கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 25.11.2022 - School Morning Prayer Activities...


 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 25.11.2022 - School Morning Prayer Activities...


திருக்குறள் 


பால் :அறத்துப்பால் 


இயல்:இல்லறவியல் 


அதிகாரம்: மக்கட்பேறு


குறள் 66:

குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்

மழலைச்சொல் கேளா தவர்.



மு.வரதராசன் விளக்கம்:

தம் மக்களின் மழலைச் சொல்லைக் கேட்டு அதன் இனிமையை நுகராதவரே குழலின் இசை இனியது யாழின் இசை இனியது என்று கூறுவர்.



பழமொழி :

The fearless goes into the assembly.

அச்சம் இல்லாதவர்கள் அரங்கத்தில் ஏறுவார்கள்.


இரண்டொழுக்க பண்புகள் :


1. நான் பிறருக்கு வலது கையால் செய்யும் உதவி இடது கைக்கு கூட தெரியாமல் செய்வேன்.


 2. உதவி பிறரின் வருத்தம் போக்க, பிறர் என்னை புகழ அல்ல


பொன்மொழி :


நேரம் தடையின்றிச் செல்கிறது. நாம் தவறு செய்யும் போது, கடிகாரத்தைத் திருப்பி மீண்டும் முயற்சிக்க முடியாது. நம்மால் செய்யக்கூடியது நிகழ்காலத்தை நன்றாகப் பயன்படுத்துவது தான். --தலாய் லாமா



பொது அறிவு :


1. பூகம்பத்தின் அதிர்வு வேகத்தை அளக்கும் கருவி எது? 


செய்ஸ்மோ கிராஃப். 


2. ரேடியேட்டர் என்பது என்ன ? 


குளிர்விக்கும் கருவி.


English words & meanings :


beat - to strike, verb. அடித்தல், வினைச் சொல். beat - to win (the match). verb.தோற்கடித்தல். வினைச் சொல். homonyms


ஆரோக்ய வாழ்வு :


பாதாம் 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் அல்லது நீரிழிவு மற்றும் இதய நோய் உள்ளவர்களுக்கும் ஏற்றது, ஏனெனில் இது கொழுப்பைக் குறைக்கிறது மற்றும் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது. இது தொடர்பான சில ஆய்வுகள் பெருங்குடல் அல்லது குடல் மற்றும் அல்சைமர் போன்ற அறிவாற்றல் குறைபாட்டை ஏற்படுத்தும் சில வகையான புற்றுநோய்களின் அபாயத்தைக் குறைப்பதில் உதவுகிறது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.


NMMS Q


பொருந்தாத ஒன்றை கண்டறியவும் : 


அ) திரிசூல் ஆ) அக்னி இ) ரோகிணி ஈ) ப்ரித்வி 


விடை : ரோகிணி


நவம்பர் 25


பிடல் காஸ்ட்ரோ அவர்களின் நினைவுநாள்


பிடல் காஸ்ட்ரோ (Fidel Alejandro Castro Ruz, (எசுப்பானியம்: [fiˈðel ˈkastro], ஆகஸ்ட் 13, 1926 - நவம்பர் 25, 2016) கியூபாவை சேர்ந்த பொதுவுடைமைப் புரட்சியாளரும் பொதுவுடைமை அரசியல்வாதியும் ஆவார். கியூபாவில் 1959 இல் புரட்சியை வழிநடத்தி புல்ஜென்சியோ பாட்டிஸ்ட்டாவின் அரசை வீழ்த்தி தலைமை அமைச்சர் பொறுப்பை ஏற்ற காஸ்ட்ரோ ,1959 முதல் 1976 வரை கியூபாவின் பிரதமராகவும், 1976 முதல் 2008 வரை ஜனாதிபதியாகவும் பொறுப்பு வகித்தார்.கூபாவின் பொதுவுடைமைக் கட்சியின் முதல் செயலாளராக 1965 இல் பதவியேற்ற இவர் கூபாவை ஒற்றைக் கட்சி சமூகவுடைமைக் குடியரசாக்கினார். 49 ஆண்டுகள் கியூபாவை ஆண்ட காஸ்ட்ரோ பிப்ரவரி 24 2008 அன்று பதவியிலிருந்து விலகினார். உலகத்தில் நீண்ட காலத்துக்கு தலைமைப் பொறுப்பில் இருந்த தலைவர் காஸ்ட்ரோ மட்டுமே. பன்னாட்டளவில், காஸ்ட்ரோ 1979-ல் இருந்து 1983 வரை மற்றும் 2006 முதல் 2008 வரை, அணி சேரா இயக்கத்தின் பொதுச் செயலாளராக இருந்துள்ளார்.


அமெரிக்காவில் இருந்து 93 மைல் தொலைவில் இருந்தாலும் கியூபாவை ஒரு சோசலிச நாடாகப் பேணிய பெருமை இவரைச் சாரும். இதைவிட ருசியா-அமெரிக்க பனிப்போர் நடந்த வேளையில் இவர் ருசியாவிற்குச் சாதகமாகப் பல பணிகளைச் செய்தார்.



பெண்களுக்கு எதிரான அனைத்துலக வன்முறை ஒழிப்பு நாள்


பெண்களுக்கு எதிரான அனைத்துலக வன்முறை ஒழிப்பு நாள் (International Day for the Elimination of Violence against Women) ஆண்டுதோறும் நவம்பர் 25 ஆம் நாள் அன்று உலகெங்கணும் கொண்டாடப்பட்டு வரும் ஒரு சிறப்பு நாள் ஆகும்.


உலகளாவிய ரீதியில் பெண்கள் இன்று பல விதமான வன்முறைகளுக்கு உட்படுத்தப்படுகின்றனர். பெண்களுக்கு எதிரான வன்முறைகளை வெளி உலகிற்கு காட்டி அதற்கான நியாயமான தீர்க்கமான முடிவுகளை எடுப்பதற்காக சர்வதேச மகளிர் தினம் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு சர்வதேச தினம் ஆகியன முன்வைக்கப்படுகின்றன.


ஐக்கிய நாடுகள் பொதுச்சபை 1999 டிசம்பர் 17 ஆம் நாள் கூடிய போது ஆண்டு தோறும் நவம்பர் 25 ஆம் நாளை பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு சர்வதேச தினமாகப் பிரகடனம் செய்யும் தீர்மானத்தை நிறைவேற்றியது. இத்தீர்மானம் ஐக்கிய நாடுகள் அவையின் 54/ 134. இலக்க பிரேரணையாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.



நீதிக்கதை


அன்பின் மதிப்பு


அக்பர் என்கிற அரசன் ஒருவன் நோய்வாய்ப்பட்டு, பல நாட்களாகப் படுத்தப்படுக்கையாகக் கிடந்தான். அவனைப் பார்க்க தினமும் பல பிரமுகர்கள் வந்துகொண்டிருந்தனர். 


அப்போது, ஒரு விவசாயி தன்னைத் தடுத்த காவலாளிகளையும் பொருட்படுத்தாமல், மன்னனின் படுக்கையருகே சென்றான். அவனது கலைந்த தலைமுடியும், ஆடையில் படிந்திருந்த தூசியும் அவன் தன் கிராமத்திலிருந்து வெகுதூரம் நடந்து வந்திருக்கிறான் என்பதை அக்பர் அறிந்து கொண்டார்.


அவன் மன்னனிடம், அரசே உங்கள் உடல்நிலை சரியாக வேண்டுமென்று எங்கள் ஊர் மாரியம்மனுக்குப் பொங்கல் வைத்து அந்தப் பிரசாதத்தைக் கொண்டு வந்திருக்கிறேன் ஏற்றுக்கொள்ளுங்கள் என்றான். 


அவன் பிரசாதத்தை வெளியே எடுத்ததும் அது கெட்டுப்போயிருந்தது. அரசனோ, பிரசாதத்தைப் பெற்றுக்கொண்டு, தன் கழுத்தில் இருந்த முத்துமாலையைக் கழற்றி அந்த விவசாயிக்கு பரிசாகக் கொடுத்து அனுப்பினான். 


மன்னனுக்கு வேண்டிய பிரமுகர் ஒருவர், அரசே, கெட்டுப்போன பொங்கலுக்கா முத்து மாலை பரிசு? என்று கேட்டார். மன்னனோ, அது கெட்டிருந்தாலும் அந்த பிரசாதத்தை நான் சாப்பிட்டுக் குணமடைய வேண்டும் என்று கள்ளங்கபடமற்ற மனதுடன் தன் கிராமத்திலிருந்து ஒரு வாரம் நடந்து வந்திருக்கிறான். 


அவனது அன்பு உண்மையானது. உண்மையான அன்புக்கு மதிப்பு மிக அதிகம். நான் அளித்த முத்துமாலை கூட அவனது அன்புக்கு ஈடாகாது என்று கூறினான். 


நீதி :

நமது அன்பு உண்மையாக இருந்தால், கடவுளே கையைக் கட்டிக் கொண்டு, நமக்கு சேவை புரிய வந்து நிற்பார்.


இன்றைய செய்திகள்


25.11.22


* சென்னை: தமிழகத்தில் 14.6 லட்சம் குடும்பங்களுக்கு வங்கிக் கணக்கு இல்லை என்று கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் தெரிவித்துள்ளார்.


* உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளை அரசு கேபிள் டிவியில் இலவசமாக பார்க்கலாம் என்று தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் அறிவித்துள்ளார்.


* தமிழகத்தில் உள்ள 25 பள்ளிகளை தேர்வு செய்து பசுமை பள்ளிகள் திட்டத்தை செயல்படுத்த தமிழக சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றத்துறை முடிவு செய்துள்ளது.


* தமிழகத்தில் கலை, அறிவியல் பட்டப் படிப்புகளுக்கு அடுத்த கல்விஆண்டு முதல் புதிய பாடத் திட்டம் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.


* இந்துக்கள் குறைவாக உள்ள மாநிலங்களில், அவர்களுக்கு சிறுபான்மையினர் அந்தஸ்து வழங்கும் விவகாரத்தில், மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுடன் ஆலோசனை நடத்த மத்திய அரசுக்கு, உச்ச நீதிமன்றம் மேலும் 6 வாரம் அவகாசம் வழங்கியுள்ளது.


* சீனாவில் ஒரே நாளில் 31 ஆயிரம் பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டது. இந்நிலையில் கரோனா பாதித்த பகுதிகளில் சீன அரசு கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க அதனை எதிர்த்து மக்கள் போராட்டத்தில் இறங்கினர்.


* நீண்ட இழுபறிக்குப் பின்னர் மலேசியாவின் 10-வது பிரதமராக அன்வர் இப்ராஹிம் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.


* பல்கலைக்கழக மண்டலங்களுக்கு இடையிலான கபடி போட்டியில் ஜோசப்ஸ் அணி ‘சாம்பியன்’ பட்டம் வென்றது.


* உலக கோப்பை கால்பந்து: கோல் மழை பொழிந்த ஸ்பெயின்.. கோஸ்டா ரிக்கா அணியை வீழ்த்தி அபார வெற்றி.


Today's Headlines


* Chennai: 14.6 lakh families in Tamil Nadu do not have bank accounts, according to the Registrar of Co-operative Societies.


*  Information Technology Minister Mano Thangaraj has announced that World Cup football matches can be watched for free on government cable TV.


*  Tamil Nadu Department of Environment, Forest and Climate Change has decided to implement the Green Schools Program by selecting 25 schools in Tamil Nadu.


*  Higher Education Minister Ponmudi has said that a new syllabus will be introduced for arts and science degree courses in Tamil Nadu from the next academic year.


 * The Supreme Court has given the Center another six weeks to consult with the state and union territory governments on the issue of granting minority status to Hindus in states with a minority population.


 * 31 thousand people were infected with a corona in one day in China.  In this case, people started protesting against the Chinese government to impose strict restrictions in the Corona-affected areas.


 * Anwar Ibrahim has been elected as the 10th Prime Minister of Malaysia after a long tussle.


*  Joseph's team won the title of 'Champion' in the Inter-University Zonal Kabaddi Tournament.


 * World Cup Football: Spain, who bagged goals.


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

The Chief Minister listed the educational structures of Tamil Nadu

  தமிழ்நாட்டின் கல்விக் கட்டமைப்புகளை பட்டியலிட்ட முதலமைச்சர் The Chief Minister listed the educational structures of Tamil Nadu >>...