டிட்டோஜாக் கோரிக்கைகள் என்னென்ன? அதில் அரசின் நிலைப்பாடு என்ன? விளக்கும் செய்திக் காணொளி...
What are the TETOJAC Demands? What is the Government's position on it? An explanatory news video...
>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும்...
டிட்டோஜாக் கோரிக்கைகள் என்னென்ன? அதில் அரசின் நிலைப்பாடு என்ன? விளக்கும் செய்திக் காணொளி...
What are the TETOJAC Demands? What is the Government's position on it? An explanatory news video...
>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும்...
ஆசிரியர்களின் கோரிக்கைகள் சார்ந்து பள்ளிக்கல்வித்துறை செய்தி வெளியீடு - ஏற்கப்பட்ட கோரிக்கைகள்...
டிட்டோஜாக் - தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு சார்பாக மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட 12 அம்சக் கோரிக்கைகளின் தற்போதைய நிலை குறித்து செய்தி வெளியீடு எண்: 1387, நாள் : 07-09-2024...
தமிழ்நாடு அரசு ஆசிரியர்களை போராட்டக் களத்திற்கு தள்ளுவதற்கு பதிலாக அவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்ற, தேர்தல் நேர வாக்குறுதியை கவனத்தில் கொண்டு, உரிய நடவடிக்கையை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.
- ஜி.கே.வாசன் MP, தலைவர், தமிழ் மாநில காங்கிரஸ்
டிட்டோஜாக் TETOJAC சார்பில் 10.09.2024 அன்று நடைபெற உள்ள மாநிலந்தழுவிய ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்திற்கான 31அம்சக் கோரிக்கைகள் கொண்ட மாதிரி துண்டுப் பிரசுரம்...
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
பள்ளிக்கல்வித்துறை மானியக் கோரிக்கை எண்: 43 - அறிவிப்புகள் - 2024-25...
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
அரசாணை எண்: 243ஐ இரத்து செய்ய வலியுறுத்தி 13-05-2024 அன்று மாலை மாநிலம் தழுவிய மாவட்ட அளவிலான ஆர்ப்பாட்டம் - TETOJAC கோரிக்கைகள் மற்றும் தீர்மானங்கள்...
>>> TETOJAC கோரிக்கைகள் மற்றும் தீர்மானங்களை தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
டிட்டோஜாக் மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் இன்று சென்னையில் மாநில தேர்தல் ஆணையரை சந்தித்து 13.5.2024 அன்று மாவட்டத்தலைநகரில் நடைபெற உள்ள மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் தொடர்பான கடிதம் வழங்கினர்....
மேலும் தலைமைச்செயலாளர், பள்ளிக்கல்வி அமைச்சர், பள்ளிக்கல்வி இயக்குநர், தொடக்கக்கல்வி இயக்குநர் அலுவலகங்களில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் தொடர்பான கடிதங்களை நேரில் வழங்கினர்...
டிட்டோ ஜாக் அமைப்பு மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சரிடம் பேச்சு வார்த்தை நடத்திய போது ஏற்கப்பட்ட கோரிக்கைகள் விவரம் (Details of the demands accepted when the TETOJAC organization held talks with the Hon'ble Minister of School Education)...
1. இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாடுகளை களைய 3 நபர் குழு அமைத்தல், அதன் அடிப்படையில் அரசுக்கு பரிந்துரை செய்தல்.
2. EMIS பதிவுகள் 01.11.2023 முதல் ஆசிரியர்களுக்கு பதில், BRTE க்கள் மேற் கொள்வார்கள்.
3. எண்ணும் எழுத்தும் திட்டத்தில் ஆன்லைன் பதிவேற்றம் இராது.
4. SMC கூட்டம் 3 மாதத்திற்கு ஒரு முறை கூட்டினால் போதும்.
5. உயர்கல்வி பயின்ற 4500 பேருக்கு பின்னேற்பு வழங்குதல்.
6. உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் 1500 பேருக்கு ஆண்டு ஊதிய உயர்வு அனுமதித்தல்.
7. B.Lit., B.Ed., படித்த நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு உள்ள குறைகளை நிவர்த்தி செய்தல்.
8. DEO - Elementary அலுவலகத்தில் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்கள் 58 பேருக்கு DI ஆக பணி மாற்றம் அளித்தல்.
9. பயிற்சிகளுக்கு ஆசிரியர்களை கருத்தாளர்களாக பயன்படுத்துவதை தவிர்த்தல். கால அவகாசம் 3 மாதம்.
10. ஜாக்டோ - ஜியோ போராட்டத்தின் போது எடுக்கப் பட்ட நடவடிக்கைகளுக்கு உரிய நிவர்த்தி செய்தல்.
மேற்கண்ட தகவல்கள் டிட்டோ ஜாக் ஒருங்கிணைப்பாளர்கள் ஊடக செய்தியில் அளித்த தகவல்களின் அடிப்படையில் பகிரப் படுகிறது.
EMIS குறித்தான தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் கோரிக்கையும் பள்ளிக் கல்வி ஆணையர் அவர்களின் பதிலும் (TamilNadu Teacher's Federation's demand on EMIS and Commissioner of School Education's response)...
EMIS மற்றும் TNSED App குறித்து ஆசிரியர்களிடையே நிலவும் அதிருப்தியை தெரிவித்தோம் . அதற்கு அவர் EMIS என்பது தவிர்க்க இயலாதது . நாம் e-governance முறைக்கு மாற வேண்டும் என்பதால் அறிமுகப்படுத்தப்பட்ட நிர்வாக முறை இது என்றும், இது காலத்தின் கட்டாயம் என்றும் கூறினார். மேலும் EMIS App வாயிலாக ஆசிரியர்களின் வேலைப்பளு குறைக்கப்படும். மாதாந்திர அறிக்கை, Pay Bill, Aquittance , மதிப்பெண் பட்டியல்கள், இலவச சீருடை, புத்தகம், நோட்டு வழங்கிய பட்டியல் போன்றவைகள் இனி எமிஸ் இணையதளம் வாயிலாகவே தயாரித்துக் கொள்ளலாம் என்றும், அதற்காக தனி பதிவேடுகள் பராமரிக்க வேண்டி வராது என்றும் தெரிவித்தார். மேலும் ஒவ்வொரு ஆசிரியர்களும் TNSED App மூலம் தனக்கு தேவையான விடுமுறையை விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம் என்றும், விடுமுறை கடிதங்களை கொடுத்துவிட்டு அது ஒப்புதல் பெறப்படுமா அல்லது பெறப்படாதா என்று வட்டாரக்கல்வி அலுவலர் அல்லது தலைமை ஆசிரியர்களிடம் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் கூறி ஆசிரியர்களுக்கான பணிப்பளுவை குறைப்பதற்காக இந்த ஆப் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது என்று கூறினார்.
அப்பொழுது ஆசிரியர்களுக்கு பல இடங்களில் அவர்கள் வைத்திருக்கும் செல்போன் Configuration குறைவாக இருப்பதால் Attendance போடுவதிலும் இன்டர்நெட் கிடைப்பதிலும் சிரமமாக இருக்கிறது. எனவே கல்வித் துறையே உயர்தர Configuration (6gb ram ,128 gb inbuilt memory) கொண்ட செல்போன் வழங்கி அதற்கு சிம் வழங்கி அந்த சிம்மில் இன்டர்நெட் கனெக்சன் மற்றும் டேட்டா ஆகியவற்றை துறைசார்பாக வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டோம் . மேலும் அவ்வாறு வழங்கும்பொழுது அதை கல்வித்துறைப்பணிக்கு தவிர வேறு எதற்கும் பயன்படுத்தாத வகையில் Lock செய்து (தனியார் IT நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு லேப்டாப் வழங்கும் பொழுது அவர்கள் பணியைத் தவிர வேறு எந்த பணியும் செய்ய இயலாததை போன்று) வழங்குங்கள் அல்லது இன்டர்நெட் மற்றும் டேட்டா இணைப்புடன் கூடிய சிம்கார்டு ஒவ்வொரு ஆசிரியருக்கும் வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டோம்.
இது சார்பாக நிதித்துறை அலுவலர்களுடன் பேசி வருவதாகவும் Device வழங்குவதா அல்லது டேட்டா வித் இன்டர்நெட் வசதியுடன் கூடிய சிம் கார்டு வழங்குவதா என்பதை விரைவில் முடிவு செய்து அறிவிப்பதாக ஆணையாளர் அவர்கள் நம்மிடம் தெரிவித்தார்
தகவல் கே.பி.ரக்ஷித்,
மாநிலத்தலைவர்,
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி...
2021-2022 - உயர்கல்வித்துறை - மானியக் கோரிக்கை - 25 புதிய அறிவிப்புகள் - முழு விவரம்...
💥 பொறியியல் முதுநிலைப் பட்டப்படிப்பு மாணவர்களுக்கு மாதம் ரூ.6000 உதவித் தொகை...
💥 IRTT கல்லூரி அரசு பொறியியல் கல்லூரியாக மாற்றம்...
💥 10 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடக்கம்...
>>> 2021-2022 - உயர்கல்வித்துறை - மானியக் கோரிக்கை - 25 புதிய அறிவிப்புகள் - முழு விவரம்...
School Education - Policy Note 2021-2022: Grant Request No: 43, Date: 26-08-2021 - Anbil Mahesh Poyyamozhi, Minister of School Education ...
நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 3 தவணை அகவிலைப்படி உயர்வு நிலுவையை வழங்க வேண்டும் - தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் கோரிக்கை...
கற்போம் எழுதுவோம் திட்டத்தில் பயின்றவர்களுக்கான தேர்வை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொடக்க, நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஆறுமுகத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதுகுறித்து பள்ளித் தலைமை ஆசிரியர்கள் அளித்துள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது.
காஞ்சிபுரம் ஒன்றியத்தில் 47 மையங்களில் கற்போம் எழுதுவோம் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அதன்படி கிராமப் பகுதிகளில் எழுத்தறிவில்லாத 20 பேரை இணைத்து, இந்த மையங்கள் மூலம் பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் இந்த வகுப்புக்கு தினமும் சராசரியாக 3 முதல் 5 பேர் மட்டுமே வந்தனர்.
தொடர்ந்து வகுப்புக்கு வர தலைமை ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்த போதும் வரஇயலாத நிலை உள்ளதாக அவர்கள் தெரிவித்து விட்டனர். இந்நிலையில் இந்த மையங்களில் பயின்றவருக்கு வரும் 27ம் தேதி தேர்வு நடைபெறும். 26ம் தேதிவரை திருப்புதல் தேர்வு நடத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
மேலும் தேர்வுப் பணியை முறையாக முடிக்காத தலைமை ஆசிரியர்களுக்கு, விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படும் என அச்சுறுத்தப்படுகிறது. இந்தப் பயிற்சி வகுப்புக்கு வர இயலாது என கூறியவர்களை தேர்வுக்கு மட்டும் எப்படி வரவழைக்க முடியும். மேலும் கொரோனா பேரிடர் பரவல் மற்றும் தமிழக சட்டமன்றத் தேர்தல் ஆகியவற்றை கருத்தில் கொண்டு 1 முதல் 11ம் வகுப்புவரை முறையான கல்வி திட்டத்தில் பயிலும் மாணவர்களுக்கு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது.
இந்தவேளையில், 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் பயிலும் கற்போம் எழுதுவோம் திட்டத்தில் உள்ள கற்போருக்கான தேர்வினை ரத்து செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 07-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: "பால் :பொருட்பால் அதிகாரம்...