கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 26.09.2022 - School Morning Prayer Activities...



 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 26.09.2022 - School Morning Prayer Activities...


 திருக்குறள் :


பால் : அறத்துப்பால்


இயல்: பாயிரவியல்


அதிகாரம்: கடவுள் வாழ்த்து


குறள் : 2

கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்

நற்றாள் தொழாஅர் எனின்.


பொருள்:

தன்னைவிட அறிவில் மூத்த பெருந்தகையாளரின் முன்னே வணங்கி நிற்கும் பண்பு இல்லாவிடில் என்னதான் ஒருவர் கற்றுஇருந்தாலும் அதனால் பயன் ஒன்றுமில்லை. எனவே பெரியவர்களிடம் பணிவுடன் நடந்து கொள்ள வேண்டும்.


பழமொழி :

Measure thrice before you cut once


ஒரு செயலை செய்யும் முன் பலமுறை சிந்திக்கவும்.


இரண்டொழுக்க பண்புகள் :


1. நான் வலது கையால் செய்யும் உதவி என் இடது கைக்கு கூட தெரிய கூடாது.


 2. பிறருக்கு தெரியும் படி செய்தால் அது உதவி அல்ல விளம்பரம். கடவுளுக்கு பிரியம் இருக்காது . 


பொன்மொழி :


நல்ல முடிவுகள்.. அனுபவத்திலிருந்து பிறக்கின்றன; ஆனால் அனுபவமோ தவறான முடிவுகளில் இருந்து கிடைக்கிறது.


பொது அறிவு :


1.இந்தியாவின் நறுமணத் தோட்டம் என்று அழைக்கப்படுவது எது ? 


 கேரளா. 


 2. அதிகாலையின் அமைதி பூமி என்று அழைக்கப்படுவது எது? 


 கொரியா.


English words & meanings :


u·nan·i·mous - Sharing the same opinions or views. Adj. the doctors were unanimous in their diagnoses. ஒரே கருத்துள்ள


ஆரோக்ய வாழ்வு :


கருப்பு கொண்டைக்கடலையை எண்ணெய் சேர்க்காமல், உப்பு மட்டும் கலந்து வறுத்து எடுப்பதை தான் நாம் உப்புக்கடலை என்று சொல்லுவோம். இந்த உப்புக்கடலை மிகச்சிறந்த, ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் என்று சொல்லலாம். இதில் புரதச்சத்து, டயட்டரி நார்ச்சத்துக்கள் உள்ளிட்ட நிறைய ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கின்றன.


NMMS Q 67:


Wardrobe : Clothes :: Purse : ? 

a) Pocket b) Money c) Zip d) Fare 


Answer : Money


செப்டம்பர் 26


மன்மோகன் சிங் அவர்கள் பிறந்த நாள்


மன்மோகன் சிங் (Manmohan Singh, பஞ்சாபி: ਮਨਮੋਹਨ ਸਿੰਘ, பிறப்பு: செப்டம்பர் 26, 1932) இந்தியாவின் 14 ஆவது, பிரதமர் ஆவார். மன்மோகன் சிங், மேற்கு பஞ்சாபிலுள்ள கா என்னும் (தற்போது பாகிஸ்தானில் உள்ளது) ஊரில் பிறந்தார். இவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியைச் சேர்ந்தவர். மே 22, 2004 இல் இந்தியப் பிரதமராகப் பதவியேற்றார். 


1991 முதல் 1996 வரை பி. வி. நரசிம்ம ராவ் அமைச்சரவையில் மன்மோகன் சிங் நிதி அமைச்சராக பணியாற்றினார். கல்வியாலும், பயிற்சியாலும் தேர்ந்த பொருளாதாரவியல் வல்லுநரான அவர், இந்தியாவின் பொருளாதார தாராளமயமாக்கல் கொள்கையின் துவக்கத்தில் பெரும்பங்கு வகித்தார். மன்மோகன் சிங் பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். மேலும் மத்திய ரிசர்வ் வங்கியின் தலைவராகவும் பதவி வகித்துள்ளார். அவர் நிதியமைச்சராகும் முன் பின்தங்கிய நிலையில் இருந்த இந்திய பொருளாதாரம், இவரின் கொள்கைகளால் முன்னேறத் துவங்கியது எனக் கருதப்படுகிறது.


நீதிக்கதை


மன உறுதி


ஒரு சமயம் சுவாமி விவேகானந்தர் லண்டன் மாநகருக்குச் சென்றிருந்தார். அங்கு அவரது நண்பர் ஒருவரின் பண்ணை வீட்டில் தங்கியிருந்தார். அந்தப் பண்ணை வீடு மிகப்பெரிய நிலப்பரப்பில், இயற்கை எழில் சூழ்ந்த இடத்தில் இருந்தது. அங்கே நிறைய மாடுகள் வளர்க்கப்பட்டன. ஒரு நாள் மாலை, பண்ணை மைதானத்தில் விவேகானந்தர் நடந்து சென்று கொண்டிருந்தார். அவருடன் நண்பரும், நண்பரின் மனைவியும் நடந்து சென்று கொண்டிருந்தனர். 


அப்போது, சற்றும் எதிர்பாராத விதமாக ஒரு மாடு அவர்களை நோக்கி சீறிப் பாய்ந்து வந்தது. அதன் மூர்க்கத்தனமான ஓட்டத்தைப் பார்த்து பயந்து போன நண்பரின் மனைவி, அப்படியே மயங்கி விழுந்துவிட்டார். நண்பர் மனைவியைத் தூக்க முயன்றார். அப்போது மாடு அவர்களை நெருங்கிவிட்டது. நண்பருக்குக் கையும் ஓடவில்லை, காலும் ஓடவில்லை. இன்னும் சில நொடிகள் அங்கே இருந்தால் மாட்டின் கொம்புகளுக்கு இரையாக நேரிடும் என்பதை உணர்ந்த நண்பர், தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள எழுந்து வேறு திசையில் ஓடினார்.


ஆனால், விவேகானந்தர் அப்படி இப்படி அசையாமல் ஆணி அடித்தது போல் அந்த இடத்திலேயே நின்றுவிட்டார். பாய்ந்து வந்த மாடு கீழே விழுந்து கிடந்த நண்பரின் மனைவியையும், விவேகானந்தரையும் விட்டுவிட்டு, ஓடிக்கொண்டிருந்த நண்பரைத் துரத்தியது. அதிர்ஷ்டவசமாக ஒரு கட்டடத்திற்குள் புகுந்து தப்பினார் நண்பர். அதன் பிறகே பண்ணை ஊழியர்கள் ஓடிவந்து மாட்டைப் பிடித்துக் கட்டிப்போட்டனர். விவேகானந்தர் அதன் பிறகே அந்த இடத்தை விட்டு அசைந்தார். அங்கு வந்த நண்பருக்கோ ஒரே வியப்பு.


அப்போது நண்பரின் மனைவியும் மயக்கம் தெளிந்து எழுந்தார். சிறிதுகூட பயமே இல்லாமல் அந்த ஆபத்தான நேரத்திலும் ஒரே இடத்தில் உறுதியாக உங்களால் எப்படி நிற்க முடிந்தது? என்று கேட்டார் நண்பர். அதைக் கேட்டு மெல்லப் புன்னகைத்த விவேகானந்தர், நான் வித்தியாசமாக எதையும் செய்து விடவில்லை. வருவது வரட்டும், சமாளிப்போம் என்ற ஒருவித மன உறுதியுடன் நின்றுவிட்டேன். 


ஓடுபவரைக் கண்டால் துரத்திச் செல்வது மிருகங்களுக்கு உரிய குணம். அதனால் தான் மாடு என்னை விட்டுவிட்டு, ஓடிக்கொண்டிருக்கும் உங்களைத் துரத்தியது, என்று முடித்தார். உயிருக்கு ஆபத்தான நேரத்தில் கூட, அதைக் கண்டுபயந்து ஓடாமல், வருவது வரட்டும் என்ற மன உறுதி பெற்றிருந்த சுவாமி விவேகானந்தரைப் பார்த்துப் பெரிதும் வியந்தார் நண்பர்.


இன்றைய செய்திகள்


26.09.22


* புதுச்சேரி, காரைக்காலில் ஒரே நாளில் 470 குழந்தைகள் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதை அடுத்து 46 குழந்தைகள் உள்நோயாளிகளாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


* தமிழகத்தில் 3.40 கோடி பேர் கரோனா பூஸ்டர் தடுப்பூசி செலுத்தவில்லை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்.


* பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தால் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது: தமிழக டிஜிபி எச்சரிக்கை.


* தமிழகத்தில் மீண்டும் வேகமெடுக்கும் கரோனா - தொற்று அதிகரிப்பதால் மக்கள் அச்சம்.


* நாடு முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் 4.73 கோடி நிலுவை வழக்குகளால் திணறும் நீதித் துறை: அரியர்ஸ் கமிட்டி அமைக்க சட்டத் துறை வல்லுநர்கள் யோசனை.


* பாதுகாப்பும் கவனமும் அற்ற சிகிச்சையால் ஆண்டுக்கு 26 லட்சம் பேர் உயிரிழப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.


* டீ குடித்தால் டைப் 2 சர்க்கரை நோயை தவிர்க்கலாம்: 10 லட்சம் பேரிடம் சீனாவின் வூஹான் பல்கலைக்கழகம் மேற்கொண்ட ஆய்வு முடிவில் தகவல்.


* ஜூலியஸ் கோப்பை செஸ் போட்டி: அர்ஜூன் எரிகைசி-கார்ல்சென் இறுதிப்போட்டியில் மோதல்.


* கொரியா ஓபன் பெண்கள் சர்வதேச டென்னிஸ் போட்டியில் லாத்வியா வீராங்கனை ஜெலினா ஆஸ்டாபென்கோ இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார்.


* "மன்கட்" முறையில் ரன்-அவுட் செய்த தீப்தி - அதிர்ச்சியில் உறைந்த இங்கிலாந்து அணியினர்.


Today's Headlines


* Puducherry, Karaikal, after 470 children were infected with viral fever in a single day, 46 children were hospitalized as inpatients.


* 3.40 crore people in Tamil Nadu have not received Corona booster vaccine: Minister M. Subramanian informed.


 *Arrest under National Security Act if disturbing public peace: Tamil Nadu DGP warns.


 * Corona is picking up speed again in Tamil Nadu - people are afraid due to the increase in infection.


 * Judiciary bogged down by 4.73 crore pending cases in courts across the country: Legal experts suggest formation of Arrears Committee.


 * According to the World Health Organization, 26 lakh people die every year due to unsafe and careless treatment.


 * Drinking tea can prevent type 2 diabetes: a study of 1 million people by Wuhan University in China shows.


*  Julius Cup Chess Tournament: Arjun Erikaisi-Carlsen clash in the final.


 * Latvia's Jelena Ostapenko has qualified for the finals of the Korea Open Women's International Tennis Tournament.


 * Deepthi make runs out in "mancut" style - shocked England team.



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

The Chief Minister listed the educational structures of Tamil Nadu

  தமிழ்நாட்டின் கல்விக் கட்டமைப்புகளை பட்டியலிட்ட முதலமைச்சர் The Chief Minister listed the educational structures of Tamil Nadu >>...