மருத்துவச் சான்று இனி ஒரே சமயத்தில் 5 நாட்களுக்கு மட்டுமே பெற முடியும். ஐந்து நாட்களுக்கு மேலும் பெற வேண்டுமெனில் பிளட் டெஸ்ட், இசிஜி, எக்ஸ்ரே போன்ற டெஸ்ட் முடிவுகளின் அடிப்படையில் மட்டுமே வழங்க வேண்டும். ஐந்து நாட்களுக்கு மேல் ஐந்து மடங்குகளில் விடுப்பு நாட்கள் வழங்கும்பொழுது மேற்கண்ட இணைப்புகள் கண்டிப்பாக இணைக்கப்பட வேண்டும்.
மேலும் விடுப்பு சான்றிதழ் வழங்கும் மருத்துவர் தனது நோயாளியின் விவரங்களை பதிவேடு எண்ணின் வரிசை எண் மற்றும் உள்நோயாளி எனில் உள்நோயாளி பதிவேடு வரிசை எண் வரிசை ஆகியவற்றை குறிப்பிட்டு வழங்க வேண்டும். மேலும் மருத்துவச் சான்றின் ஒரு நகலை அவர் எப்பொழுதும் பராமரிக்க வேண்டும்.
அந்நகல் ஐந்து ஆண்டுகளுக்கு தேவைப்படும் பொழுது ஆய்வுக்கு உட்படுத்தும் வகையில் மருத்துவ சான்றினை ஐந்து ஆண்டுகள் பாதுகாத்து வைத்திருக்க வேண்டும். இனி மருத்துவ விடுப்பு எடுப்பதற்கும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது தெரிய வருகிறது.
>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...