கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

தொலைத்தூரக் கல்வி மூலம் படித்தவர்கள் ஆசிரியர் பணிக்கு தகுதியானவர்கள் இல்லை - 3 மாதங்களில் ஆசிரியர் நியமன முறைகளை மறு ஆய்வு செய்ய வேண்டும் -உயர்நீதிமன்றம்(Those who have studied through distance education are not eligible for teaching jobs - Reconsider Teacher appointment procedures in 3 months - High Court)...

 3 மாதங்களில் ஆசிரியர் நியமன முறைகளில் மறு ஆய்வு செய்ய வேண்டும் - உயர்நீதிமன்றம்.. 


தொலைத்தூரக் கல்வி மூலம் படித்தவர்கள் ஆசிரியர் பணிக்கு தகுதியானவர்கள் இல்லை - உயர்நீதிமன்றம் கருத்து...





சென்னை: தொலைதூரக் கல்வியில் படித்தவர்கள் ஆசிரியர் பணிக்குத் தகுதியானவர்கள் அல்ல என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.


திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அரசுப் பள்ளி இடைநிலை ஆசிரியை நித்யா, பதவி உயர்வு வழங்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியன் அமர்வு முன்பாக இன்று (டிசம்பர் 6) விசாரணைக்கு வந்தது.


அப்போது, தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர், 'ஆசிரியை நித்யா, பி.எட் தமிழில் படித்துப் பின்னர், பி.ஏ. ஆங்கிலம் படித்ததாலும், பி.ஏ.,வை தொலைதூரக் கல்வியில் படித்ததாலும் அவருக்கு ஆங்கில ஆசிரியை பிரிவில் பதவி உயர்வு வழங்க முடியாது' என்று வாதிட்டார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், ஆசிரியை நித்யா தமிழ் ஆசிரியை பிரிவில் பதவி உயர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்று கூறினார்.


மேலும், கல்வி நிறுவனங்களுக்கு நேரில் சென்று படித்தவர்கள்தான் ஆசிரியர்களாக நியமிக்கப்பட வேண்டும் என்று நீதிமன்றம் தொடர்ந்து வலியுறுத்தி வருவதாகக் குறிப்பிட்டார். தொலைதூரக் கல்வியில் படித்தவர்கள் ஆசிரியர் பணிக்கு தகுதியானவர்கள் அல்ல என்று குறிப்பிட்ட நீதிபதி, இட ஒதுக்கீட்டின் கீழ் நியமித்தாலும் ஆசிரியர் பணிக்கு தகுதியானவர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்றும், தற்போது தொலைதூரக் கல்வியில் படித்தவர்கள் ஆசிரியர் பணியில் இருப்பது வேதனைக்குரியது என்றும் கூறினார். அதுமட்டுமின்றி தொலைதூரக் கல்வியில் படித்தவர்களை ஆசிரியர்களாக நியமிக்கும் நடைமுறைகளை தமிழக அரசு 3 மாதங்களில் மறுஆய்வு செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.



>>> திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் முறையாக பெறுகிற பட்டங்களை வேலைவாய்ப்பிற்கும் பதவி உயர்விற்கும் அங்கீகரித்து வெளியிடப்பட்டுள்ள அரசாணைகள்...








>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

The Chief Minister listed the educational structures of Tamil Nadu

  தமிழ்நாட்டின் கல்விக் கட்டமைப்புகளை பட்டியலிட்ட முதலமைச்சர் The Chief Minister listed the educational structures of Tamil Nadu >>...