கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

போக்சோ சட்டம் 2012 - விழிப்புணர்வு பதிவு (POCSO Act 2012 - Awareness Message)...



போக்சோ சட்டம் 2012 - விழிப்புணர்வு பதிவு (POCSO Act 2012 - Awareness Message)...


 *போக்சோ சட்டம் 2012...*

 

*விழிப்புணர்வு பதிவு...*


 சமீப காலமாக அப்பாவி ஆசிரியர்களின் வாழ்க்கையை சீரழித்துக் கொண்டிருக்கும் இச்சட்டத்தின் சில பிரிவுகளை தெரிந்து கொண்டு, சற்று எச்சரிக்கையுடன் நடந்து கொள்ளவே பதிவு...


சட்டம் முழுவதும் குற்றம் செய்பவர்களை மனதில் வைத்தே எழுதப்படும். இச்சட்டமும் அது போன்றதே...


 1.இச்சட்டத்தின் 2(d) பிரிவு,  18 வயதிற்கு கீழே உள்ளவர்கள் அனைவரும் குழந்தைகள் என்றே வரையறுக்கின்றது. (ஆண் குழந்தை, பெண் குழந்தை என்று அல்ல) மேலும் இச்சட்டம் முழுக்க குற்றமிழைக்கும் ஆண்களுக்கு பொருந்துவதோடு, சட்டப்பிரிவு 7ற்குப் பின் வரும் பிரிவுகள் அனைத்தும் ஆண்,பெண் இருவருக்கும் பொருந்தக் கூடியது.


2. *இச்சட்டப் பிரிவு 7-ன்படி சாதாரணமாகத் தொடுவதையே பாலியல் நோக்கத்தோடு தொடுவதாக கூறி விட இயலும்.*


3. சட்டப்பிரிவு 11-ன் படி பாலியல் நோக்கத்தோடு சப்தமிடல், சைகை காட்டுதல், பொருட்களை காட்டுதல், உடம்பில் ஒரு பகுதியை காட்டுதல் அல்லது குழந்தையை காட்டச் சொல்லுதல் ஆகிய அனைத்தும் குற்றம் 


4.சட்டப்பிரிவு 16-இன் படி பாலியல் சீண்டல்களுக்கு உடந்தையாய் இருப்பதும் குற்றம் 


5.குற்றம் பதியப்பட்டு அதிகபட்சம் 24 மணி நேரத்திற்குள் நீதிமன்றத்திற்கும் குழந்தைகள் நல குழுவிற்கும் போலீசார் தகவல் தெரிவிக்க வேண்டும் (பிரிவு 19.6)


6. சட்டப்பிரிவு 21(2)-ன் படி ஒரு நிறுவனத்திற்குள் பாலியல் அத்துமீறல்கள் நடக்குமானால், அந்நிறுவனத்தின் பொறுப்பாளர்(தலைவர்) காவல்துறையிடம் புகார் அளிக்க வேண்டும். தவறும் பட்சத்தில் பொறுப்பாளருக்கு அதிகபட்சம் ஓராண்டு சிறை தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும்.


7. சட்டப்பிரிவு 22(1)-ன் படி பாலியல் அத்துமீறல் நடந்ததாக தவறான தகவலை போலீசாரிடம் தெரிவிப்பாரானால் அவருக்கு ஆறு மாத கால சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும்.



8. சட்டப்பிரிவு 23 இன் படி குழந்தையின் அடையாளத்தை பொதுவெளியில் நீதிமன்ற உத்தரவின்றி பகிரக்கூடாது.


9.இச்ட்டத்தின் கீழ் வழக்கை பதிவு செய்யும் போலீசாரிடம் கருணையை எதிர்பார்க்காதீர்கள். ஏனெனில் சட்டப்பிரிவு 5(a) மற்றும் 8(a) ஆகியவை முதலில் போலீசாரை பற்றி தான் பேசுகிறது.


10.சீரான கால இடைவெளிகளில் தொலைக்காட்சி, அச்சு ஊடகங்கள் மற்றும் வானொலி ஆகியவற்றின் மூலம் விளம்பரம் செய்து, பொதுமக்கள்,பெற்றோர், பாதுகாவலர், குழந்தைகள் ஆகியோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என 43(a) பிரிவு கூறுகிறது. 


*அதே சமயம் 18 வயதிற்குட்பட்ட குழந்தைகள், ஆசிரியர்களுடன் அதிக நேரங்களை  செலவிடுகிறார்கள் என்பதையும், ஆசிரியர்களைப் பிடிக்காத குழந்தைகள், ஆசிரியர்கள் கண்டிக்கும் போது அவர்களுக்கு எதிராக  இச்சட்டத்தை திருப்பி விடுவது நிகழ்ந்துவிடும்  என்பதையும், இச்சட்டத்தை இயற்றியவர்கள் சிந்திக்காதது நமது துரதிஷ்டமே...*



இனி.....


நாம் பள்ளிகளில் எவ்வாறு நடந்து கொள்வது....


அ. நான் ஆண் ஆசிரியன் - ஆண்கள் பள்ளியில் பணியாற்றுபவன்,  நான் பெண் ஆசிரியை- பெண்கள் பள்ளியில் பணியாற்றுபவள். ஆகையால் இச்சட்டத்தால் எனக்கு எந்த பாதிப்பும் வராது என்ற எண்ணத்தை முதலில் கை கழுவுங்கள்.


ஆ. மாணவ/மாணவியரை 2- அடி தள்ளியே நிறுத்துங்கள். அருகில் அனுமதிக்காதீர்கள்.


இ.மாணவ/மாணவியரைத் தனியாய் கூப்பிட்டு புத்திமதி/ விசாரணை/குடும்பச் சூழல் என எதையும் பேசாதீர்கள்.



ஈ. வீட்டிற்கு தெரியாமல் மாணவ/மாணவியர் தவறு செய்யும் போது, அவற்றை செய்யக்கூடாது எனப் பொதுவெளியில் பொதுவாய் கூறிவிட்டு அத்தோடு விட்டு விடுங்கள்.


உ. எனது சொந்தக்காரன்,  மாணவன் / மாணவியின் பெற்றோரை எனக்கு நன்கு தெரியும் என உரிமை எடுத்துக் கொள்ளாதீர்கள். இச்சட்டம் குழந்தையின் ரத்த உறவுகளின் மீதுகூட பாயக் கூடியது என்பதை மறவாதீர்.


ஊ.பள்ளிக்கு வெளியே நடக்கும்/ நடந்த மாணவன் / மாணவி சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை பள்ளிக்குள் பேசாதீர்கள். புகார்கள் வருமேயானால் முடிந்தவரை பெற்றோர்களிடம் சொல்லி விடுவது நல்லது.


எ. GOOD TOUCH,  BAD TOUCH  என எதுவும் வேண்டாம். DON'T TOUCH.  ஆசிரியர் - மாணவன், ஆசிரியை - மாணவி என ஒரே பாலினத்தவருக்கும் சேர்த்தே......


(உதாரணம் இணைக்கப்பட்டுள்ளது)



ஏ.முடிந்தவரை ஆசிரியர்கள் ஒற்றுமையாய் இருங்கள். 



*இவற்றையெல்லாம் பின்பற்றினால் பிரச்சனைகள் வராதா  என்றால்.....நிச்சயம் இல்லை என்று தான் சொல்ல முடியும். ஆனால் சிக்க வைக்கப்பட்டால் விரைவாக மீள முடியும்...*



*மன தைரியம் அவசியம்....* 


பேசுவோம்....👍

 


*DRPGTA - கரூர் மாவட்டம்*






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...




இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Live Webinar Link for Head Masters and English Teachers

தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆங்கில ஆசிரியர்களுக்கான Live Webinar Link  (THOOTHUKKUDI, VILLUPURAM, SALEM, DHARMAPURI, ERODE, TANJAVUR Dt only) ...