கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

ஒரு மைல் அற்புதம் - மனத்தடையே காரணம் - ரோஜர் பேனிஸ்டர் - Roger Gilbert Bannister (One Mile Miracle - Reluctance is the reason)...

 


ஒரு மைல் அற்புதம் - மனத்தடையே காரணம் - ரோஜர் பேனிஸ்டர் - Roger Gilbert Bannister (One Mile Miracle - Reluctance is the reason)...


இரண்டு நூற்றாண்டுகளுக்கும் மேலாக மருத்துவர்கள், அறிவியல் அறிஞர்கள், மனித உடலின் ஓட்டத்திறனை ஆராய்ந்து மனித உடலுக்கு ஓடுவதில் ஒரு எல்லை உள்ளது. மனித உடலின் அமைப்புப் படி ஒரு மைல் தொலைவினை 4 நிமிடங்களுக்குள் ஓடுவது என்பது இயலாதது என்று கூறிவந்தனர். அதனை பெரும்பான்மை சமூகமும் ஏற்றுக்கொண்டது. ஆனால் நரம்பியல் நிபுணரும், ஓட்டப்பந்தய வீரருமான, ரோஜர் பேனிஸ்டர் மனிதனால் ஒரு மைல் தொலைவினை 4 நிமிடங்களுக்குள் கடக்கமுடியும் என்று நம்பினார். 


1954ம் வருடம் மே 6ம் தேதி, ஒரு மைல் ஓட்டத்தை 3.59 நிமிடங்களில் ஓடிக்கடந்தார். அதற்கடுத்து, 46 நாட்களில் ஆஸ்திரேலிய ஓட்டப்பந்தய வீரர், ஜான் லேன்டி என்பவர் ரோஜர் பேனிஸ்டருடைய சாதனையை முறியடித்தார். அதே வருடத்தில் இன்னும் சிலர் 4 நிமிடங்களுக்குள் ஓடிக்காட்டினர். 


அடுத்த பத்து ஆண்டுகளில் பலர், நான்கு நிமிடத்துக்குள் ஒரு மைல் தொலைவினை கடந்தனர். தற்போது பல ஆயிரம் ஓட்டப்பந்தய வீரர்கள் இந்த சாதனையை புரிந்து அதனை சாதாரணமான விஷயமாக மாற்றிவிட்டனர். தற்போது, மொராக்கோ நாட்டு வீரர், ஹக்கிம் குரோஷி ஒரு மைல் தொலைவினை 3.43 நிமிடங்களில் ஓடிக்கடந்தது உலகச் சாதனையாக இருக்கிறது. 


200 வருடங்களுக்கும் மேல் மனிதனால் சாதிக்கவே முடியாது என்று கூறிய ஒரு செயலை தனிநபர் ஒருவர், "ஏன் முடியாது?" என்று கேள்வி கேட்டார். அதனை தகர்த்தும் காட்டினார். அவர் தகர்த்ததும், உடனடியாக பல பேர் அதனை செய்யமுடிந்தது. 


இது மனவியல் தொடர்பான தடை தானே தவிர, உடல் தொடர்பானது அல்ல. ஒருவேளை பேனிஸ்டர் அன்று அந்த சாதனையை செய்திருக்கவில்லை என்றால் இன்று வரை மனித குலம் முழுக்க, ஒரு மைல் தூரத்தினை 4 நிமிடங்களுக்குள் மனிதனால் ஓடிக் கடக்கமுடியாது என்று நினைத்திருக்கக் கூடும்.


காலங்காலமாக இருந்த மனத்தடையை ஒருவர் உடைத்ததும், மற்றவராலும் அதே செயலை செய்யமுடிகிறது. மனித மனம், பெருஞ்செயல்கள் புரியக்கூடியவை என்பதை பேனிஸ்டர் உணர்த்தியிருக்கிறார். 


ஜெயிக்கவே முடியவில்லை என்றாலும், "யானை பிழைத்த வேல் ஏந்தல் இனிது" தான்.




இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

The Chief Minister listed the educational structures of Tamil Nadu

  தமிழ்நாட்டின் கல்விக் கட்டமைப்புகளை பட்டியலிட்ட முதலமைச்சர் The Chief Minister listed the educational structures of Tamil Nadu >>...