமிப்பு அதிகரிக்கும். இலக்கியம் சார்ந்த துறைகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனைகள் நிறைவேறும். பாராட்டுகள் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு 


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்




பூரட்டாதி : அபிவிருத்தியான நாள்.


உத்திரட்டாதி : மதிப்பு மேம்படும். 


ரேவதி : பிரார்த்தனைகள் நிறைவேறும்.

---------------------------------------


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

23-12-2024 - School Morning Prayer Activities

   பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 23-12-2024 - School Morning Prayer Activities திருக்குறள்: பால் : பொருட்பால் அதிகாரம் : மருந்து க...