கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இன்றைய (25-11-2022) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...



மேஷம்

நவம்பர் 25, 2022



உடன்பிறந்தவர்களிடம் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். திறமைகளை வெளிப்படுத்தும் பொழுது சூழ்நிலைகளை அறிந்து செயல்படவும். உத்தியோக பணிகளில் இருப்பவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். வழக்கு சார்ந்த பணிகளில் அலைச்சல்கள் உண்டாகும். முக்கியமான கோப்புகள் மற்றும் பொருட்களில் கவனம் வேண்டும். சிறு தொழில் புரிபவர்கள் சற்று கவனத்துடன் செயல்படவும். இனம்புரியாத சில சிந்தனைகளின் மூலம் செயல்பாடுகளில் குழப்பம் தோன்றி மறையும். பொறுமை வேண்டிய நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்




அஸ்வினி : கருத்து வேறுபாடுகள் நீங்கும். 


பரணி : பொறுப்புகள் அதிகரிக்கும்.


கிருத்திகை : குழப்பம் மறையும்.

---------------------------------------



ரிஷபம்

நவம்பர் 25, 2022



புதிய இலக்கினை நிர்ணயம் செய்வதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். புதிய நபர்களின் மூலம் தனவரவு மேம்படும். கூட்டு வியாபாரத்தில் லாபம் உண்டாகும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் மேன்மைக்கான சிந்தனைகள் அதிகரிக்கும். புத்திக்கூர்மையை வெளிப்படுத்துவதற்கான சூழ்நிலைகள் ஏற்படும். விவாதங்களின் மூலம் சாதகமான முடிவு கிடைக்கும். இழந்த பொருட்களை மீட்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். அசதி குறையும் நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்




கிருத்திகை : தனவரவு மேம்படும்.


ரோகிணி : சிந்தனைகள் அதிகரிக்கும்.


மிருகசீரிஷம் : வாய்ப்புகள் உண்டாகும்.

---------------------------------------



மிதுனம்

நவம்பர் 25, 2022



கல்வி தொடர்பான வெளியூர் பயணங்கள் சாதகமாக அமையும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் இருந்துவந்த தாமதங்கள் குறையும். உடலில் இருந்துவந்த சோர்வு நீங்கி புத்துணர்ச்சி உண்டாகும். போட்டிகளில் ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள். உடனிருப்பவர்களின் பலம் மற்றும் பலவீனத்தை அறிந்து கொள்வீர்கள். மனதிற்கு பிடித்தவாறு வீட்டில் சிறு சிறு மாற்றங்களை செய்வீர்கள். உடல் ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் விழிப்புணர்வு வேண்டும். செல்வாக்கு மேம்படும் நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்




மிருகசீரிஷம் : பயணங்கள் சாதகமாகும்.


திருவாதிரை : புத்துணர்ச்சி உண்டாகும்.


புனர்பூசம் : விழிப்புணர்வு வேண்டும். 

---------------------------------------



கடகம்

நவம்பர் 25, 2022



சிறு தூர பயணங்களின் மூலம் மனதில் மாற்றம் உண்டாகும். உடனிருப்பவர்களின் தன்மையை அறிந்து கொள்வீர்கள். பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். பழக்கவழக்கங்களில் மாற்றம் உண்டாகும். மாணவர்களுக்கு நினைவாற்றல் மேம்படும். வித்தியாசமான கற்பனைகளின் மூலம் சிலருக்கு தூக்கமின்மை ஏற்படும். காதில் இருந்துவந்த இன்னல்கள் குறையும். லாபம் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு 


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : காவி நிறம்




புனர்பூசம் : மாற்றம் உண்டாகும். 


பூசம் : ஆர்வம் அதிகரிக்கும். 


ஆயில்யம் : இன்னல்கள் குறையும்.

---------------------------------------



சிம்மம்

நவம்பர் 25, 2022



மனதில் புதுவிதமான எண்ணங்கள் அதிகரிக்கும். கால்நடை தொடர்பான பணிகளில் இருப்பவர்கள் கவனத்துடன் செயல்படவும். உறவினர்களை பற்றிய புரிதல் உண்டாகும். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான பணிகளில் அனுகூலமான சூழ்நிலைகள் அமையும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் புதுவிதமான அனுபவம் உண்டாகும். கலகலப்பான பேச்சுக்களின் மூலம் உங்களின் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். மதிப்பு நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : வெளிர் சிவப்பு




மகம் : கவனத்துடன் செயல்படவும்.


பூரம் : அனுகூலமான நாள்.


உத்திரம் : நம்பிக்கை அதிகரிக்கும்.

---------------------------------------



கன்னி

நவம்பர் 25, 2022



இளைய சகோதரர்களால் லாபகரமான சூழ்நிலைகள் உண்டாகும். அரசு தொடர்பான பணிகளில் இருப்பவர்கள் சற்று கவனத்துடன் செயல்படவும். வியாபாரம் தொடர்பான பணிகளில் மந்தத்தன்மை ஏற்படும். மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். மறைமுக திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சூழல் அமையும். உடல் ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் முன்னேற்றம் உண்டாகும். மேன்மை நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்




உத்திரம் : லாபகரமான நாள்.


அஸ்தம் : விருப்பம் நிறைவேறும்.


சித்திரை : முன்னேற்றம் உண்டாகும்.

---------------------------------------



துலாம்

நவம்பர் 25, 2022



சாதுர்யமான பேச்சுக்களின் மூலம் இழுபறியான சில பணிகளை செய்து முடிப்பீர்கள். பார்வை தொடர்பான இன்னல்கள் குறையும். எதிர்பாராத சில யோகங்களின் மூலம் புதிய வாய்ப்புகள் உண்டாகும். நீண்ட நேரம் கண் விழிப்பதை குறைத்து கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. பழைய நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். பரந்த மனப்பான்மையின் மூலம் பலரின் அறிமுகம் கிடைக்கப் பெறுவீர்கள். கனிவு நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்




சித்திரை : இழுபறிகள் குறையும்.


சுவாதி : வாய்ப்புகள் உண்டாகும். 


விசாகம் : அறிமுகம் கிடைக்கும்.

---------------------------------------



விருச்சிகம்

நவம்பர் 25, 2022



மனதில் எதிர்காலம் சார்ந்த சிந்தனைகள் மேம்படும். கொடுக்கல், வாங்கலில் சிந்தித்து செயல்படவும். புதிய துறை சார்ந்த தேடல் அதிகரிக்கும். சுபகாரியம் தொடர்பான அலைச்சல்கள் ஏற்படும். பழைய சிந்தனைகளின் மூலம் செயல்பாடுகளில் ஒருவிதமான சோர்வு உண்டாகும். சேமிப்பை மேம்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். சமூக பணிகளில் இருப்பவர்களுக்கு புதிய அனுபவம் உண்டாகும். சிரமம் குறையும் நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்




விசாகம் : சிந்தனைகள் மேம்படும். 


அனுஷம் : அலைச்சல்கள் ஏற்படும். 


கேட்டை : அனுபவம் உண்டாகும்.

---------------------------------------



தனுசு

நவம்பர் 25, 2022



சமூகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்கள் வாக்குறுதிகளை அளிக்கும் பொழுது சிந்தித்து செயல்படவும். புதிய நபர்களின் அறிமுகத்தின் போது சூழ்நிலைகளை அறிந்தும், நபரின் தன்மையை அறிந்தும் செயல்படவும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் இருந்துவந்த பொறுப்புகள் குறையும். ஆன்மிகம் தொடர்பான விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். நெருக்கமானவர்களிடத்தில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். நன்மை நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : வெண் மஞ்சள்




மூலம் : சிந்தித்து செயல்படவும். 


பூராடம் : பொறுப்புகள் குறையும். 


உத்திராடம் : ஆர்வம் ஏற்படும்.

---------------------------------------



மகரம்

நவம்பர் 25, 2022



நெருக்கமானவர்களின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். உத்தியோகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு முயற்சிக்கு ஏற்ப முன்னேற்றம் உண்டாகும். வழக்கு சார்ந்த விஷயங்களில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும். இழுபறியாக இருந்துவந்த காரியங்களை செய்து முடிப்பீர்கள். வெளியூர் தொடர்பான பயணங்களின் மூலம் வியாபார அபிவிருத்திக்கான வாய்ப்புகள் அமையும். நட்பு மேம்படும் நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்




உத்திராடம் : முன்னேற்றம் உண்டாகும்.


திருவோணம் : இழுபறிகள் குறையும்.


அவிட்டம் : அபிவிருத்தியான நாள்.

---------------------------------------



கும்பம்

நவம்பர் 25, 2022



பொருளாதார முன்னேற்றம் சார்ந்த உதவி கிடைக்கப் பெறுவீர்கள். மனதில் கற்பனை சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். சமூக பணிகளில் இருப்பவர்களுக்கு புதுவிதமான அனுபவம் உண்டாகும். பூர்வீக சொத்துக்களில் சில மாற்றங்களை செய்வீர்கள். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவீர்கள். உயர் அதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களிடம் நிதானத்துடன் செயல்படவும். எதிர்ப்புகள் குறையும் நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்




அவிட்டம் : உதவி கிடைக்கும்.


சதயம் : அனுபவம் உண்டாகும். 


பூரட்டாதி : நிதானத்துடன் செயல்படவும்.

---------------------------------------



மீனம்

நவம்பர் 25, 2022



தவறிப்போன சில பொருட்கள் மீண்டும் கிடைப்பதற்கான சூழ்நிலைகள் ஏற்படும். தானியம் மற்றும் ஆபரணம் தொடர்பான பணிகளில் லாபம் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். உடலில் சோர்வும், சுறுசுறுப்பின்மையும் உண்டாகும். விவசாய பணிகளில் மேன்மையான வாய்ப்புகள் ஏற்படும். எதிர்பாராத சில அதிர்ஷ்டகரமான வாய்ப்புகளின் மூலம் நன்மை உண்டாகும். குழப்பம் விலகும் நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்




பூரட்டாதி : லாபம் கிடைக்கும்.


உத்திரட்டாதி : சோர்வான நாள்.


ரேவதி : நன்மை உண்டாகும்.

---------------------------------------


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

District Level Thirukkural Quiz Competition Question Paper and Answers held on 21-12-2024

   குமரிமுனை அய்யன் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா ஆண்டு - அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான திருக்குறள் வினாடி வினா போட்டிகள் கேள்விகள...