கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இன்றைய (02-01-2023) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...



இன்றைய (02-01-2023) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...


மேஷம்

ஜனவரி 02, 2023




பொன், பொருள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களின் மனமறிந்து நடந்து கொள்ளவும். நண்பர்கள் வழியில் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். புதிய நபர்களின் அறிமுகத்தால் மாற்றங்கள் பிறக்கும். கனிவான பேச்சுக்கள் உங்கள் மீதான நம்பிக்கையை மேம்படுத்தும். தொழில் சார்ந்த பயணங்கள் அதிகரிக்கும். உயர் அதிகாரிகளின் எண்ணங்களை அறிந்து செயல்படுவது நல்லது. உதவிகள் கிடைக்கும் நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : வெண் சாம்பல்




அஸ்வினி : ஆர்வம் அதிகரிக்கும்.


பரணி : மாற்றங்கள் பிறக்கும்.

 

கிருத்திகை : பயணங்கள் அதிகரிக்கும். 

---------------------------------------




ரிஷபம்

ஜனவரி 02, 2023



மனதளவில் இருந்துவந்த குழப்பங்களுக்கு தெளிவு பிறக்கும். கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். ரகசிய நடவடிக்கைகளின் மூலம் ஆதாயம் அடைவீர்கள். எதிர்பாராத சில செலவுகளின் மூலம் நெருக்கடிகள் உண்டாகும். தோற்றப்பொலிவில் மாற்றம் ஏற்படும். அரசு தொடர்பான பணிகளில் இருந்துவந்த பிரச்சனைகள் குறையும். வெளியூர் மற்றும் வெளிநாடு தொடர்பான பயணங்கள் கைகூடும். மனதில் புரட்சிகரமான சிந்தனைகள் உண்டாகும். தாமதம் விலகும் நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : மயில் நீலம்




கிருத்திகை : தெளிவு பிறக்கும்.

 

ரோகிணி : நெருக்கடிகள் உண்டாகும்.

 

மிருகசீரிஷம் : பிரச்சனைகள் குறையும்.

---------------------------------------

 


மிதுனம்

ஜனவரி 02, 2023



உத்தியோக பணிகளில் மேன்மையான சூழ்நிலைகள் உண்டாகும். செல்வ சேர்க்கை தொடர்பான முயற்சிகள் கைகூடும். எதிர்பாராத சில வரவுகளின் மூலம் சேமிப்புகள் அதிகரிக்கும். பூர்வீக சொத்துக்கள் தொடர்பான பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக செயல்படுவார்கள். எதிலும் புத்துணர்ச்சியுடன் செயல்படுவீர்கள். மனதை வருத்திய சில விஷயங்களுக்கு முடிவு கிடைக்கும். மறைமுக எதிர்ப்புகளை சமாளித்து வெற்றி பெறுவீர்கள். பணிவு நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு

 

அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்




மிருகசீரிஷம் : முயற்சிகள் கைகூடும்.

 

திருவாதிரை : தீர்வு கிடைக்கும்.

 

புனர்பூசம் : வெற்றிகரமான நாள்.

---------------------------------------



கடகம்

ஜனவரி 02, 2023



புதிய தொழில் நிமிர்த்தமான உதவி கிடைக்கும். உத்தியோக பணிகளில் உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். உற்பத்தி தொடர்பான துறைகளில் முன்னேற்றம் உண்டாகும். மனதில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கி அமைதி ஏற்படும். புதுவிதமான ஆடை, ஆபரணச்சேர்க்கை ஏற்படும். நாத்திகம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். தொழிற்சங்க பணிகளில் பொறுப்புகள் மேம்படும். புதிய நிலம் வாங்குவது தொடர்பான எண்ணங்கள் கைகூடும். சுபம் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு

 

அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்




புனர்பூசம் : உற்சாகமான நாள்.


பூசம் : அமைதி உண்டாகும்.

 

ஆயில்யம் : பொறுப்புகள் மேம்படும்.

---------------------------------------



சிம்மம்

ஜனவரி 02, 2023



வியாபார பணிகளில் சோர்வின்றி செயல்படவும். மாணவர்களுக்கு ஆராய்ச்சி சார்ந்த சிந்தனைகள் மேம்படும். ஆடம்பரமான செலவுகளை குறைத்துக் கொள்ளவும். குடும்ப உறுப்பினர்களிடம் அனுசரித்து செல்லவும். மற்றவர்களை சமாளிக்கும் திறமை மேம்படும். எதிர்பாலின மக்களின் மூலம் ஆதாயம் உண்டாகும். முயற்சிக்கு உண்டான பாராட்டுகள் கிடைக்கும். எழுத்து சார்ந்த துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். அசதிகள் விலகும் நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு 




மகம் : சிந்தனைகள் மேம்படும்.

 

பூரம் : அனுசரித்து செல்லவும்.

 

உத்திரம் : வாய்ப்புகள் கிடைக்கும்.

---------------------------------------



கன்னி

ஜனவரி 02, 2023



வெளியூர் தொடர்பான வர்த்தகத்தில் கவனம் வேண்டும். தேவை இல்லாமல் மற்றவர்கள் விஷயங்களில் தலையிட வேண்டாம். சூழ்நிலையை அறிந்து மற்றவர்களுடன் ஒருங்கிணைந்து செயல்படவும். பிள்ளைகள் வழியில் அலைச்சல்கள் ஏற்படும். வழக்கு தொடர்பான சில விரயங்கள் அதிகரிக்கும். சிந்தனைகளில் குழப்பம் உண்டாகும். பணியிடங்களில் பொறுமையை கையாளவும். நகைச்சுவையான பேச்சுக்கள் சில நேரங்களில் வருத்தத்தை உண்டாக்கும். கனிவு வேண்டிய நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்




உத்திரம் : வர்த்தகத்தில் கவனம்.

 

அஸ்தம் : அலைச்சல்கள் ஏற்படும்.

 

சித்திரை : குழப்பம் உண்டாகும்.

---------------------------------------


துலாம்

ஜனவரி 02, 2023



மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். வெளியூர் தொடர்பான பயணங்களால் நன்மை உண்டாகும். பெற்றோர்களின் ஒத்துழைப்பு மேம்படும். நண்பர்களின் உதவி திருப்தியை ஏற்படுத்தும். பாதியில் நின்ற பணிகளை செய்து முடிப்பீர்கள். வாழ்க்கைத் துணைவரின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். தொழில் சார்ந்த செயல்பாடுகளில் எதிர்பாராத தனவரவு கிடைக்கும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு

 

அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்




சித்திரை : மகிழ்ச்சியான நாள்.


சுவாதி : திருப்தியான நாள்.


விசாகம் : தனவரவு ஏற்படும்.

---------------------------------------


விருச்சிகம்

ஜனவரி 02, 2023



உபரி வருமானத்தில் முயற்சிக்கு ஏற்ப தனவரவு அதிகரிக்கும். வீண் விரயங்களை தவிர்க்கவும். உணவு சார்ந்த துறைகளில் முன்னேற்றம் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். சிக்கலான செயல்களையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். முதலீடு தொடர்பான விஷயங்களில் தகுந்த ஆலோசனைகளை பெற்று முடிவு எடுக்கவும். கடவுச்சீட்டு பணிகளில் இருந்த வந்த இழுபறியான சூழல் மறையும். தனம் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு 


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்




விசாகம் : முன்னேற்றம் உண்டாகும். 


அனுஷம் : நெருக்கம் அதிகரிக்கும்.

 

கேட்டை : இழுபறிகள் மறையும்.

---------------------------------------


தனுசு

ஜனவரி 02, 2023



பணிபுரியும் இடத்தில் பொறுப்புகளும், பணிகளும் அதிகரிக்கும். பூர்வீக சொத்துக்களில் இருந்துவந்த வில்லங்கங்கள் குறையும். கற்பனை கலந்த உணர்வுகள் மனதில் அதிகரிக்கும். நன்மை, தீமை எது என்று அறிந்து செயல்படுவீர்கள். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும்.  அரசு சார்ந்த பணிகளில் ஆதாயம் அடைவீர்கள். பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களால் விரயங்கள் அதிகரிக்கும். பக்தி நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்




மூலம் : பொறுப்புகள் மேம்படும்.


பூராடம் : கற்பனை அதிகரிக்கும்.


உத்திராடம் : விரயங்கள் உண்டாகும்.

---------------------------------------


மகரம்

ஜனவரி 02, 2023



சிந்தனைகளின் போக்கில் மாற்றம் ஏற்படும். புதிய வீடு மற்றும் மனைகளை வாங்குவீர்கள். உறவினர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். ஆடம்பரமான பொருட்கள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு மேம்படும். வியாபாரம் நிமிர்த்தமான பயணங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். தந்தையை பற்றிய கவலைகள் அவ்வப்போது ஏற்பட்டு விலகும். விவசாய பணிகளில் மேன்மை உண்டாகும். சலனம் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்




உத்திராடம் : மாற்றம் ஏற்படும். 


திருவோணம் : ஆர்வம் அதிகரிக்கும். 


அவிட்டம் : மேன்மை உண்டாகும்.

---------------------------------------


கும்பம்

ஜனவரி 02, 2023



உடன்பிறந்தவர்கள் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். திட்டமிட்டு செயல்பட்டு தொழில் சார்ந்த வளர்ச்சியை உருவாக்குவீர்கள். அரசு தொடர்பான பணிகளில் சாதகமான சூழ்நிலைகள் ஏற்படும். புதிய தொழில்நுட்ப கருவிகள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். மறைமுகமான திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். வித்தியாசமான அணுகுமுறைகளின் மூலம் மாற்றத்தை உருவாக்குவீர்கள். உறவினர்கள் வழியில் அலைச்சல்கள் உண்டாகும். நட்பு நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 9 


அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்




அவிட்டம் : ஒத்துழைப்பு ஏற்படும். 


சதயம் : ஆர்வம் அதிகரிக்கும். 


பூரட்டாதி : அலைச்சல்கள் உண்டாகும்.

---------------------------------------


மீனம்

ஜனவரி 02, 2023



அக்கம் - பக்கம் இருப்பவர்களுடன் ஒற்றுமை அதிகரிக்கும். உயர் பொறுப்பில் இருப்பவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். எதிலும் துரிதத்துடன் செயல்படுவீர்கள். சகோதரர்களின் மூலம் நன்மை ஏற்படும். சமூகப் பணிகளில் இருப்பவர்களின் தொடர்பு கிடைக்கும். எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலைகள் உண்டாகும். போட்டி நிறைந்த நாள்.




அதிர்ஷ்டதிசை : தெற்கு

 

அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்




பூரட்டாதி : ஒற்றுமை அதிகரிக்கும்.


உத்திரட்டாதி : நன்மை ஏற்படும். 


ரேவதி : கலகலப்பான நாள்.

---------------------------------------


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

23-12-2024 - School Morning Prayer Activities

   பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 23-12-2024 - School Morning Prayer Activities திருக்குறள்: பால் : பொருட்பால் அதிகாரம் : மருந்து க...